தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க உலக தமிழர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம். நம்மால் முடியாவிட்டால் வேறு யாரல் முடியும்?

தமிழுக்காக, தமிழீழத்துக்காக ஆயுதம் ஏந்துங்கள்

Monday, October 27, 2008

தமிழுக்கு திறன் இல்லை என்ற சொல்லும், தமிழீழக் கொடூரங்களை கேட்க நாதியில்லை என்ற உண்மையும் சென்ற வாரங்களில் என்னை வெகுவாக பாதித்த விடயங்கள்

இந்த இரண்டு அநீதிகளுக்காகவும் ஆயுதம் ஏந்தி போராட தமிழர்களை தயார் செய்வது தான் இந்த பதிவின் நோக்கம்.

முதலில் தமிழுக்கு இழைக்கப்படும் கொடுமையை பார்ப்போம்.

என் மகனுக்கு 2 வயது கடந்துவிட்டது. தமிழ் எழுத படிக்க கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன். உயிர் எழுத்துக்கள் 12. மெய் எழுத்துக்கள் 18. உயிர்மெய் எழுத்துக்கள் 216. ஆயுத எழுத்து 1., மொத்த எழுத்துக்கள் 247. இப்படி கற்றுக்கொடுக்கும் போது எதற்காக அம்மா இந்த ஆயுத எழுத்து என்றான் அறிவு. அப்போதைக்கு பதில் சொல்ல தெரியாத நான் தமிழை காப்பதற்காக என எதார்த்தமாக பதில் சொன்னேன். இனி கூடுதலாக ஸ,ஷ,ஜ,ஹ இந்த எழுத்துக்களை என்ன சொல்லி கற்றுக்கொடுப்பது?

தமிழில் சில எழுத்தக்கள் இல்லை அதனால் வடமொழியில் இருந்து கடன்வாங்கியது. இப்படி தான் தமிழ் சமுதாயம் எனக்கு கற்றுக்கொடுத்தது. இன்று தமிழகத்தில் பள்ளி பாடபுத்தகங்களில் இந்த நான்கு எழுத்துக்களை கற்றுக்கொடுப்பது இல்லை. சமுதாயத்திற்காக குழந்தைகள் மீதுள்ள பரிதாபத்தில் ஆசிரியர்கள் தான் சுயமாக கற்றுக்கொடுக்கிறார்கள்.

தமிழக அரசு இந்த நான்கு எழுத்துக்களை நீக்கவும் இல்லை, சேர்க்கவும் இல்லை. இதனால் இன்றுவரை தமிழ் ஒரு கடன்மாறி மொழியாகவே உள்ளது. நமது குழந்தைகளுக்கு மட்டுமல்ல தமிழ் கற்க விரும்பும் வேற்று மொழியினரிடமும் தமிழுக்கு திறன் இல்லை என்று தான் இநத நான்கு எழுத்துக்களுக்கான விளக்கத்தை தருகிறோம்.

உண்மையில் இந்த நான்கு எழுத்துக்கள் சமசுகிருத விரும்பிகளால் தமிழில் திணிக்கப்பட்டது என்பது தான் வரலாற்று உண்மை. தமிழ் இலக்கணத்திலோ, தமிழின் முதன்மை நூல்களிலோ இந்த நான்கு எழுத்துக்கள் இல்லை.

கொடுமை என்னவென்றால் தமிழை குறைகூறி வடமொழி எழுத்துக்களை திணித்தவர்கள் எளிதில் வெற்றிபெற்று விட்டார்கள். ஆனால் தமிழில் வடமொழி எழுத்துக்களை சேர்க்ககூடாது, நீக்கவேண்டும் என 2 ஆயிரம் ஆண்டுகளாக போராடுபவர்கள் இன்றுவரை இந்த தமிழ் சமுதாயத்திடம் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்.

தமிழர்கள் இந்த நான்கு எழுத்துக்களை தவிர இன்னபிற எழுத்துக்களை ஒதுக்கிவிட்டார்கள். ஆனாலும் இந்த நான்கு எழுத்துக்களை ஏன் ஒதுக்க மறுக்கிறார்கள்

1. பலரின் பெயர்களில் வருவது
2. உலக இணைப்பு மொழியாக அரங்கேரி வரும் ஆங்கிலத்துடன் தொடர்பை வைக்க இந்த நான்கு உச்சரிப்புகள் மிகமிக அவசியமாக இருப்பது.
3. பழகிவிட்டது

நியாயமான காரணங்கள் தான்.

இங்கு தமிழர்கள் ஒன்றை சிந்தித்தாக வேண்டும். இந்த நான்கு உச்சரிப்புகள் தேவை என்றால் அதற்கு நம்மீது திணிக்கப்பட்ட வடமொழி எழுத்துக்கள் தான் வேண்டும் என்றில்லை. தமிழ் எழுத்துக்களே அந்த உச்சரிப்பை தரும். நாம் தான் பயன்படுத்த தாழ்வுமனபான்மை கொண்டுள்ளோம்.

இந்த நான்கு உச்சரிப்புகளுக்கு மட்டுமல்ல ஓராயிரம் உச்சரிப்புகளையும் ஒலிக்க தமிழில் எழுத்து இருக்கிறது. இந்த தனிச்சிறப்பு தான் தமிழை உலக செம்மொழிகளில் இருந்து தனித்து காட்டுகிறது.

தமிழை எந்த சூழலிலும் காக்க தான் அதற்கு ஆயுத எழுத்து வழங்கப்பட்டிருக்கிறது.

ஆயுத எழுத்து உயிர், மெய், உயர்மெய் எழுத்துக்களுக்கு பொதுவானதாக இருப்பதோடு தமிழை காக்கும் ஆயுதமாகவும் இருக்கும் என்பது எனது எண்ணம்.

இன்று சிலர் கட்டாயம் தேவைப்படுவதாக கூறும் நான்கு உச்சரிப்புகளுக்கான தமிழ் எழுத்தை பார்க்கலாம்.

ச-ஸ, சா-ஸா, சி-ஸி, சீ-ஸீ, சு-ஸ§, சூ-ஸ¨, செ-ஸெ, சே- ஸே, சை-ஸை, சொ-ஸொ, சோ-ஸோ, சௌ-ஸெள,  ஃச்-ஸ்

இந்த வரிசையில் ஸ் என்ற எழுத்தை தவிர பிற எழுத்துக்கள் எல்லாம் ஒரே உச்சரிப்பை தருகிறது. ச்(ஸ்) என்ற மெய் உச்சரிப்பு ஆயுதத்துடன் சேரும் போது ஃச், ஃசு என்பது சாத்தியப்படுகிறது.

ஸ் என்ற எழுத்தை தவிர நாம் பிறதை பயன்படுத்துவதில்லை.

உதாரணத்துக்கு காங்கிரஸ் என எழுத்தும்போது தான் ஸ் பயன்படுத்துகிறோம். காங்கிரசார், காங்கிரசிடம், காங்கிரசுடன், என்று தான் பயன்படுத்துகிறோம்.

ஒரு ஒலிக்காக தனி ஒரு எழுத்துவரியையே ஏற்பதற்கு பதிலாக ஸ் - ஃசு என்று ஆயுதத்தை பயன்படுத்தலாமே.

ஃ இதற்கு க் என்பதல்ல ஒலி. எந்த எழுத்துடன் சேருகிறதோ அங்கு அந்த எழுத்தை மெல்லெலுத்தாக மாற்றி ஒலிக்கசெய்வது.

உதாரணமாக: ஃபோட்டான் என்பதை க்போட்டான் என நாம் வாசிப்பதில்லை. அதாவது பகரத்தின் மெல்லொலியை (fa.) உச்சரிக்கிறோம். அதே போல ஃசிடாலின், ஃசிட்ரான்சியம், என தெளிவாகவே உச்சரிக்கலாமே.

அடுத்து ஷ

ஷ-ஃச, ஷா-ஃசா, ஷி-ஃசி, ஷீ-ஃசீ, ஷ§-ஃசு, ஷ¨ - ஃசூ, ஷெ-ஃசெ, ஷே-ஃசே, ஷை-ஃசை, ஷொ-ஃசொ, ஷோ-ஃசோ, ஷைள-ஃசௌ, ஷ்-ஃச்

எல்லா உச்சரிப்பும் எளிதாகவே வருகிறதல்லவா? மேலும் ஷ என்ற உச்சரிப்பு மொழிக்கு இடையிலும் இறுதியிலும் வரும்போது ட வாக தமிழில் பயன்படுத்தி வருகிறோம். அதை அப்படியே எடுத்துக்கொள்ளலாம். எ.கா: இலட்சுமி, நட்டம், விடம்.

அடுத்து ஜ

இந்த உச்சரிப்புக்கு பதிலாக ச என்ற நேரடி உச்சரிப்பையே பயன்படுத்திவருகிறோம்.

இல்லை ஜ உச்சரிப்பு தான் வேண்டும் என பிடிவாதம் பிடிப்பவர்கள் ஞ்+ச பயன்படுத்தலாமே

ஞ்சா, ஞ்சி, ஞ்சூ, ஞ்செ என பயன்படுத்தலாமே..

அடுத்து ஹ

ஃக, ... இப்படி தாரளம் பயன்படுத்தலாமே.

