ஆன்மீகத்தை கேள்வி கேட்கும் பகுத்தறிவுவாதிகள் ஏன் அறிவியலை கேள்வி கேட்பது இல்லை?
Saturday, September 13, 2008
60 ஆயிரம் கோடி ரூபாயில் கடவுள் துகள் ஆராய்ச்சியாம். இதனால் மனத குலம் சாதிக்கப்போவது என்ன என்பது தான் எனக்கு விளங்கவில்லை.
கோயில்சிலை மீது குடம் குடமாய் பாலை ஊற்றினால் கேள்வி கேட்கிறோம். உலகில் பசியாலும் பட்டினியாலும் லட்சக்கணக்கான குழந்தைகள் கதறிக்கொண்டிருக்க சிலையில் மீது குடம் குடமாய் பாலை ஊற்றுவதா என்கிறோம்?
நியாயமான கேள்வி. அதே நேரத்தில கேள்வியை இப்படி மாற்றி கேட்டுப்பாருங்கள்.
கோடிக்கணக்கான மக்கள் பசியாலும் பட்டினியாலும் செத்துக்கொண்டிருக்க மில்லியன் கோடி செலவில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியும், அணுகுண்டு சோதனைகளும், கடவுள் துகள் ஆராய்ச்சிகளும் தேவையா?
சரி இத்தனை பணத்தை இரைத்து பரிசோதனையில் விஞ்ஞானிகள் சாதிக்கப்போவது என்ன?
கோடிகள் செலவிட்டு ஆராய்ச்சி செய்து புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்ததார்கள். அதனால தானே இன்று இணையம், செல்பேசி, செயற்கைகோள், தொலைகாட்சி, விமானம் என சுகபோகங்களை அனுபவிக்கிறோம். புதிய ஆராய்ச்சிகள் இல்லாமல் இதெல்லாம் கிடைக்குமா? இப்படி சிலர் எதார்த்தமாக நினைக்கலாம்
ஆனால் உண்மை இது தானா?
உலக விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் சரித்திரத்தை கொஞ்சம் திருப்பி பாருங்கள். எல்லா கண்டுபிடிப்புகளும் எளிமையாக, மிகப்பெரிய தொகையில் ஆராய்ச்சி இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டவைகளாக தான் இருக்கும்.
ஆனால் இன்று சர்வதேச கூட்டமைப்பு என்ற பெயரில் எத்தனை பணத்தை வீணாண ஆராய்ச்சியில் அழிக்கிறார்கள்? அதனால் இன்றுவரை கண்டுபிடித்துள்ள ஒரு பயனுள்ள புதுமையை சொல்ல சொல்லுங்கள்
சர்வதேச விண்வெளி மையமாம். ஆறுமாதத்திற்கு ஒரு முறை அங்கும் இங்கும் குடித்தனம் பெயர்கிறார்களாம். அங்கே விண்வெளியில் நடக்கிறார்களாம், மாரத்தான் ஓடுகிறார்களாம். நாமும் நம்புகிறோம். செயற்கைகோள், தொலைகாட்சி, இணையம் செல்பேசி என்ற பஞ்சுமிட்டாய்களை நமக்கு கொடுத்துவிட்டு அவர்களின் அத்தனை பித்தலாட்டங்களுக்கம் நம்மை தலையாட்ட வைக்கிறார்கள்.
இதில் விஷேசம் என்னவென்றால் நமக்கு கொடுத்தார்களே செயற்கைகோள், செல்பேசி போன்ற நவீனங்கள்., அது கூட அவர்கள் கண்டுபிடிக்கவில்லை என்பது தான். இதெல்லாம் சில விஞ்ஞானிகள் தங்கள் வறுமையை வென்று கண்டுபிடித்த படைப்புகள். எந்த உயரிய கண்டுபிடிப்புக்கும் உலகம் அவ்வளவு சீக்கிரம் பணத்தை தந்துவிடவில்லை. அதேபோல எந்த உயரிய விஞ்ஞானியையும் உயிரோடு இருக்கும்போது அங்கீகரிக்கப்பட்டதும் இல்லை.
தகவல்தொழில் நுட்பம், வீட்டு உபயோக பொருட்கள் உட்பட துறைகளில் பல இளம் விஞ்ஞானிகள் பயனுள்ள் நவீன நுட்பங்களை கண்டுபிடித்தவண்ணம் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு நிதியுதவியோ, ஊக்குவிப்போ அளிக்க எந்த நாட்டு அரசும் தயாரில்லை. இவர்களை தனியார் வியாபார நிறுவனங்கள் தான் வியாபாரத்துக்காக ஊக்குவிக்கின்றன. அதுவும் கண்டுபிடிப்பு வியாபாரரீதியில் வெற்றியடைந்த பின்னரே நிதியுதவியும் அங்கீகாரமும் கிடைக்கிறது.
ஆனால் இன்று சர்வதேச விஞ்ஞான கூட்டமைப்பு என்ற பெயரில் எத்தனை கொள்ளை? பித்தலாட்டம்? சர்வதேச விஞ்ஞான அமைப்புகள் சாதித்ததாக குறைந்தபட்சம் ஒரு சாதனையை சொல்லமுடியுமா?
எதார்த்தவாதிகளே விரையமாவது யாரே உழைப்பும் பணமும் அல்ல. என்னுடைய, உங்களுடைய, என நம் ஒவ்வொருவரின் உழைப்பும் பணமும் தான்.
முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாமே கடவுள் துகள் கண்டுபிடிப்பை ஆஹா, ஓகோ என்றுவிட்டார் என நாமும் அந்த ஆராய்ச்சியை அங்கீகரித்துவிடுகிறோம்.
ஆனால் தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழிப்போம் என்று யாரவது சொன்னால் அவன் கிடக்கிறான் பைத்தியகாரன் என கேலி செய்கிறோம்.
கொஞ்சம் யோசியுங்கள் செவ்வாய் கிரகத்தில் நீர்தேட செலவிடும் பணத்தை பூமியிலுள்ள நீரை சுத்தப்படுத்த, பாதுகாக்க செலவிட்டால் குடியா முழ்கிபோகும்?
சர்வதேச சுயநல அரசியல்வாதிகளும், போலி விஞ்ஞானிகளும் பிரமாண்ட ஆராய்ச்சி என்ற பெயரில் உலகை பகிரங்கமாக சுரண்டுகிறார்கள். நாமோ அவர்கள் சொல்லும் பிரமாண்டத்தை கேட்கவே வாய்பிழந்து காத்துகிடக்கிறோம்.
