தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க உலக தமிழர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம். நம்மால் முடியாவிட்டால் வேறு யாரல் முடியும்?

போலீசுக்கு எதுக்கு இந்த பொழப்பு?

Saturday, August 9, 2008

சுதந்திர போரட்டங்களை கண்டதும் அடித்து உதைக்கவும் மிரட்டி துன்புறுத்தவும் போலீஸ் கையில் லத்தியை கொடுத்தது ஆங்கில அரசு. கட்டபஞ்சாயத்து நடத்தவும் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஜட்டியுடன் நிறுத்தி உதைக்கவும், அப்பாவிகளிடம் அதிகாரத்தை காட்டவும் லத்தியை உபயோகிக்கிறது இன்றைய போலீஸ்.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகிலுள்ளது எரத்திபாலம். இந்த பகுதியை சேர்ந்த ஜோமேசும், ரத்தன் லால் என்பவரது மகள் பிரியாவும் காதலித்துள்ளார். பிரியா பணக்கார வீட்டு பெண். ஜோமேஸ் பரமஏழை. வழக்கப்போல காதலி விட்டில் எதிர்ப்பு கிளம்பவே திருமணம் செய்து கொள்ள இருவரும் தலைமறைவானார்கள்.

பெண் வீட்டார் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி காவல்துறையை ஏவினர். ஜோமேஸ்சின் குடும்பத்தை மிரட்டி சகோதரன் ஜோபி, தாய், தந்தை, நண்பர்கள் என அத்தனைபேரையும் தெருவில் இழுத்து சென்றது போலீஸ். காதலர்கள் எங்கே என கேட்டு இவர்களை அடித்து உதைத்துள்ளனர். ஏழைக்கு தான் கேட்க நாதியில்லையே. ஒருவாரம் லாக்கப்பில் வைத்து அடித்துள்ளனர். எப்.ஐ.ஆரும் போடவில்லை, கோர்ட்டுக்கும் கொண்டு செல்லவிலலை.

சம்பவத்தை அறிந்த காதலர்கள் புதுமணத்தம்பதிகளாக காவல் நிலையத்தில் சரணடைந்தனர். தங்கள் பதிவு திருமணம் செய்த சான்றிதழ்களை காட்டியும் இரக்கம் காட்டவில்லை போலீஸ். தாய், தம்பி நண்பர்களை விட்டுவிட்டு தம்பதிகளை லாக்கப்பிலாக்கியது போலீஸ். தொடர்ந்து இரவு முழுவதும் ஜோமேசுக்கு அடி உதை. பிரியாவுக்கு மனம்மாற வற்புருத்தல்.

குற்றுயிரும் குலையுயிருமாக வெளியே வந்த தாயும் சகோதரன் ஜோபியும் அவமானமும் வலியும் தாங்காமல் கடந்த புதன்கிழமை இரவு தூக்கில் தொங்கினர். இதில் தாயை காப்பாற்றிவிட்டனர் அக்கம்பக்கத்தினர்.
பிணமாக தூக்கில் தொங்கிய ஜோபியின் உடல் முழுவதும் ரத்தகாயம் ஏற்பட்டு கந்திபோய் இருந்தது. அணிந்திருந்த பேண்டுக்கு வெளியே ரத்தம் கசிந்து உறைந்திருநதது. முகத்திலும் முதுகிலும் கையிலும் தலையிலும் ஒரு இடம் கூட பாக்கியில்லை.

இந்த அளவுக்கு ஒருமனிதனை, ஒரு உயிரை அடித்து துன்புருத்த இவர்கள் யார்? ஒரு நாட்டின் பிரதமார், உச்சநீதிமன்ற நீதிபதி, ஏன் ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கே இல்லாத ஒரு அதிகாரத்தை இவர்கள் கையில் யார் கொடுத்தது? கட்டபஞ்சாயத்து தான் காவல் துறையின் எழுதப்பாடாத சட்டமா?

ஜோபியின் மரணத்தை கேட்டதும் பதறியடித்து கொண்டு தம்பதிகளை கோர்ட்டில் ஒப்படைத்தது போலீஸ். கோர்ட்டும் இருவரும் மேஜர் என்றும் திருமணம் செல்லும் எனவும் அறிவித்தது. இந்தனையும் நடந்தும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோழிக்கோடு தெற்கு துணை கமிஷ்னர் உட்பட போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை மட்டும் தானாம்?

