தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க உலக தமிழர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம். நம்மால் முடியாவிட்டால் வேறு யாரல் முடியும்?

முதலில் சாதிய இட ஓதுக்கீட்டை ஓழியுங்கள். சாதியும் ஓழியும்.

Tuesday, November 25, 2008

ஒரு காலத்தில் சாதியை தொழில் அடிப்படையில் பிரித்திருந்தார்கள். இடைபட்ட காலத்தில் சில சாதியினரை ஓடுக்கினார்கள். இவர்களுக்கு கல்வி, பொருளாதார முன்னேற்றம் மறுக்கப்பட்டது. இந்த  தீண்டாமை வன்கொடுமையை அடியோடு ஓழிக்க வேண்டும் என்பதற்கு மாற்று கருத்தில்லை. ஆனால்  இன்று சாதிய இட ஓதுக்கீடு என்பதை வைத்து நடப்பது என்ன? சனநாயக நாட்டில் சாதிய இடஓதுக்கீடு மட்டும் உங்களுக்கு தீண்டாமையாக தெரியவில்லையா?

சாதியை ஓழிக்கவேண்டும் என்பது உங்கள் கொள்கையா? அல்லது சாதி இருக்கட்டும் அது சமத்துவமாக இருக்கட்டும் என்பது உங்கள் கொள்கையா? அதை முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள்.

சாதி மனிதனுக்கு எதற்குமே தேவையில்லையே. அப்படி இருக்க ஏன் இந்த சாதியை விடாபிடியாக பிடித்துள்ளீர்கள்?

இன்று சாதி எங்கெங்கு பயன்படுத்தப்படுகிறது?
1. பள்ளி சாதிசான்றிதழில், 2. கல்லூரி இட ஓதுக்கீட்டில், 3. அரசு உதவிதொகைகளில், 4. வேலைவாய்ப்பு இட ஓதுக்கீட்டில். 5.அரசியல் இட ஓதுக்கீட்டில். இந்த இடங்களில் தான் சட்ட்பூர்வமாகவே சாதி பயன்படுத்தப்படுகிறது.(நான் காண்ட மிகபெரிய வன்கொடுமை இது தான்)

சாதி சங்கங்கள், சாதிகட்சிகள், திருமணங்கள் இவற்றில் பயன்படுத்துவதை சட்டம் தவறு என்றும் சொல்லவில்லை, சரி என்றும் சொல்லவில்லை.

ஓடுக்குதல், சித்தரவதை செய்தல், அடிமைபடுத்துதல், கேலி செய்தல், இவற்றில் சாதி பயன்படுத்துவதை சட்டம் தீண்டாமை வன்கொடுமையாக எதிர்க்கிறது.

அன்பர்களே ஓன்றை புரிந்து கொள்ளுங்கள். ஓடுக்குதல், அடிமைபடுத்துதல், கேலி செய்தல் என்பவை சாதிய அடையாளத்தில் செய்தால் மாட்டுமே தீண்டாமை அல்ல. எங்கு எப்படி எந்த அடையாளத்தில் செய்தாலும் அது தீண்டாமை தான். சாதியை சொல்லி திட்டினால் தான் வன்கொடுமை என்று கருத வேண்டாம். விருப்பததாக மனிததன்மையற்ற எந்த வார்த்தையை சொல்லி திட்டினாலும் அது வன்கொடுமை தான். வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு சாதி அடையாளம் மட்டும் பூசிக்கொள்ள தேவையில்லை.

என்னுடைய அனுபவத்தையே சொல்கிறேன்
 
நான் கேரளாவிலும் தமிழகத்திலும் படித்தது பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் பள்ளி. இந்த பள்ளியில் நாங்கள் எங்குமே சாதியை பார்த்ததில்லை. கேட்டதில்லை. ஆனால் பத்தாம் வகுப்பில் மாற்று சான்றிதழுக்காக ஆசிரியர்கள் சாதியை கேட்டார்கள். சாதிசான்றிதழுக்காக எங்களுக்கு தெரியாத சாதியை எல்லாம் எங்கள் மீது திணித்தார்கள். எந்த வித கபடமும் இல்லாமல் ஓடி அடி பாடி, மதியம் ஒன்றாய் கூட்டாச்சோறு உண்ட மாணவர்கள் நாங்கள். ஆனால் சாதிசான்றிதலுக்காக எங்களுக்கள் சாதிய அடையாளத்தை பூசினார்கள். எல்லோரும் வட்டமாக அமர்ந்து கூட்டாஞ்சோறு உண்ணும் சொர்க்கம் எங்களுக்கு அன்றோடு முடிந்து போனது. ஈடு செய்ய முடியாத அந்த இன்பத்தை கெடுத்தது இந்த சாதி சான்றிதழும் சாதி இட ஓதுக்கீடும். உண்மையில் இன்று வரை ஏங்குகிறேன் அந்த கூட்டாஞ்சோறுக்காக. பள்ளியில் மாணவ மாணவிகள் அத்தனைபேரும் வட்டமாக அமர்ந்து ஓவ்வொரு வீட்டு உணவையும் ஓவ்வொரு கை பறிமாறி உண்ட அனுபவம் உள்ள யாருக்கும் அந்த கூட்டாஞ்சோறின் அருமை தெரியும்.

எங்கள் பள்ளியில் எல்லா தரப்பு மாணவர்களுமே படித்தார்கள். எங்களுக்களுக்குள் ஏழை பணக்காரன் வேற்றுமை இருந்தது. அனால் சத்தியமாக சாதி வேற்றுமை இருந்ததே இல்லை.  ஆனால் சாதி சான்றிதழ் வழங்கவேண்டும் சாதியை சொல்லுங்கள் என்று கேட்டார்களே அன்று தான் சாதியையே படித்தோம். சாதி பிரிவுகளையும் படித்தோம்.

சரி எதற்காக இந்த சாதி வேண்டும்? பின்தங்கியவர்கள் முன்னேற இட ஓதுக்கீடுகள் வேண்டும் என்றால் அதற்கு சாதி அடையாளம் தான் வேண்டுமா? ஓரு காலத்தில் சாதிய அடையாள அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டது தீண்டாமை என்றால் இன்று சாதிய அடிப்படையில் கல்வி சலுகை தருவது மட்டும் எப்படி தீண்டாமையாகாது?

உங்களுடைய குறிக்கோள் என்ன?

பிற்படுத்தபட்ட சாதியை முற்படுத்துவோம். பின்னர் சரிசம பலத்தோடு சாதிசண்டை போடலாம் என்பதா?

முற்படுத்தபட்ட சாதியினர் ஒரு காலத்தில் செய்த பாவத்துக்கு பரிகாரம் இன்றைய சாதிய இட ஓதுக்கீடு என்பதா?,

முற்படுத்தப்பட்ட சாதியினர் செய்த பாவத்துக்கு தண்டனையா? அல்லது பாவத்துக்கு திருப்பி பலிதீர்க்க இன்றைய இட ஓதுக்கீடா?

படிக்கும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரன்டாம் வகுப்புகளிலேயே நல்ல மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். அது எந்த சாதியினராக இருந்தாலும் சரி எந்த இனத்தினராக இருந்தாலும் சரி. இவர்கள் பொது பிரிவிலேயே கல்லூரிக்குள் தாரளம் நுழைந்து விடலாம்.

பொதுவாக எல்லா சாதியை சேர்ந்த வசதிபடைத்த மாணவர்களும் தனியார் கல்லூரிகளுக்கு சென்று விடுகின்றனர். அரசு கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் எல்லா சாதியிலும் இருக்கும் ஏழைமாணவர்கள் மட்டும் தான். இந்த ஏழை மாணவர்களுக்குள் ஏன் உங்கள் சாதிபித்தில் வஞ்சனை காட்டுகிறீர்கள்?

இதோ எனக்கு நடந்த மற்றொரு கொடுமை

நான் கிராம பள்ளியில் படித்தவள். எங்கள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் போதிய ஆசிரியர்கள் இல்லை. போதிய பாடபுத்தகங்கள் இல்லை. நுலக வசதியோ, கணிணி இணைய வசதியோ, ஆய்வுகூட வசதிகளோ இல்லை. எங்களுக்கு இருக்கும் ஒரே தொடர்பு செய்திதாள் மட்டும் தான். நாங்களாகவே படித்தோம். படித்தோம் என்பதை விட மனப்பாடம் செய்தோம். தேர்வு எழுதுவதற்காக நகரத்துக்கு வந்த எங்களுக்கு தேர்வு அறை முதற்கொண்டு விதவிமாக இருந்த மேசை நாட்காலிகள் கூட புதிது தான். வெற்றி பெற்றோம். எங்களை பொருத்தவரை 1200 க்கு 900 எடுத்ததே பெரிய மதிப்பெண். எங்கள் பள்ளியில் நான் தான் முதல் மதிப்பெண். ஊரே கூடி பாரட்டியது.

அடுத்து கிராம மணவர்கள் எங்களுக்கு தெரிந்தது எல்லாம் அரசு கலைகல்லூரி தான். அதில் எத்தனை பிரிவு படிப்புகள் இருக்கிறது என்பது கூட தெரியாது. பி. ஏ., பி.காம்., மட்டும் தான் தெரியும். கல்லூரியில் விண்ணப்பித்தால் மதிப்பெண் அடிப்படையிலான பொது பிரிவில் இடம் இல்லை என்றுவிட்டார்கள். இட ஓதுக்கீடு அடிப்படையிலான காத்திருப்போர் பட்டியலுக்கு தள்ளபட்டேன். அன்றைய நிகழ்வை நினைத்தால் இப்போது கூட அழுகை வருகிறது. கல்லூரி சேர்க்கை அறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். சாதி இட ஓதுக்கீடு அடிப்படையில் ஓவ்வொரு சாதியினராக மாணவர்களை சேர்க்கைக்கு தேர்ந்தெடுத்தார்கள். உமா மகேசுவரி என அழைக்கும் போது எல்லாம் எழுந்து நிற்பேன். ஆனால் அது எனக்கான அழைப்பாக இருக்காது. என் பெயர் கொன்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி மாணவிக்கானதாக இருக்கும். எனக்கும் குறைவாக மதிப்பெண் வாங்கியிருக்கும் மாணவர்களுக்கு எல்லாம் சாதிய அடிப்படையில் சேர்க்கை கிடைத்து விட்டது. இறுதியில் //சாரி உனக்கு இடம் இல்லை. அடுத்த ஆண்டு முயற்சி செய் அல்லது தனியார் கல்லூரிக்கு போ// என்ற கல்லூரி முதல்வரின் வார்த்தை என்னை ஓ வென கதறவைத்துவிட்டது. அழுதேன். வயிறு எரித்தேன் சாதி இட ஓதுக்கீட்டின் மீது. கிராமத்தில் படித்த ஏழை என்பதால் மட்டுமே படிக்க துடியாய் துடித்தும் கல்வி மறுக்கப்பட்ட பாவி நான். ஆனால் படிக்கவே விருப்பமில்லாமல் காலர்சீப்புக்காக மட்டுமே வரும் சில ரவுடிகளுக்கு கல்லூரியில் எந்த வித முயற்சியும் இல்லாமலே இடம் தயாராக இருக்கிறது.

எனக்கு கல்வி மறுக்கப்பட்டது வன்கொடுமை என்பது மனசாட்சி உள்ள எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள்.

இப்படி தனே ஓரு காலத்தில் பிற்படுத்தப்பட்ட சாதினர் அழுதிருப்பார்கள் என்று சொல்பவர்களை பார்த்து ஓரே கேள்வி. ஒத்துக்கொள்கிறேன், ஆனால் இட ஓதுக்கீடு எதற்காக பலிதீர்க்கவா? ஒரு காலத்தில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு மட்டும் கல்வி சமதாய மேன்மை மறுக்கப்பட்டது என்பது மிக தவறானது. எந்த காலத்திலும் எந்த சாதியாக இருந்தாலும் ஏழைகளுக்கு சமத்துவம் மறுக்கப்படுகிறது என்பது தான் உண்மை. முற்படுத்தப்பட்ட சாதியில் எத்தனை ஏழைகள் இருக்கிறார்கள் என்பது ஏன் உலகுக்கு தெரியாமல் போனது.

நகரத்தில் இருப்பவர்களுக்கு படிக்க கணிணி முதற்கொண்டு ஆசிரியர்கள், நூலகம், ஆய்வு கூடம், பயிற்சி வகுப்புகள், ஆலோசனை வகுப்புகள். மின்சார வசதி என எல்லா வசதிகளும் இருக்கிறது. ஆனால் ஆசிரியர்களே இல்லாமல் சிம்னி விளக்கில் படிக்கிறோம் கிராம மாணவர்கள். இவர்களுக்கு அல்லவா மதிப்பெண் அடிப்படையில் இட ஓதுக்கீட்டில் முன்னுரிமை தரவேண்டும்.

இட ஓதுக்கீடு தேவைதான் அதற்காக ஏன் சாதிய அடையாளத்தில் தருகிறீர்கள்? பொருளாதார அடிப்படையில் இட ஓதுக்கீடு செய்யலாமல்லவா? அப்போதும் பின்தங்கிய வகுப்பினர் தானே பெரும்பாலும் பயனடைவார்கள். கூடவே முற்படுத்தபட்ட சாதி ஏழைகளும் பயனடைவார்கள் அல்லவா?

எனது வழிபாடு வேறு, உனது வழிபாடு வேறு அதனால் மதமாக பிரிந்துள்ளோம் என்பதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால் சாதியில் என்ன பிரிவினை இருக்கிறது என்பது தான் எனக்கு இன்னும் புறியவில்லை.

ஓரு காலத்தில் தொழில் அடிப்படையில் சாதி பிரிக்கப்பட்டது. ஆனால் இன்று சாதிய அடிப்படையில் எந்த தொழில் உள்ளது. எல்லோரும் எல்லா தொழிலுமே செய்கிறார்களே. அதே போல தான் உணவு பழக்கவழக்கங்களும். எல்லோருமே பிடித்ததை சாப்பிடும் காலம் இது. இதில் எங்கே சாதிபாகுபாடு வேண்டும்?

சாதி என்ற குறுகிய வட்டத்தில் மனதகுலத்துக்கு அல்லது குறிப்பிட்ட சாதியினருக்கு கிடைக்கும் லாபம் என்ன? சாதிக்கொள்கைகள் தான் என்ன? மதத்துக்கு ஓரு கொள்கை இருக்கிறது. நாட்டுக்கு ஓரு கொள்கை இருக்கிறது. மொழிக்கு ஓரு கொள்கை இருக்கிறது. இனத்துக்கு ஓரு கொள்கை இருக்கிறது. ஆனால் இந்த சாதிக்கு என்ன கொள்கை இருக்கிறது?

எனக்கு தெரிந்து தொழிலும், உணவு உட்பட பழக்கவழக்கங்களும் தான். ஆனால் இன்று தொழிலுக்கும் உணவுக்கும் சாதிய பாகுபாடு தேவையே இல்லையே. உணவுக்காக வேண்டுமாயின் சைவம் அசைவம் என பிரிக்கலாம். அதிலும் ஏற்ற தாழ்வு வர வாய்ப்பில்லலையே.

சனநாயக நாட்டில் யாரையும் யாரும் அடிமைப்படுத்த முடியாது. நீ இந்த தொழில் தான் செய்யவேண்டும் என வற்புருத்தவும் முடியாது. அப்படி இருக்க எதற்காக இன்னும் இந்த சாதி அடையாளம்.