அதே நேரத்தில் நம்மில் ஒருவன் மனிதகுலத்துக்கு பயனுள்ள ஒன்றை கண்டுபிடிக்க முயற்சித்தாலே போதும் வாய்கிழிய கேள்விகேட்டே அவனை முடித்து கட்டுகிறோம்.
35 comments:
//கொஞ்சம் யோசியுங்கள் செவ்வாய் கிரகத்தில் நீர்தேட செலவிடும் பணத்தை பூமியிலுள்ள நீரை சுத்தப்படுத்த, பாதுகாக்க செலவிட்டால் குடியா முழ்கிபோகும்?//
அருமையான சிந்தனை, பூமியின் சுற்றுச் சூழலை முழுவதுமாக சீரழித்துக் கொண்டே மறுபுறம் இது போன்ற ஆராய்ச்சிகள். இதற்குச் செலவிடும் பணம் ஏழை நாடுகளை மேலும் ஏழையாக்கிக் கொண்டு இருக்கின்றன.
அறிவியல் தேவைதான். தேவையற்ற அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு செல்விடப் படும் பணம் சோதனை முயற்சி என்பதாகவே வீணாகிறது.
நல்ல கட்டுரை, முழுதும் உடன்படுகிறேன். இவர்களின் ஆராய்ச்சியின் விளைவால் எய்ட்ஸ் போன்று மனித இன ஒழிப்பு நோய்களும் பெருகிவிட்டது என்பதையும் பார்க்க வேண்டும்.
அறிவியல் ஆராய்ச்சியின் சாதனைகள் புலன்களின் நீட்சிக்கு மட்டுமே பயன் தரும். அதாவது தொலைவில் உள்ளதைப் பார்ப்பது, கேட்பது, வேகமாக பயணம் செய்வது. இவை இல்லாமலும் உலகம் இருந்திருக்கிறது.
அறிவியலின் பயன்கள் என்று பார்த்தால் வெளி உலகைப் பற்றிய அறிவு, இயக்கம் பற்றிய அறிவு இவைகள் கிடைக்கின்றன. இவைகள் மனித வாழ்கையை நீடித்ததா, மரணமில்லாமல் செய்ததா ? என்று பார்த்தால் உதட்டைப் பிதுக்க வேண்டி இருக்கிறது.
:)
ஒரு பக்கம் அணுகுண்டை செய்து வைத்துக்கொண்டு மறுபக்கம் முகமூடி சாதனங்களையும் செய்வது என்ன பலன் அளிக்கும்?
//ஆன்மீகத்தை கேள்வி கேட்கும் பகுத்தறிவுவாதிகள் ஏன் அறிவியலை கேள்வி கேட்பது இல்லை? //
ஆத்திகர்கள் மூட நம்பிக்கைக் குறித்து விழிப்புணர்வு ஊட்ட முன்வருவது இல்லை,
நாத்திகர்களுக்கு அறிவியல் தான் ஆதாரம் அதனால் அதில் எது நடந்தாலும் வாயைத் திறக்க மாட்டார்கள்.
'நம்பிக்கை' க்கு எது ஆதாரமோ அது குறித்து நம்பிக்கையாளர்கள் கேள்வி வைத்துக் கொள்ளமாட்டார்கள்.
இதில் பகுத்தறிவாளனும் சரி, பக்தியாளர்களாக இருந்தாலும் சரி, குட்டையில் (கொள்கைகளில்) ஊறும் மட்டைதான்.
plot for sale செவ்வாய் கிரகத்தில்
20x60
30x60
60x60
60x120
1.good water
2.best Airport Service
3.24hours service go to earth.
4.and many best service.
be quick some plot is only avilable
திரு. கோவி. கண்ணன்
// அறிவியல் தேவைதான். தேவையற்ற அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு செல்விடப் படும் பணம் சோதனை முயற்சி என்பதாகவே வீணாகிறது.//
இதில் புரியாத விடயம்
அரசியல்வாதிகள் தெரிந்தே கொள்ளையடிக்கிறார்களா? அல்லது அரசியல்வாதிகளை விஞ்ஞானிகள் ஏமாற்றுகிறார்களா? அல்லது கூட்டுகளவானிகளா? மொத்ததில் சுரண்டப்படுவது ஏழைகள் தான்.
// இதில் பகுத்தறிவாளனும் சரி, பக்தியாளர்களாக இருந்தாலும் சரி, குட்டையில் (கொள்கைகளில்) ஊறும் மட்டைதான் //
மிக சரியாக சொல்லியுள்ளீர்கள்.
இவர்கள் கொள்கை பிடிவாதத்திற்காக உண்மையான ஆன்மீகமும் அறிவியலும் நசுக்கப்படுவது தான் வேதனை.
புதிய வருகைக்கு நனறி புதுவை சிவா.
தைரியமாய் ரூ.10 கோடி கொடுத்து நிலவிலோ செவ்வாயிலோ ஒரு பிளாட்டை முன்பதிவு செய்யலாம்.
நிச்சயமாக ஏதாவது ஆளில்லாத தார், சகார, பாலைவனத்திலோ, இருண்ட கண்டங்களிலோ, சூப்பர் டூப்பர் ஸ்டுடியோவிலோ பத்தடி நிலமாவது கிடைக்கும்.
அப்படியெல்லாம் நிலம் தரமல் நம்மை ஏமாற்ற மாட்டார்கள்.
என்ன அந்த ஸ்டியோவுக்கு நிலா(செவ்வாய்)னு பேர் வச்சிருப்பாங்க அது ஒரு தப்பா?
விண்வெளியைப் பற்றி கலிலியோ ஆராய்ச்சி செய்தபோதும் யாரேனும் இந்தக்கேள்வியைக்கேட்டிருந்தால், அவர்களும் நிறுத்தி இருந்தால், இன்று சாட்டிலைட்கள் வந்திருக்கமுடியாது.
போர் அணு ஆராய்ச்சி செய்வதை வீண் எனச் சொல்லி இருந்தால் இன்று அணுகுண்டும் இருந்திருக்காது, அணுசக்தியும் இருந்திருக்காது.
அ-பொருள், பொருள் போனற ஆராய்ச்சி நமது சக்தித் தேவைக்கும் எரிபொருள் பற்றாக்குறைக்கும் நிரந்தரத் தீர்வளிக்கும். பிரபஞ்ச உருவாதல் பற்றிய ஞானக்குறைவையும் தீர்த்தல் பல துறைகளின் ஆராய்ச்சியையும் முன்னேற்றும்..