இங்கு சிலர் வடமொழி எழுத்து வேண்டாம் ஆனால் அதன் உச்சரிப்பு மட்டும் வேண்டுமா என கேட்கலாம். இந்த உச்சரிப்புகள் எல்லாம் ஏற்கனவே தமிழில் உள்ளது. உதாரணமாக க என்ற வல்லின எழுத்து எல்லா இடங்களிலும் வலிந்தே ஒலிப்பதில்லை. அதனுடன் சேரும் இன எழுத்து, குற்றிய லுகரம் போன்ற இடங்களில் வலிந்தும் மெலிந்தும் திரிந்தும் ஒலிக்கும். அதுபோன்றே தமிழின் எல்லா எழுத்துக்களும் எந்த உச்சரிப்புக்கும் உட்படும்.

இந்த உச்சரிப்புகளுக்கு எல்லாம் இலக்கணம் படித்துவிட்டு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரணமாக எழுத்து கூட்டி வாசிக்கும் போதே இவை ஒலித்துவிடும். ஒத்த உச்சரிப்புகளுக்கு தனித்தனி எழுத்துக்கள் இல்லாமல் எல்லாவற்றிற்கும் பொருந்தும் ஒரு எழுத்தை கொண்டிருப்பது தான் தமிழின் எளிமையும் சிறப்பும்.

வடமொழி எழுத்துக்களுக்கான உச்சரிப்புகள் தமிழ் எழுத்துக்களிலேயே சாத்தியப்படும் போது எதற்காக இன்னும் தமிழை கடன்வாங்கி மொழியாகவே வைத்திருக்க வேண்டும்?

தமிழர்கள் சிந்திப்பார்களா?

பழக்கத்தில் இருப்பதை மாற்றுவது கடினம் என எண்ணும் தமிழர்களுக்கு ஒரு நினைவூட்டல். வடமொழி எழுத்துக்களை தமிழில் திணிக்கும்போது நம் முன்னோர் அதை பழக எவ்வளவு கடினப்பட்டிருப்பார்கள். ஆனால் இன்று நாமோ அதை எளிதாக பயன்படுத்துகிறோம். அதே போல தான் நாம் இந்த எழுத்துக்களை நீக்க முயற்சிக்கும் போது சிறிறு காலம் கடினப்பட வேண்டி வரும். ஆனால் நமது குழந்தைகள் வடமொழி எழுத்து இல்லாமல் எளிமையாக தமிழை எழுதிவிடுவார்கள்.

கடன்வாங்கி மொழி என்ற இழுக்கும் தமிழைவிட்டு நீங்கும்.

*************************

தமிழீழத்துக்காக ஆயுதம் ஏந்துவோம்.

இங்கு நான் குறிப்பிடும் ஆயுதம் ஆயுத எழுத்து அல்ல. அதன் தத்துவம். ஆயுத எழுத்து வாள், அம்பு போன்று இல்லாமல் கேடயமாக இருப்பது எல்லோரும் அறிந்ததே.

தமிழர்களே உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்போம்? இது ஈழத்தமிழரின் ஓலக்குரல். தமிழர்களை சுட்டுபொசுக்கும் இலங்கை அரசுக்கு எதிராக உங்களை கத்தி கடப்பாரை, பீரங்கி துப்பாக்கி, ஏந்தி போராட அழைக்கவில்லை ஈழத்து அநாதைகள். கேடயம் ஏந்துங்கள் என்று தானே கெஞ்சுகிறார்கள். இந்தியா உட்பட நாடுகள் இலங்கைக்கு வழங்கும் ஆயுத உதவியை தடுத்து நிறுத்தத்தானே கேட்கிறார்கள்.

இந்த ஆயுதத்தை கூட ஏந்த தயார் இல்லை என்றால் தமிழனை போல சுயநலவாதி, மனிததன்மையற்ற மிருகம் உலகில் உண்டா? கார்கில் யுத்தத்திற்கு இந்தியாவில் எந்த மாநிலமும் வாரி வழங்காதபடி 50 கோடி ரூபாயை வாரிவழங்கி வள்ளலாக பெருமைகொண்ட தமிழகமே. இன்று உனது தொப்புள்கொடி உறவுக்காக மட்டும் ஏன் அரசில் நாடகமாடுகிறாய்?

தமிழக அரசு முயன்றால் உலக அரங்கில் தமிழனுக்காக ஒரு ஈழத்தை அமைத்து தரமுடியும். ஆனால் அரசு பித்தலாட்டவாதிகளின் கையில் அல்லவா மாறி மாறி கூப்பாடு போடுகிறது.

எனது நியாயமான கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

1. இலங்கையில் என்ன நடக்கிறது?
2. ஈழத்தை வைத்து தமிழகத்தில் ஏன் அரசியல் நாடகங்கள்?
3. இலங்கை போன்ற நிலை இந்தியாவில் இருந்தால் தனிநாடு கேட்டு தமிழன் மட்டும் தான் போராடுவானா?
4. ஈழத்துக்கு முடிவு தான் என்ன?

விரிவாகவே கேட்கிறேன்

இலங்கை இறையாண்மை குறித்து முதலைகண்ணீர் வடிக்கும் இந்தியாரை பார்த்து:

1. இலங்கை சட்ட திட்டங்கள் தமிழரை இரண்டாம்பட்ச குடிமக்களாக நடத்துவது உண்மையா இல்லையா?
2. தமிழரை அடிமைகளாகவே வைத்திருக்க தக்க சட்டம் இலங்கையில் உண்டா இல்லையா?
3. தமிழன் ஒருவன் இலங்கையின் உயர்பதவிக்கு வரமுடியுமா?
4. இலங்கையின் இறையாண்மை சரியானது என்றால் அந்த சட்ட திட்டங்களை இந்தியாவில் அமல்படுத்தினால் ஏற்றுக்கொள்வீர்களா?

அடுத்து கல்நெஞ்சம் கொண்ட தமிழ்நாட்டினரை பார்த்து ஒரு கேள்வி:

1. தமிழை அரசியல் செய்து சீர்குலைத்த அதே மனபான்மையை, குற்றுயிரும் குலையுயிருமாய் உயிர் பிச்சை கேட்டு வரும் ஈழத்து மக்களிடமும் காட்ட வேண்டுமா?

2. அனைத்து கட்சி கூட்டம், ஆர்ப்பாட்டம், ராசினாமா நாடகம், மனிதசங்கிலி இதெல்லாமம் எதற்காக?

3. விடுதலை புலிகளுககு ஆதரவாக பேசினால் சிறை என்றால் உங்கள் உண்மையான மனநிலை தான் என்ன?

4. ஈழத்தமிழர்கள் ஆயுதங்களை தூக்கி எறிந்துவிட்டு இலங்கை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அடிமைகளாக இருக்கவேண்டும் என்பதா? அல்லது விடுதலை புலிகளை தவிர்த்து அறவழியில் இலங்கைக்கு எதிராக தமிழர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்பதா? என்ன தான் ஈழமக்களுக்கு சொல்ல விரும்புகிறீர்கள்? தமிழக அரசியல் மாமேதைகளே ஈழத்துக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை தயவு செய்து, தயவு செய்து அரசியல் நாடகம் ஆடாதீர்கள்.

5. இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான சட்டதிட்டங்களை கொண்டுள்ளது. இந்த இனவெறி சட்டத்தை மாற்ற இந்தியா உட்பட சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் உலகின் 10 கோடி தமிழர்களும் இலங்கைக்கு எதிராக போர் தொடுப்போம் என ஏன் தமிழக அரசால் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்ற முடியவில்லை?

6. தமிழகத்தை தவிர பிற மாநிலத்தவருக்கு விடுதலை புலிகள் என்றால் காசுமீர் தீவிரவாதிகள் போன்றோர் என்ற எண்ணம் தான் இன்றளவும் இருக்கிறது. இந்தியாவில் காசுமீரை சேர்ந்த ஒருவன் முதலமைச்சராகவும் முடியும், பிரதமராகவும் முடியும், சனாதிபதியாகவும் முடியும், ராணுவ தளபதியாகவும் முடியும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் இலங்கையில் அப்படி இல்லை. தமிழனை அடிமையாகவே வைத்திருக்க சட்டம் வகுக்கப்பட்டுள்ளது என ஏன் இந்திய மக்களுக்கு தமிழனால் புரியவைக்கமுடியவில்லை?

7. 40 பராளுமன்ற உறுப்பினர்கள் ராசினாமா செய்வோம் என பித்தலாட்டம் செய்வதை விட 40 உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி ஈழத்தமிழரின் நிலையை விளக்கி நீதிகேட்க முடியாதா?

8. கார்கில்நிதி, சுனாமி நிதி திரட்டியது போல ஈழத்தமிழுருக்காக இந்திய முழுவதும் பகிரங்கமாக நிதி திரட்ட முடியாதா?

9. இதெற்கெல்லாம் ராசீவ் காந்தி கொலை தடையாக இருக்கிறது என்று வாதிடும் காங்கிரசு மேதாவிகளை பார்த்து ஒரு கேள்வி: இந்திராகாந்தியை தனிப்பட்ட ஒரு சீக்கியர் கொன்றதற்காக 1500 சீக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக கேட்டேன். ஓரளவு திருப்தியடைந்தவர்கள் பரிகாரமாக கொலையாளியின் மனைவிக்கு பாராளுமன்ற பதவி கொடுத்தார்களாம். அதே போல ராசிவ் கொலைக்காக 2 லட்சம் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் வரை வாயமூடி இருந்துவிட்டோம். இன்னும் 10 கோடி தமிழர்களையும் கொன்று குவித்தால் தான் உங்களுக்கு திருப்தி கிடைக்குமா? ராசீவ் கொலை நிச்சயமாக வன்மையாக கண்டிக்க தக்கது தான். அதற்காக ஈழத்தமிழர் படுகொலையையும் விடுதலைபுலிகளையும் பற்றி பேசவே கூடாது என்றால் இது எந்தவகையான சனநாயகம்?

