செய்தியாளர்களை குறைசொல்லும் வலைப்பதிவர்களே நீங்கள் யார்?
Friday, November 21, 2008
சமீபத்தில் நடந்த சட்ட க்ல்லூரி சம்பவத்தை குறிப்பிட்டு பல வலைப்பதிவர்கள் செய்தியாளர்களை கடுமையாக விமர்சித்து குற்றம் சுமர்த்தி எழுதியுள்ளனர்.
செய்தியாளர்கள் என்றால் யார் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஒரு செய்தியை பலபேரிடம் சேர்ப்பவர் தான் செய்தியாளர். அதனால் தானே மீடியா என ஆங்கிலத்திலும் ஊடகம் என தமிழிலும் சொல்கிறோம். சரி வலைபதிவர்கள் என்பவர் யார்? இவர்களும் ஒரு ஊடகம் தானே. செய்தி தாள், வானொலி, தொலைகாட்சி, இணையம் என, இணையத்தில் செயல்படும் செய்தியாளர்கள் தான் வலைப்பதிவர்கள். எனவே செய்தியாளர்கள் வேறு, வலைபதிவர்கள் வேறு என்று யாரும் செய்தியாளர்களை மட்டும் குறைபட்டுக்கொள்ள வேண்டாம்.
சரி விடயத்துக்கு போவோம்.
சட்டக்கல்லூரி சம்பவத்தில் போலீசாரோடு செய்தியாளர்களும் கலவரத்தை தடுக்க தவறிவிட்டனர் என்று திரு பழமைபேசி வலைபதிவரும், பணத்துக்காகவும் சாதிய ஆதிக்கத்திற்காவும் திரும்ப திரும்ப ஒளிபரப்பி தொடர்கலவரத்துக்கு வித்திடுகிறார்கள் என வினவு, மதிமாறன் உட்பட பதிவர்களும் குற்றம் சுமத்தி எழுதியுள்ளனர்.
ரளாவில் மதம் பிடித்த யானை ஒன்று பாகனை அரை மணி நேரத்துக்கும் மேலாக தூக்கி பந்தாடி கொன்ற கொடூர காட்சியை சென்ற ஆண்டு தொலைகாட்சிகளில் பலர் பார்த்திருக்க கூடும். இந்த காட்சியை ஓடி ஓடி உயிரையும் பணையம் வைத்து ஒளிப்பதிவு செய்தார்கள் செய்தியாளர்கள். இது திரும்ப திரும்ப தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. இந்த விடயத்தில் செய்தியாளர்கள் எப்படி குற்றம் சொல்ல முடியும்?
இனி சட்டகல்லூரி விடயத்துக்கு வருவோம். சட்டகல்லூரி சம்பவத்தை செய்தியாளர்கள் படம் பிடிக்கவில்லை என்றால் இன்று இந்த அளவுக்கு வலைபதிவில் விவாதித்திருப்பீர்களா? சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல் 3 மாணவர்கள் படுகாயம் என்று மட்டும் தான் உலகுக்கு தெரிந்து இருக்கும். இது வழக்கமான ஒன்று தானே என்று தான் உலக மக்கள் அனைவரும் அடுத்த வேலையை பார்த்திருப்பார்கள். ஆனால் செய்தி படம்பிடிக்கப்பட்டு காட்டப்பட்டதால் தான் மாணவர்கள் கலவரம் என்றால் எவ்வளவு கொடூரமாக இருக்கிறது என மக்கள் நேரடியாக புரிந்து கொண்டார்கள்.
உண்மையில் வழக்கம் போல அடித்து கொள்வார்கள் என்று தான் காவலர்களும், கல்லூரி நிர்வாகமும் பொருப்பை தட்டி கழித்திருக்கிறார்கள். செய்தியாளர்கள் படம் பிடிக்கவில்லை என்றால் அதை தான் நிரூபித்தும் இருப்பார்கள். ஆனால் இன்று கல்லூரி மோதல்களுக்கு தீர்வு காணவேண்டியா கட்டாயத்துக்கு உலகம் வந்திருக்கிறது என்றால் அது செய்தியாளர்கலால் தானே.
ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. அங்கு செய்தியாளர்களை தவிர வேறு யாரும் இல்லை என்ற சூழலில் செய்தியாளர்கள் கேமராவை கீழே போட்டுவிட்டு அசம்பாவிதத்தை நிச்சயம் தடுப்பார்கள். ஆனால் சட்டகல்லூரி சம்பவ இடத்தில் கலவரத்தை தடுக்க காவல்துறையினர், பொதுமக்கள், கல்லூரி நிர்வாகம் என அத்தனை பேரும் இருக்கிறார்கள். அந்த இடத்தில் செய்தியாளர்கள் கேமராவை கீழே போட்டுவிட்டு கலவரத்தை தடுக்க வேண்டும் என கூறுவது எவ்விதத்தில் நியாயம்?
அடுத்து அந்த இடத்தில் காவல்துறையினர் இல்லை என்றால் நிச்சயமாக பொது மக்களே கலவரத்தை தட்டிக்கேட்டிருப்பார்கள். ஆனால் அத்தனை காவலர்கள் நின்று வேடிக்கை பார்க்கும் போது பொதுமக்கள் என்ன செய்யமுடியும்? காவல்களை ஏன் வேடிக்கை பார்க்கிறீர்கள் என தட்டி கேட்க முடியும். அதை செய்தியாளர்களும் பொதுமக்களும் சரியா செய்தார்கள். தட்டி கேட்டார்கள். ஒரு பெண் நிருபர் காவல் ஆணையரின் நெஞ்சில் தட்டி கேள்வி கேட்டது உங்கள் கண்ணில் படவில்லையா?
கலவரமாகட்டும், பூகம்பமாட்டும், சுனாமியாகட்டும், மதம்பிடித்த யானையின் அட்டகாசமாகட்டும். செய்தியாளர்கள் உயிரை பணையம் வைத்து ஓடி ஓடி செய்தி சேகரிப்பார்கள். செய்தியை வெளிக்கொணர்வது தான் செய்தியாளரின் பணியே தவிர. செய்தி சேகரிக்காமல் இருப்பது அல்ல. ஒரு அசம்பாவிதத்தை தடுக்க ஆயிரம் பேர் முயலும் போது, அது எப்படி நடக்கிறது என படம்பிடித்து காட்ட உங்களுக்கு ஒரு செய்தியாளர் வேண்டாமா?
அடுத்து சட்டகல்லூரி கலவரம் திரும்ப திரும்ப காட்டப்படுவதால் தொடர் கலவரத்துக்கு தூண்டுகிறார்கள் என்ற குற்றசாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
செய்திக்கும் செய்தி விமர்சனத்துக்கும் உள்ள வித்தியாசத்தை வலைபதிவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
செய்தியை ஒளிபரப்புவதால் கலவரம் வரும் என்று சொல்வது தவறு. எந்த செய்தியானாலும் அது மக்களை சென்றடைய வேண்டும். நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தானே செய்தி ஊடகங்கள்.
அடுத்து செய்தி விமர்சனம். இதை ஒவ்வொரு செய்திநிறுவனமும் ஒவ்வொரு கோணத்தில் சொல்லும். இதில் தான் தங்களுக்கான பாரபட்சத்தை காட்டுகின்றன. இது மக்களின் பார்வைக்கு கண்கூடாகவே தெரியும். ஜெயா, கலைஞர், சன், மக்கள் தொலைகாட்சிகளில் எப்படி செய்திகள் வரும் என மக்களுக்கு நன்றாகவே தெரியும். இது கலவரத்தை தூண்டும் என்பது தவறான வாதம். கலவரத்தை தூண்டுபவர்கள் என ஊருக்குள் சில தென்டச்சோறுகள் இருக்கிறது. அவர்கள் தான் இந்த செய்திவிமர்சனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார்கள். அதனால் தான் கலவரங்களும் வருகின்றன.
சரி இனி வலைபதிவர்களுக்கான சுயபரிசோதனைக்கு வருவோம்.