நன்மைக்குதான்ன் - நம்புங்கள்
மன்னிக்க வேண்டும் - இந்தப் பதிவு எழுப்பும் கேள்வி மிகவும் அர்த்தமற்றதாகத் தெரிகிறது. உட்கார்ந்திருக்கும் குழந்தை எதற்கு நடந்து, கீழே விழுந்து, எழுந்து கஷ்டப்படவேண்டும்; பேசாமல் இருந்த இடத்திலேயே இருக்க வேண்டியதுதானே என்பதுபோல் இருக்கிறது.
தலைப்பே தவறு என்று நினைக்கிறேன். அறிவியலே கேள்விகளால் வளர்வதுதான்.
கோவி. கண்ணனின் பின்னூட்டம் ஆச்சரியமூட்டுகிறது; ஆனால் ஏமாற்றமாயுள்ளது.
பெனாத்தலாரின் பதிலுக்கு என் பாராட்டுக்கள்.
அன்பார்ந்த பினாத்தல் சுரேஷ் வருகைக்கு நனறி..
// விண்வெளியைப் பற்றி கலிலியோ ஆராய்ச்சி செய்தபோதும் யாரேனும் இந்தக்கேள்வியைக்கேட்டிருந்தால், அவர்களும் நிறுத்தி இருந்தால், இன்று சாட்டிலைட்கள் வந்திருக்கமுடியாது.//
இதை சொல்லி சொல்லி தானே நம்மை அத்தனையையும் நம்ப வைக்கிறார்கள்.
சர்வதேச விண்வெளிமையம், போன்ற பணத்தை வாரி இரைக்கும் அமைப்புகள் இது வரை சாதித்தது என்ன?
இந்த பிரபஞ்சம் என்பது மனிதர்களின் குறுகிய அறிவுக் உட்பட்டது அல்ல. உண்மையில் இன்று பிரபஞ்சம் என்ன தோற்றத்தில் இருக்கிறது என்பதே முழுமையாக விஞ்ஞானிகளுக்கு தெரியாது. அவர்களாகவே ஒரு விதியை உண்டாக்கிக்கொள்கிறார்கள். அதற்கு ஏற்றது போல பிரபஞ்ச இயக்கங்களை வளைத்து சொல்கிறார்கள் அவ்வளவே.
சரி ஆராய்ச்சிகள் தேவை தான். அதற்காக மனித உயிரை பணையம் வைத்தா? அணுகுண்டு தயாரிப்பதும், நிலவில்பிளாட் போடடுவதும் தான் நன்மைக்கான ஆராய்ச்சிகளா?
பிக்பேங் கொள்கையே அடிமுட்டாள் தனம். இப்போது அதை நிரூபிக்கவேறு பூமி பணையமா? சரி இங்கு ஒரு எதார்த்த கேள்வி. ஆமாம் நாங்கள் பூமிக்கு அடியில் துகள்களை மோதவிட்டுபார்த்தோம். பிக்பேங் நிரூபிக்கபட்டுவிட்டது என்றால் நம்பிவிடுவீர்களா? எப்படி உங்களால் நம்ப முடிகிறது?
மனிதனை பட்டினிபோட்டு தான் பிரபஞ்ச ஆரம்பத்தையும் நிலவுகுடியேற்றத்தையும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
சர்வதேச அரசியல்வாதிகள் மக்கள் பணத்தை பகிரங்கமாக கொள்ளையடிக்க ஏற்படுத்திவைத்துள்ள இந்த அமைப்புகள் எப்படி தங்கள் தோழ்வியை ஒப்புக்கொள்ளும் என நினைக்கிறீர்கள்?
உண்மையில் இந்த பிரபஞ்சத்தின் தோற்றமும் இயக்கமும் என்ன என்பதை நமக்கு முன்னரே ஆன்மீகஞானிகள் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.
அது குறித்து அறிவகத்தில் அடுத்த சில இடுகைகளில் எழுதுகிறேன். படித்து விட்டு விஞ்ஞானிகளின் வினான ஆராய்ச்சிகள் சரியா தவறா என முடிவு சொல்லுங்கள்
நன்றி.
//தேவையற்ற அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு ...//
அப்டின்னா என்னன்னு கோவிதான் சொல்லணும்...
//ஆராய்ச்சியின் விளைவால் எய்ட்ஸ் போன்று மனித இன ஒழிப்பு நோய்களும் பெருகிவிட்டது ..//
புதுசா இருக்கே, கோவி!
//எல்லா கண்டுபிடிப்புகளும் எளிமையாக, மிகப்பெரிய தொகையில் ஆராய்ச்சி இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டவைகளாக தான் இருக்கும்...
இதெல்லாம் சில விஞ்ஞானிகள் தங்கள் வறுமையை வென்று கண்டுபிடித்த படைப்புகள்...
போலி விஞ்ஞானிகளும் பிரமாண்ட ஆராய்ச்சி என்ற பெயரில் உலகை பகிரங்கமாக சுரண்டுகிறார்கள்...
நம்மில் ஒருவன் மனிதகுலத்துக்கு பயனுள்ள ஒன்றை கண்டுபிடிக்க முயற்சித்தாலே போதும் வாய்கிழிய கேள்விகேட்டே அவனை முடித்து கட்டுகிறோம்...//
gallery talk என்பார்களே அதுபோல் உள்ளன இந்த வாசகங்கள். ஒருவேளை உங்களுக்குக் கைதட்டல்கள் கிடைத்தாலும் கிடைக்கும்.
:(
தருமி அவர்களே அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.
இப்பதிவரின் கருத்துப்படி,இனி ஆராய்ச்சிபடிப்புகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு எல்லோரையும் பீகார்,ஒரிசா மாநிலங்களுக்கு சாப்பாட்டு பொட்டலங்கள் கொடுப்ப அனுப்பலாம் போலிருக்கிறது!
அன்பார்ந்த திரு.தருமி
// இந்தப் பதிவு எழுப்பும் கேள்வி மிகவும் அர்த்தமற்றதாகத் தெரிகிறது.//
இந்த பதிவு எழுப்பும் கேள்வியே அர்த்தமற்றது என எப்படி உங்களால் சொல்ல முடிகிறது. பதிவிலேயே தங்களின் இந்த கேள்விக்கான பதிலும் இருக்கிறது.
முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாமே கடவுள் துகள் கண்டுபிடிப்பை ஆஹா, ஓகோ என்றுவிட்டார் என நாமும் அந்த ஆராய்ச்சியை அங்கீகரித்துவிடுகிறோம்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழிப்போம் என்று யாரவது சொன்னால் அவன் கிடக்கிறான் பைத்தியகாரன் என கேலி செய்கிறோம்.