மனிதனுக்கு எதற்குமே பயன்படாத சாதிய வட்டம் வேண்டும் என்பவர்கள் சாதிய இட ஓதுக்கீட்டை இன்னும் கொஞ்சம் தீவிரமாகவே ஆதரியுங்கள். நிச்சயம் சாதிகள் சமத்துவமும் ஆகாது, சாதி சண்டையம் ஓழியாது. எல்லா சாதியினரும் கல்வி, பொருளாதாரம், ஆயுதம், என அனைத்திலும் சரிசம பலத்துடன் மோதிக்கொள்ளலாம். இதனால் இரு சாதியினருக்கும் இழப்பு தானே தவிர, எந்த சாதியும்  சமுதாய முன்னேற்றத்தை காண முடியாது.

சாதியே வேண்டாம் என்பவர்கள் சாதிய இட ஓதுக்கீட்டை தூக்கி குப்பையில் போட்டு விட்டு (மன்னிக்கவும் தீயிட்டு எரித்துவிட்டு) பொருளாதார அடிப்படையில் இட ஓதுக்கீட்டை வழங்கும்படி குரல் கொடுங்கள். அப்போது தான் உண்மையான சமத்துவமும் சாதி ஓழிப்பும் வரும்.

சாதிய இட ஓதுக்கீடு என்பதற்காக சாதியை அங்கீகரித்துக்கொண்டு இருப்பதால் தான் இன்றும் சாதிக்கலவரங்கள் புகைந்துகொண்டு இருக்கிறது.

சாதியே மனிதனுக்கு தேவையில்லை. சாதியை பயன்படுத்துவதே தேச துரோகம். சாதிபெயரில் கட்சிகள் இருக்க கூடாது. சாதி பெயரில் சங்கங்கள் இருக்ககூடாது. சாதி பெயரில் குழுக்கல் இருக்ககூடாது. சாதி பெயரில் இட ஓதுக்கீடுகள் இருக்ககூடாது. சாதியே இருக்ககூடாது என சட்டம் போட்டு பாருங்கள். அடுத்த தலைமுறையினருக்கு சாதி என்றால் என்ன என்றே தெரியாமல் போய்விடும்.

அது இல்லாமல் இன்னும் அரசியலுக்காக சாதியை, சாதி கட்சிகளை, சாதிசங்கங்களை, சாதி இட ஓதுக்கீடுகளை வளர்த்து வந்தீர்கள் என்றால் எந்த காலத்திலும் சாதியும் ஓழியாது, சாதிகள் சமத்துவமும் ஆகாது. இன்னும் சாதிவெறி தீவிரமாகி சாதிக்கலவரங்கள் தொடர்ந்து வெடிக்கும் என்பது தான் நிதர்சன உண்மை.

சாதியை ஓழிக்க முதலில் சாதிய இட ஓதுக்கீட்டை ஓழியுங்கள். இந்த ஓன்றை வைத்து தான் சட்டத்தின் முன் சவால் விட்டுக்கொண்டு சாதிய சங்கங்களும், சாதிய கட்சிகளும், சாதிய அரசியலும் கொடிகட்டி பறக்கிறது. சாதிய இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால், அதை வைத்து எந்த சாதியையும் முன்னேற்ற எந்த சங்கமும் தேவைப்படாது. சாதியை ஓழியுங்கள். சாதியை ஒழிக்காமல் சாதிகலவரத்துக்கு வேறு தீர்வே இல்லை.

51 comments:

கோவி.கண்ணன் said...

அனைவரும் ஒன்றே என்று நினைக்கும் நீங்களும் நானும் உணர்ச்சி வசப்பட்டு சாதி ஒழிய இட ஒதுக்கீட்டை ஒழித்தால் சரியாகிவிடும் என்று சொன்னால் சரியாகிவிடுமா ?

சாதியை வைத்தே பிழைப்பு நடத்துபவர்கள் அல்லவா அதைப் பற்றி சிந்திக்க வேண்டும் ?

சாதியை ஒழிக்க சாதிய அடையாளங்களையும், அதன் ஆதிக்கங்களையும் ஒழிப்பதே சரியான வழி.

இட ஒதுக்கீடு சாதிக்கு கொடுக்கப்படும் சன்மானம் அல்ல, தாழ்த்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீடு இருப்பதால் படிப்பதற்கான ஒரு வழியை ஏற்படுத்தி அடுத்த் தலைமுறைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மாடு மேய்க்கத் தான் லாயக்கு என்று சொல்லப்பட்ட மாடு மேய்க்கவே விடப்பட்டவர்களெல்லாம் இட ஒதுக்கீடு இல்லை என்றால் படிப்பு வாசனையை எப்போது அறிவார்கள் ?

அரசு கல்லூரிகளுக்கு ஏழை மாணவர்கள் தான் செல்கிறார்கள் என்று சொல்லும் கருத்தும் தவறே.

அண்ணா யுனிவர்சிட்டி ஐஐடி போன்ற புகழ்பெற்ற கல்லூரிகள் கூட அரசு கல்லூரிகள் தான். அங்கெல்லாம் தமிழ்வழியில் படித்து தேறிய சாதாரண மாணவன் உள்ளே செல்ல முடியுமா ?

என்னைக் கேட்டால் இட ஒதுக்கீடு யாருக்கு தேவை இல்லை என்றால் ஆங்கில வழிகல்வி பயிலும் மாணவர்கள் அனைத்து சாதியினருக்குமே கொடுக்கக் கூடாது, ஏனெனில் ஆங்கில வழிக்கல்விக்கு மாத மாதம் பணம் செலுத்தித் தான் அவர்கள் படித்துவருகிறார்கள், அவர்கள் தான் ஓரளவு பணக்காரர்கள்.

ஏற்கனவே இட ஒதுக்கீட்டில் படித்து நல்ல நிலையை அடைந்திருந்தால் அவர்களாகவே முன் வந்து தங்கள் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு தேவை இல்லை, தனியார் கல்லூரியில் சேர்த்துக் கொள்கிறோம் என்று சொல்ல முன்வரவேண்டும்.

இட ஒதுக்கீட்டு எதிராக இருப்பவர்கள் அனைவரும் ஏழைகளா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள், யாரு ஒரு பார்பன இல்லத்தில் ஒரே ஒரு தாய் இட்லி சுட்டு மகனை படிக்க வைப்பார், ஆனால் மற்ற பார்பனர்கள் அனைவரும் ஏழைகளா ? அந்த தாயின் மகன் பாதிக்கப்படக் கூடாது என்றால் உதவ முன்வர வேண்டியது பணக்கார பார்பனர்கள் தானே, எல்லா சாதிகளுக்குமே சங்கம் இருக்கிறது. ஆனால் அவர்கள் யாருமே தங்கள் சாதிகளில் இருக்கும் ஏழைகளை முன்னேற்றுவதற்கு ஒரு பைசா கூட செலவு செய்யமாட்டார்கள்.

அறிவகம் said...

திரு. கோவிகண்ணண் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நான் இடஓதுக்கீடு வேண்டாம் என்று சொல்லவில்லை. கண்டீப்பா இட ஓதுக்கீடு வேண்டும். ஆனால் அந்த இட ஓதுக்கீடு சாதிய அடையாளத்தில் வேண்டாம் என்று தான் சொல்கிறேன்.

பள்ளிகளில் சாதிய அடிப்படையில் இட ஓதுக்கீடு இல்லை. அதே போல கல்லூரி, அரசியல் உட்பட எல்லாவற்றிலும் சாதிய அடிப்படையில் இட ஓதுக்கீடு தேவையில்லை.

பொருளாதார அடிப்படையில் இட ஓதுக்கீடு தந்தாலும் பிற்படுத்தப்பட்ட அதே ஏழை தானே பயன்அடைகிறான். அப்படி இருக்க எதற்காக இந்த சாதி அடையாளம் வேண்டும்? யோசித்துபாருங்கள்... நன்றி.

அறிவன்#11802717200764379909 said...

அறிவகம்,
சரியான கருத்து.
இட ஒதுக்கீடு முழுமையும் பொருளாதார அடிப்படையில் வரும் போது சாதி தேவையிருக்காது.

சாதி இல்லையெனில் பல அக்கிரமங்களுக்கு முடிவு கட்டலாம் !

Anonymous said...

good post...

அறிவகம் said...

நன்றி., திரு.அறிவன்...

தமிழ் ஓவியா said...

பள்ளிகளில் சாதிகளையும், மதத்தையும் முதலில் கேட்பது ஏன்? என்று அறிந்து கொள்வது நல்லது. அது குறித்து தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் தெளிவுபடுத்தும் செய்தி இதோ:

கேள்வி : சாதி, மதச் சண்டை களினால் மனித குலம் அழியும் போது, அதை ஒழிக்காமல் பள்ளிகளில் சாதிகளையும், மதத்தையும் முதலில் கேட்பது ஏன்?பதில் : சாதி, மதங்களை ஒழிக்கவேண்டியது மிகவும் அவசியம் பள்ளிகளில் சாதிகளைக் கேட்பது அவர்கள் சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களா? தாழ்த்தப்பட்டவர்களா? மலைவாழ்மக்களா என்று அறிந்து அவர்களுக்கு தனி முன்னுரிமை கொடுத்து உதவுவதற்காகத்தான்!

ஜாதி கூடாது ஒழிக்கப்பட வேண்டும். ஆனால் அந்த ஜாதி முறையினால்தான் நம் பிள்ளைகள் படிக்கமுடியாமல் காலங்காலமாய் தடுக்கப்பட்டனர்.

அதை மாற்று வதற்கு இந்த ஏற்பாடு ஒரு கால கட்டம் வரை தேவை. அம்மை நோயினை அழிக்க அம்மைக் குத்திக் கொள்வதுபோல.

---------ஆசிரியர் தாத்தா {தி.க.தலைவர்.கி.வீரமணி} பதில்கள் - "பெரியார் பிஞ்சு" செப்டம்பர் --2003

ஜாதியை வளர்ப்பதற்காக பள்ளியில் ஜாதி கேட்பதில்லை என்பதை உணருங்கள்.

அது மட்டுமல்லாது பள்ளிச் சான்றித்ழைப் பார்த்து அவன் ஜாதி தெரிந்து கொள்வதில்லை.

அவர்கள் குடும்பத்தில் செய்யும் சாஸ்திர சம்பிரதாயங்கள் மூலமே அவன் ஜாதியை தெரிந்து கொள்கிறான்.

ஜாதியையை இன்றுவரை காப்பாற்றி வருவது யார்? என்பதை கீழ்கண்ட விளக்கம் உங்களுக்கு தெளிவு படுத்தும்.

அனைவரும் ஒரே ஜாதியாக இருக்கவிடாமல் இன்று வரை தடுத்துக் கொண்டிருப்பது எது? பார்ப்பனர்களும் அவர்கள் உண்டாக்கிய சாஸ்திரங்களும் ,சம்பிரதாயங்களும்தானே.


நான் இப்போது சுட்டிக்காட்டுவதை தாங்கள் ஏற்கனவே படித்திருக்கலாம். மீண்டும் ஒருமுறை படியுங்கள்.
தெளியுங்கள்.

"ஜாதி அடுக்குமுறை உருவாகியது என்பதைவிட்ட உருவாக்கியதின் நோக்கம் பற்றி அறிந்து கொண்டால் ஜாதிக் கலவரம் ஏற்படுவது ஏன்? அதற்கு மூல காரணமாக இருப்பவர்கள் யார்? என்பது புலப்படும்.

ஊண்றிப்படித்து உண்மையை அறிக.

ஜாதி அடுக்குமுறையின் நோக்கம் என்ன?நம் நாட்டின் சமூகக் கொடுமைகளிலேயே மிகவும் கோரமானது, அக்கிரமமானது வர்ணாசிரம - ஜாதி அடுக்குமுறையாகும்!

பிறவி அடிப்படையில் ஜாதிகளைப் பிரித்த சூழ்ச்சியைவிட அதனை ஒன்றன்பின் ஒன்று என்று கீழான அடுக்குகளாக்கியது தான் வெறுக்கத்தகுந்த கொடுமையாகும்!

பார்ப்பனர் வகுத்த ஜாதி அடுக்குமுறை

மேல்ஜாதி என்று ஆக்கிக் கொண்ட ஜாதியினரான பார்ப்பனர் அதற்கு அடுத்து கீழ் என்று ஏணிப் படிக்கட்டுகளைப் போல ஜாதிமுறை அடுக்கு பேத முறையாக ஆக்கியதன் உள்நோக்கம் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டே இருப்பதோடு, மிகவும் கீழான படிக்கட்டில் நிற்பவருக்குத்தான் ஆத்திரம் பொங்கும் அதிகமாக என்றாலும், அது மேல்தட்டில் உள்ள பார்ப்பனர்களோடு மோதலாக வெடிக்கக் கூடாது என்பதற்காகவே 1, 2, 3, 4 என்று பிரித்து 5 என்ற பஞ்சமர்களை - தாழ்த்தப்பட்ட மக்களை அய்ந்தாம் ஜாதியாக்கி விட்டதோடு, பெண்களை அதற்கும் கீழே 6 ஆவது இடத்தில் மனுதர்மம் வகுத்தது. சமுதாயத்தில் பேத நிலை பெரு நிலையாகவே ஆனதற்கு இதுவே அடிப்படையாகும்.

இதைத்தான் அண்ணல் அம்பேத்கர் (Graded inequality) அடுக்குமுறை பேதமுறை - ஜாதி முறை என்றார்!

இதில் 5 ஆம் ஜாதி என்ற தாழ்த்தப்பட்ட நமது ஆதிதிராவிட சகோதரர்களைக்கூட ஒரு பிரிவாக இருக்கவிடாமல், பறையர், பள்ளர், அருந்ததியினர் (சக்கிலியர்) என்று பிரித்து அவர்களுக்குள்ளேகூட ஒருவர் இன்னொருவரோடு இணையவிடாத பிரித்தாண்ட சூழ்ச்சியை ஆரியம் செய்தது!

வர்க்கப் பிரிவில் இப்படி அடுக்குமுறை அமைப்பு கிடையாது. முதலாளி - தொழிலாளி, ஆண்டான் - அடிமை என்ற அளவில் மட்டுமே - வருணப் பிரிவில் மட்டும் இந்தப் பெருங்கொடுமை!

இந்த ஒடுக்கப்பட்ட சகோதரர்கள்தான் அதிகமான உழைப்பைச் சமூகத்திற்குத் தந்துவிட்டு, தாங்கள் குந்தக் குடிசையின்றி, குடிக்கக் கூழின்றி, படுக்கப் பாயின்றி, வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களாக மண் புழுக்களைவிட கேவலமாக, பல்லாயிரக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர் நமது பாரத புண்ணிய பூமியில்

----------- தி.க. தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கையிலிருந்து "விடுதலை" 24-11-2008.

இப்போது புரிகிறாதா? பார்ப்பனர்களின் நயவஞ்சகமான நரித்தனம்.

இந்தப் பார்ப்பனர்கள் தான் பொருளாதர இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு அடம்பிடிப்பார்கள். அதே போல் நீங்களும் கேட்பதுதான் வியப்பாக இருக்கிறது.