10. தமிழர்களே தமிழின தலைவன் வேலுபிள்ளை பிரபாகரனா, கருணாநிதியா எனபது அல்ல நம்முன் இருக்கும் கேள்வி. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வீரதீர வரலாறு கொன்ட தமிழினம் அடிமைபட்டே கிடக்கவேண்டுமா? என்பது தான் நம்முன் இருக்கும் அவலம். தமிழினத் தலைவராக அகத்தியரும், தொல்காப்பியரும், திருவள்ளுவரும் உலகெங்கும் கம்பீரமாய் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். அதை நிலைநாட்ட நமக்கு தேவை அரசியல் சூழ்ச்சிகள் இல்லாத ஒற்றுமை. அடிமை எண்ணங்கள் இல்லாத சுதந்திர மனபான்மை.

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும். உலகன் 10 கோடி தமிழர்களே தாய்மொழிக்காகவும் தாய் மண்ணுக்காகவும் தயங்காமல் ஏந்துங்கள் ஆயுதத்தை கேடயமாக. அறப்போரை பகிரங்கமாக அறிவியுங்கள் இலங்கைக்கு எதிராக.

24 comments:

Anonymous said...

தமிழக அரசு மலிவுக்கடை:


அறிவித்தல்:

ஈழத் தமிழருக்கு இலவச அரிசி பருப்பு வழங்கப்படும்.


இலங்கை சிங்கள அரசுக்கு தமிழர்களை அழிக்கும் ஆயுதங்கள் இலவசமாக வழங்கப்படும்.திமுக

Anonymous said...

Very good article sir, it is a good one, keep posting like this.

Anonymous said...

Thanks for this psoting sir.

You have pointed out the reality prevailing in Tamil Nadu on the issue of eelam. We all thought Karunanithy is going to make concrete step for this. But i think he failed and joined with the same drama.

We understand the difficulties with Jaya on one side and Congress on the other side. Vaiko shouldnt have spoken like that.

Lets see.

Anonymous said...

தைரியமான பதிவு... என்னால ஆனா கோழத்தனமா அனானியா தான் பதில் சொல்ல முடியுது.. பிற நண்பர்களும் இதே உத்திய தான் கையாண்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.. உங்க கருத்துக்கு மாற்று கருத்தே கிடையாது.. ஆனா கால சூழ்நிலய மனசுல வச்சி கொஞ்சம் கவனமா இருங்க..!

அருள் said...

மிக‌ ந‌ல்ல‌ க‌ட்டுரை.......
மொழியின் மீதும் இன‌த்தின் மீதுமான‌ உங்க‌ளின் ஆத‌ங்க்மே என்னுடைய‌ ஆத‌ங்க‌மும்.....
////////
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வீரதீர வரலாறு கொன்ட தமிழினம் அடிமைபட்டே கிடக்கவேண்டுமா?
///////////
இந்த‌ வீர‌ தீர‌ வ‌ர‌லாற்றை உண‌ர‌த்தான் எவ‌ரும் இல்லை....அன்னிய‌ மோக‌த்திற்க்கு ஆட்ப்ப‌ட்டு சுய‌மாய் சிந்திக்க இய‌லாம‌ல், சிந்த‌னையூடே அடிமைப்ப‌ட்டுகிட‌க்கிற‌து த‌மிழின‌ம்......

Anonymous said...

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=368

Anonymous said...

six families escaping terror clutches in Wanni

Sri Lanka Navy has rescued 19 civilians including 3 children fleeing from LTTE tyranny in Wanni this morning (Oct 27). According to the Navy sources, Navy inshore patrol craft (IPCs), have rescued the civilians while they were battling against rough seas onboard a locally built fishing vessel (Vallam) in the South of Mandativu islet. There were 11 females and 8 males belonging to 6 families, the sources said.

The refugees have told the Navy personnel that they had got onboard the Vallam from Murukkandi in Poonaryn. They have further revealed that they had left their homes due to the inhumane harassments committed by the LTTE terrorists. According to the refugees , a large number of civilians in Wanni are desperately expecting that the security forces would soon liberate them from the terror clutches.

The Navy would provide food, medical facilities and other basic needs of the refugees until they are being handed over to the civilian welfare authorities, the sources added.

To view the photos click on the following link:
http://www.defence.lk/new.asp?fname=20081027_06

கோவி.கண்ணன் said...

நல்ல கட்டுரை தமிழர்கள் மறந்திருந்த ஆயுதத்தை (ஃ) பயன்படுத்தச் சொல்லி இருக்கிறீர்கள். எடுத்துக்காட்டுகளும் சிறப்பாக இருந்தது

stanjoe said...

Kuzhali,

I have to doubt your political knowledge when you say,

//இதெற்கெல்லாம் ராசீவ் காந்தி கொலை தடையாக இருக்கிறது என்று வாதிடும் காங்கிரசு மேதாவிகளை பார்த்து ஒரு கேள்வி: இந்திராகாந்தியை தனிப்பட்ட ஒரு சீக்கியர் கொன்றதற்காக 1500 சீக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக கேட்டேன். ஓரளவு திருப்தியடைந்தவர்கள் பரிகாரமாக கொலையாளியின் மனைவிக்கு பாராளுமன்ற பதவி கொடுத்தார்களாம்//

Please read more...

S. Jayabarathan said...

அன்புள்ள குழலி,

கீழ்க்காணும் உங்கள் புதிய தமிழ் “ஒலி இலக்கணம்” ஒரே இஃகு (ஃ) அவியலாகவும், மீண்டும் உச்சரிப்புக் குழம்பமாகவும் ஆகியிருக்கிறதே. யாரிதைத் தமிழகத்தில் ஏற்றுக் கொள்வார் ?

ஒலிக்காகத் தமிழ் இலக்கணம் மாற வேண்டும் என்று இப்படிக் காட்டுகிறீர்களா ? திடீரென இப்படி ஏன் மாறிவிட்டீர்கள் ? !!! உங்கள் புது ஒலி இலக்கணத்தைப் பிறர் ஏற்றுக் கொள்ளலாம் என்று சொல்கிறீர்களா ?

ஒலி இலக்கணமே தேவையில்லை என்று “கிச்சு போசான்” போன்றவை செவிக்கினிமை என்பதாய் எழுதிப் பக்கம் பக்கமாகப் படையெடுத்து இப்போது எதிராளிகள் கட்சியில் சேர வந்து விட்டீர்களே ! நல்ல முன்னேற்றம்தான் !

++++++++++++++++++

//இன்று சிலர் கட்டாயம் தேவைப்படுவதாக கூறும் நான்கு உச்சரிப்புகளுக்கான தமிழ் எழுத்தை பார்க்கலாம்.

ச-ஸ, சா-ஸா, சி-ஸி, சீ-ஸீ, சு-ஸ§, சூ-ஸ¨, செ-ஸெ, சே- ஸே, சை-ஸை, சொ-ஸொ, சோ-ஸோ, சௌ-ஸெள, ஃச்-ஸ்

இந்த வரிசையில் ஸ் என்ற எழுத்தை தவிர பிற எழுத்துக்கள் எல்லாம் ஒரே உச்சரிப்பை தருகிறது. ச்(ஸ்) என்ற மெய் உச்சரிப்பு ஆயுதத்துடன் சேரும் போது ஃச், ஃசு என்பது சாத்தியப்படுகிறது.//

//உதாரணமாக: ஃபோட்டான் என்பதை க்போட்டான் என நாம் வாசிப்பதில்லை. அதாவது பகரத்தின் மெல்லொலியை (fa.) உச்சரிக்கிறோம். அதே போல ஃசிடாலின், ஃசிட்ரான்சியம், என தெளிவாகவே உச்சரிக்கலாமே.

அடுத்து ஷ

ஷ-ஃச, ஷா-ஃசா, ஷி-ஃசி, ஷீ-ஃசீ, ஷ§-ஃசு, ஷ¨ - ஃசூ, ஷெ-ஃசெ, ஷே-ஃசே, ஷை-ஃசை, ஷொ-ஃசொ, ஷோ-ஃசோ, ஷைள-ஃசௌ, ஷ்-ஃச்//

//அடுத்து ஜ

இந்த உச்சரிப்புக்கு பதிலாக ச என்ற நேரடி உச்சரிப்பையே பயன்படுத்திவருகிறோம்.

இல்லை ஜ உச்சரிப்பு தான் வேண்டும் என பிடிவாதம் பிடிப்பவர்கள் ஞ்+ச பயன்படுத்தலாமே

ஞ்சா, ஞ்சி, ஞ்சூ, ஞ்செ என பயன்படுத்தலாமே..

அடுத்து ஹ

ஃக, … இப்படி தாரளம் பயன்படுத்தலாமே.//

++++++++++++++++++அன்புள்ள குழலி,

//இன்று சிலர் கட்டாயம் தேவைப்படுவதாக கூறும் நான்கு உச்சரிப்புகளுக்கான தமிழ் எழுத்தை பார்க்கலாம்.

