தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க உலக தமிழர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம். நம்மால் முடியாவிட்டால் வேறு யாரல் முடியும்?

காமத்தின் எல்லை பெற்ற குழந்தையா? வேண்டாம் தாங்காது பூமி

Wednesday, August 6, 2008

அமலு, அமலி, அமல்யா, அமல் இப்படி அம்சமான அழகு பெயர்களை பார்த்து பார்த்து வைத்த தந்தையே அவர்களுக்கு எமனானான். அதுவும் கொலையோடு நிற்கவில்லை. பெற்ற மகளை தன் காம பசிக்கு இறையாக்கிய கொடூரனாகியிருக்கிறான்.

காதலித்து கைபிடித்த மனைவியையும் அழகான நான்கு பெண் குழந்தைகளையும் சர்வசாதாரணமாக கொன்றுவிட்டு இன்னொரு பெண்ணை மணக்க ஒரு ஆண் துணிகிறான் என்றால் அதன் பின்னனியில் இருப்பது என்ன?

கேரளமாநிலம் பாலக்காடு, பட்டாம்பி அருகிலுள்ளது ஆமையூர் கிராமம். ரஜிகுமார்(40)மனைவி லிசி(39). இருவரும் 3,8,10,12 வயதுகளில் நான்கு குழந்தைகளுடன் வசிவந்த தம்பதிகள். இனி அந்த கொடூர சம்பவம் 23.07.2008 முதல்...

தொடர்ந்து இரண்டு நாட்களாக பூட்டபட்டிருந்த ரஜிகுமாரின் வீட்டில் இருந்த துர்நாற்றம். சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலிசுக்கு தகவல் தந்தனர். பட்டாம்பி போலிசார் கதவை உடைத்து பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தனர். 2 பெண் குழந்தைகள்( அமலு(12) அமலி(10)) கழுத்து நெறித்து கொல்லப்பட்டு கிடந்தனர். பிரேத பரிசோதனையில் அமலு பல முறை (இறப்புக்கு முன்னும் பின்னும்) பாலியல் பலாத்காரம் செய்யபட்டிருப்பது தெரியவந்தது. இரு குழந்தைகள் மர்மமான முறையில் இறந்த பின்னும் பெற்றோரை காணாதது சந்தேகத்தை கிளப்பியது. இரண்டு நாட்கள் நீண்ட தேடலில் வீட்டின் செப்டிக் டேங்கில் மேலும் 3 பிணங்கள். லிசி, அமல் அமல்யா மூன்றுபேர் பிணமும் அழுகிய நிலையில். ரஜிகுமார் மட்டும் தலைமாறைவாக இருந்தான். 28.07.08.,ல் கோட்டயத்தில் வைத்து பொதுமக்கள் உதவியுடன் போலீசிடம் பிடிபட்டான் ரஜிகுமார். அவனது வாக்குமூலம் தான் அடுத்தடுத்த அதிர்ச்சிகளை தந்தது.

வீட்டுக்கு அருகிலேயே இருந்த தன் கள்ளகாதலியை மணப்பதற்காக மனைவி லிசியையும், வீட்டில் இருந்த அமல்(8), அமல்யா(3) குழந்தைகளையும் கைதுண்டால் கழுத்தை நெரித்து கொன்றிருக்கிறான். விஷயம் வெளியில் தெரியாமல் இருக்க பிணங்களை செப்டிக்டேங்கில் வீசியுள்ளான். ஒரு வாரம் யாருக்கும் சந்தேகம் வராதபடி வழக்கம்போல வேலைக்கும் சென்றிருக்கிறான். பின்னர் தன் கள்ளகாதலியிடம் விஷயத்தை சொல்லி வெளியூருக்கு சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என அழைத்திருக்கிறான். ஆனால் கள்ளகாதலி திருமணத்திற்கு தயக்கம் காட்டினாள். கொலைகள் வெளியில் தெறியாததால் விடுதியில் தங்கி படிக்கும் அமலு(12), அமலி(8) குழந்தைகளை அழைத்து வந்து அவர்களையும் கொன்றிருக்கிறான். கொலைக்கு முன்னும் பின்னும் அமலுவை தன் காமபசிக்கு இறையாக்கியிருக்கிறான். கொலை குற்றங்கள் வெளியே வந்ததும் கள்ள காதலி ரஜிகுமாரை மணக்க மறுத்ததோடு, போலீசிலும் சரணடைந்தாள். ரஜிகுமார் வாங்கிக்கொடுத்த விலையுயர்ந்த செல்போன் உட்பட பொருட்களையும் போலீசிடம் ஒப்படைத்தாள்.