எம்.ஜி. ஆர் ஆட்சிக்காலத்தில் 1979 இல் பொருளாதர அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அதை எதிர்த்து ஜாதி ஒழிப்பு இயக்கமாம் பெரியார் இயக்கம் மற்ரும் தோழமை அமைப்புக்கள் போராடியதை தொடர்ந்து உண்மையை நிலையை அறிந்து அந்த பொருளாதர அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை திரும்ப பெற்றுகோண்டதோடல்லாமல் 31 அய் 50 சதவீதமாக அதிகப்படுத்தினார். இது பற்றிய விபரங்களை தி.க. வெளியீடுகள் மூலம் தாங்கள் மேலும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

இடஒதுக்கீடு தொடர்பாக சோ அவர்கள் வீரமணி அவர்களிடம் நீண்ட பேட்டி ஒன்று எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் உங்களுடைய அத்தனை அய்யங்களுக்கும் விடை கிடைக்கும். தேடிப் படிக்கவும்.

ஜாதி ஒழிகிற வரையில் இட ஒதுக்கீடு தேவை ஏன்? இது குறித்து வீரமணி அவர்கள் விளக்கும் பகுதி


இதோ:

மத்திய கல்வி நிறுவனங்களிலே இது வரை திறக்காத கதவு திறக்கப் பட்டிருக்கிறது. தந்தை பெரியார் அவர்கள் போராடி அரசியல் சட்டம் திருத்தப்பட்டது 1951-லே. மத்திய கல்வித்துறையிலே எல்லா இடங்களுக்கும் கதவு திறக்கப்பட வேண்டும். அதற்கு முன்னாலே கம்யூனல் ஜி.ஓ. வகுப்புவாரி உரிமை செல்லாது என்று தீர்ப்பு கொடுத் தார்கள். அய்யா அவர்கள் போராடியதன் விளைவாக, அண்ணா அவர்கள் போராடியதன் விளைவால் காமராசர் போன்றவர்கள் ஒரு பின்பலமாக இருந்த காரணத்தாலே நேரு அவர்கள் பிரதமராக இருந்த காலத்திலேயே அந்த வெற்றியைப் பெறக்கூடிய வாய்ப்பை நாம் பெற்றாலும்கூட தோழர்களே, பெரியோர்களே, நன்றாக நினைத்துப் பாருங்கள்.

இந்த இயக்கம் ஏன் தேவைப்படுகிறது? ஏன் திராவிடர் கழகம் தேவைப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சட்டத் திருத்தங்கள் நிறைவேறின. ஆனால், நடைமுறைப்படுத்த விடவில்லை. நம்முடைய மாநிலத்திலே 69 சதவிகித இட ஒதுக்கீடு வந்ததே தவிர மத்திய கல்வி நிலையங்கள்பற்றி இங்கே சொன்னார்கள் அல்லவா நம்முடைய துணை வேந்தர் அவர்கள்.

கருவறைபோல் மத்திய கல்வி நிறுவனம்

சில நாட்களுக்கு முன்னாலே அகமதாபாத்திற்குப் போனேன் நிர்வாக துறை இயலிலே இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ் மென்ட் என்று சொல்லக்கூடிய அய்.அய்.டி. என்று சொல்லக்கூடிய மத்திய கல்வி நிறு வனங்கள் இவைகளில் எப்படி கருவறைக்குள் நம்மவர்கள் நுழைய முடியாதபடி ஒரு நிலை இருந்ததோ, அதேபோலத்தான் அதுவும். மத்திய அரசின் பல கோடி ரூபாய் கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் கல்வியைப் பொறுத்தவரையிலே, தாழ்த்தப்பட்டவர் களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

இப்பொழுது மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் அவர்கள், கலைஞர் அவர்கள் எடுத்த முயற்சி இவை அத்தனையும் சேர்ந்து தனியே இன்னொரு சட்ட திருத்தம் கொண்டுவந்த நிலையிலே உச்சநீதிமன்றத்திலே உயர்நீதி மன்றத்திலே உயர்ஜாதிப் பார்ப்பனர்கள் வழக்கின்போது அதையும் தடுக்கப் பார்த்தார்கள். அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி அதிலும் வாதாடி வெற்றிபெற்று இப்பொழுது தான் கதவு திறக்கப்பட்டிருக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவிகிதம் என்றால் சுலபத் தில் விட மறுக்கிறார்கள். ஒன்பது ஒன்பதாகக் கொண்டு வாருங்கள் என்று சொல்லுகின்றார்கள்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் கிரீமிலேயர்

அது மட்டுமல்ல, கிரீமிலேயர் வருமான வரம்பு கொண்டு வந்து அதிலேயேயும் இடைஞ்சல் செய்கிறார்கள். மூன்று அடுக்குகள் என்று வைத்துக்கொள்ளுங்கள். மேலே திறந்த போட்டி, கீழே தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு. முதல் முறையாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கதவு திறக்கப்பட்டிருக்கிறது.

நாம் எடுத்த முயற்சியினாலே - வி.பி. சிங், அர்ஜூன் சிங் போன்றவர்கள் எடுத்த முயற்சி யினாலே மண்டலுக்கு முதல் கதவு திறந்தது போல இதிலேயும் வாய்ப்புகள் திறக்கப்பட்டிருக்கின்றன.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள் - பாருங்கள். அதுமாதிரி இன்னமும் அவர்களுடைய சூழ்ச்சி ஆதிக்கம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

உச்சநீதிமன்றத்தில் இருந்த தடை நீக்கப்பட்டது. தீர்ப்பும் சாதகமாக வந்தது. இதில் ரொம்ப சாமர்த்தியமாக பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு மட்டும் வருமான வரம்பு என்று கொண்டு வந்தார்கள். பிற்படுத்தப் பட்டவர்களில் வசதியான பிற்படுத்தப்பட்ட வர்கள்தான் சலுகைகளை அனுபவிக்கிறார்கள்.

வசதி இல்லாத பிற்படுத்தப்பட்டவர்களுக்காக சலுகை காட்டிட இவர்கள் கண்ணீர் விடு கிறார்களாம். முதலாவதாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கே கதவு திறக்கப்படவில்லை.

கிரீமிலேயர் மூலம் வடிகட்டல்

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய கல்வி நிறுவனங்களில் கதவே திறக்கப்படவில்லை. பந்தியிலே இவனுக்கு உட்கார இடமில்லை. ஆனால் சாப்பிட்டவனே மீண்டும் சாப்பிட்டு விட்டுப் போனால் என்ன நியாயம்?

பிற்படுத்தப்பட்டவர்கள் மத்திய கல்வி நிறுவனங்களில் நுழைந்துவிடக் கூடாது என்பதை கிரீமிலேயர்மூலம் வைத்து வடிகட்டுகிறார்கள். பொருளாதார அடிப்படை கூடாது என்பது அரசியல் சட்டத்திலே தெளிவாக எழுதப்பட்ட உண்மை.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபொழுது

எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது பிற்படுத்தப்பட்டவர்களில் ஏழைகளுக்கு உதவுகிறோம் என்ற பெயராலே ஒன்பதாயிரம் ரூபாய் வருமான வரம்பு ஆணையைக் கொண்டுவந்தார். திராவிடர் கழகம் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த பொருளாதார அளவுகோல் என்பது தவறானது. மக்களுக்கு கேடுவிளைவிக்கக் கூடியது என்பதைப் புள்ளி விவரத்துடன் ஆதாரத்துடன் கூறி கடுமையாக எதிர்த்தது.

தி.மு.க. போராடியது. காங்கிரசில் இருந்த சில நண்பர்கள் நம்மோடு ஒத்துழைத்தார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் போராடியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போராடியது.

எம்.ஜி.ஆர். தோல்வி அடைந்தார்

நாங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து போராடினோம். அதன் விளைவாக மக்கள் மத்தியிலே ஏற்பட்ட ஒரு பெரிய எழுச்சி பாராளுமன்றத் தேர்தல் 1980-லே வந்த நேரத்திலே இரண்டே இடங்களில் மட்டும் எம்.ஜி.ஆர். கட்சி வெற்றி பெற்றது.

மற்ற அத்துணை இடங்களிலும் தோல்வி அடைந்தவுடனே எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி. நாம் காட்டிய எதிர்ப்பு, கிளர்ச்சி, எம்.ஜி.ஆர் போட்ட உத்தரவை எரித்து அந்த சாம்பலை மூட்டை மூட்டையாக எம்.ஜி.ஆருக்கே கோட்டைக்கு அனுப்பினோம்.

எம்.ஜி.ஆர். கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம்

இவைகளுக்கெல்லாம் பிறகு எம்.ஜி.ஆர். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். தனது கருத்தை மாற்றிக் கொண்டார். ஒன்பதாயிரம் ரூபாய் வருமான வரம்பு உத்தரவை அகற்றுகிறேன் என்று சொன்னார்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31 சதவிகிதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்திக் கொடுக்கிறேன் என்று சொல்லி அறிவித்தார். ஏனென்றால் அவர் பட்ட அனுபவம்.
அதைச் செய்வதற்கு இந்த இயக்கங்கள் தேவைப்பட்டன. அப்படியெல்லாம் முயற்சி எடுத்த பிற்பாடுகூட வருமான வரம்பு கூடாது என்று அரசியல் சட்டத்தில் இருந்தாலும், மறைமுகமாக என்ன செய்கிறார்கள்? மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இரண்டரை லட்சம் வருமான வரம்பைக் கொண்டு வந்தார்கள். இப்பொழுது நான்கரை லட்சமாக உயர்த்திவிட்டார்கள்.


27 சதவிகிதம் படிப்படியாக கதவு திறக்கப்படுமாம்!

இதனால் என்ன ஆகிறது? கொடுத்த இடமே ஒன்பது சதவிகிதம்தான். 27 சதவிகிதத்திற்கு கதவு திறக்கவில்லை. 27 சதவிகிதம் என்றால் ஒன்பது, ஒன்பதாக மூன்று ஆண்டு களில்தான் கொண்டுபோக முடியும். அதாவது படிப்படியாகத்தான் கொண்டு போக வேண்டு மாம் என்று சொல்லி, 27 சதவிகிதத்திற்கு கதவு திறக்கப்படவில்லை.
27 சதவிகிதத்தில் மூன்றில் ஒரு பாகம் ஒன்பது. அந்த ஒன்பதை முழுமையாக நிரப்பினார்களா என்றால் இல்லை. நம்முடைய மக்களுக்கு தெரியவில்லை. இன்றும் பிற்படுத் தப்பட்டவர்களுக்கு, படித்துவிட்டு வந்தவர்களுக்கே தெரியவில்லை. .........


..........
இட ஒதுக்கீட்டிற்குத் தடை

அது ஒரு கட்டம். அடுத்தபடியாக பல்வேறு பணிகள் . பெண்ணுரிமைச் சட்டங்கள் மற்ற சட்டங்கள், தகவல் அறியும் சட்டங்களி லிருந்து எல்லா சட்டங்களும் வந்தன என்பது ஒரு பக்கத்திலே இருந்தாலும், சமூக நீதியைப் பொறுத்த வரையிலே, மிகப் பெரிய இட ஒதுக்கீடு சட்டம் வந்திருக்கிறது.

ஆனால், அதை முழுமையாகப் பெற முடியாத அளவிற்குத் தடை செய்து கொண்டிருக் கின்றார்கள். எனவே போராட்டக் களத்திலே நாம் என்றைக்கும் இருக்கவேண்டியவர்களாக இக்கின்றோம். நாங்கள் முன்னாலே போராடி போராடி இந்தக் காரியத்தைச் செய்வோம்.
அடுத்தபடியாக பின்னாலே இருக்கக் கூடிய வர்கள் செய்யக்கூடிய அந்தக் கட்டத்திலே இருக்கிறார்கள். எனவேதான் ஜாதி ஒழிகின்ற வரையிலே இட ஒதுக்கீடு தேவை. இதுதான் மிக முக்கியமானது. சில பேருக்கு ஒரு குழப்பமாக இருக்கும். அதற்குப் பெரியார் அய்யா ரொம்ப அருமையான ஒரு விளக்கம் சொன்னார். அய்யா கேட்டார் - நோய்க்கு ஆங்கில மருந்துகளை கொடுப்பார்கள் - ஆன்டிபயாடிக். ரொம்ப கடுமையான நோய் இருந்தால் கடுமையான மருந்து கொடுப்பார்கள். அந்த மருந்தை நீங்கள் வாங்கிப் பார்த்தால் எந்தெந்த மருந்துப் பொருள் எத்தனை சதவிகிதம் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை போட்டிருப்பார்கள்


மருந்தில் விஷம் போல...!

அதிலே பாய்சன் என்று போட்டிருக்கின்றார்கள். விஷ சக்தி கிருமிகளை கொல்லுவ தற்காக அந்த விஷத்தைக் கூட ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அந்த மருந்திலே அளவோடு சேர்த்திருப்பார்கள். அதுமாதிரி தந்தை பெரியார் சொன்னார். ஜாதியை ஒழிப்பது என்பதுதான் என்னுடைய வேலை. ஜாதியை ஒழிப்பதற்காகத்தான் வாழ்நாள் முழுக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றேன். ஒவ்வொரு இடத்திலும் ஜாதியின் ஆதிக்கத்தை நான் ஒழித்துக் கொண்டிருக்கின்றேன்.
ஆனால், ஜாதி ஒழிகின்ற வரையிலே இட ஒதுக்கீடு இருக்கவேண்டும். காலம் காலமாக எங்களுடைய மக்கள் கல்வியிலே, உத்தியோகத்திலே, பின்தங்கப்பட்டு, கீழே தள்ளப்பட்ட காரணத்தால் எதிலே எந்த வழியிலே இருந்து அவர்கள் தள்ளப்பட்டார்களோ, அந்த வழியிலே இருந்துதான் அவர்களை வெளியே கொண்டு வரவேண்டுமே என்பதற்காக ஜாதியை எப்படி ஒரு மருந்திலே விஷத்தை அளவோடு சேர்க்கிறார்களோ அதேபோலத் தான் இட ஒதுக்கீட்டிற்கு மட்டும் பயன்படுத்தி யாகவேண்டும். வேறு வழியில்லை என்று தெளிவாக இந்தக் கருத்தைச் சொன்னார்கள். பிறகு இப்பொழுது தான் அது ரொம்ப தெளிவாக ஆகிவிட்டது.

கிரிமீலேயர் - ரூ.நான்கரை லட்சமாக

இந்த ஒன்பது விழுக்காடு பிற்படுத்தப் பட்டவர்களுக்கு கிரிமிலேயரில் ரூ.நான்கரை லட்சம் கொடுக்கலாம் என்று நீதியரசர் இரத்தினவேல் பாண்டியன் தலைமையிலுள்ள ஆணையம் சொன்னால்கூட அதை அப்படியே கொண்டுவந்து உள்ளே போட்டுவிட்டார்கள். நாம் சத்தம்போட்டு, கலைஞர், பிரதமருக்கு எழுதி, மற்றவர்களுக்கு எழுதி, நம்முடைய அமைச்சர்கள் அங்கு பேசி, பிறகு அமைச் சரவைக்கு வந்து இவ்வளவும் செய்த பிற்பாடு உச்சநீதிமன்றத்திலே அந்த வழக்கு என்ன ஆயிற்று என்று சொன்னால், ரொம்ப சுலபமாகச் சொல்லுகின்றார்கள்.

ஈரோட்டுக் கண்ணாடிக்கு மட்டும் தெரியும்

இல்லை, இல்லை, அதெல்லாம் பொதுப் போட்டிக்குப் போகவேண்டும் என்று சொல்லுகின்றார்கள். பொதுப் போட்டி என்றால் யார்? எல்லாம் அவாள்தான். பார்ப்பான் எவ்வளவு தந்திரமாக செய்கிறான் பாருங்கள்.