ச-ஸ, சா-ஸா, சி-ஸி, சீ-ஸீ, சு-ஸ§, சூ-ஸ¨, செ-ஸெ, சே- ஸே, சை-ஸை, சொ-ஸொ, சோ-ஸோ, சௌ-ஸெள, ஃச்-ஸ்

இந்த வரிசையில் ஸ் என்ற எழுத்தை தவிர பிற எழுத்துக்கள் எல்லாம் ஒரே உச்சரிப்பை தருகிறது. ச்(ஸ்) என்ற மெய் உச்சரிப்பு ஆயுதத்துடன் சேரும் போது ஃச், ஃசு என்பது சாத்தியப்படுகிறது.//

+++++++++

அன்புள்ள குழலி,

//இன்று சிலர் கட்டாயம் தேவைப்படுவதாக கூறும் நான்கு உச்சரிப்புகளுக்கான தமிழ் எழுத்தை பார்க்கலாம்.

ச-ஸ, சா-ஸா, சி-ஸி, சீ-ஸீ, சு-ஸ§, சூ-ஸ¨, செ-ஸெ, சே- ஸே, சை-ஸை, சொ-ஸொ, சோ-ஸோ, சௌ-ஸெள, ஃச்-ஸ்

இந்த வரிசையில் ஸ் என்ற எழுத்தை தவிர பிற எழுத்துக்கள் எல்லாம் ஒரே உச்சரிப்பை தருகிறது. ச்(ஸ்) என்ற மெய் உச்சரிப்பு ஆயுதத்துடன் சேரும் போது ஃச், ஃசு என்பது சாத்தியப்படுகிறது.//

+++++++++

க,ச,ட,த,ப,ற என்பவை ஒலி ஓசையில் வல்லினம். வல்லினச் எந்த இலக்கணப்படி மெல்லின ஆகும் ?

அன்புடன்,
சி. ஜெயபாரதன்

+++++++++++

அன்புள்ள குழலி,

//தமிழுக்கு திறன் இல்லை என்ற சொல்லும், தமிழீழக் கொடூரங்களை கேட்க நாதியில்லை என்ற உண்மையும் சென்ற வாரங்களில் என்னை வெகுவாக பாதித்த விடயங்கள்

இந்த இரண்டு அநீதிகளுக்காகவும் ஆயுதம் ஏந்தி போராட தமிழர்களை தயார் செய்வது தான் இந்த பதிவின் நோக்கம்.//

ஈதோ மீண்டும் தமிழ்க் காவல்துறை வீராங்கனையாக ஆயுதத்துடன் தாக்க நீங்கள் கிளம்பி விட்டது அறிந்து வியப்படைகிறேன். தர்க்கமிடத் தெரியாவர் ஒன்று எதிராளியைத் திட்டுகிறார் ! அல்லது தடியால் அடிக்க ஆயுத்தமாகிறார்.

பிளாஸ்டிக் குண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு இந்த 2000 நூற்றாண்டு யுகம் பிறந்திருக்கிறது. தமிழ் மொழிக்காக ஆயுதப் போர் துவங்கிய முதல் மாது “குழலி” என்று உங்கள் பெயர் 2008 கின்னஸ் உலகப் பதிவு நூலில் (Guinness World Record 2008) வரப் போகிறது.

இப்படி யெல்லாம் எதிராளிகளைப் பயமுறுத்த எங்கு பயிற்சி பெற்றீர்கள் ? கண்டதற்கெல்லாம் தண்டத்தைத் தூக்கும் பெண்டிரும் இருக்கிறார் என்று எடுத்துக் காட்டுகிறீர்கள் ! உங்கள் ஆக்க பூர்வமான ஆயுதப் போருக்குப் பாராட்டுகள்.

பயன்படுத்தும் ஆயுதங்கள் என்ன என்று முன்பே நீங்கள் சொன்னால் அதற்கேற்றவாறு எதிராளிகள் தற்காப்புக் கேடயம் தயாரிக்கலாம்.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்

SurveySan said...

ஜ,ஷ,ஸ எல்லாம் கடன் வாங்கி தமிழோடு சேர்த்துக் கொள்வதில் தப்பில்லை.

சனநாயகம், ராசீவ் - இதெல்லாம் படிக்க கொடுமையா இருக்கு.

;)

அறிவகம் said...

மதிப்பிற்குறிய திரு. செயபாரதன் ஐயா...

//விடுதலைப் போரில் 20% நபர்கள்தான் பங்கெடுத்தார் என்பதற்குச் சான்றுகள் உள்ளனவா ? என்னுடைய கணக்குப்படிச் சுமார் 80% மேல் என்பது. 20% நபர்கள் மட்டும் போரிட்டு ஒரு போதும் தேசம் விடுதலை அடைந்திருக்க முடியாது.//

//பொதுமக்களுக்கு தனி சுதந்தரத்தை புரியவைத்து //

இந்த வார்த்தை உங்கள் கண்ணில் படவில்லையா?

எந்த கருத்தையும் முழுமையாக உள்வாங்கி கொள்ளாமல் தாங்கள் இப்படி கேள்விகளை எழுப்புவது வியப்பாகவே இருக்கிறது. அறிதல், ஆய்தல், முனைதல், அறிவித்தல் இது தான் ஒரு சிறந்த அறிவியலாளருக்கு அழகு. எனது எல்லா கருத்துக்களையும் அரைகுறையாக படித்துவிட்டு கேள்வி எழுப்பியுள்ளீர்கள்.

***********************

//தமிழ் நாட்டில் பெரியாரின் சுயமரியாதைக் கும்பல் போன்ற துரோகக் குழுக்கள்தான் (20% சதவீதம்) பிரிட்டீஷ்காரன் இந்தியாவை விட்டுப் போகக் கூடாது, நாட்டுக்கு விடுதலை தேவையில்லை என்று ஒதுங்கி யிருந்தவர்கள். பிறகு விடுதலை கிடைத்ததும் திராவிட நாட்டுப் பிரிவினைக்கு அடிபோட்டு ஏமாந்தவர்கள் !!!

பெரியார் தமிழைக் காட்டுமிராண்டிகளின் மொழி என்றவர். திருக்குறளை அந்தணர் நூல் என்று வெறுத்தவர். கம்ப இராமாயணக் காவியத்தைத் தீயில் இட்டவர். //

பெரியார் சீர்திருத்தத்தை பற்றி திரு. R.V கேட்ட கேள்விக்கு பதிலளித்திருந்தேன். பெரியார் பற்றி நான் மிகைபடுத்தவும் இல்லை. குறைகூறவும் இல்லை.

ஆனால் பெரியார் என்ற பெயரை கேட்டவுடனே உங்களுக்கு ஏன் இவ்வளவு கடுப்பு?

பெரியார் என்ற மாமனிதரால் தென்னிந்தியாவில் ஒரு சமூக மறுமலர்ச்சி ஏற்பட்டது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. அப்படி இருக்கும் போது துரோக குழுக்கள் என்கிறீர்களே. என்னை நாகாக்க சொன்ன தாங்கள் நாகாக்காமல் போனது ஏனோ? அவசரத்தில் எழுதிவிட்டீர்களோ?

//இலக்கண அகத்தியராக ஆக்கிப் பெரியாரைத் தமிழ்ப் பண்டிராக மாற்ற முயலாதீர்கள்.//

நான் ஒன்றும் அப்படி முயலவில்லை. நீங்கள் தன் பெரியார் மீது உள்ள கோபத்தில் ஏதோ தடுமாறி இருக்கிறீர்கள்.

***********************
//இசைவாணி சுசீலா கர்நாடக, தியாராஜ கீர்த்தனைகளுக்குத் தமிழில் பாடத் தேவைப்படும் மெல்லோசை ஒலியைப் பற்றி எங்கே பதில் கூறுகிறார் ? என் கேள்வி என்ன ? உங்கள் பதில் மையத்தை விட்டு சுற்றி வளைத்து எங்கோ போகிறது !!! //

கேள்வியும் அதிலிருக்கிறது. பதிலும் அதிலேயே தெளிவாக இருக்கிறது. புரிந்துகொள்ளும் திறன் தான் தங்களிடம் இல்லை என்று நினைக்கிறேன்.

//உச்சரிப்பு தான் முக்கியம். அந்ததந்த மொழிகளில் அந்தந்த உச்சரிப்புகளோடு பாடும்போது தான் அந்த வார்த்தைகளுக்கு உயிர் இருக்கிறது. இனிமையும் வலிமையும் கூடுகிறது.//

அந்தந்த மொழிகளில் அந்தந்த உச்சரிப்பில தான் இனிமை இருக்கிறது என்பதை கவனிக்கவில்லையா?
*******************

75 வயதாகும் நான் 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப தமிழை வளைத்து எளிதாகப் புரியும்படிப் புதுத்தமிழில் 45 ஆண்டு காலமாய் எழுதி வருகிறேன். நான் புதுமைவாதி. இளவயதான (உங்கள் வயது என்ன்வோ ?) நீங்கள்தான் மாறாமல் பழைய தமிழைப் பிடித்துக் கொண்டு பழமைவாதியாகக் காட்டிக் கொள்கிறீர்கள்.