நாம் செய்வது என்ன? செய்தியை எழுதுகிறோமா? செய்தி விமர்சனத்தை எழுதுகிறோமா? ஊடகங்களில் செய்தியை அறிகிறோம். அதை விமர்சிக்கிறோம். தவறில்லை. ஆனால் எப்படி விமர்சிக்கிறோம் என்பதை கவனித்துப்பாருங்கள். கலவரத்துக்கு வித்திடுபவர்கள் பட்டியலில் முதலில் வருபவர்கள் யார்? என்பது புரியவரும்.
செய்தி ஒளிபரப்பால் 3 மாணவர்களை 30 மாணவர்கள் மிருகத்தனமாக அடிக்கிறார்கள் என்ற பதட்டம் தான் மக்கள் மத்தியில் வந்திருக்குமே தவிர, அடிப்பவர்கள் இந்த சாதி, அடிவாங்குபவர் இந்த சாதி என்ற எண்ணம் மக்களுக்கு வந்திருக்காது. ஆனால் அடிப்பவர் இந்த சாதி, அடிபடுபவர் இந்த சாதி என குறிப்பிட்டு செய்திவிமர்சனம் செய்பவர்கள் தான் உண்மையில் கலவரத்தை தூண்ட முயற்சிப்பவர்கள். இதை செய்தது யார்? பிரபல செய்தி நிறுவனங்களா? சில வலைபதிவர்களா?
உலகில் உள்ள எல்லா பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி ஊடகங்களும் இரு பிரிவினர் என்று தான் செய்தியை விமர்சித்ததே தவிர, இரு சாதியினருக்கு இடையே என செய்தியை விமர்சிக்கவில்லையே. ஆனால் வலைபதிவில் செய்தியாளர்களை குற்றம் சொன்ன அனைத்து பதிவர்களும் உயர் சாதி தலித் சாதி என பிரித்தல்லவா விமர்சித்துள்ளீர்கள். இது தானே கலவரத்துக்கு வித்திடும்.
வலைபதிவு அன்பர்களே மதுரையில் இரு சாதியினருக்கு இடையே சுவர் பிரட்சனையில் கலவரம் நடக்கிறது என்பது எனக்கு தெரியும். ஆனால் சத்தியமாக அது எந்தெந்த சாதியினருக்கு இடையில் நடக்கிறது என்பது எனக்கு இன்றுவரை தெரியாது. அதே போல தான் சட்டக்கல்லூரி கலவரத்தில் அடித்ததும் அடிபட்டதும் எந்த சாதியினர் என்பதை வலைபதிவில் தான் பொருப்பில்லாமல் விமர்சிக்கிறீர்களே தவிர பிரபல செய்தி ஊடகங்கள் பொருப்பாகவே நடந்துள்ளன. தயவு செய்து சாதிய சிந்தனையை விட்டுவிட்டு மனிதாபிமான சிந்தனைக்கு வாருங்கள்.
சாதிய இடஓதுக்கீட்டை ஒழியுங்கள். சாதி சான்றிதழை ஒழியுங்கள். சாதி அமைப்புகளை ஒழியுங்கள். சாதியை ஓழியுங்கள். செய்தியை குறைபடுவதை விட செய்திவிமர்சனத்தில் விழிப்புடன் பொருப்புடன் இருங்கள்.
சாதி ஓதுக்கீடு ஒழிப்பு குறித்து அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
19 comments:
//செய்தி ஒளிபரப்பால் 3 மாணவர்களை 30 மாணவர்கள் மிருகத்தனமாக அடிக்கிறார்கள் என்ற பதட்டம் தான் மக்கள் மத்தியில் வந்திருக்குமே தவிர, அடிப்பவர்கள் இந்த சாதி, அடிவாங்குபவர் இந்த சாதி என்ற எண்ணம் மக்களுக்கு வந்திருக்காது. ஆனால் அடிப்பவர் இந்த சாதி, அடிபடுபவர் இந்த சாதி என குறிப்பிட்டு செய்திவிமர்சனம் செய்பவர்கள் தான் உண்மையில் கலவரத்தை தூண்ட முயற்சிப்பவர்கள். இதை செய்தது யார்? பிரபல செய்தி நிறுவனங்களா? சில வலைபதிவர்களா? //
யோசிக்க வேண்டிய விஷயம்...