அவன் செய்வதை பெரியாருடைய ஈரோட்டுக் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால்தான் தெரியும். இல்லையென்றால் சாதாரண மக்களுக்குத் தெரியாது. இதை விளக்குவதற்கு விடுதலை ஏடு தேவை. இதை விளக்குவதற்கு தமிழ்நாட்டிலே இருக்கக் கூடிய, திராவிடர் கழகம் மாதிரி இருக்கக்கூடிய இதுபோன்ற இயக்கங்கள் தேவை.

திராவிடர் கழகம் எதை எதிர்பார்க்கிறது?

உங்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்கிறோம்? அடையாளம் காட்டுகிறோம். ஆனால், நம்முடைய மக்களுக்கு இன்னமும் புரியவில்லையே.

----- "விடுதலை" - 8-11-2008

அருள்கூர்ந்து ஆழமாக சிந்தியுங்கள். உண்மை புலப்படும்.

ஒருவன் தாழ்ந்தவனாகவும் உயர்ந்தவனாகவும் இருப்பதர்கு முக்கிய காரணம் ஜாதி.

ஜாதி ஒழிய உண்மையாக அடிப்படையாக செய்ய வேண்டிய பணியை விட்டு விட்டு அதாவது ஜாதியின் வேரை விடு விட்டு நீங்கள் கிளையை வெட்டிக் கொண்டிருக்கிறீகள்.

ஜாதி ஒழிய பெரியார் கூறும் கருத்து உற்ரு நோக்கக்கூடியது. தன் வழ்நாலெல்லாம் ஜாதி ஒழியப் போரடிய அந்தப் போராளியின் வாக்குமூல இது; படியுங்கள்.

"உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத் தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம் தான் சாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீறி இருந்தாலும் சாதி உண்மையிலேயே ஒழிந்ததாக ஆகாது.

ஏன் எனில், சாதி என்பது இந்த நான்கில் இருந்தும் ஆக்கப்பட்டதே ஆகும். இப்போது சொல்லுவேன்; நாகரிகத்திற்காகச் சிலர் சாதி ஒழிய வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால், அவர்கள் மேற்கண்ட நான்கையும் ஒழிக்கத் துணிவு கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களால் நமக்கு ஒரு பயனும் ஏற்படாது. சில சமயங்களில் அவர்கள் நமக்கு எதிரிகளாகவும் ஆகக்கூடும். மனிதனை மடையனாக, அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் சாதி புகுத்தப்பட்டதாகும். சுதந்திர உணர்ச்சியும், அறிவும் ஏற்படாமல் சாதியை ஒழிக்க முடியாது. மடமைக்கும் அடிமைத் தன்மைக்கும் ஆக்கம் அளித்துச் சாதியை நிலை நிறுத்துவது தான், சாதியை ஒழியாமல் பாதுகாப்பதுதான் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் என்பவைகளாகும்.

உண்மையில் சாதி ஒழிய வேண்டும் என்று கருதுபவர்கள், இந்த நான்கு ஒழிப்புக்கும் சம்மதித்தவர்களாகவே தான் இருப்பார்கள்."

-------93ஆம் பிறந்த நாள் விழா 'விடுதலை' மலர் 17.9.1971.

ஜாதி ஒழிய ஜாதி மறுப்பு திருமணங்கள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தனது தொண்டர்களை கடைபிடிக்க வைத்தார்.
இது போல் ஜாதி ஒழிய எத்தனையோ வழி இருக்க இட ஒதுக்கீடு மூலம் ஜாதி வளர்கிறது என்ரு சொல்வது ஏற்புடையதல்ல.

இப்ப எல்லாம் யாருங்க ஜாதி பார்க்கிறார்கள் என்று கூறி கொண்டு தனது திருமணம் மட்டும் ஒரே ஜாதியில் நடக்க வேண்டும் என்று
ஆசைப்படுவது போல் உள்ளது உங்கள் ஜாதி ஒழிப்பு பார்வை.

இன்று தான் ஜாதி ஒழிக்க அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என்று பெரியார் தொண்டர்கள் 10000 க்கும் மேற்பட்டோர் அரசியல் சட்டத்தை எரித்தார்கள் .
அவர்களுக்கு வீர வணக்கத்தை தெரிவித்து முடிக்கிறேன்.
நன்றி.

தமிழ் ஓவியா said...

26-11-1957 அன்று ஜாதி ஒழியவேண்டும் என்பதற்காக 10000 தி.க. தோழர்கள் ஜாதி காப்பற்றும் அரசியல் சட்டத்தை எரித்தார்கள் .
அது தொடர்பாக விளக்கமாநாடு ஒன்றை 3-11-1957 அன்று பெரியார் நடத்தினார். அந்த மாநாட்டில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவைத் தருகிரேன். படியுங்கள்."அன்புமிக்க தோழர்களே! தாய்மார்களே! சென்ற தடவை திருச்சியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு கூட்டத்தில் அரசியல் சட்டத்தை எரிப்பது, காந்தி படத்தை எரிப்பது என்பதான பிரச்சனைகள் வந்த போது பெரும்பாலான அங்கத்தினர்கள் இந்த தீர்மானம் மத்திய நிர்வாக கமிட்டியில் செய்வதைவிட இதற்காக ஒரு தனி மாநாடு கூட்டி அதில் இதை மக்களுக்கு எடுத்துச் சொல்லி மக்கள் ஆதரவைப் பெற்று அதன் பின்பு சிறிது நாள் தவணைகொடுத்து பிரசாரம் செய்து அமுலுக்குக் கொண்டு வரலாம் என்று கருத்து தெரிவித்தார்கள். அந்த தீர்மானத்தின் கருத்துப்படி எப்போது கூட்டுவது என்று முயற்சி செய்துவந்தோம். டிசம்பரில் வைத்துக் கொள்ளலாம் என்று இரண்டொரு தடவை சொன்னேன். இந்த நிலையில் எனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் நாட்டில் பல இடங்களில் பலவிதமாக நடத்தினார்கள். தஞ்சையில் எனது பிறந்த நாள் விழாவை சிறிது விசேஷமா நடத்த வேண்டும் என்று கருதி எனது எடைக்கு எடை வெள்ளி கொடுப்பது என்று முடிவு செய்து அதன்படி விழா நடத்த முயற்சி செய்தார்கள். இந்த விழாவுக்கு பெரும்பாலான மக்கள் வருவார்கள், வருவதற்கு வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதாக எண்ணிப்பார்க்கிறபோது எல்லா மாவட்டங்களிலிருந்தும் தமிழ்மக்கள் பெருவாரியாக வருவார்கள் என்று தோன்றியது. முன் குறிப்பிட்டு வைத்திருந்த தனிமாநாட்டை இப்போதே வைத்துக் கொண்டால் இரண்டுவித நன்மை அதாவது செலவும் தொந்தரவும் இருக்காது; எல்லோரும் தங்கள் கருத்தை தெரிவிக்கவும் ஒருவாய்ப்பு இருக்கும் என்று கருதி விழாவை யொட்டியே தனிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. ரொம்ப நெருக்கத்தில் அதாவது (20.10.57ல் நினைத்து) பத்து நாட்களில் துவக்கப்பட்டது. இருந்தபோதிலும் நாட்டில் உண்டான கிளர்ச்சி உணர்ச்சி இங்கு மக்களை கொண்டு வந்து சேர்த்துவிட்டது. இது மிக மிகப்பாராட்டத்தக்கதாகும்.

தஞ்சை முன்னணியில் உள்ளது

எங்கும் இயக்கத் தோழர்கள் இருந்தாலும் என்னுடைய முயற்சிக்கும் போக்குக்கும் தஞ்சை முதன்மையானதாக உள்ளது. திராவிடர்கழகமாக ஆன பிறகுமாத்திரமல்ல; நான் காங்கிரசில் இருந்த காலத்திலும் தஞ்சை பெருமளவில் ஆதரவளித்துள்ளது. சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தகாலத்திலும் நடத்திய காலத்திலும் தஞ்சை தான் ஆதரவு அளித்து வந்தது. ஜஸ்டிஸ் கட்சிக்கு என்னை தலைவனாக்க பெரும் ஆதரவளித்ததுக் கூட தஞ்சைதான் என்றால் மிகையாகாது. எதைச் சொல்கிறேனோ எதை எதிர்பார்க்கிறேனோ அதை தமிழ் நாடு பூராவும் பகுதி செய்கிறது. என்றால் தஞ்சை மாத்திரம் பகுதிக்குக் குறையாமல் செய்யும் திராவிடர் கழகம் ஆரம்பித்து 10,15 ஆண்டுகளில் ஆதரவளித்து பல கட்சிகள் நாட்டில் இருந்த போதிலும் திராவிடர் கழகத்தினர் தலைசிறந்த கட்டுப் பாடான நாணயமான எந்தவிதமான சுயநலமில்லாத வயிற்றுப் பிழைப்புக்காக அல்லாமல் எந்தவித தியாகத்திற்கும் முன்வந்து பாடுபடுகிறவர்கள் என்று சொல்லும்படியான நல்ல பெயரை புகழை தஞ்சை வாங்கிக் கொடுத்துள்ளது.

இது தனிச் சிறப்புக் கொண்ட மாநாடு

உள்ளபடியே சொல்லுகிறேன் பகுதி மக்கள் வெளியில் இருக்கிறார்கள் உள்ளே இடமில்லாததால் டிக்கெட் கொடுப்பதை நிறுத்தியிருப்பார்கள் நானும் அப்படித் தான் சொல்லிவிட்டு வந்தேன்.

எனது 40 ஆண்டு பொதுவாழ்க்கையில் எந்தனையோ மாநாடுகள் நடந்திருக்கின்றன. தலைமை வகித்திருக்கிறேன் சுயமரியாதை இயக்க காலமுதல் சிறப்பாக முதல் மாநாடு செங்கற்பட்டில் நடந்தது. அதுதான் ரிக்கார்டு மாநாடு ஜமீன்தார்கள் 60-65 பேர் வந்திருந்தார்கள் எல்லா சட்டசபை மெம்பர்களும் எல்லா மந்திரிகளும் வந்திருந்தார்கள் நல்ல கூட்டம் இருந்தாலும் இதில் 1/2 பங்குக்குக் குறைவான அளவுதான் இருக்கும் அதற்குப் பிறகு பல மாநாடுகள் நடந்திருந்தாலும் இந்த மாநாட்டைத் தொடும்படியான அளவுக்குக்கூட நடந்ததில்லை இன்று திராவிடர் கழக தனிமாநாடு என்பதாக கூட்டியுள்ளோம் என் கணக்குத் தவறாக இருந்தாலும் இருக்கலாம். இது சிறப்பான மாநாடு ஆதரவான மாநாடு எல்லாவற்றையும்விட சிறப்பு! கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்து அந்தந்த நகரங்கள் கிராமங்களிலிருந்தெல்லாம் என்னை தங்கள் குடும்பத்தில் சேர்ந்த ஒருவனாகவே கருதி உணர்ச்சியுள்ள மக்கள் கூடியுள்ள மாநாடு தனிமாநாடு என்பது ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு எடைக்கு எடை வெள்ளி அளிக்கும் விழா பகுதிக்குமேல் காரணம், மதிப்புள்ள தங்கள் தலைவனுக்கு வழிகாட்டிக்கு இதுவரை நடந்திராத மரியாதை நடக்கிற போது அதை நாம் காண வேண்டாமா? நம் பங்கும் இருக்கவேண்டாமா என்று இவ்வளவு அதிகமான மக்கள் கூடியிருக்கிறார்கள். நான் பெருமைக்காகச் சொல்ல வில்லை எங்கும் கூட்டம் குறைவாக இருந்தால் 'கூட்டம் இல்லை' என்று சொல்லுவதுதான் எனது வழக்கம் நானும் நண்பர்களும் தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தோம். காலை ஊர்வலம் எல்லோரையும் மயக்கிவிட்டது ஒருவர் நாலு லட்சம் என்கிறார் ஒருவர் மூன்று லட்சம் இருக்கும் என்கிறார் உள்ளபடியே கணக்குப் பார்த்தால் எவ்வளவு இருக்கும் என்று தெரியாது. எல்லோருடைய கணக்கும் குறைவாகத்தான் இருக்கும். மழை அருமையான உதவி செய்தது காலையில் மழையில்லை எல்லோரும் மழை போய்விட்டது போய்விட்டது என்றார்கள் ஊர்வலம் முடியும்வரை மரியாதையாகக் காத்துக் கொண்டிருந்தது இவ்வளவுதான் தாங்குவேன் இனிமேல் தாங்கமாட்டேன் என்று சிறு தூறல் போட ஆரம்பித்துவிட்டது நான் எப்படியோ ஆகட்டும் மாநாடு காலையிலேயே நடந்துவிட்டது போங்கள் என்று கூறி விட்டேன். இனிமேல் வசூலித்த பணத்தை திருப்பியா கொடுத்து விடப்போகிறார்கள் எங்காவது தாழ்வாரத்தில் வைத்தாவது கொடுத்துவிடுவார்கள் நானும் அவ்வளவு சல்லீசாக விட்டுவிட்டுபோய் விடமாட்டேன். நடக்கிறது நடக்கட்டும் என்று கூறிவிட்டேன் எப்படியோ அதோடு மழை நின்று விட்டது. மாநாட்டு பந்தல் ஈரமாக இருக்குமேஎப்படி உட்காருவார்கள் என்று கவலைப்பட்டேன் இப்போது என்னடா என்றால் எள் விழக்கூட இடமில்லாதபடி அவ்ளவு வசதி (!) யாக உட்கார்ந்திருக்கிறீர்கள்.

சிறைக்கு வழிகூட்டும் மாநாடு

இந்த மாநாடு மகிழ்ச்சிக்குரியதும் பெருமைப்படத்தக்கதுமான மாநாடாகும்.

என்னைக் கேட்டால் நான் சொல்லுகிறேன். திராவிடர் கழகத் தனிமாநாடு என்று சொல்லப்பட்டாலும் உங்கள் தலைவனுக்கு முக்கிய தொண்டர்களுக்கு ஜெயிலுக்கு செல்ல வழியனுப்புமாநாடுதான் இந்த மாநாடு. அரசியல் சுற்றுச்சார்பு சூழ்நிலை அப்படித்தான் உள்ளது. இந்த மாநாட்டின் பலன் வெற்றி அதுவாகத்தான் இருக்கும்.