நீங்கள் பயன்படுத்தும் தமிழை புதுதமிழ் என்று நீங்கள் ஒருவர் தான் சொல்லிக்கொள்ள வேண்டும். இரசாயணம், பௌதீகம், பூகோளம், அகிலவலை, பாரதகண்டம், என்பதெல்லாம் எப்போதோ மலையேறி விட்டது. வேதியல், இயற்பியல், புவியியல், இந்தியநாடு, இணையம் என்ற எளிய தமிழ் உங்களுக்கு மட்டும் பழையதமிழாக படுவது ஆச்சரியமாக இருக்கிறது.
*********************

//ஒலி இலக்கணமே தேவையில்லை என்று “கிச்சு போசான்” போன்றவை செவிக்கினிமை என்பதாய் எழுதிப் பக்கம் பக்கமாகப் படையெடுத்து இப்போது எதிராளிகள் கட்சியில் சேர வந்து விட்டீர்களே ! நல்ல முன்னேற்றம்தான் ! //

ஒலிஇலக்கணம் தேவையில்லை என நான் எங்கே சொன்னேன்? கிச்சு போசான் அல்ல. கிக்சு போசான். அரைகுறையாக படித்துவிட்டு இப்படி அரைகுறையாக எழுதுவுதால் தான் தமிழ் உங்களுக்கு கொச்சையாக பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். முதலில் இரண்டு மூன்று முறை தங்கள் எழுதியபோது எழுத்துபிழை என்றே எண்ணினேன். ஆனால் தொடர்நது கிச்சு என்றே எழுதுகிறீர்கள். தெரிந்து எழுதுகிறீர்களா? தெரியாமல் எழுதுகிறீர்களா என தெரியவில்லை?

செயபாரதன் ஐயா

தமிழழில் மெல்லோசை இல்லை என்ற தங்களின் குறைபாடு நீங்கவேண்டும் என்பதற்காக தான் ஆயுத எழுத்தை பயன்படுத்த சொல்லியிருக்கிறேன். ஆயுத எழுத்து பயன்படுத்தும் போது எந்திவித ஒலியும் வருகிறது அல்லவா? அப்படி இருக்க எப்படி தமிழில் திறன் இல்லை என்று சொல்லலாம்? தமிழிலேயே எழுத்து இருக்கும்போது எதற்காக வடமொழி எழுத்தை பயன்படுத்த வேண்டும். தமிழ் எழுத்து தேவையில்லை வடமொழி எழுத்து தான் வேண்டும் என்பதற்கு உண்மையான நோக்கம் என்ன? வடமொழி எழுத்தை வாழவைத்து தமிழை சீர்குலைப்பது என்பது தானே.
******************

//க,ச,ட,த,ப,ற என்பவை ஒலி ஓசையில் வல்லினம். வல்லினச் எந்த இலக்கணப்படி மெல்லின ஆகும் ?//

ஆயுத எழுத்தை சேர்த்து உச்சரித்து பாருங்கள்.

********************

//ஈதோ மீண்டும் தமிழ்க் காவல்துறை வீராங்கனையாக ஆயுதத்துடன் தாக்க நீங்கள் கிளம்பி விட்டது அறிந்து வியப்படைகிறேன். தர்க்கமிடத் தெரியாவர் ஒன்று எதிராளியைத் திட்டுகிறார் ! அல்லது தடியால் அடிக்க ஆயுத்தமாகிறார்.
பிளாஸ்டிக் குண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு இந்த 2000 நூற்றாண்டு யுகம் பிறந்திருக்கிறது. தமிழ் மொழிக்காக ஆயுதப் போர் துவங்கிய முதல் மாது “குழலி” என்று உங்கள் பெயர் 2008 கின்னஸ் உலகப் பதிவு நூலில் (நிuவீஸீஸீமீss கீஷீக்ஷீறீபீ ஸிமீநீஷீக்ஷீபீ 2008) வரப் போகிறத//

மேற்சொன்ன அதே பதில் தான். கட்டுரையை மீண்டும் தெளிவாக படியுங்கள். தமிழீழத்துக்காக தான் ஆயுத எழுத்து தத்துவத்தில் ஆயுதம் ஏந்த சொல்லியிருக்கிறேன். தமிழுக்காக ஆயுத எழுத்தை தான் ஏந்த சொல்லியிக்கிறேன். ஆயுத எழுத்தை பயனபடுத்துவதற்கெல்லாம் கின்னசு புத்தகத்தில் இடம் கிடைக்கும் என்றால் உங்கள் சிபாரிசுக்கு மிக்க நன்றி.

//இப்படி யெல்லாம் எதிராளிகளைப் பயமுறுத்த எங்கு பயிற்சி பெற்றீர்கள் ? கண்டதற்கெல்லாம் தண்டத்தைத் தூக்கும் பெண்டிரும் இருக்கிறார் என்று எடுத்துக் காட்டுகிறீர்கள் ! உங்கள் ஆக்க பூர்வமான ஆயுதப் போருக்குப் பாராட்டுகள்.//

பாராட்டுக்கு நன்றி., எந்த விதத்தில் பயந்தீர்கள். விளக்கவும்.

S. Jayabarathan said...

அன்புள்ள குழலி,

//பெரியார் என்ற மாமனிதரால் தென்னிந்தியாவில் ஒரு சமூக மறுமலர்ச்சி ஏற்பட்டது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. அப்படி இருக்கும் போது துரோக குழுக்கள் என்கிறீர்களே. என்னை நாகாக்க சொன்ன தாங்கள் நாகாக்காமல் போனது ஏனோ? அவசரத்தில் எழுதிவிட்டீர்களோ?//

பெரியார் சமூகச் சீர்த்திருத்தம் என்ற போர்வையில் தமிழருக்குள் அந்தணர், அந்தணரற்ற இனவெறியைக் கிளப்பிச் சண்டையை மூட்டிப் பிரித்தவர். அகஸ்தியர், பாரதியார், நோபெல் பரிசு பெற்ற ஸர். சி.பி ராமன், கணிதமேதை ராமானுஜன், நோபெல் பரிசு பெற்ற சந்திரசேகர் ராஜாஜி, பரிதிமாற் கலைஞன், கல்கி கிருஷ்ணமூர்த்தி, சிவகாமி, ஜோதிர்லதா கிரிஜா, சுகாஸினி, கமல ஹாஸன், தமிழ்ப்பெண் விஞ்ஞானி பிரியவதா நடராஜன் இவர்கள் எல்லாரும் தமிழரில்லையா ?

‘துரோகிகள்” என்றால் அன்னியனுக்குத் தேசத்தைக் காட்டிக் கொடுபவர்,
தேசத்தை விற்பவர் என்று பொருள்.
"துரோகம்" ஒரு தேசக் குற்றம். துரோகிகள் தண்டிக்கப்படுவார்.

இந்திய தேச விடுதலை நாளைத் “துக்க தினமாகக்” கொண்டாடிய பெரியாரை அவரது பிரதான சீடர்கள் பலர் அண்ணாத்துரை தலைமையில் தனியாக விட்டுவிட்டுப் போய் விட்டார்களே !!!

சி. ஜெயபாரதன்

++++++++++++++++

அன்புள்ள குழலி

உங்கள் கட்டுரைத் தலைப்பிது !!!

//”தமிழுக்காக, தமிழீழத்துக்காக ஆயுதம் ஏந்துங்கள்” //

//கட்டுரையை மீண்டும் தெளிவாக படியுங்கள். தமிழீழத்துக்காக தான் ஆயுத எழுத்து தத்துவத்தில் ஆயுதம் ஏந்த சொல்லியிருக்கிறேன். தமிழுக்காக ஆயுத எழுத்தை தான் ஏந்த சொல்லியிக்கிறேன்.//

தமிழுக்காக ஆயுதம் ஏந்தச் சொல்ல வில்லை ஏன் பின்வாங்குகிறீர்கள் ?

அன்புடன்,
சி. ஜெயபாரதன்

+++++++

அன்புள்ள குழலி,

//நீங்கள் பயன்படுத்தும் தமிழை புதுதமிழ் என்று நீங்கள் ஒருவர் தான் சொல்லிக்கொள்ள வேண்டும். இரசாயணம், பௌதீகம், பூகோளம், அகிலவலை, பாரதகண்டம், என்பதெல்லாம் எப்போதோ மலையேறி விட்டது. வேதியல், இயற்பியல், புவியியல், இந்தியநாடு, இணையம் என்ற எளிய தமிழ் உங்களுக்கு மட்டும் பழையதமிழாக படுவது ஆச்சரியமாக இருக்கிறது.//

திண்ணையில் வந்துள்ள எனது விஞ்ஞானக் கட்டுரைகளையும், என்னுடைய வலைத் தளத்திலும் உள்ள கட்டுரைகளுக்கு வந்துள்ள நூற்றுக்கணக்கான வரவேற்புகளைப் பாருங்கள்.

திண்ணையில் [ http://www.thinnai.com ] “அறிவியல்” தலைப்பின் கீழ் வந்துள்ள பற்பலப் புதுத்தமிழ்க் கட்டுரைகளைப் பாருங்கள்.

உங்கள் தனித்தமிழில் எங்கெல்லாம் விஞ்ஞானக் கட்டுரைகள் வருகின்றன ? எத்தனை கட்டுரைகள் வந்துள்ளன என்று காட்டுங்கள் ?

அன்புடன்,
சி. ஜெயபாரதன்.

+++++++++++
அன்புள்ள குழலி,

//பூகோளம், அகிலவலை, பாரதகண்டம், என்பதெல்லாம் எப்போதோ மலையேறி விட்டது. //

நீங்கள் பாரத கண்டத்தில் இல்லாமல் எங்கே வாசம் செய்கிறீர்கள் ?

http://en.wikipedia.org/wiki/India [ விக்கிபீடியாவில் பாருங்கள் இந்தியாவுக்கு மறுபெயர் "பாரத நாடு" என்று பெயர் இருப்பதை ]

பூகோளம் என்றால் Globe. புவி என்றால் Earth. அண்ட கோளங்கள், பூமி, பூமாதேவி என்றால் அவை தமிழ்ச் சொற்கள் இல்லையா ? புவி என்பது பூகோளம் ஆகாது. புவிவேறு. பூகோளம் வேறு. "Global Warming" என்றால் "சூடேறும் பூகோளம்" என்று அர்த்தம். பூமியைச் சுற்றி இருக்கும் வாயுக் கோளமும் சேர்ந்தது பூகோளம். பூகோளம் என்பது புவியியல் இல்லை !!!