இப்போது இழந்த அப்பாவியின் உயிரை காவல்துறை திருப்பி தருமா? மனிதஉரிமை கமிஷன், ஊர்பொதுமக்கள், அந்த சங்கம், இந்த சங்கம் என இப்போது கூச்சலிடுகிறார்கள். ஒரு வாரம் அவர்களை அடித்து உதைக்கும்போது எங்கே போனார்கள் இந்த பொதுநலவாதிகள்? என்ன செய்து கொண்டிருந்தார்கள் விஷயமறிந்த உள்ளூர் மக்கள். இது போன்ற ஒவ்வொரு சம்பவத்திலும் உயிர் பலிக்கு பின்னர் தான் இவர்கள் ஒன்றுசேர்ந்து கேள்வி கேட்பார்களா?

போலீஸ் ஸ்டேசனில் ஜட்டியுடன் நிற்க்வைத்து அடிக்கவேண்டும் என எந்த சட்டம் சொல்கிறது? நாட்டை கொளளையடிப்பவனுக்கும் தீவிரவாதிக்கும் ராஜமரியாதை. அதே ஒரு அப்பாவிக்கு ஜட்டியுடன் முட்டி அடி. அப்பாவியிடம் தானே தன் புஜபலத்தை காட்டமுடியும் போலீசால்.

சாலையில் ரோந்து பணியில் இருக்கும் போலீசாரின் வரட்டு பலம் அதை விட கொடுமையானது. டூவீலரில் ஹெல்மெட் இல்லாமல் வருபவனை நிறுத்தி ஆயிரம் கேள்வி கேட்டு 50 ரூபாய் பிச்சையெடுக்கும் அற்ப போலீஸ். ஹைகிலாஸ் கார்களை கண்டால் கைகாட்டகூட பயப்படுகிறது. கொள்ளையர்களும் தீவிரவாதிகளும் டூவிலரில் வருவார்களா? ஹைகிலாஸ் காரில் வருவார்களா?

பிரேக் பிடிக்காத லாரி, கார் பஸ் இப்படி சாலையில அப்பாவி உயிர்களை குடிக்க ஆயிரம் எமன்கள் சுற்றுகிறார்கள். அவர்களை சோதனையிட போலீசுக்கு வக்கும் இல்லை துப்பும் இல்லை.

கத்தியை காட்டி பணம்பறிப்பவர்கள் கொள்ளையர்கள். லத்தியை காட்டி பணம்பறிப்பவர்கள்.......?

போலீசார் கையில் தடியை கொடுத்தது யார்? சுதந்திரத்துக்கு முன்பிருந்த பல துறைகளும் மாறி விட்டது. ஏன் இன்னும் போலீஸ் துறையில் மட்டும் அதே பிரிட்டீஷ் மனப்பான்மை. இந்தியர்களை அடிமைகளாக நடத்த தான் பிரிட்டிஸ் போலீஸ் பொதுமக்களை அடித்து மிரட்டி தன்மீது ஒருவித பயத்தை ஏற்படுத்தியிருந்தது. அதே நிலை இன்றும் தொடர்கிறது என்றால் இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு அர்த்தமே இல்லையே.

மனித உரிமைகள் ஆசியமையம் என்ற நிருவனம் இருதினங்களுக்கு முன்பு(06.08.2008) வெளியிட்ட புள்ளி விபரம்:
1. இந்தியாவில் சராசரியாக தினமும் 4 பேர் லாக்கப்பில் இறக்கிறார்கள்.
2. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 7,468 பேர் லாக்கப்பில் இறந்துள்ளார்கள்.
(இவர்கள் அனைவருமே விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்பட்டு இறந்தவர்கள்)

இங்கு காவல்துறையின் சேவைபற்றியும் வீரதீர சாகசங்கள் பற்றியும் பட்டியலிட சிலர் முன்வரலாம். அப்படிப்பட்ட சிறந்த காவல்துறையினர் முதலில் அவர்கள் துறையை களையெடுக்கட்டும்., பிறகு பொதுமக்கள் மீது கைவைக்கட்டும்.

8 comments:

ஜோதி பிரியா said...

'ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தியர்களை அடக்க, காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதே பயிற்சி திட்டங்களும், பாடங்களும் தான் இன்றும் காவல் துறை பயிற்சியில் உள்ளன. இது போன்ற அராஜக போக்குகள் மாற காவல் துறையின் அடிப்படை திட்டங்கள் மாற வேண்டும். இது ஒரு காவல் துறை அதிகாரி ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியவை.

எந்த முன்னேறிய நாடுகளிலும் இந்த அளவுக்கு மூர்க்கத்தனமாக தாங்களே கடவுள் என்று நினைத்து கொன்று காவல் துறை செயல் படுவதில்லை.

காவல் துறையிடம் கேள்விகேட்பவன் தன்னை தற்காத்து கொள்கிறான். ஊமையான மக்கள் கொத்தடிமைகளாக நடத்த படுகிறார்கள். '

Anonymous said...

'ஒண்ணூ காசு இருக்கணூம்! இல்ல அரசியல் ஆதரவு வேணூம்! அப்பதான் வாழலாம்!... போலீஸ் துறை என்ன செயயும். அவனுகளூக்கு தேவை பணம் ...'
tiGer (tamilish)

Anonymous said...

sariyaga soneergal. Manitha urimai meeral Indiavil matum thaan ulathu.. Nam naatai aandavan kooda kaapatra mudiyathu endru Supreme court pona vaaram sonnathu ninaivil varukirathu...

Anonymous said...

உலகில் 100% யோக்கியர் என்று எவரும் இல்லை. ஒட்டு மொத்த காவல் துறையையே கேவலமாக கீழ்த்தரமாக திட்ட வேண்டாம். ஏன் நமது உறவினர்கள் கூட காவல் துறையில் இருக்கலாம். இது போன்ற இழி சொல் உபயோகங்கள் உங்கள் மேல் உள்ள மதிப்பை தான் குறைக்கும்.
- komban. (tamilish)

அறிவகம் said...

மன்னிக்கவும் கொம்பன். இப்படிப்பட்ட போலீசார் என்று தான் குறிப்பிட்டுள்ளோம். தூக்கில் தொங்கிய ஜோபியின் உடலை நீங்கள் பார்த்திருந்தீர்கள் என்றால் இதை விட கேவலாமாக திட்டியிருப்பீர்கள். ஒரு உயிரை அந்தளவுக்கு அடித்து சித்திரவதை பன்ன மிருகத்துக்கு கூட மனம் வராது தெறியுமா? 100% யோக்கியர்கள் யாரும் இல்லை தான். அதற்காக ஒரு உயிரை அடித்து கொல்லும் அளவுக்கு அயோக்கியனாக இருப்பவர்களை என்னவென்று சொல்வது? எனக்கும் போலீஸ் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நான் எழுதியதை விட கேவலமாக நொந்துகொண்டார்கள். நம் வீட்டில் ஒருவர் இப்படி இறந்திருந்தால் நம் மனம் தாங்குமா? உயிரின் மதிப்புக்கு விலைதான் என்ன்? நீங்களே பதில் சொல்லுங்கள்.'

Anonymous said...

நான் உங்களை கூறவில்லை :) உங்கள் பதிவு மிகவும் நாகரீகமான முறையில் தான் செல்கிறது.
டைகர் அவர்களின் :
//பணத்துக்காக பிணத்தையும் திண்பார்கள், ---- தின்பனுங்க...//
இந்த வரிகளுக்குத்தான் என்னுடைய அந்த பதில்
- komban.

அறிவகம் said...

திரு. கொம்பன்., சிலர் கொடுமைகளை கண்டு உணர்ச்சிவசப்படுபவர்கள். அப்போது அவர்களது உணர்வை மட்டும் தான் கருத்தில் கொள்ளவேண்டும், வார்த்தைகளை அல்ல. இருந்தாலும் ஒரு படைப்பாளிக்கு நாகரீகமாக சொல்லவேண்டிய பொறுப்பு இருக்கிறது. நினைவுபடுத்தியதற்கு நன்றிகள் பல. தொடர்ந்து ஆலோசனைகளை தாருங்கள்.

arumuga said...

Nalla solrenga nanpare, ippadi oru aathangam anaivarin manathilum irukku. vaalka umadhu kaivannam.
arumuga

  © Blogger template Newspaper II by Ourblogtemplates.com 2008

Back to TOP