கூடிய விரைவில் அரசாங்க விருந்து இருக்கிறது. அது லேசில் கிடைக்கக் கூடியதல்ல, முன்பெல்லாம் சாதாரணம், ஆனால் அது இப்போது லேசில் கிடைப்பதாக இல்லை. பிள்ளையாரை உடைத்தோம்; ராமனைக் கொளுத்தினோம் இன்னும் பல காரியங்கள் செய்தோம்; ஏன் என்று கேட்க ஆளில்லை! ராஜாஜி காலத்திலும் எதுவும் செய்யவில்லை. இல்லாவிட்டால் இப்போது காமராசர் தான் விட்டு விட்டார் என்று அவரை சுட்டுத் தள்ளி விடுவார்கள். இப்போது அவருக்கும் பதில் சொல்ல சுலபமாகிவிட்டது. 'ராஜாஜி காலத்திலேயே ஒன்று மில்லை நான் என்ன அதிசயம்' என்று கூறிவிடுகிறார். பார்ப்பனர்கள் தூண்டுதல்

என்ன ஆனாலும் சரி! இப்போது அரசாங்கத்தை மிகவும் நெறுக்குகிறார்கள். மேலிடத்திலிருந்தும் பத்திரிகைக்காரர்களும், பார்ப்பனர்களும் இன எதிரிகளும், ஏன் விட்டு வைத்திருக்கிறாய்? என்று நெறுக்குகிறார்கள். எதனால்? குற்றம் கண்டு பிடித்தா? எல்லோருக்கும் பொறாமை! நாம் நினைக்க முடியாததை சொல்லமுடியாததை இந்த கூட்டம் செய்கிறதே நம் யோக்கியதை வெளியாகிவிடுகிறதே; இந்த கூட்டம் இருப்பதால் நாம் பிள்ளைப் பூச்சியாக இருக்க வேண்டியுள்ளதே; இவர்களை அடக்கினால்தான் நமக்கு மரியாதை இருக்கும் என்று அரசாங்கத்தை நெறுக்குகிறார்கள்; பல முயற்சிகள் நடக்கின்றன.

ஆகவே இன்றைய சர்க்கார் அடக்குமுறை செய்து தீரவேண்டிய சந்தர்ப்பம் இது. தங்களுக்கு இஷ்டமில்லாவிட்டாலும் கூட ஊரார் வாயை அடைக்கவாவது பிடித்துதீருவார்கள். ஆகவேதான் தோழர்களே! முன்பே இது என்னை சிறை செல்ல வழியனுப்பு மாநாடாக இருக்கும் என்றேன்.

இன்றைய லட்சியம் முயற்சியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சாதி ஒழியவேண்டும் என்பது ஒரு சாதாரண சங்கதி ஆனால் அது பிரமாதமான செயலாகக் காணப்படுகிறது. பிறவியில் யாரும் தாழ்ந்தவர்கள் அல்ல; எங்களுக்குமேல் எவனும் இல்லை எல்லோரும் சமம். என்ற இந்தநிலை நமக்குதான் அவசிய மாகத் தோன்றுகிறது.

'ஒருவன் மேல்சாதி; ஒருவன் கீழ்சாதி; ஒருவன் பாடுபட்டே சாப்பிட வேண்டும் ஒருவன் பாடுபடாமல் உட்கார்ந்து கொண்டு சாப்பிட வேண்டும்' என்கிற பிரிவுகள் அப்படியே இருக்க வேண்டுமா?

இதைக் காப்பாற்றிக் கொடுப்பதுதான் அரசாங்கம். இதை ஒழிக்க வேண்டும். எல்லா சாதியும் ஒரு சாதி தான் என்கிறோம் நாம். இந்த ஒரு காரியம் தான் இவ்வளவு பெரிய கிளர்ச்சியை உண்டாக்கிவிட்டது.

மற்ற நாடுகளில் எள்ளி நகையாடுவர்!

இது கிளர்ச்சிக்கு உரிய காரியமா? மற்ற நாட்டில் இது போல் சொன்னாலே சிரிப்பான். ஏன்? பிறவியில் என்ன பிரிவு இருக்கிறது என்பான். சாதாரணமாக அரசாங்கமே யோக்கியமான, பொது மக்களுக்கான, மேல்சாதிக்காரர்கள் ஆதிக்கத்தில் இல்லாத அரசாங்கமாக இருக்குமானால் ஒரு வரியில் செய்து விடலாம்.

தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்று போட்டிருக்கிறார்களே! தீண்டாமை ஒழிய வேண்டுமென்பது சாஸ்திரத்திற்கு ஆகமத்திற்கு விரோதம்தான். ஆனால் தீண்டாமை ஒழிக்க வேண்டுமென்பது அரசாங்கத்திற்கு அரசியல் சூதாட்டத்திற்கு ஆக அவசியமாக இருந்தது செய்தார்கள். அதுபோல இதற்கு ஏன் பரிகாரம் செய்யக்கூடாது?

சாதி ஒழிய பரிகாரம் ஏன் பண்ணக்கூடாது என்று கேட்டால் இப்படி பேசுகிறேன் அப்படி பேசுகிறேன் என்று எழுதுகிறார்களே தவிர பேசுவதில் என்ன தப்பு? சாதி ஒழிய வேண்டும் என்பதால் என்ன கெட்டுப் போகும்? சர்க்கார்தான் ஏன் ஆதரவு தரக்கூடாது என்று கேட்பவர்களைக் காணோமே!

இது என்ன சுயராஜ்யம்?

ஒரு மனிதன் நான் ஏன் பிறவியில் தாழ்ந்தவன் என்று கேட்கக் கூடாது; கேட்க உரிமையில்லை யென்றால் இது என்ன சுயராஜ்யம்? நீங்கள் சிந்திக்க வேண்டும். எனது 40 ஆண்டு பொது வாழ்க்கையில் ஒருவனைக்கூட உதைத்ததில்லை குத்தியதில்லை ஒருவனுக்குக்கூட ஒரு சிறு காயம் கூட பட்டதில்லை கலவரமில்லாமல் நாசமில்லாமல் எவ்வளவு தூரம் நடக்கலாமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது என்று விரும்பி அதன்படி நடப்பவன்.

வெட்டாமல் குத்தாமல் காரியம் சாதிக்க முடியாது என்ற நிலைமை வருமானால் சும்மா இருந்தால் நான் மடையன்தானே?

ஒரு ஆயிரம் பார்ப்பானையாவது கொன்று ஒரு இரண்டாயிரம் வீடுகளையாவது கொளுத்தி ஒரு நூறு பார்ப்பானர்களையாவது அதில் தூக்கிப்போட்டாலொழிய சாதி போகாது என்ற நிலைமை வந்தால் என்ன செய்வீர்கள்?

(கொல்லுவோம்! கொளுத்துவோம்! என்று லட்சக்கணக்கானவர்கள் முழக்கமிட்டனர்) எவனாக இருந்தாலும் இந்த முடிவுக்குத்தானே வர வேண்டும்? அட! பைத்தியக்காரா! நான்தானா சொல்லுகிறேன்? (நாங்கள் செய்வோம் என முழக்கம்) இன்றே செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. நாளைக்கே செய்யவேண்டும் என்று சொல்லவில்லை. அதைத்தவிர வேறு வழியில்லை யென்றால் என்ன செய்வது?

நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் வைப்பாட்டி மகன்? நான் ஏன் கீழ்சாதி? இதற்கு பரிகாரம் வேண்டும் என்றால் 'குத்துகிறேன் என்றான் வெட்டுகிறேன் என்றான்' என்றால் குத்தாமல் வெட்டாமல் இருக்கிறதுதான் தப்பு என்றுதானே எண்ண வேண்டியுள்ளது? குத்தினால் என்ன செய்வாய்?

முதுகுளத்தூர் சம்பவம்

முதுகுளத்தூரில் நூறுபேரைக் கொன்று இரண்டாயிரம் வீட்டைக் கொளுத்தினானே என்ன செய்தாய்? என்ன செய்ய முடிந்தது? யாரோ நாலுபேர் மீது வழக்குப்போட்டால் தீர்ந்துவிடுமா? எரிந்த வீடும் செத்தவனும் வந்து விடுவானா? சொன்னான் என்றால் எப்போது சொன்னான்? அந்த மாதிரி சொன்னான் அந்த யோக்கிய பொறுப்பே கிடையாது நான் சொல்வதைவிட மந்திரி பக்தவத்சலம் அவர்களே நல்லபடி சொல்லியிருக்கிறார். 'ராமசாமி குத்துகிறேன் என்றான் வெட்டுகிறேன் என்றான் என்று சொன்னபோது எப்போது சொன்னான்? எங்கு சொன்னான் கடுதாசியைக் காட்டு' என்றதும் ஒருவனையும் காணோம் ஓடிவிட்டார்கள், 'பேப்பரில் வந்திருக்கிறது என்றார்கள் சி.அய்.டி.ரிப்போர்ட்டில் அதுபோலக் காணவில்லையே என்றார் ஒருவருமில்லை ஓடிவிட்டார்கள். குத்தினால் வெட்டினாலொழிய சாதி போகாது என்ற நிலைவந்தால் எந்த மடையன்தான் சும்மா இருப்பான்?

ஆண்மையாக 'இருக்க வேண்டியதுதான் எடுக்க முடியாது' என்றாவது சொல்லேன்.

வீண்மிரட்டல் பலனளிக்குமா?

ஆறுமாதமாக கிளர்ச்சி நடக்கிறது 750 பேரை கைது செய்து தண்டித்தாகி விட்டது ஒன்றும் சொல்லாமல்.

'குத்துகிறேன் வெட்டுகிறேன்' என்றான் என்று சொல்லி மிரட்டி நம்மை அடக்கிவிடலாம் என்றால் என்ன அர்த்தம்? இந்த மிரட்டலுக்கு பயந்து விட்டு விடக்கூடிய முயற்சி அல்ல நம்முயற்சி, விட்டுவிட்டால் நாம் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆவோம்! மான மற்ற கோழை என்பதைத் தவிர வேறு இல்லை. சாதி ஒழிக்க வேண்டும் என்றால் அதுபற்றி அக்கரையில்லை 'குத்துகிறேன்' என்கிறானே அதற்கு என்ன பண்ணுகிறாய் என்றால் என்ன அர்த்தம்?

இரண்டிலொன்று முடியவேண்டும்

இரண்டில் ஒன்று கேட்கிறேன்; சாதி ஒழிய வேண்டுமா? வேண்டாமா? (ஒழிந்தேதீர வேண்டும்! என்ற லட்சக்கணக்கான மக்களின் முழக்கம்) ஒழிய வேண்டும் என்றால் சட்டத்தையும் வெங்காயத்தையும் நம்பினால் போதுமா? எதைச் செய்தால் தீருமோ அதைச் செய்தால் தானே முடியும்? (சொல்லுங்கள் செய்கிறோம்! என்ற லட்சக்கணக்கானவர்கள் உறுதிமொழி) சட்டத்தின் மூலம் தீராது, பார்லிமெண்டின் மூலம் தீராது என்றால் வீட்டில் போய் படுத்துக் கொள்ள வேண்டியது தானா?

பார்ப்பானுக்கு மட்டும் தான் அரசாங்கமா?

அரசாங்கம் யாருக்கு? பார்ப்பானுக்கும் வடநாட்டானுக்கு தானா? தந்திரமாக பித்தலாட்டமாக அரசியலை அமைத்துக் கொண்டு யோக்கியன் அங்கு போக முடியாதபடி சட்டம் செய்து கொண்டு தொட்டதற்கெல்லாம் சட்டம் இருக்கிறது; தண்டனை இருக்கிறது; ஜெயில் இருக்கிறது என்றால், மானங்கெட்டு வாழ்ந்தால் போதும் என்று எத்தனைபேர் இருப்பார்கள்? வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லையென்பவன் இருப்பான்; இரண்டில் ஒன்று பார்க்கிறோம் இல்லாவிட்டால் சாகிறோம் சாகிற உயிர் சும்மா போகாமல் உடன் இரண்டை அழைத்துக் கொண்டு போகட்டும் என்கிறோம்.

சாதி ஒழிய வேண்டும் என்பதற்கு எவனும் பரிகாரம் சொல்வதில்லை. நம்மை அடக்கப் பார்க்கிறார்கள்.

பார்ப்பனப் பத்திரிகைகளின் போக்கிரித்தனம்

நம் அரசாங்க மந்திரிகளை இழுத்துப்போட்டு இவர்கள் தான் இடம் கொடுக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். இதோ படம் போட்டுக் காட்டுகிறார்கள். மந்திரிகள் உட்கார்ந்து கொண்டு சிங்கத்தைவிட்டு பார்ப்பனர்களை கடிக்க விடுகிறார்கள். பார்ப்பனர்கள் பயந்து கொண்டு ஓடுகிறார்கள். நான்தான் சிங்கமாம். இப்படி படம் போடுகிறார்கள். காமராசர் ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறார் என்கிறார்கள் பதினாயிரக்கணக்கில் போகிற பத்திரிகை இந்தியா பூராவும் போகிற பத்திரிகை இவ்வளவு அயோக்கியத்தனமாக எழுதுகிறான்? பத்திரிகைக்காரர்களுக்கு மானம் மரியாதை இருந்தால் நான் சொல்வதற்கு பரிகாரம் சொல்ல வேண்டாமா? நீங்கள்தான் மக்கள்; நாங்கள் மக்கள் அல்ல, ராஜ்யம் அவர்களுடையதுதானா?

துரோகிகளால் வந்த ஆபத்து

நம் பிரகலாதன்கள் அவர்களுக்கு அடிமையாகப் போவதால்தானே இவர்களுக்கு இவ்வளவு அகந்தை வருகிறது? வேறுநாட்டில் இதுபோல் இருந்தால் ஒரு ராத்திரியில் வெடிகுண்டு வைத்துகட்டிடத்தை இடித்து நொறுக்கிவிடமாட்டானா? துருக்கியில், பாகிஸ்தானில், இங்கிலாந்தில், ஜெர்மனியில் இது போல ஒரு நிலைமை இருந்தால் என்ன ஆகியிருக்கும்? இந்த மானங்கெட்ட நாட்டில் தானே இவ்வளவு கொட்டம் அடிக்கும் போதும் கட்டிடம் இருக்கிறது? அவன் வாழ்கிறான்.

வீண்மிரட்டலுக்குப் பணிவதா?

'ஏண்டா அடிக்கிறாய்' என்றாலே 'கொல்கிறான் கொல்கிறான்' என்று சப்தம் போட்டு மிரட்டுவதா? அடக்கி ஒழிக்க முயற்சி செய்வதா? இன்றுவரை யாரை எப்படி எந்த ஊரில் செய்வது என்று முடிவு செய்யவில்லை. ஆனால் அப்படிப்பட்ட அவசியம் வந்தால் தயாரா? என்று தான் கேட்கிறேன் (தயார்! தயார்! என்ற லட்சக்கணக்கான குரல்) நாலு பேர் சாவது ஜெயிலுக்குப் போவதென்றால் போகிறது. என்ன திருடி விட்டா போகிறோம்? இல்லை ஒரு குடும்பம் பிழைத்தால் போதும் என்று போகிறோமா? நீ கீழ்சாதி அதுதான் சாஸ்திரம் அதுதான் வேதம் அதைத்தான் ஒத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றால் 100க்கு 97பேராக உள்ள நாம் எதற்கு இழிமக்களாக இருக்க வேண்டும்? ஆகவே நடப்பது நடக்கட்டும் பயமில்லை! பயந்து கொண்டு முயற்சியைக் கைவிட்டுவிடப் போவதில்லை. அந்தமாதிரி அவசியம் வந்தால் செய்து தீர வேண்டும்.

இந்த இரண்டு வருடத்தில் எனக்கு இருபது இடங்களில் கத்தி கொடுத்துள்ளார்கள் எதற்கு கொடுத்தார்கள்? என் கழுத்தை அறுத்துக் கொள்ளவா? இல்லை, முத்தம் கொடுக்கவா இல்லை, விற்றுத்தின்னவா? உன்னால் ஆகும் வரை பார் முடியாவிட்டால் எடுத்துக் கொள்! மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதன் அறிகுறியாகத்தானே? காந்தி சிலை உடைக்க வேண்டும் என்றேன். உடனே சம்மட்டி கொடுத்தார்கள்! இப்படி மக்கள் ஏராளமாக ஆதரவு தருகிறார்கள் இவ்வளவு மக்கள் ஆதரவு நம்பிக்கை அன்பு செல்வாக்கு உள்ளது இதை என்ன செய்வது? இதை உணர்ந்து அவனவன் திருந்துவதா; இல்லை கடைசி நிமிடம் வரட்டும் என்று ரகளைக்குக் காத்திருப்பதா?