// உட்கார்ந்திருக்கும் குழந்தை எதற்கு நடந்து, கீழே விழுந்து, எழுந்து கஷ்டப்படவேண்டும்; பேசாமல் இருந்த இடத்திலேயே இருக்க வேண்டியதுதானே என்பதுபோல் இருக்கிறது. //
இரண்டு குழந்தைகளை தாவி அணைத்துக்கொண்டிருக்கும் தருமி அன்பரே அதில் ஒரு குழந்தை பசியால் துடிக்கிறது., ஒரு குழந்தை விளையாட துள்ளுகிறது எனில் முதலில் பசிக்கின்ற குழந்தைக்கு பால் வாங்கிக்கொடுப்பீர்களா அல்லது அந்த பணத்தில் இன்னொரு குழந்தைக்கு விளையாட்டு பொருள் வாங்கிக்கொடுப்பீர்களா? நீங்களே பதில் சொல்லுங்கள்.
குழந்தையே வயிறு நிறைந்திருந்தால் தான் எழுந்து ஓடியாடவே செய்யும். ஆனால் பெரிய மனிதர்களாகிய நாம், ஒரு புறம் எவனோ ஒருவன் குழந்தையும் குடும்பமும் பசியால் செத்தால் செத்துதொலையட்டும். நம் வயிறு தான் நிரம்பி விட்டதே. மிச்ச பணத்தை என்ன செய்வது? பூமிக்கடியில் வேட்டுவைத்து வேடிக்கை பார்ப்போம் என நினைக்கிறோம்.
அறிவியலாளர்கள் செய்வது சரி என்றால் கோயிலில் குடம் குடமாய் சிலையின் மீது பாலை ஊற்றுவது மட்டும் எப்படி உங்களுக்கு தவறாகப்படுகிறது?
நீங்களே பதில் சொல்லுங்கள்.
நன்றி.
வருக வருக கோவை சிபி.
// இப்பதிவரின் கருத்துப்படி,இனி ஆராய்ச்சிபடிப்புகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு எல்லோரையும் பீகார்,ஒரிசா மாநிலங்களுக்கு சாப்பாட்டு பொட்டலங்கள் கொடுப்ப அனுப்பலாம் போலிருக்கிறது//
தயவு செய்து உங்கள்
பின்னூட்டத்தை மறுபரிசீலனை செய்யுங்கள். பீகாரை போல கோவையிலும் பாலக்காட்டிலும் ஒரு இயற்கை சேதம் வந்திருந்தால் நிச்சயமாக நாம் இப்படி கேட்டிருக்க மாட்டோம்.
கொஞ்சம் கோவைக்கு பக்கத்திலேயே செட்டிபாளையத்துக்கு அப்புறம் பல கிராமங்களுக்கு போய் பாருங்கள். அந்த உப்புக்கல் தண்ணீருக்காக ஊர் குட்டையில் இருக்கும் ஒரே ஒரு போர்வெல்லில் காத்துகிடந்து மக்கள் தண்ணீருக்கு கஷ்டப்படும் அவலத்தை.
ஏன் இவர்கள் எல்லாம் சபிக்கப்பட்டவர்களா? அரசுக்கு வரியோ, ஒத்துழைப்போ தராத வேற்று கிரகவாசிகளா? அல்லது அந்த சனியன்களின் தலைஎழுத்து அப்படி என்கிறீர்களா?
இவர்களிடம் இருந்து பணத்தையும் உழைப்பையும் சுரண்டி தான் நாம் நிலவில் பிளாட்போடவும், பூமிக்கு அடியில் வேட்டுவைக்கவும் வேண்டுமா?
அறிவியல் தேவை தான். ஆனால் மனிதனை தின்று அது நிரூபிக்கப்பட வேண்டியது இல்லை என்பது தான் எங்கள் வாதம்.
நன்றி.
//60 ஆயிரம் கோடி ரூபாயில் கடவுள் துகள் ஆராய்ச்சியாம். இதனால் மனத குலம் சாதிக்கப்போவது என்ன என்பது தான் எனக்கு விளங்கவில்லை//
அப்படி பார்த்தால் தொலைக்காட்சி,தொலைபேசி எதுவும் தேவையில்லை.. விவசாயம் சாப்பாடு தூக்கம் போதுமே. என்ன நம்ம கற்காலத்தில் இருப்போம்.
அழிவை தேடும் ஆராய்ச்ச்சியை தவிற்கலாம். அதற்காக அறிவியலும் ஆராய்ச்சியும் தேவையில்லை என்பதில்லை. பசியும் பிணியும் எல்லாக்காலங்களிலும் இருந்திருக்கின்றது. அதை போக்கவும் வழிசெய்ய வேண்டும் அதற்காக ஆராய்ச்சியை குறைச்சொல்ல முடியாது.
//தருமி said...
//தேவையற்ற அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு ...//
அப்டின்னா என்னன்னு கோவிதான் சொல்லணும்...
//ஆராய்ச்சியின் விளைவால் எய்ட்ஸ் போன்று மனித இன ஒழிப்பு நோய்களும் பெருகிவிட்டது ..//
புதுசா இருக்கே, கோவி!
கோவி. கண்ணனின் பின்னூட்டம் ஆச்சரியமூட்டுகிறது; ஆனால் ஏமாற்றமாயுள்ளது.//
ஏன் வியப்படைந்தீர்கள் என்று விளங்கிக் கொள்ள முடிகிறது, ஒரு பகுத்தறிவாளரின் (நான் என்னை அப்படி சொல்லிக் கொள்வது இல்லை) அடையாளம் அறிவியல் ஆராய்ச்சியை எப்போதும் பாராட்டியே பேசுவதும், அதன் அடிப்படையில் தான் அவரது சிந்தனைகள், மறுப்புகள், ஏற்புகள் இருக்க வேண்டும் என்று கருத்தோட்டம் கொண்டு இருக்கிறீர்கள்.
அறிவியல் ஆராய்ச்சி தவறு என்று நான் சொல்லவில்லை. இன்றைக்கு கருத்துக்களை கணனி வழி பகிர்கிறோம் என்றால் அறிவியல் வளர்ச்சி தான் காரணம் தான். இந்த அறிவியல் வளர்ச்சியால் பூமியின் சுற்றுப்புறச் சூழல் முற்றிலும் கெட்டு வருகிறதை ஒப்புக் கொள்கிறீர்களா ? பெருவெடிப்பைப் பற்றி அறிந்து கொள்ளச் செலவிட்ட பணத்தை ஈடுகட்ட ஏழைநாடுகளை மேலும் ஏழையாக்கினால் தான் முடியும், ஏனென்றால் பணக்கார நாடுகள் ஏழ்மையை சுவைக்க முன்வரமாட்டார்கள், எந்த நூற்றாண்டிலுமே இல்லாத எய்ட்ஸ் எப்படி இந்த 20 ஆண்டுகளுக்குள் உலக மக்களை ஆக்ரமித்தது ? நாளுக்கு நாள் புதிய நோய்களுக்கான பெயர்களை கண்டுபிடிக்கும் நட்சத்திரங்களுக்கு சூட்டுவது போல் சூட்டுகிறார்கள்.