தங்கள் கருத்துக்களை வழிமொழிகிறேன்...
தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய தேசத்தில் இந்த சாதீய பாகுபாடு என்று ஒழிகிறதோ அன்று தான் உண்மையான சுதந்திரதினம்.
அனுபவமும் , இயல்பான உணர்ச்சிகளின் வெளிப்பாட்டின் விளைவுகளுமே ஒருவனை செம்மைப்படுத்துகிறது. அதன் மூலமே ஒருவன் வாழ்கையை அறிந்து தனது இலக்கின் பாதையிலான பயனத்தை சரிபடுத்திக்கொள்வான் இல்லை மாற்றிக்கொள்வான். ஆனால் எங்கோ நடந்த நிகழ்வின் சலனக்காட்சியை மாட்டும்பார்த்து அதன் தாக்கத்தால் தனது செயல்களை மாற்றத்துக்குள்ளாகுவானயில் அது கன்டிப்பாக அவனுக்கு கேடுதான். அடித்தவன் அடிபட்டவன் இருவருக்கு மட்டுமே அவர்களின் உள்ளப்பிரவாகத்தின் ஆதாரம் தெரியும். மற்றவர்களுக்கோ வெறும் இன உணர்வுமட்டுமே.
கருத்துப்பரவல் கன்டிப்பாக இருக்கனும் நான் ஒத்துக்கொள்கிறேன், ஆனால் நிகழ்வின் விளைவைமட்டும் பரப்புவது கன்டிப்பாக மனித குலத்துக்கே கேடுதான். இத்தகைய காட்சிகளை எடுத்தவர் மற்றும் இந்த செயல் இரண்டுமே மகா கண்டனத்துக்குரியவைதான்.
நீங்கள் சொல்வது ஆதாரமற்றது. தாக்கியவர்கள் தலித் என மறுநாள் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி. வாழ்க செய்தியாளர்கள்
//நீங்கள் சொல்வது ஆதாரமற்றது. தாக்கியவர்கள் தலித் என மறுநாள் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி. வாழ்க செய்தியாளர்கள்//
நீங்கள் யாருடைய அருவருடி ?
அர டிக்கெட்டு! நீங்கள் யாருடைய அருவருடி ?
ஐயா,
வணக்கம்! காவல்துறையினரைப் பற்றி என் பதிவில் நான் குறிப்பிடவில்லை. மேலும், நான் டொரண்டோவில் படித்துக் கொண்டிருந்த போது பள்ளிகளில் கலவரம் அவ்வப்போது நிகழ்வது வழக்கம். அவற்றுள் பெரும்பாலானவை ஊடகத்தின் உதவியால் ஆரம்ப நிலையிலேயே களையப்பட்டது. உதாரணத்திற்கு, அவர்கள் விபரம் தெரிய வந்ததுமே எச்சரிக்கைச் செய்திகளை ஒலிபரப்புவார்கள். தொலைக்காட்சிகளிலும் எழுத்தோடை வாயிலாக எச்சரிக்கைச் செய்தியை ஓட விடுவார்கள். இது ஒரு உதாரணம்தான். இதுபோல ஊடகங்களின் பங்கு நிறைய. அதைத்தான் நான் குறிப்பிட்டு இருந்தேன். மேலும் எனக்குச் செய்தி சேகரிக்கச் சென்றவர் மீது எந்த ஆதங்கமும் இல்லை.
//ஆனால் அடிப்பவர் இந்த சாதி, அடிபடுபவர் இந்த சாதி என குறிப்பிட்டு செய்திவிமர்சனம் செய்பவர்கள் தான் உண்மையில் கலவரத்தை தூண்ட முயற்சிப்பவர்கள்.//
இணையத்திலும் சாதி வெறி தலை விரித்து ஆடுகிறது.
//நீங்கள் சொல்வது ஆதாரமற்றது. தாக்கியவர்கள் தலித் என மறுநாள் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி. வாழ்க செய்தியாளர்கள்//
//நீங்கள் யாருடைய அருவருடி ?//
//அர டிக்கெட்டு! நீங்கள் யாருடைய அருவருடி ?//
he is telling the truth . don't ask silly questions
sangamithra
செய்தி தாள்களில் உடனே வந்து விட்டது, தேவர், தலித்து மாணவர்களுக்கு இடையே பிரச்சனை என்று. (times of india, dina thandhi, tamil murasu..)