செல்வாக்கை தப்பாக உபயோகிக்கமாட்டேன்

நானும் அவசரக்காரனல்ல! நம் பேச்சைக் கேட்க ஆள் இருக்கிறது என்பதற்காக 'வெட்டு குத்து' என்று சொல்லமாட்டேன் வேறு மார்க்கம் இல்லை யென்றால் என்ன செய்வது? கொலை அதிசயமா? பத்திரிகையில் தினம் பார்க்கிறீர்களே! மாமியாரை மருமகன் கொன்றான்: மனைவியை 'ருஷன் கொன்றான்; அப்பன் மகனைக் கொன்றான் என்று அவசியம் என்று தோன்றுகிறபோது நடக்கிறது! செய்து விட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று செய்கிறவன் 100க்கு 10 பேர்தான் இருக்கும் 100க்கு 90 பேர் செய்துவிட்டு வருவதை அனுபவிப்பது என்று செய்கிறவர்கள் தான் தப்பான காரியத்திற்கு உபயோகப்படுத்தமாட்டேன். அந்த அளவு உணர்ச்சி வந்துவிட்டது என்பதை அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டும்; பொது வேஷம் போடுகிறவன் தெரிந்து கொள்ள வேணடும்.

இன்றா ஏற்பட்டது இந்த உணர்ச்சி?

பார்ப்பானைக் கொல்லுவதும் பார்ப்பானைக் குத்துவதும் இன்று நேற்றல்ல. அந்த காலத்திலேயே நடந்துள்ளதே! பார்ப்பான் எழுதி வைத்துள்ள புராணங்களைப் பார்த்தாலே தெரியுமே? இரணியன் சொல்லியிருக்கிறான்; இது பாகவதம் 7வது ஸ்கந்தம் 2வது அத்தியாயம் இன்ஜிக்கோல்லை பண்டிட் ஆர் சிவராம சாஸ்திரி மொழி பெயர்ப்பு புரோகரசிங் அச்சுக்கூடப் பதிப்பு 715-716வது பக்கங்களில் உள்ளது.

இரண்யன் சொன்னது

இரண்யன் சொல்கிறான் 'ஓ! தானவர்களே நான் சொல்வதைக் கேளுங்கள் ; தாமசியாமல் அப்படி செய்யுங்கள்! நீங்கள் எல்லோரும் பிராமணர்கள் நிறைந்திருக்கும் 'மிக்குச் சென்று தபசு யாகம் அத்யாயனம், விரதம் ஆகியவைகளைச் செய்கின்றவர்களைக் கொல்லுங்கள். பிராமணர்களால் செய்யப்படும் அனுஷ்டானமே விஷ்ணுவுக்கு ஆதாரமாகிறது ஆனதால் எந்த தேசத்தில் பிராமணர்கள் இருக்கிறார்களோ, எந்த தேசத்தில் வர்ணாசிரமங்களுக்குரிய கர்மங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றதோ அந்த தேசத்திற்குச் சென்று அக்கினியை வைத்துக் கொளுத்துங்கள், நாசம் செய்யுங்கள்' என்றான் அதைக்கேட்ட தானவர்கள் உடனே சிலர் அக்கினியை வைத்துக் கொளுத்தினார்கள். சிலர் மண் வெட்டியை எடுத்து கோவில்களையும் பிரகாரங்களையும் கோபுரங்களையும் பிளந்தார்கள் சிலர் ஜவ்லிக்கும் கொள்ளிகளைக் கொண்டு அவர்களுடைய வீடுகளைக் கொளுத்தினார்கள் இப்படி இவர்கள் செய்யும்பொழுது தேவர்கள் பூமியில் மறைந்து சஞ்சரித்தார்கள்!'

எதில் இது - பாகவதத்தில் !

கொளுத்துவது வெட்டுவது 2000 வருடங்களுக்கு முன்பே நடந்திருக்கிறது அந்த காலத்தில் பித்தலாட்டம் செய்து எப்படியோ பார்ப்பனர்கள் ஜெயித்துவிட்டார்கள் இந்த காலத்தில் என்ன பித்தலாட்டம் செய்தாலும் அவர்கள் ஜெயிப்பது என்பது நடக்காது.

பார்ப்பான் புத்திசாலியாக இருந்தால் பார்ப்பானைச் சேர்ந்தவன் புத்திசாலியாக இருந்தால் 'இந்து மதத்தில் சாதிகிடையாது சாதியை உண்டாகும் சாஸ்திர புராணங்கள் இந்து மதத்திற்கு சம்பந்தப்பட்டவை அல்ல' என்று சொல்ல வேண்டும்.

இந்த 1957லும் இதற்கு பரிகாரம் இல்லையென்றால் என்ன அர்த்தம்? ஆதனால்தான் மிகமிக வருத்தத்தோடு வேறு பரிகாரம் இல்லாததால் இந்த மாதிரி எண்ணங்கள் எண்ண வேண்டியுள்ளது இந்த காரியத்திற்கு பரிகாரம் செய்யப்பட வேண்டாமா?

சாதியில்லை என்று கூட எவனும் சொல்வதில்லையே? கொடி கொளுத்துகிறேன் என்றதும் 8 நாளில் துடிதுடித்துக்கொண்டு பதில் சொன்னாயே! இதற்கு அதேபோல பரிகாரம் சொல்லாதகாரணம் பார்பபானுக்கு பயந்து கொண்டுதானே! தவறாக நினைத்தால் சர்க்கார் தான் ஏமாந்துபோகும் பார்ப்பான் தான் ஏமாந்து போவான் நாம் ஏமாறமாட்டோம் இன்னும செய்யவேண்டிய காரியகள் பல இருக்கின்றன அதெல்லாம் செய்த பார்த்து ஒன்றும் நடக்கவில்லையென்றால் கண்டிப்பாக இந்த முடிவுக்கு வருவோம்.

-----"3.11.57 அன்று தஞ்சை தனி மாநாட்டில்
தலைமை வகித்து தந்தை பெரியார் அவர்கள்
பேசிய முன்னுரை -

இது மட்டுமல்ல இந்திய அரசியல் சட்ட வரைவுக்குழு 1946 இல் அமைக்கப்பட்டது அப்போதே எழுதப்படும் இந்திய அரசியல் சட்டத்தில் ஜாதி ஒழிக்கப்பட்டு விட்டது என்ற ஒரு வாக்கியம் அவசியம் இடம் பெறவேண்டும் என்று வலியுறுத்தியவர் பெரியார்தான்.
அப்படிப்பட்ட பெரியாரின் இயக்கம் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்பதில் உள்ள நியாயமான கோரிக்கையைப் பற்றி நடுநிலையுடன் சிந்தித்து அதில் உள்ள உண்மையை அறிந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

நன்றி.

கபீஷ் said...

ரொம்ப ரொம்ப நல்ல பதிவு! பாராட்ட வார்த்தைகள் இல்லை

தமிழ் ஓவியா said...

பொருளாதார அடிப்படை கூடாது என்பது பற்றி தங்களின் அய்யம் அகல மேலும் ஒரு கட்டுரையை தருகிறேன். படியுங்கள்.

இடஒதுக்கீடு: தேவை சமூகப் பார்வை

சென்னையில் செயல்படும் ‘எம்.அய்.டி.எ.’ நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் வி.கே.நடராஜ் ‘இந்து’ ஏட்டில் (மே 27) இட ஒதுக்கீடு பற்றி ஆழமான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இட ஒதுக்கீட்டினால் - தனி மனிதருக்குக் கிடைக்கும் பயனாகத்தான் விவாதங்கள் நடக்கின்றன. இது சரியான கண்ணோட்டமாகாது. சமுதாயத்துக்குக் கிடைக்கக் கூடிய பயன்கள் என்பதைப் பார்க்க வேண்டும். இதுதான் சரியான கண்ணோட்டம் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களும், பெண்களும், நாட்டின் கல்வி, வேலை வாய்ப்பு உட்பட, பல துறைகளிலும், பங்கேற்கும் போதுதான், சமூகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியும். அமெரிக்காவில் - கறுப்பர்கள் உட்பட, மைனாரிட்டிகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு களை அந்நாட்டு உச்சநீதிமன்றங்கள், ஒட்டுமொத்த சமூகக் கண்ணோட்டத்தில் அணுகியே தீர்ப்பு வழங்கியுள்ளன என்று கூறுகிறது இக்கட்டுரை.

Rice அமெரிக்காவில் மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் கறுப்பர் ஒருவர் இடஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப் பட்டதை எதிர்த்து, வெள்ளை மாணவர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் பல்வேறு இனங்களின் பங்கேற்போடு கல்வி நிறுவனங்கள் இயங்கும் போது தான், கல்வியின் தரமும், சிறப்பும் அதிகமாகிறது என்று கூறி கறுப்பர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியது. பல்வேறு இனப் பிரிவினரிடமிருந்து தகுதியான தலைமைப் பண்புள்ளவர்கள் உருவாவதற்கு - இந்த இட ஒதுக்கீடு அவசியமாகிறது என்றும், அமெரிக்க உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்பது, அவர்களுக்கான உரிமை. சமூகத்தின் கட்டாயத் தேவை என்று கருதாமல், ஏதோ சலுகைத் தருவது போல் இந்தியாவில் தவறான பார்வை நிலவுகிறது. இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்ட காரணத்தால் தான், பின்தங்கிய சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் – உயர் கல்விக்குப் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.

தகுதி திறமை பேசுகிறவர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இடஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டதால் தான், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த மாணவர்கள் - திறந்த போட்டியில் இடம் பெறத் துவங்கியுள்ளனர். இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே இட ஒதுக்கீடு தகுதி திறமையை பாழடித்துவிடும் என்ற வாதம், இங்கே அடிபட்டுப் போகிறது. அதோடு, தனியார் தொழிற் கல்லூரிகளில், பணம் கொடுத்து, இடங்கள் வாங்கப்படுவதை - ‘தகுதி திறமை’ பேசுகிறவர்கள், எதிர்ப்பதில்லையே என்று சுட்டிக் காட்டி யிருக்கிறார், கட்டுரையாளர் வி.கே. நடராஜ்.

‘தகுதி-திறமை’ இல்லையா?

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் சேர்க்கைக்கான மதிப்பெண்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உதாரணமாக 2005 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கைக்கான மதிப் பெண்களைப் பாருங்கள். திறந்த போட்டியில் சேர்ந்தவர்கள் பெற்ற மதிப்பெண்கள் 294.83; பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் பெற்ற மதிப்பெண் - 294.59; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பெற்ற மதிப் பெண் - 292.50. ஒவ்வொரு பிரிவினருக்கும் இடையில் உள்ள மார்க் இடைவெளி, மிகமிகக் குறைவாக இருப்பதைப் பார்க்க முடியும்! தமிழ்நாட்டில் மொத்தமுள்ள மருத்துவப் பட்டப்படிப்புக்கான இடங்கள் 1398.

இதில் எல்லா சாதியினரும் ‘மதிப்பெண்’ அடிப்படையில் போட்டியிட்டுப் பெறக்கூடிய இடங்கள் 433. இதில் பார்ப்பன முன்னேறிய சாதியைச் சார்ந்தவர்கள் 59 பேர் தான் இடம் பிடிக்க முடிந்தது.
14 தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவர்கள் உட்பட 374 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்டோர் இந்த திறந்த போட்டியில் இடம் பிடித்துவிட்டனர். இதில் முதல் 14 இடங்களைப் பிடித்தவர்கள், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்டவர்கள் தான். ஒரு பார்ப்பனர் கூட இல்லை. இது தமிழ்நாட்டில் தொடர்ந்து இடஒதுக்கீடு தீவிரமாக அமுல் படுத்தப்பட்டதால் உருவான சமூகப் புரட்சி! எனவே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட் டோருக்கு இட ஒதுக்கீடு செய்தால் - ‘தகுதி-திறமை’ போய்விடும் என்ற வாதம் சாரமில்லாததது.

காண்டலிசாரை

அமெரிக்காவில் செல்வாக்கு மிக்க பதவியான வெளியுறவுத்துறை செயலாளர் பதவியில் ஒரு கறுப்பினப் பெண் இருக்கிறார். அமெரிக்காவில் இப்பதவியில் இருப்பவர்கள் ஆய்வு வெளியுறவு அமைச்சராகவே கருதப்படுகிறார். அந்தப் பதவியில் இருக்கும் காண்டலிசாரை என்ற பெண் - அமெரிக்காவின் கறுப்பர் இனத்தைச் சார்ந்தவர். அமெரிக்காவின் புகழ் பெற்ற டான்போர்டு பல்கலைக் கழகத்தில் அவர் படித்தவர். அந்தப் பல்கலைக்கழகம் - கறுப்பர்களுக்கு தனி ஒதுக்கீடு செய்ததால் தான், இந்த நிலைக்கு தன்னால் உயர முடிந்தது என்று பெருமையுடன் கூறுகிறார், சாண்டலிசா. ‘அவுட்லுக்’ ஏடு வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை, இத் தகவலைத் தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் -
ஹார்வார்டு பல்கலைக் கழகம்
பிரின்சிடோ பல்கலைக் கழகம்
ஏல் பல்கலைக் கழகம்
மிச்சிகன் பல்கலைக்கழகம்
கொலம்பியா பல்கலைக்கழகம்
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம்
ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம்
கார்னெல் பல்கலைக்கழகம்
பென்செல்வேனியா பல்கலைக்கழகம்

- ஆகிய பல்கலைக் கழகங்களில் மைனாரிட்டி இனத் தவர்களான கருப்பர்கள், ஹிபானிக், செவ்விந்தியர்கள் (பூர்வகுடிகள்) மற்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஒதுக்கீடு சட்டரீதியாக கட்டாயப் படுத்தப்படாமலே, பல்கலைக் கழகங்கள் தாமாக முன் வந்து வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். கறுப்பர்கள் தங்களுக்கென உரிமை கோரி போராடியதைத் தொடர்ந்து 1964ல் அமெரிக்க குடிமை உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இன வேற்றுமைகளுக்கு இந்த சட்டம் முற்றுப் புள்ளி வைத்தது.

அமெரிக்காவில் 19 மாநிலங்களில், கறுப்பர்களுக்கும், வெள்ளையர்களுக்கும் தனித் தனியாக கல்லூரிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்தச் சட்டம் வேறுபாட்டை ஒழித்ததோடு ஒரே பல்கலைக் கழகத்தில் அனைத்து இனப் பிரிவினரும் ஒன்றாக இணைந்து படிப்பதைக் கட்டாயமாக்கியது. இந்த வேறுபாடு காட்டாத இதர மாநிலங்களில் கறுப்பர்களுக்கும், மைனாரிட்டிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது, சட்டப்படி கட்டாயமில்லை. ஆனால், தாங்களாகவே முன் வந்து, இந்த இட ஒதுக்கீடுகளை அமுல்படுத்தி வருகிறார்கள்.

அருணன் கேட்கிறார்!