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழில் ஒழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் “பரத கண்டமதில்”
தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநற் றிருநாடும்

இந்தப் பாடலை மறந்து விட்டீர்கள். நினைவூட்டிக் கொள்ளவும்.

சி. ஜெயபாரதன்

++++++++++

S. Jayabarathan said...

அன்புள்ள குழலி,

//இன்று சிலர் கட்டாயம் தேவைப்படுவதாக கூறும் நான்கு உச்சரிப்புகளுக்கான தமிழ் எழுத்தை பார்க்கலாம்.

ச-ஸ, சா-ஸா, சி-ஸி, சீ-ஸீ, சு-ஸ§, சூ-ஸ¨, செ-ஸெ, சே- ஸே, சை-ஸை, சொ-ஸொ, சோ-ஸோ, சௌ-ஸெள, ஃச்-ஸ்

இந்த வரிசையில் ஸ் என்ற எழுத்தை தவிர பிற எழுத்துக்கள் எல்லாம் ஒரே உச்சரிப்பை தருகிறது. ச்(ஸ்) என்ற மெய் உச்சரிப்பு ஆயுதத்துடன் சேரும் போது ஃச், ஃசு என்பது சாத்தியப்படுகிறது.

ஸ் என்ற எழுத்தை தவிர நாம் பிறதை பயன்படுத்துவதில்லை.

உதாரணத்துக்கு காங்கிரஸ் என எழுத்தும்போது தான் ஸ் பயன்படுத்துகிறோம். காங்கிரசார், காங்கிரசிடம், காங்கிரசுடன், என்று தான் பயன்படுத்துகிறோம்.

ஒரு ஒலிக்காக தனி ஒரு எழுத்துவரியையே ஏற்பதற்கு பதிலாக ஸ் - ஃசு என்று ஆயுதத்தை பயன்படுத்தலாமே.

ஃ இதற்கு க் என்பதல்ல ஒலி. எந்த எழுத்துடன் சேருகிறதோ அங்கு அந்த எழுத்தை மெல்லெலுத்தாக மாற்றி ஒலிக்கசெய்வது.

உதாரணமாக: ஃபோட்டான் என்பதை க்போட்டான் என நாம் வாசிப்பதில்லை. அதாவது பகரத்தின் மெல்லொலியை (fa.) உச்சரிக்கிறோம். அதே போல ஃசிடாலின், ஃசிட்ரான்சியம், என தெளிவாகவே உச்சரிக்கலாமே.

அடுத்து ஷ

ஷ-ஃச, ஷா-ஃசா, ஷி-ஃசி, ஷீ-ஃசீ, ஷ§-ஃசு, ஷ¨ - ஃசூ, ஷெ-ஃசெ, ஷே-ஃசே, ஷை-ஃசை, ஷொ-ஃசொ, ஷோ-ஃசோ, ஷைள-ஃசௌ, ஷ்-ஃச்

எல்லா உச்சரிப்பும் எளிதாகவே வருகிறதல்லவா? மேலும் ஷ என்ற உச்சரிப்பு மொழிக்கு இடையிலும் இறுதியிலும் வரும்போது ட வாக தமிழில் பயன்படுத்தி வருகிறோம். அதை அப்படியே எடுத்துக்கொள்ளலாம். எ.கா: இலட்சுமி, நட்டம், விடம்.

அடுத்து ஜ

இந்த உச்சரிப்புக்கு பதிலாக ச என்ற நேரடி உச்சரிப்பையே பயன்படுத்திவருகிறோம்.

இல்லை ஜ உச்சரிப்பு தான் வேண்டும் என பிடிவாதம் பிடிப்பவர்கள் ஞ்+ச பயன்படுத்தலாமே

ஞ்சா, ஞ்சி, ஞ்சூ, ஞ்செ என பயன்படுத்தலாமே..//

+++++++++++++++++++++

இந்த புது குழலி தமிழ் இலக்கணப்படி

என் பெயர் ஜெயபாரதனை எப்படி எழுதுவது ? ஜவஹர்லால் நேரு என்று எப்படி எழுதுவது ?

ஜெ வுக்கு "ஞ்செயபாரதன்" என்று எழுதுவதா ? ஜவஹருக்கு "ஞ்சவகர்" என்று எழுதவா ?

ரோஜாவுக்கு "ரோஞ்சா" என்று எழுதுவதா ?

ஷேக்ஸ்பியர் என்பதை "ஃசேக்சுபியர்" என்று எழுதுவதா ?

கிரந்த எழுத்துக்கள் மூலம் அழகாக எழுத வேண்டிய பெயர்களை இப்படிக் கோமாளிகள் பெயர்கள் போல் எழுதிக் காட்டுங்கள்.

மற்ற இந்திய மொழிகளில் அனைத்திலும் குழந்தைகளும் பெரியவரும் உலக மேடைகளில் சரியாக உச்சரித்து உரையாற்றும் போது தமிழ் மாந்தர் மட்டும் இப்படிக் கோமாளித்தனமாகத் தமிழில் எழுதியும் பேசியும் வருவது கற்காலப் பிற்போக்குத்தனமே தவிர தற்கால முற்போக்குடமை ஆகாது.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
S, Jayabarathan said...

Mr Anony mouse,

You don't have name, body or soul. You are afraid to write who you are. Are you ashamed to tell your name ? Why are you moving like a mouse ?

Read about me in my site

http://jayabarathan.wordpress.com/

S. Jayabarathan

அறிவகம் said...

பெயர் குறிப்பிட விரும்பாத(அனானி) அன்பர்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை தயவு செய்து பின்னூட்ட கருத்தாக எழுதாதீர்கள். பெயர் குறிப்பிட விரும்பாவிட்டாலும் கருத்துக்களை தெரிவிக்கவே பெயரிலி[(Anonymous) ]அனுமதிக்கப்பட்டிருக்கிறது. தயவு செய்து அதை தவறாக பயன்படுத்தாதீர்கள்.

அறிவகம் said...

மதிப்பிற்குரிய திரு. செயபாரதன் ஐயாவுக்கு...

பெயரிலியின் பொறுப்பற்ற கருத்துக்கு வருந்துகிறேன். இணையத்தொடர்பு இல்லாத கிராமத்தில் இருந்ததால் வலைபதிவுகளை கவனிக்கு முடியவில்லை. விரைவில் தங்கள் கருத்துக்களுக்கான பதிலை தெரிவிக்கிறேன்.

நன்றி.

S. Jayabarathan said...

அன்புள்ள குழலி,

கருத்தை ஆதரிக்கும் அன்ப‌ரும் அல்லது எதிர்க்கும் நபரும் வெறும் நிழல்களாய் ஊர், பேர் தெரிவிக்க அஞ்சிக் கொண்டு வாய் மற்றும் திறக்கும் கிணற்றுத் தவ‌ளைகளாக இருப்பதை நான் வரவேற்க வில்லை.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்.

சி. ஜெயபாரதன் said...

நண்பர்களே

உங்கள் பார்வைக்கு

1. http://www.veeran.co.cc/2008/10/blog-post_16.html

2. http://www.tamilhindu.com/

சி. ஜெயபாரதன், கனடா

Anonymous said...

தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும் தமிழ் நாடும்

தேவன். (கனடா)