தேவர் தலித்து மோதல் என்று வந்த பிறகுதான் சுவாரசியம், மற்றும் வேகமே குறைந்தது. இது கால காலமாக நடந்த, நடக்க இருக்கும் மோதல் என்பதால் சுவாரசியம் குறைந்தது.
குப்பன்_யாஹூ
// செய்தி ஒளிபரப்பால் 3 மாணவர்களை 30 மாணவர்கள் மிருகத்தனமாக அடிக்கிறார்கள் என்ற பதட்டம் தான் மக்கள் மத்தியில் வந்திருக்குமே தவிர, அடிப்பவர்கள் இந்த சாதி, அடிவாங்குபவர் இந்த சாதி என்ற எண்ணம் மக்களுக்கு வந்திருக்காது. //
தாறுமாறாக வழிமொழிகிறேன்
நான் விகடனை(Issue Date: 19-11-08)பார்த்துதான் தெரிந்துகொன்டேன்.
உத்தப்புரம் பிரச்சினையில் எந்தெந்த சாதியாருக்குப் பிரச்சினை என்று கூடத் தெரியாத அசட்டுத்தனமான அம்பி அவர்களுக்கு... திண்ணியம், மேலவளவு, கயர்லாஞ்சி இன்னபிற தலித் மக்கள் மீதான கொடுமைகளும் கூட யாருக்கு நடந்த்து என்று தெரியாமல் போகலாம்.
ஈராக்கில், ஆப்கானில் எந்தெந்த தரப்பினர் அடித்துக் கொள்கின்றனர் என்பதும் கூடத் தெரியாமல் போகலாம். தெரிந்து கொண்டால் அது தெய்வ குற்றம் ஆயிற்றே!
நல்லது. உரைக்கும்படிச் சொன்னால் ஏதோ ஒரு திருடன் நாளைக்கு உங்கள் வீட்டிற்கு வந்து ரவுண்டு கட்டினால் கண்ணை மூடிக்கொண்டு போர்வையை போர்த்திக் கொண்டு பேஷாகத் தூங்கவும். ஏனெனில் இன்னார்தான் அடித்தார் என்று அடையாளம் தெரிவித்தால் உங்கள் நீதிப்படியே குற்றம் ஆயிற்றே, இன்னமும் உரைக்கும்படி கூட சொல்ல்லாம், ஆனால் தோல் தடிப்பாக இருப்பவர்களிடம் பேனாக்குச்சியை வைத்து எழுப்ப முடியாதே?
வினவு
வினவு எப்போதும் ஒரு சாதி சார்ந்து எழுதுபவர். பார்ப்பனர்களிடம் இருந்து எப்படி விலகி இருக்கிறோமோ அதே போல் வினவு எழுத்துகளில் இருந்தும் விலகி இருப்பது அனைவரது மனநலத்திற்கு நன்று.
குழலி அவர்களுக்கு,
ஒரு பத்திரிக்கையாளன் கடமையாதெனில்,
அவை அவர்கள் பாடபுத்த்கத்தில்வரையறுக்கப்பட்டுள்ளது. நடுநிலைமை தவறாது இருத்தல் நன்று...............
மக்கள் இறால் பண்ணைகளை அழித்தால் அதை அம்மக்களின் (பாதிக்கப்பட்டவரின் நடவடிக்கையாக) பார்க்கமாட்டீர்கள்.அதை அத்துமீறலாகத்தான் பார்ப்பீர்கள்.
