வாழ்க்கை வலி - கவிதை (நான் யார் என்பதன் தேடல்-1)
Tuesday, September 9, 2008
திரு. கோவி.கண்ணன் அவர்களின் காலம் வலைபதிவில் நான் கடவுள் பதிவை படித்ததும், எனக்குள் ஞானம் கிடைத்த வரலாறு நினைவுக்கு வந்தது.
திரு. ரமணமகரிஷி உட்பட பல ஆன்மீகஞானிகளும் தேடிய நான் யார்? என்ற தேடலை நானும் தேடினேன். 10 வயது முதல் நீண்ட எனது தேடலுக்கு, என்மகன் அறிவு பிறந்ததும் பதில் கிடைத்தது. நான் தேடிய அந்த ஞானபாதை இங்கு கவிதையாக... இந்த கவிதையில் குறிப்பிடப்படும் வாழ்க்கைபாதை உலகில் மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் கிட்டதட்ட பொருந்தும் என நினைக்கிறேன்.
வாழ்க்கை வலி (உடல் வலி)
வாழ்க்கை என்பது
அழுவதற்கு அல்ல - இந்த வரிகளுககு
இன்னும் புரியவில்லை அர்த்தம்
அழுகாமல் பிறந்திருந்தால்
அன்றோடு முடிந்திருககும்
அழுகையின் அத்தியாயங்கள்
உலுக்கி எடுத்த உடல் வலி
பிறந்ததும் வீரிட்டு அழுதேன்
அழுகையின் அடுத்தடுத்த
அத்தியாயங்கள் தெரியாமல்
அப்போது கூட யோசித்திருப்பேனோ
வாழ்க்கை என்பது
வலிகள் நிறைந்ததா?
புது உலகுக்குள் புகுந்துவிட்ட ஆனந்தம்
உடல்வலியை மனவலிமையால் வென்றிடலாம்
வாழத்துணிந்தது மனம்
வாழ்க்கையின் இன்னொரு முகம் தெரியாமல்
உடலை வளைத்து
உணர்ச்சிகளை பெருக்கி
வாழ்க்கை பயணத்தை
வலி இன்றி தான் துவங்கியது மனம்.
சிந்தனை சிறகுகள்
விரியும் வரை தெரியவில்லை
வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் வலி என்று
உணர்ச்சி தேடலின் வேகத்தில்
ஓட துவங்கிய மனம்-
ஒவ்வொரு அடியிலும்
வாங்கியது அடி.
பற்று பாச பங்கீட்டில் முட்டி மோதியதில்
வாழ்க்கை வலியின் - அடுத்தடுத்த
அத்தியாயங்கள் ஆரம்பமானது.
பங்கிட்டு கிடைப்பது தான் பாசம்
பெற்றோரின் பாசம்
உடன்பிறப்புகளோடு பங்கிட வேண்டும்.
உடன்பிறபபுகளின பாசம்
அத்தனையிலும் பங்கிட வேண்டும்
அயலவரின் பாசம்
அவரவர் பங்குக்கு அற்பத்திலும் சொச்சம்
பங்கிட்டு தான் பெற வேண்டுமா பாசத்தை?
யாருக்கும் எதற்கும் பங்கிடாத பாசம்
ஏங்கியது மனம்
முதன் முதலில் உணர்ந்தேன்
மன வலியை!
தொடர்ச்சி அடுத்த பதிப்பில். (மனவலி)
கவிதை விளக்கம்: ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருந்து பிறந்ததும் அழவேண்டும். அப்படி அழவில்லை என்றால் குழந்தை உயிரோடு இல்லை என்பது மருத்துவர்கள் அறிந்ததே. காரணம் மூச்சுகுழாய்கள் விரிவடைந்து குழந்தை தானக சுவாகிக்க துவங்குகிறது. அப்போது ஏற்படும் உடல் வலிக்கு குழந்தை அழுகிறது. அப்படி அழவில்லை என்றால் அந்த குழந்தையின் உயிர் வாழ்க்கை அதோடு முடிந்துவிடும்.
உடல்வலி தாயின் அரவணைப்பில் சாந்தமாகும் போது குழந்தைக்கு தாயின் மீது பாசம்(பற்று) வருகிறது. தொடர்ந்து தன்னை அணைக்கும் ஒவ்வொருவர் மீதும் பாசம் வருகிறது. இந்த பாசத்தை குழந்தை நினைவில் பதிந்து கொள்கிறது. நளடைவில் தனக்கு கிடைத்த பாசங்கள் எல்லாம் குறைய துவங்கும் போது குழந்தைக்குள் மனம் கணக்கிறது. ஒருவித ஏக்கம் வருகிறது. அப்போது உடல்வலியோடு மனவலியும் வந்துவிடுகிறது.
குழந்தைகள் மட்டுமல்ல மனிதமனமே பொதுவாக ‘‘தான், தனக்கு மட்டும்’’ என்ற அளவில் தான் பாசத்தை எதிர்பார்க்கிறது. மேலும் தான் அசைப்படும் எல்லாமும் தனக்கு கிடைக்கவேண்டும் என எதிர்பார்க்கிறது. அது கிடைக்காத போது அங்கு மனம் வலிக்க ஆரம்பித்து விடுகிறது.
6 comments:
க'விதை' நன்றாக இருக்கிறது, அன்பே கடவுள் என்கிற வரிகளை மெய்ப்பிக்கிறது. காசு பணம் நிம்மதி தராது மகிழ்வுடன் கூடிய நிம்மதியைத் தேடித்தானே இறைவனைத் தேடுகிறான் மனிதன். அந்த நிம்மதியும் மகழ்வும் கிடைக்கும் போது யாருடைய அன்பினாலாவது கிடைத்தால் நிறைவு பெறுகிறார்கள். ஆனால் இத்தகைய அன்பு நிலைத்திருக்காமல் போவது தான் மனிதனது கெட்ட காலம் ! அன்பும் பாசமும் எந்த அளவுக்கு வைக்கிறோமோ, அது புறக்கணிக்கபடும் போது ஏற்படும் துன்பம் மிகக் கொடியது. அதை காதலில் தோல்வி அடைந்தவர்களும், முதியோர் இல்லங்களில் வாடும் முதியவர்களும் அறிவர்.
//தொடர்ந்து தன்னை அணைக்கும் ஒவ்வொருவர் மீதும் பாசம் வருகிறது. இந்த பாசத்தை குழந்தை நினைவில் பதிந்து கொள்கிறது. நளடைவில் தனக்கு கிடைத்த பாசங்கள் எல்லாம் குறைய துவங்கும் போது குழந்தைக்குள் மனம் கணக்கிறது.//
இதுவரை நான் இந்த அளவு ஆழ்ந்து சிந்தித்ததில்லை. உண்மையான வார்த்தைகள் . சிந்திக்க வைத்து விட்டீர்கள் .
யாருக்கும் எதற்கும் பங்கிடாத பாசம்
ஏங்கியது மனம்
முதன் முதலில் உணர்ந்தேன்
மன வலியை!
பச்சை நிறத்திலை எழுதியிருப்பதுதான் படிக்கா கஸ்ரமாயிருக்கு.... கவிதை நல்லம்
தயவு கூர்ந்து எழுத்தின் நிறத்தை மாற்றவும். கவிதை சிறப்பபாக உள்ளது. வாழ்த்துக்கள்.
அருமையாக இருக்கிறது
Post a Comment