விவசாயத்தில் விஞ்ஞான வளர்ச்சி பெரிதும் பயனளித்திருக்கிறது மறுக்கவில்லை, பயன் தருவதற்கு அறிவியல் பயணம் தொடர்ந்தால் தவறு அல்ல.
ஒருமுறை நிலவை எட்டிப்பிடித்தவர்கள் அதன் பிறகு ஏன் முயலவில்லை ? அதற்கும் மேலும் அங்கு சென்றால் என்ன பயன் இருக்கிறது ? வீண் தான் என்று விட்டுவிட்டார்கள், ஒரு சில நாடுகள் மட்டுமே நிலவில் காலடி வைப்பதைப் பற்றி யோசித்துவருகிறது, இந்தியா போன்ற எழை நாடுகளுக்கு இந்த முயற்சியினால் பெருமையே அன்றி பலன் இல்லை. இதைத்தான் தேவையற்ற அறிவியல் ஆராய்ச்சி என்றேன்.
ஆன்மிகத்தில் மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்வதைப் போல் தான் அறிவியலிலும் தேவையற்ற ஆராய்ச்சிகள் ஒழிக்கபட வேண்டும். யார் கண்டது தற்போது நடத்தப்பட்ட பெருவெடிப்பு சோதனைகள் மூலம் புதிய கிருமிகள் தோன்றி முற்றிலும் மனித இனத்தையே அழித்தாலும் அழிக்கும்.
//ஆன்மிகத்தில் மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்வதைப் போல் தான் அறிவியலிலும் தேவையற்ற ஆராய்ச்சிகள் ஒழிக்கபட வேண்டும்//
தேவையற்ற ஆராய்ச்சி என்று ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை.
ஏற்கெனவே இந்த CERN-யை வைத்து ஒரு கதைகூட வந்துவிட்டது - டாவின்சி கோட் எழுதியவர் எழுதியது.ANGELS & DEMONS என்ரு நினைக்கிறேன். antimatter பற்றி அங்கு உண்மையில் நடக்கும் ஓர் ஆராய்ச்சி பற்றி கூட எழுதப்பட்டிருக்கும்.
ஆராய்ச்சிகள் என்பதே ஒரு நீண்ட நெடிய தேடல். வழியில் அணுகுண்டும் கிடைக்கும்; அணு சக்தியும் கிடைக்கும்.
////ஆராய்ச்சியின் விளைவால் எய்ட்ஸ் போன்று மனித இன ஒழிப்பு நோய்களும் பெருகிவிட்டது ..//
ஏதோ ஆராய்ச்சிகளால்தான் புதுப் புது வியாதிகள் வந்துவிட்டன என்று நீங்கள் சொல்வது தண்ணீரிலிருந்து மின்சாரத்தை எடுத்தபின் பயன்படுத்துவதாலேயே விவசாயம் பொய்த்துப் போகிறது என்பது போன்ற விவாதம்தான். தெரியாமல் புரியாமல் இருந்த வியாதிகளைப் பற்றித் தெரிந்து கொள்கிறோம். அவைகளுக்குத் தீர்வு காணவும் முயல்கிறோம். என் சின்ன வயதில் மாரடைப்பு நோயை பெரும்பாலும் "முனி அடிச்சிருச்சி" என்று சொல்லித்தான் கேட்டிருக்கிறேன்.
//தேவையற்ற ஆராய்ச்சி என்று ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை.
ஏற்கெனவே இந்த CERN-யை வைத்து ஒரு கதைகூட வந்துவிட்டது - டாவின்சி கோட் எழுதியவர் எழுதியது.ANGELS & DEMONS என்ரு நினைக்கிறேன். antimatter பற்றி அங்கு உண்மையில் நடக்கும் ஓர் ஆராய்ச்சி பற்றி கூட எழுதப்பட்டிருக்கும்.
ஆராய்ச்சிகள் என்பதே ஒரு நீண்ட நெடிய தேடல். வழியில் அணுகுண்டும் கிடைக்கும்; அணு சக்தியும் கிடைக்கும்.//
தருமி ஐயா,
அறிவியல் தவறு என்றே நான் சொல்லவில்லை. மனிதனுக்கு மட்டும் தான் உயிர்வாழும் தகுதி இருக்கிறதா ? மனிதனுக்கு மட்டும் தான் பூமி சொந்தமா ? ஆராய்ச்சியில் பயன் என்று இருந்தாலும் எண்ணற்ற உயிர்களைக் கொள்ளும் போக்கு மிகுந்துவிட்டது, குறைந்து வரும் பாண்டா கரடியைக் க்ளோனிங் செய்து இருக்கிறார்கள், ஆனால் அவை அழியும் நிலைக்குச் சென்றதற்கு யார் காரணம், மறைந்து போகும் உயிரின மீட்சிக்கு க்ளோனிங் முறை தீர்வா ? அழிவிற்கான காரணங்களை அகற்றுவது சரியான தீர்வா ?
ஒருபக்கம் அறிவியல் வளர்ச்சியால் வளர்ந்த தொழிற்சாலைகள் வெளியிடும் கட்டுப்பாடற்ற வெப்பங்களை உயர்த்திக் கொண்டே, மறுபக்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தேவை என்ற கூக்குறலும் எழுகிறதே ? அறிவியலின் பலனுக்கு எதிரி என்பதால் சுற்றுப்புற சூழலுக்கான கூக்குறலின் கழுத்தை நெரித்துவிடுவோமா ?
நிலவில் காலடி வைத்தது ஒரு வெற்றிதான், அங்கு நீரும் காற்றும் இல்லை என்பதைக் கண்டு கொண்டோம், வேறு என்ன பலன் இருக்கிறது ? மேலை நாடுகள் கைவிட்ட நிலவு பயணத்தை இந்திய போன்ற நாடுகள் தொடர்வதால் என்ன பயன் ?
அணுகுண்டும் கிடைக்கும்; அணு சக்தியும் கிடைக்கும் - ஆழிவு, ஆக்கம் சமமாக போய்விட்டது இல்லையா ? :) பயன்படுத்தாதவரை அணுகுண்டு கண்டுபிடிப்புதான், பயன்படுத்திவிட்டால் மொத்த அறிவியல் அறிவும் சேர்ந்தே அழிந்துவிடும் சரியா ?
// ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவவேண்டும் எனப்தில் மாற்று கருத்து இல்லை அதே சமயத்தில் இதை எடுத்து அங்கு கொடு என்பது சரியான வாதமாக தெரியவில்லை.//
திரு. வடுவூர் குமார் தங்கள் சொல்வது சரிதான். ஆனால் கொஞ்சம் கேள்வியை திருப்பி போட்டுபாருங்கள். இங்கிருப்பதை எடுத்து அங்கு கொடுக்கிறார்களே அதுமட்டும் சரியா? (ஆதாரங்களுடன் அதை ஒரு பதிப்பாகவே குழலியில் எழுதுகிறேன்)
இங்கு கடவுள் துகள், நிலவுகுடியேற்றம், அணுஆயுத தயாரிப்பு போன்ற விபரீத ஆராய்ச்சிகளை ஆதரிக்கும் அன்பர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த பிரபஞ்சம் என்பது பொருள் மட்டும் சார்ந்தது அல்ல. போருளை வைத்துமட்டுமே அதன்தோற்றத்தை கண்டுபிடித்து விடலாம் என்பது முடியாத விடயம்.( அறிவகத்தில் எழுதி வருகிறேன்.)
சரி இது புரியாது. புரியக்கூடியதை சொல்கிறேன்.
வரலாறை திருப்பி பாருங்கள். உயிரினமாகட்டும். உயிரற்ற நிலையாகட்டும் கால சூழலுக்கு ஏற்றப தங்களை கொஞ்சம் கொஞ்சமாக தகவமைத்து காப்பாற்றிக்கொள்கின்றன. ஆனால் திடீர் விபத்துக்கள் பேராபத்துக்களை அவைகளால் எதிர்கொள்ள முடிவது இல்லை. அழிவது அல்லாமல் வேறு வழியில்லை.
உதாரணமாக கால்நடைகளை( ஆடு, மாடு), விளைநிலங்களை அழிக்கதான் இரண்டாம் உலகப்போரின் போது பார்த்தீனியம் என்ற விஷசெடியின் விதைகள் தூவப்பட்டது. அந்த திடீர் ஆபத்தை எதிர்கொள் முடியாமல் விளை நிலங்களும் ஆடுமாடுகளும் அழிந்தன. அனால் காலசூழலை கொஞ்சம் கொஞ்சமாக தகவமைத்து கொண்ட கால்நடைகள் தற்போது பார்தீனிய செடியை மட்டுமெ உண்டு உயிர்வாழும் நிலைக்கு வந்துவிட்டது. அதேபோல தான் விளை நிலங்களும்.
உயிர்களுக்கு காலசூழலை மெல்ல தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் இருக்கிறது என்பதை விஞ்ஞானத்தால் மறுக்க முடியுமா? அதேபோல திடீர் பேராபத்துகளை விஞ்ஞானத்தால் நேரடியாக எதிர்கொள்ள முடியுமா? பேராபத்துக்கள் வராது என்பதையும் விஞ்ஞானிகளால் உறுதியாக சொல்ல முடியமா? ஒரு உதாரணமாவது சொல்லுங்கள்
இன்று எயிட்ஸ் நோய் தான் மனிதகுலத்துக்கு மிகப்பெரிய சவால். அந்த நோய்கிருமியை கூட தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் நாளடைவில் மனிதனுக்கு சாத்தியப்படலாம்.
ஆனால் அணுகுண்டுவீச்சையும், பூமிவெடிப்பையும் நம்மால் எதிர்கொள்ள முடியுமா? கருகி சாம்பலான பின்பு சாம்பலில் இருந்து உயரித்துவரும் பீனிக்ஸ் பறவை கதையை நம்ப சொல்கிறார்களா அறிவியலாளர்கள்?.
கொஞ்சம் கொள்கை பிடிவாதத்தை விட்டு எதார்த்தமாக யோசியுங்கள்...
பின்குறிப்பு: இது போன்ற பிரமாண்ட ஆராய்ச்சிகள் இதுவரை சாதித்தது என்ன என்பதை சொல்லுங்கள் முதலில்.
//பீகாரை போல கோவையிலும் பாலக்காட்டிலும் ஒரு இயற்கை சேதம் வந்திருந்தால் நிச்சயமாக நாம் இப்படி கேட்டிருக்க மாட்டோம்//
இயற்கை சேதம் எல்லாருக்கும் வரும்.அதை எப்படி எதிர்கொண்டு மனிதன் தன்னை காத்துக்கொள்வது என்பதுதான் அறிவு.அறிவின் தேடலே விஞ்ஞானம்.இந்த விஞ்ஞானத்தை துணை கொண்டுதான் ஒரு சிறிய உயிர்சேதத்தோடு மிகப்பெரிய சூறாவளியை(hurricane IKE)அமெரிக்கர்கள் தவிர்த்திருக்கிறார்கள்.
மேலும் கோவையின் வரலாற்றை 50 வருடங்களுக்கு முன் நோக்கினால் அதன் வ்ருமை தெரியும்.தமிழகத்திலே இன்று முதன்மை மாவட்டமாக திகழ்வதன் காரணங்கள்,
1.விஞ்ஞானம் சார்ந்த தொழில்நுட்பம்.
2.தனி மனிதனின் தேடல்.
தனிமனித தேடலின் நீட்சியே ஆராய்ச்சி.அதை நிறுத்தினால் மனிதன் மனிதனாக இருக்கமாட்டான்.
http://govikannan.blogspot.com/2008/09/blog-post_14.html
இப்பதிவிலும் இது குறித்து பின்னூட்டியுள்ளேன். அதனை அப்படியே இங்கேயும் ஒட்டுகிறேன். நன்றி.
-----
பெரும்பகுதி திரு. அறிவகம் அவர்களுக்கான பதிலாகயிருந்தாலும், பதிவில் கேட்டிருக்கும் சிலகேள்விகளுக்கும் பதிலளித்திருப்பதால்,இங்கேயே பதியவைக்கிறேன்.
//உயிர்களுக்கு காலசூழலை மெல்ல தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் இருக்கிறது என்பதை விஞ்ஞானத்தால் மறுக்க முடியுமா?//
உயிர்களுக்கு இருக்கிறது, மனிதனுக்கு இன்னும் இருக்கிறதா..??
//அதேபோல திடீர் பேராபத்துகளை விஞ்ஞானத்தால் நேரடியாக எதிர்கொள்ள முடியுமா? //
அனுபவித்த பேராபத்துக்களைப் பற்றி முன்கூட்டுயே அறிந்து கொண்டு மனித குலத்தைத் தற்காத்துக் கொள்ளும் அளவிற்கு விஞ்ஞானம் நிச்சயமாக திறனுடையதே.