எழுத்தாளரும், சமூக சிந்தனையாளருமான பேராசிரியர் அருணன் சேலத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசுகையில் - ‘தரம்’ பற்றிப் பேசும் இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களிடம் முதலில் ‘தரம்’ இருக்கிறதா? அப்படி அவர்களிடம் ‘தரம்’ இருந்திருக்குமானால், நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய மறுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்களா? என்ற சரியான கேள்வியைக் கேட்டுள்ளார். பரம்பரை பரம்பரையாக படித்தவர்களிடம் அறிவாற்றல் அதிகமிருக்கும் என்று கூறுகிறவர்கள், பரம்பரை பரம்பரையாக மருத்துவத் தொழில் செய்து வந்த நாவிதர்களுக்கு அல்லவா டாக்டர் படிப்புக்கான இடங்களை வழங்கியிருக்க வேண்டும்? ஏன் வழங்கவில்லை? என்றும் கேட்டுள்ளார்.

‘இந்திய மருத்துவர்கள் கழகம்’ என்ற டாக்டர்கள் அமைப்பு, இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டத்தை, தன்னிச்சையாகத் துவக்கியது. விரல்விட்டு எண்ணக் கூடிய சில பார்ப்பன முன்னேறிய சாதி டாக்டர்கள், கழகத்தை தங்களின் நலனுக்குப் பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்தக் கழகத்தில் இடம் பெற்றிருந்த தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வெளியேறி புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கியதோடு, மத்திய அரசின் 27 சதவித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ஜூன் 4 ஆம் தேதி டெல்லியில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இட ஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டத்தை சில அரசியல் சக்திகள் திரைமறைவில் இயக்கி வருவதாக வெளியேறிய டாக்டர்களில் ஒருவரும், புதிய சங்கத்தின் அமைப்பாளருமான டாக்டர் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

அமைதி வழியில்...

புது டில்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பார்ப்பன - உயர்சாதி மருத்துவர்கள், ‘ஒத்துழையாமை போராட்டத்தை’ அறிவித்து சண்டித்தனம் செய்யும் போது, இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் பெரும்பாலான மருத்துவர்கள், அமைதியான வழியில், மருத்துவப் பணிகளை செய்து கொண்டே, இடை வேளை நேரத்தில் மட்டும், இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ‘சமவாய்ப்புளுக்கான மருத்துவர் கழகம்’ என்ற அமைப்பை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இட ஒதுக்கீட்டை அமுல்படுத்துவதில், மத்திய அரசு கண்டிப்பாக செயல்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதோடு, தரமான கல்விக்கும், சமமான பங்களிப்புக்கும், மருத்துவர்கள் வலிமையான இயக்கம் நடத்த வேண்டும் என்றம், மருத்துவத் துறை தனியார் மயமாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஒரே குரல்

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் தற்காலிகமாக ‘ஆதரவு நாடகம்’ நடத்தி வந்த பா.ஜ.க. இப்போது தனது உண்மை முகத்தைக் காட்டிவிட்டது. இட ஒதுக்கீடு கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அத்வானி கூறியுள்ளார். புது டில்லியில் கூடிய பா.ஜ.க.வின் தேசியக் குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் பேசுகையில், “இட ஒதுக்கீட்டின் பயன் முன்னேறிய சாதியினரில் ஏழைகளுக்குக் கட்டாயம் கிடைக்க வேண்டும்” என்று வெளிப்படையாகக் கூறி, தனது பார்ப்பனிய சிந்தனையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். 27 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்திருப்பது, சமூக நீதியல்ல; சமூகப் பதட்டம் என்றும் அவர் பேசியிருக்கிறார்.

கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளர் ரவிசங்கர் பிரசாத் என்பவர் கூறுகையில் - “பிற்படுத்தப்பட்டோரில், பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்; அதுவே பா.ஜ.க.வின் கொள்கை” என்று அறிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இதே கருத்தையே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. உயர்கல்வி நிறுவனங்களில், இன்றும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடே, துவங்கப்படாத நிலையில், பொருளாதார அளவுகோலைப் புகுத்தத் துடிப்பது, பார்ப்பனீயத்தின் குரல்தான் என்று சமூக நீதி ஆதரவாளர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள்.

பெண்கள் அமைப்பு

‘அகில இந்திய ஜனநாயக பெண்கள் கழகம்’ இட ஒதுக்கீட்டை முழுமையாக ஆதரித்துள்ளதோடு, இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களை வன்மையாகக் கண்டித்துள்ளது. பல நூற்றாண்டுகளாக, சாதியமைப்புத் திணித்த சமூக வேற்றுமைகளையும், சமத்துவமின்மையையும் ஓரளவு சரி செய்வதற்கான திட்டம்தான் இட ஒதுக்கீடு. இந்த வேற்றுமைக்கு பலியானவர்களில் பெண்களே அதிகம் என்றும் அது கூறியுள்ளது.

-- நன்றி :(தொகுப்பு: இரா -ஜூன் 2006 "பெரியார் முழக்கம்")

தமிழ் ஓவியா said...

பொருளதார அடிப்படை கூடாது என்பது பற்றி மேலும் ஒரு சான்று.

"ஜூன் 2006

இடஒதுக்கீடு சட்டங்கள்: ஓர் வரலாற்றுப் பார்வை

1. வகுப்புவாரி உரிமையை அரசின் கொள்கையாக ஏற்று 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் நாள் முதல் வகுப்புரிமை ஆணை பிறப்பிக்கப்பட்டது. 15.8.1922-ல் இரண்டாவது வகுப்புரிமை ஆணை பிறப்பிக்கப்பட்டது.

2. ஆதித் திராவிடரின் குழந்தைகளைக் கட்டடத்திற்குள் அனுமதிக்காத பொதுப் பள்ளிகளுக்கு அரசு மானியம் அளிக்காது என 16.1.1923-ல் தனி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

3. பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் என்கிற பிரிவினருக்கு 14 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கும் ஆணையை 21.11.1947-ல் காங்கிரஸ் ஆட்சி அமுல்படுத்தியது.

பார்ப்பனர்கள் மிகக் கொதித்தெழுந்தனர். வகுப்புவாரி உரிமை ஆணையைக் குப்பையில் போட வேண்டி காந்தியின் உதவியை நாடினர்.

காந்தியாரை நேரில் அணுகி, ‘எங்கள் மாகாண பிரதமரான ஓ.பி.இராமசாமி ரெட்டியார் தாடியில்லாத இராமசாமி நாயக்கராகச் செயல்படுகிறார்.

கதர் சட்டைக்குள் கறுப்புச் சட்டை போட்டுக் கொண்டு காரியம் ஆற்றுகிறார். பிராமண துவேஷியாகக் காரியம் பண்ணுகிறார் என முறையிட்டனர்.

காந்தியார் உண்மையை அறிய விரும்பி ஓமந்தூராரை அழைத்தார். ஓமாந்தூரார் கல்வித் துறை மாணவர் சேர்க்கை, உத்தியோக நியமனம்

இவை பற்றிய அரசாங்க ஆதாரங்களைத் திரட்டி எடுத்துக் கொண்டு போய் காந்தியாரிடம் நேரில் காட்டினார்.

காலங்காலமாக அமிழ்த்தப்பட்டுக் கிடந்த பிற்படுத்தப் பட்டோருக்குத் தனிச்சலுகை அளித்திருப்பதும், தாழ்த்தப் பட்டோருக்கு விகிதாசாரப் பங்கு 14 சதவீதம் அளித்ததும் தான் செய்த செயல் என்பதைக் காந்தியாரிடம் விளக்கிக் காண்பித்தார்.

இது ‘பிராமண துவேஷ’ காரிய மன்று என்பதை புரிந்து கொண்ட காந்தியார், தென்னாட்டுப் பார்ப்பனரை நோக்கி உங்கள் தொழில் உஞ்சவிர்த்தி செய்வதும், மணியடிப்பதும் தானே. அதுதானே பிராமண தர்மம். கொஞ்ச காலத்துக்கு அதையே நீங்கள் பாருங்களேன். நசுக்கப்பட்ட மக்கள் கொஞ்ச காலம் சலுகைகள் பெறட்டுமே என ஓங்கி அறைந்தார். பார்ப்பனருக்கு காந்தியார் தந்த முதல் சூடு இது தான்.

4. 9.12.1946-ல் தொடங்கி 26.11.1949-ல் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 26.01.1950-ல் அமுலுக்கு வந்தது.

1950-ல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பின் திறக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டைய வகுப்புரிமை ஆணைப்படி கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்து அளிக்கப்பட்டன. அச்சமயம் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்காமற் போன சீனிவாசன் என்னும் ஓர் பார்ப்பன மாணவனும், மருத்துவக் கல்லூரியில் இடம் பெறாமற் போன சண்முகம் துரைராஜன் என்கிற ஓர் பார்ப்பன மாணவியும், வகுப்புவாரி ஆணை காரணமாகத்தான் தங்கட்கு இடம் கிடைக்கவில்லை. அந்த ஆணை அரசியல் அமைப்பு சட்டவிதி 29(2)க்கு முரணானதாகும். எனவே அந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவர்களுக்காக உயர்நீதி மன்றத்தில் வழக்குரைத்த வழக்குரைஞர் ஆந்திரப் பார்ப்பனரான அல்லாடி ஏ.கிருஷ்ணசாமி அய்யர். அரசியல் அமைப்பு சட்ட வரைவியல் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்து பணியாற்றியவர் அவர், அன்றைய பார்ப்பன ஆதிக்க உயர்நீதி மன்றம் பார்ப்பானின் கோரிக்கையை ஏற்று, வகுப்பு வாரி ஆணையானது அரசியல் அமைப்பு சட்டவிதி 29(2)க்கு விரோதமானது எனவும் தீர்ப்பளித்தது.

பார்ப்பனரல்லாதார் அதிர்ச்சி அடைந்தனர். பெரியார் தொண்டர்கள், காங்கிரஸ், திராவிடர், தி.மு.க. ஆகிய அனைத்து பிரிவினரும் கொதித் தெழுந்தனர்.

இந்திய அரசியல் சட்டம் ஒழிக என்கிற இலட்சிய ஒலியை எழுப்பிக் கொண்டு கறுஞ் சட்டைத் தொண்டர்கள் பட்டி தொட்டியெங்கும் சென்று மக்களைத் தட்டியெழுப்பினர். பெரியார் 3.12.1950 திருச்சியில் பெரியார் மாளிகைத் திடலில் அனைத்துக் கட்சி திராவிடர்களையும் உள்ளிட்ட வகுப்புரிமை மாநாடு ஒன்றைக் கூட்டினார்.

பாராளுமன்றத்தில் இந்த விசயம் பற்றிய விவாதம் காரசாரமாக நடைபெற்றது. “பிற்படுத்தப்பட்டோர்” என்பதை நிர்ணயிக்க ‘கல்வியிலும் சமூகத்திலும்’ என்கிற அடிப்படைகளோடு கூட மூன்றாவதாக ‘பொருளாதாரத்திலும்’ என்கிற அடிப்படையும் கொள்ளப்பட வேண்டும் என 5 உறுப்பினர்கள் இறுதிவரை அங்கு வாதாடினார்.

இவர்களில் சர்தார் ஹுக்கும் சிங், டாக்டர் எஸ்.பி. முகர்ஜி இருவரும் முதன்மையானவர்கள். இறுதியில் வாக்கெடுப்பு 1.6.1951-ல் நடைபெற்றது. நேரு கொணர்ந்த திருத்தத்துக்கு ஆதரவாக 243 வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் பதிவாயின. பெரியாரின் வகுப்புரிமை பாதுகாப்பு இலட்சியம் கை கூடிற்று.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத் துக்கு வந்த முதலாவது திருத்தமே இதுதான் என்பது உண்மை வரலாறு. இந்த வரலாற்றைப் படைத்த பெருமை பெரியாரையே சாரும்.அப்படி அவர் பெற்றுத்தந்த வகுப்புரிமைப் பாதுகாப்பு ஏற்பாடு என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 15வது விதிக்கு 4வது உட்பிரிவாகச் சேர்க்கப் பெற்றது. மூலச் சட்டத்தில் வழி 15-ல் 3 உட்பிரிவுகள் மட்டுமே இருந்தன என்பது நினைவில் நிறுத்தத்தக்கது.

மூலச் சட்டத்தில் ஏற்கனவே இருந்த விதி 16(4) பிற்படுத்தப்பட்டோர் (வேலை வாய்ப்பு தொடர்பானது) அம்பேத்கர் அவர்கள் அமைத்து அளித்தது என்பதையும் நாம் மறத்தல் கூடாது.

- திருச்சி வே. ஆனைமுத்து அவர்கள் எழுதிய வகுப்புரிமை போராட்டம் ஏன்? என்ற நூலிலிருந்து.

(இதே அடிப்படையில்தான் இப்போது 93வது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு உயர்க்கல்வி உட்பட அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.)

---- நன்றி :(மே.கா.கிட்டு -பெரியார் முழக்கம் ஜூன் 2006)

Anonymous said...

saathi olika..

kumar. erode.

துளசி கோபால் said...

சாதிச் சனியன் ஒழிஞ்சால்தான் நாடு உருப்படும்.

நம்ம அரசியல்வியாதிகள் இதை ஒழிக்க விடமாட்டாங்களே(-:

பின்னே எப்படி வண்டி ஓடும்?

அறிவகம் said...

திரு.தமிழ் ஓவியா …

என் கேள்வி இது தான்

”சாதி அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டது தவறு என்றால் சாதி அடிப்படையில் கல்வி சலுகை தருவது மட்டும் எந்தவித்தில் உங்களுக்கு சரியாக படுகிறது”.

சாதியே வேண்டாம் என்பவர்களுக்கு சாதிய இட ஓதுக்கீடு மட்டும் ஏன் வேண்டும்? பொருளாதார அடிப்படையில் இட ஓதுக்கீடு கொடுத்தாலும் அதே பிற்படுத்தபட்ட சாதியினர் தானே பயனடைவார்கள்.

இட ஓதுக்கீட்டை நான் எதிர்க்கவில்லை. அதற்கு சாதி அடையாளம் பூசுவதை தான் எதிர்க்கிறேன்.

பார்ப்பணர்கள் பார்ப்பணர்கள் என வார்த்தைக்கு வார்த்தை குறிப்பிடும் நீங்கள் இன்னும் எத்தனை காலம் இதை சொல்லிக்கொண்டு இருப்பீர்கள்.

ஒன்றை புறிந்து கொள்ளுங்கள். நாம் முன்னேற தான் முயற்சிக்க வேண்டும். அதற்காக அடுத்தவனை ஓடுக்கி தான் நாம் முன்னேற வேண்டும் என்பதில்லை.

சாதியை ஓழிக்கலாம் என்றால் நீங்கள் தான் விடமாட்டீர்கள் போல இருக்கிறதே.

உங்கள் கூற்று போல

நான் சாதி மாறி திருமணம் செய்தவள் தான். சாதி வேண்டும் என்றால் என் குழந்தைக்கு நான் எந்த சாதியை திணிப்பது?

சாதி வேண்டாம் சாதி இடஓதுக்கீடு மட்டும் வேண்டும் என்பது உங்களுக்கு கையாலாக தனமாக தெரியவில்லை?.

இன்று சாதியையும், சாதிய இட ஓதுக்கீட்டையும் வேண்டும் என விடாபிடியாக பிடித்திருப்பவர்கள் சில அரசியல்வாதிகளும். அதை வைத்து பிழைப்பை ஓட்டும் சோம்பேறிகளும் தான்.