உங்களின் நடு நிலைமையின் தரம் அப்படி. எல்லா இடத்திலும் நியாயத்தராசு தேடி அலைந்து கொண்டிருகின்றீர்கள்?.உண்மையை சொல்லுங்கள்.வினவு எழுதிதான் மக்களுக்கு அடிவாங்கியவன் சாதி தெரியுமா? .அடிவாங்கிய மறுநாளே தமிழகம் முழுவதும் தேவர் சாதி சங்கங்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினவே அதைகூட வினவு போன்றோர்.வெளியிட்டனரா? இல்லை மாட்சிமை தாங்கிய பத்திரிக்கையா?. திண்ணியத்தில் மலம் தின்னவைக்கப்பட்டதாக என்று கூறப்பட்ட நபர் என்று எழுதிய பத்திரிக்கை நிருபரின் நியாயத்தராசு எப்படி சரி சமமாய் நிற்கின்றது.முத்து ராமலிங்கம் என்ற சாதிவெறியனை பற்றி நீங்கள் என்ன குறிப்பிட்டீர்கள்?
அவரின் சாதிவெறியை எங்காவது மறைமுகமாவவது வெளி காட்டினீர்களா?
60 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றும் இந்த சனநாயகத்துக்கு -நீங்கள் மூட்டு கொடுத்து வருகின்றீர்கள் என்பதை மறுக்கமுடியுமா?மேலவளவு,கொடியன்குளம் கலவரத்தை இப்படித்தான் பக்கம் பக்கமாக எழுதினீர்களா?
சன் டீவி செய்தது என்ன தெரியுமா? தமிழகம் முழுவதும் தலித்துக்கெதிராக அவர்கள் சாதிவெறியர்கள் என்ற பொய் தோற்றத்தை தான்
உண்மயை புரிந்து கொள்ளுங்கள்.
நாம் மக்களிடமிருந்து கற்போம்
மக்களுக்காக வாழ்வோம்
கலகம்.
குழலி அவர்களுக்கு,
ஒரு பத்திரிக்கையாளன் கடமையாதெனில்,
அவை அவர்கள் பாடபுத்த்கத்தில்வரையறுக்கப்பட்டுள்ளது. நடுநிலைமை தவறாது இருத்தல் நன்று...............
மக்கள் இறால் பண்ணைகளை அழித்தால் அதை அம்மக்களின் (பாதிக்கப்பட்டவரின் நடவடிக்கையாக) பார்க்கமாட்டீர்கள்.அதை அத்துமீறலாகத்தான் பார்ப்பீர்கள்.
உங்களின் நடு நிலைமையின் தரம் அப்படி. எல்லா இடத்திலும் நியாயத்தராசு தேடி அலைந்து கொண்டிருகின்றீர்கள்?.உண்மையை சொல்லுங்கள்.வினவு எழுதிதான் மக்களுக்கு அடிவாங்கியவன் சாதி தெரியுமா? .அடிவாங்கிய மறுநாளே தமிழகம் முழுவதும் தேவர் சாதி சங்கங்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினவே அதைகூட வினவு போன்றோர்.வெளியிட்டனரா? இல்லை மாட்சிமை தாங்கிய பத்திரிக்கையா?. திண்ணியத்தில் மலம் தின்னவைக்கப்பட்டதாக என்று கூறப்பட்ட நபர் என்று எழுதிய பத்திரிக்கை நிருபரின் நியாயத்தராசு எப்படி சரி சமமாய் நிற்கின்றது.முத்து ராமலிங்கம் என்ற சாதிவெறியனை பற்றி நீங்கள் என்ன குறிப்பிட்டீர்கள்?
அவரின் சாதிவெறியை எங்காவது மறைமுகமாவவது வெளி காட்டினீர்களா?
60 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றும் இந்த சனநாயகத்துக்கு -நீங்கள் மூட்டு கொடுத்து வருகின்றீர்கள் என்பதை மறுக்கமுடியுமா?மேலவளவு,கொடியன்குளம் கலவரத்தை இப்படித்தான் பக்கம் பக்கமாக எழுதினீர்களா?
சன் டீவி செய்தது என்ன தெரியுமா? தமிழகம் முழுவதும் தலித்துக்கெதிராக அவர்கள் சாதிவெறியர்கள் என்ற பொய் தோற்றத்தை தான்
உண்மயை புரிந்து கொள்ளுங்கள்.
நாம் மக்களிடமிருந்து கற்போம்
மக்களுக்காக வாழ்வோம்
கலகம்.
http://kalagam.wordpress.com/
venavu + mathimaran + kalakam = kalavaram
Post a Comment