//பேராபத்துக்கள் வராது என்பதையும் விஞ்ஞானிகளால் உறுதியாக சொல்ல முடியமா? ஒரு உதாரணமாவது சொல்லுங்கள்//
உங்கள் பார்வையில் பேராபத்து என்பதின் அளவென்ன?
//இன்று எயிட்ஸ் நோய் தான் மனிதகுலத்துக்கு மிகப்பெரிய சவால். அந்த நோய்கிருமியை கூட தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் நாளடைவில் மனிதனுக்கு சாத்தியப்படலாம்.//
இது உங்கள் அனுமானமே, இவ்வனுமானத்துடன் விஞ்ஞானம் நிச்சயம் கைகட்டி உட்கார்ந்துவிடவில்லை.தொடர்ந்து அந்தப் பாதையில் உழைத்துக்கொண்டுதான் இருக்கிறது.
ஒருவேளை உங்கள் கூற்றுப் படி நிகழ வாய்ப்பிருந்தாலும், உயிர்களுக்கான தகவமைப்புகள் பெரும்பாலும் பல தலைமுறைகள் ஆகும்.
//ஆனால் அணுகுண்டுவீச்சையும், பூமிவெடிப்பையும் நம்மால் எதிர்கொள்ள முடியுமா? கருகி சாம்பலான பின்பு சாம்பலில் இருந்து உயரித்துவரும் பீனிக்ஸ் பறவை கதையை நம்ப சொல்கிறார்களா அறிவியலாளர்கள்?.//
பூவி வெடித்துவிடும் என்றால் அதற்குமேல் எதிர்கொள்ள ஒன்றுமேயில்லை. எதை? எங்கிருந்து எதிர்கொள்வது? :)
//கொஞ்சம் கொள்கை பிடிவாதத்தை விட்டு எதார்த்தமாக யோசியுங்கள்...//
இது அனைவருக்கும் பொருந்தும் ஒன்று.
//பின்குறிப்பு: இது போன்ற பிரமாண்ட ஆராய்ச்சிகள் இதுவரை சாதித்தது என்ன என்பதை சொல்லுங்கள் முதலில்.//
இன்று மனிதனுக்கு நன்மையென்று சொல்லப்படும் ஆய்வுகள் கூட பல பிரம்மாண்டங்களினால் விளைந்ததுதான்.
இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் சப்பானின் பொருளாதார நிலை மிகவும் மோசமாகயிருந்த நேரம். அப்போது சப்பானிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சியும் அளிப்பதற்காக அரசாங்கம் பெரும்பகுதிப் பணத்தை ஒதுக்கியது. அப்போது, நாட்டில் உள்ள பல பிரச்சனைகளுக்கு இப்பணத்தைச் செலவு செய்யலாமே என்று பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால், 20 ஆண்டுகள் கழித்து சப்பானின் பெரும்பாலான, தலைசிறந்த விஞ்ஞானிகளாகவும்,தொழில்நுட்பத் தொழிற்சாலைகளிலும்,முக்கியத் தலைமைப் பொறுப்புகளை அப்பயிற்சி பெற்றவர்களே அடைந்தனர். மற்றும், சர்வதேசத்தரத்தில் சப்பானை உயற்றினார்களா என்பதற்கான விடை அனைவரும் அறிந்ததே.
அப்போது சப்பானில் அது பிரம்மாண்டம். பலரும் அடிப்படை வசதிகளுக்காகப் போராடும் போது அறிவியல் விஞ்ஞானம் என்று இச்செலவு தேவையா என்ற கேள்வி அப்போதும் பலரும் கேட்ட கேள்வி?? விடை...தற்போதைய சப்பான்.
உலகெங்கிலும் இராணுவத்திற்காகச் செலவிடப்படும் பணம் பலமடங்கு அதிகம்.
ஆன்மீகம், இறையாண்மை, மெய்யியல், மனிதனை உய்வித்தல் போன்ற உலகப் பொதுவானக் கதையாடலைப் பெரிதும் கையாளும் ஆன்மீகம் எதிர்க்க வேண்டியது தேசியம், மற்றும் தேசிய எல்லைகளை. அப்போது ஆப்ரிக்காவில் இருப்பவனும் அமெரிக்காவில் இருப்பவனும் இந்தியாவில் இருப்பவனும் அனைவரும் மனிதயினம் என்ற பொதுவான எண்ணத்திற்கான முயற்சியே ஆன்மீகம் செய்யவேண்டியது.
உலகில் தற்போது பிரம்மாண்ட முதலீடு என்றால் எல்லா நாடுகளும் செய்யும் இராணுவ முதலீடே.
நிற்க.
இதனால், அறிவியல் கேள்விக்கு அப்பாற்பட்டது என்று நிறுவ முயலவில்லை. உலகில் இருக்கும் பல நிறுவனங்களில், தன்னையே கேள்விகேட்டுக்கொண்டும், யாரையும் எந்தக் கோணத்திலும்,கேள்வி கேட்க அனுமத்தும், பதிலளிக்கவும் செய்து, தமக்கென்று ஒரு அறத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு நிறுவனம் என்றால் அது விஞ்ஞானம்/அறிவியல் மட்டுமே.
இந்நிறுவனத்திலும் பல குறைபாடுகள் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
மேற்குலக விஞ்ஞானத்திற்கு தனது வளர்ச்சியின் திசையின் எல்லை எது எங்கு நிறுத்துவது என்ற குழப்பம் என்றால்,
இந்தியாவிற்கு தற்போது எந்ததிசையில் செல்வது என்பதிலேயே குழப்பம் இருக்கிறது.
அது சரி அவங்கட நாட்டில யாரு சாப்பாட்டுக்கு அழுதான்? இந்தியா இத்தனை லச்சம் கோடி குடுத்து அணு தாதுப்பொருள் வங்கப் போகுதே அது தேவையா?அதெல்லம் யாருக்கு?அம்பானிக்கா? முதலில உங்கட வேலையைப் பாருங்கோ? சந்திரன் சிவனாரின் தலையில இருக்காம். அப்ப ரொக்கட்டில போனா சிவனுக்கு குத்தாதோ? அவ்னிட்ட காசு இருக்குது செய்யுறான். அதுக்குள்ள இந்தியாவும் நாங்களூம் செய்வோமெல்ல எண்டு கிளிம்பினா என்ன நிலை. இந்தியாவில தான் பாலை கல்லுக்கு ஊத்திறான். பசிக்கு அழுகுறவங்களூம் இங்க தான் இருக்கிறான். பிறகு அவன் என்ன செய்தா உங்களுக்கு என்ன? நாசா பற்றிக் கூட டான் பிரவுண் நல்லாவே எழுதி இருக்கிறார். மற்றவங்களுக்கு தேவையோ இல்லையோ இந்தியாவுக்கு இதெல்லாம் சரிப் பட்டு வராது. அதுக்குள்ள இந்தியாவை அடைவு வைக்கிறான் இந்தியன். அப்ப இந்தியன் எல்லாரும் என்ன செய்தியள். பவர் கட்டுக்கு இழுத்து மூடீற்று தூங்கீற்றியளோ?