இந்த உலகானது பல சுவர்களால் எழுப்பப்பட்டுள்ளது. அவையாவன மேற்காகவும், கிழக்காகவும், மொழிவாரியாகவும், வகுப்பு வாரியாகவும், அடிப்படையவாதங்களாகவும், நிற, இன, வாத வேறுபாடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இப்படியாக பல வேறுபாடுகளை கொண்ட உலகமும், பலம் வாய்ந்த பெரும் தேசிய இனங்களும், அடிப்படைவாதங்கள் பேசும் குறுந்தேசிய, இனங்களும் ஒன்றை ஒன்று அடக்குவதாகவும் அல்லது விழுங்குவதாகவும் அமைந்துள்ளன. இத்தகைய சூழலில் நின்றுதான் எதிர்காலத்துக்கான அமைதி சுபீட்சம், மானிட இருப்பு என்பவற்றுக்காக குரல் கொடுக்க வேண்டியுள்ளது. இலங்கைத் தீவின் இனங்களுக்கிடையேயான இனமுரண்பாடுகளையும் வரலாறுகளையும் ஆராயும் போது, 1977களின் பின்புதான் மிகவும் உச்சநிலையும் கொதிநிலையையும் அடைந்தது எனும் முடிவுக்கு வரக்கூடியதாக உள்ளது. 1977 தமிழருக்கு எதிரான இனக்கலவரம், வடக்கில் பாதுகாப்பு படைகளின் அட்டகாசம் தொடர்ச்சியாக 1981ல் தமிழ் மக்களின் ஆன்மாவாக கருதப்பட்ட யாழ். நூலகம் எரிப்பைத் தொடர்ந்து, 1983ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனக் கலவரம். இதனைத் தொடர்ந்து தமிழ் தரப்பில் உருவாகிய எழுச்சிகள், பல்வேறு இயக்கங்கள் என இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பு முனையான காலகட்டம் என்று கூறலாம்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவின் கரிசனை அக்கறை இலங்கைத் தீவின் மீது என்றும் இல்லாதவாறு மிகவும் தீவிரம் பெற்றது. அன்றைய காலகட்டத்தில் இலங்கையில் ஆட்சியில் இருந்த ஜே.ஆர் அரசு மேற்கொண்ட திறந்த பொருளாதாரச் கொள்கையும் மேற்குலக சார்பான அரசியல் கொள்கை முன்னெடுப்புகளும் இந்தியாவுக்கு மிகவும் எரிச்சல் ஊட்டுவனவாகவும் உவர்ப்பாகவும் இருந்தது என்றே கூறலாம். இதன் காரணமாக அக்காலட்டத்தில் இந்தியாவை ஆட்சி செய்த இந்திரா காந்தி தலைமையிலான இந்திரா காங்கிரஸ் அரசு, தெற்காசிய பிராந்தியத்திய நாடான இலங்கையில் தனது ஆதிக்கத்தையும், ஆழுமையையும் ஸ்திரமாக பேணவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அமெரிக்காவின் தலையீட்டிறகு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், இந்திய மத்திய நடுவன் அரசு பல்வேறு தமிழ் அமைப்புகளுக்கு ஆயுதப் பயிற்சிகள் மற்றும் பலவித உதவிகளையும் வழங்குவதன் மூலம் ஜே.ஆர் அரசை ஆட்டங்காண வைத்து, இந்தியாவிடம் சரணாகதி அடைய வைப்பதற்காக இலங்கைத் தீவின் இனமுரண்பாட்டைக் கையாண்டது. இந்தியாவின் இந்நிலைப்பாடானது தவிர்க்க முடியாததும்கூட. ஏனெனில் இலங்கை சுதந்திரம் அடைந்த பின் இலங்கைத் தீவில் ஆட்சி செய்த பெரும்பான்மை அரசுகள் ஒர் உறுதிப்பாடற்ற அரசியல் தலைமைகளை கொண்டுள்ளதால், சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை சரிவர கையாளாதாலும், அனைத்து விடையங்களிலும் இந்தியாவை சார்ந்தே இருக்க வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இதுவே தெற்காசிய பிராந்தியத்தின் ப+கோள அரசியல் நலன்களை கொண்ட அரசியல் யதார்த்தமாக உள்ளது. இந்த அடிப்படையில்தான் தமிழர் பிரச்சினையும் பார்க்கப்படல் வேண்டும்.

இவற்றினுள் ஒன்றை ஒன்று பிரித்து பார்க்க முடியாது. அதாவது பாலும் நீரும் போல இந்தத் தளத்தில் நின்றுதான் இலங்கைத் தீவில் அமைதியை ஏற்படுத்த முடியும். 1984 ஆண்டில் எதிர்பாராத இந்திராகாந்தியின் படுகொலை என்னும் கொடிய விபத்தின் காரணமாக அரசியலுக்கு அழைத்து வரப்படுகின்றார் ராஜீவ் காந்தி. ஏனெனில் அரசியல் என்பது அவரது விருப்பமான தேர்வாக இருக்கவில்லை. அதனால் அவரது வாழ்வின் முடிவும் கொடிய விபத்தாகவே அமைந்துவிடுகின்றது. இந்த வரிகளை எழுதும்போது எனது உடலும் அதிர்ச்சியில் உறைந்து போகிறது எனது உணர்வுகளே இப்படி இருக்கும் போது பிரிட்டிஸ் காலனித்தவத்தை எதிர்த்து போரிட்ட இந்திய காங்கிரசும், அந்த படு கொலையால் பாதிக்கப்பட்ட 110 கோடி மக்களின் உணர்வுகளையும் என்னால் விபரிக்க முடியாமல் உள்ளது. புலிப் பாசிச கும்பலின் ஊடகங்கள் இன்றுவரை இந்திய எதிர்ப்புவாதத்தை கைவிடாத நிலமையில், புலிகளின் பேச்சாளரான ப. நடேசனின் கோரிக்கைகளான கடந்த காலத்தை மறக்கும் படியும், தங்கள் மீதான தடையை இந்திய அரசு நீக்கும்படியும் கூறி இருக்கிறார். புலிகளின் தலைவரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த கொலையை மறப்பதற்க்கு இது என்ன மாமியார் மருமகள் சண்டையா? இந்த விடையத்தை சர்வதேச இன்டர்போலும், இந்திய உயர் நீதிமன்றமும் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகள் மூலம் தீர்மானித்துவிட்டன. இந்த நிலையில் பிரபாகரன் சார்பாக ப. நடேசன் சோனியாகாந்தியிடம் கோரிக்கைவிடுவது மிகவும் அபத்தமானது.

எது எப்படி இருப்பினும் ராஜீவ் காந்தியின் விருப்பமற்ற அரசியல் பிரவேசம் அந்தக் காலகட்டத்தில் இந்திய தேசத்திற்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. இளைய தலைமுறைக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது. இன்று கணனித்துறையில் இந்தியா ஓர் புரட்சிகரமான வளர்ச்சியை எட்டுவதற்கு அடித்தளம் இட்டவர், ராஜீவ் காந்தியே. இவரது வசீகர தோற்றம் துணிவு, போன்ற ஆழுமைகளை அன்றைய நாளேடுகள் பதிவு செய்தன, பாராட்டியும் இருந்தன. ஆனால் இலங்கைப் பிரச்சினையில் இரு தரப்பாலும் (இலங்கை அரசு –புலிகள்) அவருக்கு ஏற்பட்ட அவமானம், வடுக்கள், விபத்துக்கள், கோரமான மரணம் வாழ்வின் முடிவு இவைகள் என்றும் இரத்தக்கறை படிந்த வரலாறுகளாகவே பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும். மேலும் களங்கமற்ற முகங்கொண்ட ராஜீவ் காந்தியின் கொலையென்பது மறக்கப்படவோ மன்னிக்கப்படவோ முடியாத குற்றமாகவும், அவரைக் கொலைசெய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்னும் குரல்கள் பலமாக எப்போதும் உலக அரங்கில் ஒலித்துக்கொண்டே இருக்கும். புலிகளின் கடந்த கால நூற்றாண்டிற்கும் மேலான பாசிச பொறிமுறைகளை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு ஓர் உண்மை புலப்படும். அது என்னவெனில், புலிகளது பாசிச கட்டுமானங்களையும, செயற்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு நேர்மையான, பலவீனங்களற்ற திறன் உள்ளவர்களை, புலிகள் ஒருபோதும் அணுகுவதில்லை. மாறாக, தங்களை கேள்வி கேட்பவர்களையும் தமக்கு அரசியல் சவாலாக இருக்ககூடியவர்களையும், திறமையானவர்களையும் துரோகம் பட்டம் சூட்டி, சுட்டு அழித்தே வந்துள்ளர்கள்.

ஒரு பழமொழி கூறுகின்றது ‘பணம் அண்ட, பாதாளம் வரையும் பாயும்’என்று. பணம், குற்றவியல், அதிகாரம், துதிபாடுதல், வழிபடுதல், இவை அனைத்துக்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. உறுதியற்ற பலவீனமானவர்களையே புலிகள் தங்கள் தேவைகளிற்காக பணத்தால் விலைக்கு வாங்குகிறார்கள். தற்போது தமிழ் நாட்டு அரசியலிலும் பலர் புலிக்கு விலை போகின்றனர். ஆனால் இவையெல்லாம் ஒரு தற்காலிகமான சினிமாக் காட்சிதான். ஏனெனில் இறுதியில் மனிதத்துடன் கூடிய ‘மானுடம் வெல்லும்’என்று வரலாறு கூறுகிறது. இன்று தமிழ் நாட்டில் புலிகளுக்கு ஆதரவாக சலசலப்பொன்று உருவாகியிருக்கின்றது. சாதி அடிப்படையிலான கட்சிகளாலும், இன்றைய திராவிட பிற்போக்குத்தனமான கட்சிகளாலும் மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளாலும், இந்திய தேசத்தின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மைக்கும், இறையான்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது. இது போன்ற புலிகளுக்கு ஆதரவான அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் நடுவன் அரசு மிகச் சிறப்பாகவே எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கையில், இலங்கைத் தமிழ் இனமும் பிற பல்லின மக்களும் எதிர்பார்புடன் இந்திய தேசத்தை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘சோழியன் குடும்பி சும்மா ஆடாது’என்ற இந்த பழமொழிக்கும் தமிழ் நாட்டு சினிமாக் காரர்களும் நிறையவே தொடர்பு உண்டு என்பார்கள் ஏனெனில் கோடம்பாக்கத்தின் சினிமாத் தொழிற்சாலை வருடத்துக்கு 200 படங்களுக்கு மேல் எடுக்கிறார்கள். இவற்றுள் 95 வீதமான படங்கள் மசாலத்தனமானவை. உலகின் செவ்விய இனமான மூத்த குடி தமிழரின் ஒரு பிரிவினர், அதாவது புலம்பெயர் தமிழர்கள் தமிழ் நாட்டில் ஓடாத பல தரமற்ற படங்களையும் ஓட வைத்து, இசைத் தட்டுக்களையும் விற்பனை செய்து சினிமாக்காரர்களை செழிப்புடன் வாழவைக்கிறார்கள். அத்துடன் நின்றுவிடாது, சினிமா நடிகைகளையும் நடிகர்களையும் வசந்த –கோடை காலங்களில் புலம் பெயர் தேசங்களுக்கு வரவழைத்து, அவர்களின் வாழ்விற்கு செழிப்பூட்டிவருகிறார்கள். இவ்வாறு நிலைமைகள் இருக்கும் போது, தமிழ் நாட்டு சினிமாக் காரர்கள் மட்டும் தங்கள் நன்றிக் கடனை வெளிப்படுத்த வேண்டாமா? தமிழ்நாட்டு சினிமாக் காரர்களிடமும் திராவிட கட்சிகளிடமும் இலங்கைத் தமிழனான நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். முழங்காலுக்கும் தலைக்கும் முடிச்சு போடுவது போல நினைத்து, இலங்கை தமிழர் பிரச்சினையை அணுகாதீர்கள். இந்து, தினமலர், துக்ளக், குமுதம், கல்கி போன்ற பத்திரிகைகள் புலிகளை எதிர்த்து எழுதி வருவதால், அவைகளை பிராமணியப் பத்திரிகைகள் என வர்ணித்து, அதனால்தான் இலங்கைத்தமிழர்களை எதிர்க்கிறார்கள் என்கிறீர்கள். தயவுசெய்து உங்குள்ள பிராமணிய ஆதிக்கத்தையும் இலங்கை தமிழர் பிரச்சினையும் தொடர்புபடுத்தாதீர்கள். (மனுசாத்திரத்தையும், ஆறுமுகநாவலரின் சைவமும் தமிழும், யாழ்ப்பாண வேளாhளர்களின் ஆதிக்க போக்குகளையும் இன்னுமொரு சந்தர்ப்பதில் பார்க்கலாம்) அத்துடன் இருபது ஆயிரம் மாவீரர்களும், புலிகளுக்கும் மட்டும் குரல் கொடுக்காது, புலிகளால் உருவாக்கிய முப்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகளுக்கும், இரண்டு இலட்சத்துக்கு மேற்ப்பட்ட அநாதை சிறுவர்களுக்காகவும், கந்தன் கருணை படுகொலைகக்காகவும், வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களுக்காவும் காத்தான்குடி பள்ளிவாசல் கொலைக்காகவும், சிங்கள சகோதரர்களின் கொலைக்காகவும், சகோதரப்படுகொலைக்காகவும், கல்விமான்கள் கொலைக்காகவும் குரல் கொடுங்கள். புலிகள் மாத்திரமல்ல, இலங்கை மக்கள் அனைவருமே உங்கள் தொப்புள் கொடி உறவுதான்.
http://www.thenee.com/