சம்பவத்திற்கு தான்மட்டும் காரணமல்ல. தன் கடைசி குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்ற சந்தேகம் தான் இன்னொரு பெண்ணுடன் தனக்கு தொடர்பை ஏற்படுத்தியது. அதற்கு தடையாக இருந்ததால் தான் அத்தனைபேரையும் கொன்றேன்., என்று சர்வசாதாரணமாக வாக்குமூலம் அளித்திருக்கிறான் ரஜிகுமார்.

ஒரு தந்தைக்கு உரிய அனைத்து குடும்ப பொருப்புக்களையும் முறையாக செய்பவன். தங்குவதற்கு நல்லவீடு, குழந்தைகளுக்கு ஆங்கிலவழி கல்வி, எந்த சண்டை சச்சரவுகளோ, கூச்சல் குழப்பங்களோ வீதிக்கு வராத குடும்பம். மளிகை, காய்கறி, பால் என அனைத்தும் வாங்க மனைவிக்கு உதவும் கணவன். அடுத்துள்ளவர்களிடன் மிகநாகரீகமாக பழகும் ஆண். இப்படி தான் ஊரார் பலரும் ரஜிகுமாரை பற்றி சொல்கின்றனர். ஆனால் இத்தனை கொடூரங்களையும் தான் தான் செய்தேன் என்ற ரஜிகுமாரின் வாக்குமூலத்தில் பெரும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கின்றனர் ஊர்மக்கள்.

அதிர்ச்சி ஊர் மக்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளை தம் வாழ்க்கையின் அர்த்தங்களாக நினைக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் தான். வெளியுலகுக்கு அமைதியாக காட்சியளித்துவிட்டு, உள்ளுக்குள் இத்தனை கோரங்களை கொண்டிருக்கும் குடும்பங்கள் உருவாக காரணங்கள் தான் என்ன? யாரை குற்றம் சொல்வது?



1. ரஜிகுமார் போன்ற ஆண்களையா?
2. கள்ளகாதலி போன்ற பெண்களையா?
3. லிசி போன்ற மனைவிகளையா?
4. திருமணமாகி குழந்தைகள் உள்ளவர் என தெரிந்தும் காதல்(காமம்) வலை வீசும் நபர்கள் அதிகரிப்பதையா?

அமலு, அமலி, அமல், அமல்யா போன்று இன்னொரு குழந்தை பலியாக கூடாது. காமத்தின் எல்லை மனைவியை தாண்டி, மாற்று பெண்களை தாண்டி, ஒரினசேர்க்கையை தாண்டி, பெற்ற குழந்தைகள் வரை வரவேண்டுமா? இதுபோன்ற பாவங்களுக்கு ஆண்களோடு பெண்களும் துணைபோனால் சந்ததிகள் என்ன ஆகும்? பெண்களே நீங்களாவது யோசியுங்கள்..... *******************************************************************

அறிவகத்தில் யார் இந்த சுயநல அரசியல்வாதிகள், நபிகளும் இயேசுவும் செய்த தவறு என்ன?, அப்துல்கலாமிடம் ஒரு கேள்வி(அவரின் பதிலுடன்) சமுதாய விழிப்புணர்வு விரும்பிகள் கண்டீப்பாக படித்து ஆலோசனைகளை தாருங்கள்.

5 comments:

Unknown said...

கண்ணீர் வருகிறது
இந்தியா எங்கே செல்கிறது ?

அறிவகம் said...

வருகைக்கு நன்றி sahrevivke. இந்தியாவில் இந்த கொடுமை நடந்திருப்பதை தான் ஜீரணிக்க முடியவில்லை.

akbar- THE COMMON MAN said...

hello mr.anand...,
ungal blog spotai indrudhaan paarthean.ungal pani sirandhadhu.!
vaalthukkal...from akbar-pollachi.tamilnadu.india

Anonymous said...

yarai kutram solvathu? manam kanakkirathu. kelvikku yappadi pathil solvathu?

  © Blogger template Newspaper II by Ourblogtemplates.com 2008

Back to TOP