ஆன்மீகம் என்ன சொல்லுது? சிவன் கைலயில இருக்கிறார். விஷ்ணு அனந்த் சயனம் பண்ணினா இந்த உலகத்த யாரு காப்பாத்துவார்? பேசாம எல்லாருமாச் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை பண்ணுங்கோ. இல்லை சாய் பாபாவிட்ட போய் முறையுங்கோ.
//60 ஆயிரம் கோடி ரூபாயில் கடவுள் துகள் ஆராய்ச்சியாம். இதனால் மனத குலம் சாதிக்கப்போவது என்ன என்பது தான் எனக்கு விளங்கவில்லை//
ஆதாம் ஏவாள் மற்றும் பல கட்டுக்கதைகளை வலுவிழக்கச்செய்ய.
கூவி குண்ணன் சாருக்கு இந்த அளவுக்கு எல்லாம் கிட்னி வேலை செய்யாது.அதனால் தான் கோயில்,ஜோதிடத்தை மட்டும் சட்னி ஆக்கி கொண்டுள்ளார்,
//அறிவியல் ஆராய்ச்சியின் சாதனைகள் புலன்களின் நீட்சிக்கு மட்டுமே பயன் தரும். அதாவது தொலைவில் உள்ளதைப் பார்ப்பது, கேட்பது, வேகமாக பயணம் செய்வது. இவை இல்லாமலும் உலகம் இருந்திருக்கிறது.//
;-)))
//ஆத்திகர்கள் மூட நம்பிக்கைக் குறித்து விழிப்புணர்வு ஊட்ட முன்வருவது இல்லை,
நாத்திகர்களுக்கு அறிவியல் தான் ஆதாரம் அதனால் அதில் எது நடந்தாலும் வாயைத் திறக்க மாட்டார்கள்.
'நம்பிக்கை' க்கு எது ஆதாரமோ அது குறித்து நம்பிக்கையாளர்கள் கேள்வி வைத்துக் கொள்ளமாட்டார்கள்.
இதில் பகுத்தறிவாளனும் சரி, பக்தியாளர்களாக இருந்தாலும் சரி, குட்டையில் (கொள்கைகளில்) ஊறும் மட்டைதான்.//
enna solla varraar.ivar oru kulappavaathi enbatharkkuithuve aathaaram..
உங்களின்இந்தபதிவு, எனக்குசிலஆண்டுகளுக்குமுன், உயிர்தொழிற்நுட்பம்(Biotechnology)/Cloning (தமிழில்என்ன??) இவற்றை எதிர்த்துபோப்வெளியிட்டகருத்துக்களை நிணைவூட்டுகிறது. கடவுள்மட்டுமே செய்யமுடியும்என்றுஇதுநாள்வரை சொல்லி நம்பவைத்து, காலம்ஓட்டிவந்தவர்களுக்கு, மேற்கூரியதொழிற்நுட்பங்கள்திறை கிழித்ததுபோலாயிற்று. அதனால், இதுகடவுளுக்குஉகந்ததன்றுஎன்றுஅவசரஅவசரமாகதடை போட சொன்னார்கள். இதை ஒத்திருக்கிரதுஉங்கள்பதிவும்.
இதை ஏன்நீங்கள் ஆன்மீகத்தை புரிந்துகொள்ளமுற்படும்மனிதனின்அறிவியல்முயற்சிஎன்றுகொல்லக்கூடாது???
சுருங்கச் சொன்னால், ஒவ்வொருஅறிவியல் ஆய்விலும்ஆன்மீகத்தேடல்தான்இருக்கிறது. இவை, கடவுள்என்றஒற்றை சொல்லில்முற்றுப்புள்ளிவைக்காமல்உண்மையை தேடும்முயற்சி.
Tаκe a look at youг sсhedule and come of with solutions ahead of time for lunсheѕ аnd dinners οut, this will give you a gamе plan
to fоllow. Naturally, if уou aгe not a morning
person, setting yοur alarm fοr 5am to go run a few miles ωill probably
fail. Doωnload Rosie's free report 5 Simple Steps to Fat Loss and start losing weight today.
Here is my weblog; women fitness tips abs
Make a list of your nutrition chart involving juice and fruits at the top followed by green vegetables and milk products.
Blowing off some steam with a quick round of solo travel
fitness in the morning can make your whole day brighter.
Having some company can also make the fitness session more
fun.
Also visit my homepage: women fitness tips abs
For example, I want to lose 5 pounds of fat
by February 25th. What you should do is to focus or target a particular group
of muscle for once or even twice a week. Avoid burnout by mixing
up your exercises so that you will stay interested in doing them.
Feel free to visit my homepage simply click the following internet page
An outstanding share! I have just forwarded this onto a co-worker
who has been conducting a little homework on this. And he in fact ordered me lunch simply because I stumbled upon it for him.
.. lol. So allow me to reword this.... Thank
YOU for the meal!! But yeah, thanks for spending time to talk about this issue here on your web site.
Here is my weblog :: Biotech Services
So just like others, if a person has interest
in the fresh news updates, he can surely give a preference to
online medium for getting familiarity with these topics.
We realize that we don't need to listen to outside authorities; we are not guided by our internal authority. All kinds of sports news today are offered live through the television.
Also visit my site; Latest Daily News
Thousands protest in Russia at rallies across the
nation. If the news channels telecast from all over the world, it is termed as world news.
The facility of websites and online news are also getting lot of
appreciation because it is very time saving and people can read it in between their
work.
Here is my web blog Latest Daily News
You will find the most updated news being uploaded or published in
blogs and celeb news sites. However there are several troubleshooting steps you need
to perform in order to determine the problem.
Every now and then, new stars emerge and disappear in the blink of an eye and every smallest detail about the same becomes
important celebrity news.
Visit my page :: latest celeb news
Make a list of your nutrition chart involving juice and fruits at the top followed
by green vegetables and milk products. Even if your small business doesn't have some sort of refrigerator (a rarity today) you can choose vegetable and fruit that do not even require refrigeration. Remember; there is a difference between a fattening diet and a healthy diet.
Check out my web page - mouse click the next web site
Post a Comment