அருள் said...

ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்படும் அனைவரும் ஈனத்தனமானவர்கள் ஆவர் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று சனிக்கிழமை நடிகர்கள் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்று நடிகர் சத்தியராஜ் உரையாற்றிய போது மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் யாரும் குண்டுவீசி கொல்லப்படவில்லை. எல்லோரும் சர்க்கரை நோய் போன்ற உடல்நலம் இல்லாமல்தான் இறந்து போயிருக்கிறார்கள். செஞ்சோலை என்கிற இடத்தில் பள்ளிக்கூடத்தின் மீது குண்டுவீசியபோது கூட போராளிகள் பதுங்கியிருந்ததால் குண்டு வீசினோம் என்று சிங்கள அரசு தெரிவித்தது. அதைக் கேட்டு இளிச்சவாயங்க நாமும் நம்புறோம்.

ஊட்டியில் படப்பிடிப்பு நடந்த இடத்தில் இப்போது படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை. அங்கிருக்கும் ஒரு குரங்குக் கூட்டம் அங்கிருந்து வேறு இடத்திற்கு போகுமாம். அங்கு சூட்டிங் நடத்தினால் அந்த குரங்குகளுக்கு மூட் அவுட்டாகி அவை இனவிருத்தி செய்ய முடியாமல் போகும் என்று கூறி படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிப்பதில்லை.

குரங்கைவிட கேவலமாக தமிழனை மதிப்பதால்தான் அவன் செத்தாலும் பரவாயில்லை என்று சகலவிதமான அட்டூழியங்கையும், அநியாயங்களையும் உலகத்தில் உள்ள எல்லா ஏகாதிபத்திய நாடுகளும் திட்டம் போட்டு செய்து கொண்டிருக்கின்றன.

இந்திய அரசு, இலங்கை அரசுக்கு இராணுவ உதவி செய்வதில்லை என்று கூறியுள்ளது. அப்படி உதவி செய்யாமல் இருந்தால் நன்றி. இனிமேலும் உதவி செய்யாமல் இருக்க வேண்டும். இராணுவ உதவி செய்தால் அதில் தமிழனின் பணமும் அதில் சேர்ந்திருக்கிறது.

அதாவது இந்தியா, இராணுவத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், இந்தியாவில் இருக்கின்ற வருமான வரி கட்டுபவர்களின் பணத்தில் இருந்துதான் அந்தப் பணம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதைக் கொண்டுதான் ஆயுதங்கள் வாங்குகிறீர்கள். அதில் தமிழனின் வரிப் பணமும் இருக்கிறது.

அவ்வாறு வாங்கப்படும் ஆயுதங்களை இலங்கைக்கு அனுப்பினால் அதை வைத்துக் கொண்டு அங்கிருக்கும் ஈழத் தமிழர்களை அடித்து கொலை செய்வதற்கு பயன்படுத்தப்படும். அப்படியென்றால் தமிழனை அழிப்பதற்கு தமிழனின் வரிப் பணம் பயன்படுத்தப்படுகிறது என்று ஆகும். இது உண்மையா? இல்லையா? எங்களுடைய வரிப்பணத்தைக் கொண்டு எங்களது தமிழர்களை அழிப்பது என்ன நியாயம்?

Anonymous said...

good post.

தமிழ் தேசியன் said...

ராஜ பக்சவெ ஏன் திட்டுகிறீர்கள் ..மன்மோகன் சிங்கை ஏன் திட்டுகிறீர்கள் ? முன்பு நாம் கூறியது போலவே ஆரியன் ஆரியனுக்கு உதவுவான் இது இயற்கை .. வரலாறு.. நாம் நம்முடைய பங்காளிக்கு சோழர்கள் காலம் தொட்டு உதவிவருகிறோம் இதுவும் வரலாறு..ஆகவே அவன் அவனுடைய பங்காளிக்கு உதவட்டும் நாம் நம்முடைய பங்காளிக்கு உதவுவோம் இது கடமை..

செத்து விழுந்த மீனவன் 400 பேரும் நீங்கள் உங்கள் வீட்டு பிள்ளைகளாக நினைத்து இருந்தால் சிங்களவனை ஒரு முறையாவது சுட்டு இருப்பீர்கள் ..ஆக நாங்கள் வேறுதானே!உலகின் 4 வது கடற்படை ஒரு சின்ன பதினெட்டு கிலோ மீட்டரை பாதுகாக்க முடியாதா?கச்சதீவு தமிழருடையா பாரம்பரிய பூமி! அதை ஏன் நீங்கள் சிங்களவனிடம் கொடுத்தீர்கள் ..அதாவது இலங்கை அப்போது அமெரிக்காவின் பக்கம் சாய்கிறதாம்..அதை தடுத்து நிறுத்த ஏதோ எங்கள் வீட்டு சொத்தை பர்த்து டே கேக்கு மாதிரி கொடுத்து விட்டீர்கள்! ஆமா நீங்கள் இப்போது யார் பக்கம் குண்டி கழுவி கொண்டிருக்கிறீர்கள்?அதே அமெரிக்கா தானே! திரும்ப வாங்க வேண்டியது தானே!

பாகிஷ்தான் காரனிடம் காஷ்மீரை கொடுத்தால் நாம் சமாதானமாக வாழலாம் அல்லவா?அதே போல் அருணாசலத்தை சீனாவிடம் கொடுத்தால் நாமும் அவர்களும் உடன் பிறப்புகள் ஆகிவிடலாம் அல்லவா?பஞ்சாபில் இருந்து அரை அடி.. மாராத்திகாரனிடமிருந்து ஒரு அரை அடி.. வேறு நாட்டானிடம் கொடுக்க முடியுமா? கொன்னுடுவான் சீக்கியன் வெட்டி பொடுவான் மராத்தி! ஆனா இங்கே! தமிழன் இளிச்ச வாயன் ! எருமை மாடு!

இந்திய தேசியம் பேசும் பன்னாடைகள் சாப்பிடும் ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு மீனவனுடைய உயிர்!இந்த இந்தி பன்னாடைகள் அப்புறம் ஏன் ஏற்றுமதி வரி அது இது என்று வந்து நிற்கிறீர்கள்!பரதேசிகளா!

இலங்கை சீனாவிடமும் பாகிக்கிஷ்தானிடமும் ஆயுதம் வாங்குதாம் அது இந்தியாவுக்கு ஆபத்தாம்!அதே பாகிஷ்தான் தான் அமெரிக்காவிடம் ஆ யுதம் வாங்குறான் இது இந்தியாவிற்க்கு ஆபத்தல்லவா?எனவே நாம் முந்திக்கொண்டு பாகிஷ்தான்காரானுக்கு ஆயுதம் கொடுப்பதுதானே முறை!

செத்து விழுந்த மீனவர்களின் உடலை பார்த்து ஒரே ஒரு கண்டன அறிக்கை இலங்கை அரசை நோக்கி வீசப்பட்டிருந்தால் நாம் இந்தியதேசத்தை பாராட்டலாம்! செத்தவன் நம் இன விரோதி ஒழிந்தான் பீடை என நீங்கள் நினைத்ததால் இறந்தவனுடைய சுடுகாட்டில் இன்று தமிழ் தேசியம் பிறந்து விட்டது!

  © Blogger template Newspaper II by Ourblogtemplates.com 2008

Back to TOP