படிக்கவேண்டும், முன்னேற வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் அதில் வெற்றி பெருகிறார்கள். அவர்களுக்கு இடஓதுக்கீடு தான் கைகொடுத்தது என்று யாருமே சொல்ல மாட்டார்கள். அவர்களது உழைப்புக்கு கிடைத்த வெற்றி அது.

சாதி தான் உங்களை பிற்படுத்தியது. தாழ்வுமனப்பாண்மையை கொடுக்கிறது என்றால் நீங்கள் முதலில் செய்யவேண்டியது சாதி ஒழிப்பை தானே தவிர, சாதிய இடஓதுக்கீட்டை பெறுவது அல்ல.

சாதிய இட ஓதுக்கீடை வைத்துக்கொண்ட எந்த காலத்தில் உங்களால் சாதியை ஓழிக்க முடியும்?

சாதியை ஓழிக்கவேண்டும் என்பது உங்கள் கொள்கையா? அல்லது சாதி இருக்கட்டும் அது சமத்துவமாக இருக்கட்டும் என்பது உங்கள் கொள்கையா? அதை முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள்.

நன்றி.

தமிழ் ஓவியா said...

//நான் சாதி மாறி திருமணம் செய்தவள் தான். சாதி வேண்டும் என்றால் என் குழந்தைக்கு நான் எந்த சாதியை திணிப்பது?//

சாதியற்றோர் என்று போடுங்கள். அதற்கு அரசாணைகள் இருக்கிறது தோழியே.

பல கட்டுரைகளை தேடித்தேடி கொடுத்தேன். இன்னும் ஒரு முறை அவைகளை ஆழமாக படியுங்கள்.
ஜாதி ஒழிப்புக்காக பெரியார் இயக்கம் போராடியது போல் வேறு யாரும் போராடி இருக்க மாட்டார்கள்.
ஜாதி ஒழியும் வரை ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீடு தேவை.

உங்களுடைய வயதளவு எங்களுடைய அனுபவங்கள் அதிகம்.
இன்னும் உங்கள் அய்யம் தெளிய மேலும் ஒரு கட்டுரை இதோ:

"படிப்பது ஜாதியை வளர்ப்பதற்கல்ல!

சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் ஜாதி அடிப்படையில் நடந்த மோதல்கள் உள்ளபடியே வெட்கப்படத் தக்கதாகும்.

எதிர்கால உலகைப் படைக்கக்கூடியவர்கள் என்று கணிக்கப்படக்கூடிய மாணவர்கள் - அதுவும் சட்டம் படிக்கும் மாணவர்களின்அறிவு எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும்பொழுது வெட்கமும், வேதனையும் கலந்து நம்மைத் தாக்குகின்றன; தலையைத் தொங்கப் போடவும் வைக்கிறது.

தாழ்த்தப்பட்ட மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட மாணவர் களும் கல்வி, வேலை வாய்ப்புகளில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வளர்ச்சிப் பாதையில் புலிப் பாய்ச்சலாக அமையவேண்டும் என்பதற்காக தந்தைபெரியார் பாடுபட்டார். அவர் கண்ட இயக்கம் அன்று முதல் இந்தச் சமூக விழிப்புணர்வுப் பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களும் சரி, பிற்படுத்தப்பட்டவர்களும் சரி, பார்ப்பனிய வருணாசிரம அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள்தாம். கல்விப் பக்கம் அவர்கள் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்பதிலே பார்ப்பனர்கள் குறியாக இருந்தவர்கள்தாம்.

இரண்டு முறை சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்துக்கு முதலமைச்சராக இருந்திருக்கிறார். அந்த இரண்டு முறையுமே கிராமத்துப் பள்ளிகளை இழுத்து மூடுவதில்தான் குறியாக இருந்தார். காரணம், கிராமங்களில் தான் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் படிக்கக் கூடியவர்கள்.

இரண்டு முறையும் அவரைப் பதவியிலிருந்து விரட்டியவர் தந்தை பெரியார் அவர்கள்தான். 1952 இல் குலக்கல்வி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி அப்பன் தொழிலைப் பிள்ளைகள் கற்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்த மகானுபாவரும் அவரேதான்.

தீப்பந்தமும், தீப்பெட்டியும் தயாராக இருக்கட்டும் என்று தந்தைபெரியார் அவர்கள் ஆணையிட்ட பிறகே, தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி முதலமைச்சர் பதவியை விட்டு விலகினார் என்ற வரலாறுகள் எல்லாம் - தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை.

வைக்கத்திலே தீண்டாமையை ஒழிக்க தந்தை பெரியார் எப்படியெல்லாம் பாடுபட்டார் என்பதுகூட நம் பாடத் திட்டங்களில் இடம்பெறுவது இல்லை.

மாணவர்களிடையே நடந்த இந்த ஜாதி மோதலுக்குப் பிறகாவது பாடத்திட்டத்திலே சமூகச் சீர்திருத்தம், தீண்டாமை, ஜாதி ஒழிப்புப்பற்றிய பாடங்களைச் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படவேண்டும்.

கிராமப்பகுதிகளிலே ஜாதியை வளர்க்கும் அமைப்புகள் ஊர் நாட்டாமைகள் இன்னும் இருக்கின்றன. இந்தப் பகுதியிலிருந்து கல்லூரிகளுக்கும் படிக்க வரும் மாணவர்கள் அந்தத் தொற்று நோயைச் சுமந்து வருகிறார்கள். எனவே, இதன் மூலத்தையும் அறிந்து அதில் கைவைக்க வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இட ஒதுக்கீடு கொடுப்பதால்தான் ஜாதி வளர்கிறது என்கிற ஒன்றைக் கிளப்பிட முயலுகிறார்கள்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் சென்னையில் இதுகுறித்து நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாநில வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஒருவர் - தலித் மாணவர்களுக்கு மாநில அரசு இட ஒதுக்கீடு கொடுத்து ஒதுக்கி வைத்துவிட்டது (தீக்கதிர், 26.11.2008, பக்கம் 6) என்று குற்றப்பத்திரிகை படித்துள்ளார்.

இட ஒதுக்கீடு என்பது உரிமைகள் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் உதவியே தவிர, ஜாதியை வளர்ப்பதற்கான கூறு அல்ல. இட ஒதுக்கீடு விஷயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை - அணுகுமுறை மாறியிருக்கிறதா? என்று தெரியவில்லை.

அதேபோல, சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை - உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள், நுழைவுத் தேர்வு முறை தேவை என்ற ஒரு யோசனையைக் கூறியிருக்கிறார்.

நுழைவுத்தேர்வு வைத்து மாணவர்களைத் தேர்வு செய்த நேரத்தில், சட்டக் கல்லூரி மாணவர்கள் மத்தியிலே தகராறுகள், அடிதடிகள் நடக்கவில்லையா?

ஒரு அரசு சட்டம் இயற்றி, நீதிமன்றமும் ஒப்புக்கொண்ட ஒன்றை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மறுதலித்துப் பேசுவது நியாயமும் அல்ல, நீதியும் அல்ல.

மனித உணர்வுக்கும், உறவுக்கும் ஜாதி தீங்கானது என்பதை மாணவச் சமுதாயம் உணர்ந்திட வேண்டும்.

படிப்பது - பகுத்தறிவை வளர்ப்பதற்கேயன்றி, பிளவுபடுத்தும் ஜாதிச் சாக்கடையில் வீழ்வதற்கல்ல!

---------------------நன்றி: "விடுதலை"தலையங்கம் 27-11-2008"

தமிழ் ஓவியா said...

//பார்ப்பணர்கள் பார்ப்பணர்கள் என வார்த்தைக்கு வார்த்தை குறிப்பிடும் நீங்கள் இன்னும் எத்தனை காலம் இதை சொல்லிக்கொண்டு இருப்பீர்கள்.

ஒன்றை புறிந்து கொள்ளுங்கள். நாம் முன்னேற தான் முயற்சிக்க வேண்டும். அதற்காக அடுத்தவனை ஓடுக்கி தான் நாம் முன்னேற வேண்டும் என்பதில்லை.//

இன்றுவரை அடக்கி ஒடுக்கி வருபவர்கள் யார்? ஐ.அய்.டி யில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் யார்?
எய்ம்ஸ் சில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் யார்?

அன்புமணி போன்றவர்களும், வசந்தா கந்தசாமி போன்றவர்களும் அங்கு பட்டபாடு உங்களுக்கு தெரியுமா?

இது குறித்து ஒரு தரப்பு வாதத்தையும் மட்டும் பார்க்காமல் இரண்டு தரப்பு வாதத்தையும் பாருங்கள். ஜர்னலிசம் படித்த உங்களுக்கு இரண்டு தரப்பு செய்திகளையும் தேடிப் படிப்பதில் எந்த சிரமமும் இருக்காது .
அருள்கூர்ந்து நடுநிலையுடன் சிந்தியுங்கள்.

ஜாதி ஒழிப்புக்கு இடஒதுக்கீடு தீர்வு அல்ல?
ஜாதி ஒழிய அடிப்படையான பல பணிகள் உள்ளன. அருள்கூர்ந்து அதன் பக்க உங்கள் பார்வையை செலுத்துங்கள்.
நன்றி.

மீண்டும் ஒரு முறை அனைத்து கட்டுரைகளையும் படியுங்கள்.

இது தொடர்பாக பெரியார் இயக்கங்கள் வெளியிட்டுள்ள நூல்களை தேடிப் படியுங்கள்.

நன்றி.

தமிழ் ஓவியா said...

//
சாதி வேண்டாம் சாதி இடஓதுக்கீடு மட்டும் வேண்டும் என்பது உங்களுக்கு கையாலாக தனமாக தெரியவில்லை?.//

உங்களுக்கு கையாலாக தனமாக தெரியவில்லை? என்ன ஒரு சிறப்பான சொற்றொடர். மெய் சிலிர்க்கிறது தோழி.
அதுவும் இதழியல் படித்தவர் அல்லவா? அதனால்தான் இப்படி ஒரு அற்புதமான சொற்றொடர்?

ஜாதி ஒழிப்புக்காக பெரியார் இயக்கம் எப்படியெல்லாம் இழப்புகளை இன்னல்களை சந்தித்தது என்ற வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதனால்தான் இப்படி ஒரு சொற்றொடரை தாங்கள் பயன் படுத்தியுள்ளீர்கள். மகிழ்சி.

ஜாதி ஒழிப்பிற்காக இவ்வளவு வேகம் என்கிற போது ஜாதி ஒழிப்புக்காரர்கள், அதற்கு உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள் என்ற நிலைப்பாடுடன் இருக்கும் நாங்கள் மகிழ்சியடைகிறோம். மிக்க மகிழ்சி.

ஜாதியை காப்பற்றி வரும் கடவுள், மதம், சாஸ்திரம், சம்பிரதாயங்களை மற்ற இது போன்றவைகளை எப்போது ஒழிக்கிறோமோ அப்போதுதான் ஜாதி ஒழியும்.

உங்களது அடிப்படையான வாதம் ஜாதிய ரீதியாக இடஒதுக்கீடு கொடுப்பதால் (இடஒதுக்கீட்டால்தான்) ஜாதி வளர்கிறது?

இது உண்மையா? ஒரு சில உதாரணங்களுடன் பார்த்துவிடுவோம்.

சான்றிதழ்களில் ஜாதி குறிப்பதால் ஜாதி உணர்வுவருவதில்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ளவும்.
எப்படியெனில் ஜாதி உணர்வு என்பது படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவரிடமும் உள்ளது. ஒருவர்கூட எழுதப் படிக்க தெரியாத கிராமங்களில் கூட ஜாதி உணர்வு ஜாதி மோதல்கள் இருந்திருக்கிறது. நான் கிராமத்தில் வாழ்ந்தவன் எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். அப்படி போடப்பட்ட சாதாரணக் குடும்பத்தில் பிரந்து ஜாதியின் காரணமாக பல மோசமான சம்பவங்களை சந்தித்தவன்.

இந்த இடத்தில் அம்பேத்கர் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறார். ஜாதியின் காரனமாக அவர் படாத இழிவுகளா? அவரே சொல்லுகிறார் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டும் என்று. ஒரு வகையில் உங்கள் பார்வையில் அம்பேத்காரும் கையாலாகதவர்தானா?

பிறப்பின் அடிப்படையில் ஏற்பட்டதுதான் ஜாதி. கல்வி நிறுவனங்களில், அலுவலகங்களில் ஒருவரின் ஜாதியை மற்ரவர்கள் அவரின் ஜாதியைப் பார்த்து தெரிந்து கொள்வது கிடையாது. மாறாக அவரின் ஊர் உறவினர் போன்ற விவரங்களின் மூலமே தெரிந்து கொள்கிறார்கள்.
எனவே இட ஒதுக்கீட்டால் ஜாதி உணர்வு வளகிறது என்பது சரியல்ல.

பொருளாதாரம் என்பது நிலையானது கிடையாது. எனவே பொருளாதார அடிப்படையை ஏற்றுக்கொள்ளவில்லை.

எனது தந்தை ஒரு விவசாயி. இந்த ஆண்டு மழை பெய்தால் வருமானம் கிடைக்கும் ,அடுத்தவருடம் மழை இல்லையென்றால் வருமனதுக்கு வழி யின்றி நஸ்டம் ஏற்பட்டும் சாப்பாட்டுக்கே சிரமம் ஏற்படும்.
பொருளாதர அளவுகோள் இப்போது எப்படி சரிப்பட்டு வரும்.

அது மட்டுமல்லாது சமூக நிலை ஒருவன் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பொது உரிமை இல்லை. இ ல்லாதபோது பொது உடமை எப்படி வரும்?
இது போல் பல காரணங்கள் இருக்கிறது தோழி.

மேலோட்டமாக பார்க்கும் போது உங்கள் வாதம் சரி என்று தோன்றும் ஆனால் அது முற்றிலும் தவறு.
நானும் ஒரு காலத்தில் படிக்கும் போது இதே கேள்வியை காட்டவந்தான். அதன்பின் சமூகக் காரனங்கள் மற்ற பின் காரணிகளை அறிந்து அது தவறு என்று உணர்ந்தேன்.

இந்த கையாலாகதவன் ஜாதி ஒழிப்பிற்காக ஏதோ என்னால் முடிந்த அளவு பாடுபட்டிருக்கிறேன்.

கையாலாககூடிய நீங்கள் எல்லாம் இன்னும் வேகமாக ஜாதி ஒழிப்பில் அக்கரை காட்ட வேண்டும்.
இதழாலளர் நீங்கள் முதலில் மணமகன் மனமகள் தேவை பகுதியைப் படியுங்கள். அதிலிருந்து தெரிந்து கொள்வீர்கள் இட ஒதுக்கீட்டால் ஜாதி வளர்கிறதா? இல்லையா? என்பதை?

உண்மையாக ஜாதி ஒழிப்புக்கு தயாராயிருப்பவர்கள் தன் குடும்பத்தில் உள்ளவர்கள் ஜாதி மறுத்து தான் பிறந்த ஜாதியில் இல்லாமல் வேறு ஜாதியில் திருமணம் செய்ய வேண்டும். அதற்கு முன் வருவார்களா?

ஒரு கணக்கு எடுங்கள் இதழியலாளரே.
அப்போது உண்மை தெரியும்.

தமிழ் ஓவியா said...

மேலும் ஒரு கட்டுரை உங்களின் பார்வைக்கு.


இட ஒதுக்கீடு இல்லாத உயர்ஜாதியினருக்கு 50 சதவிகிதத்துக்குமேல் இட ஒதுக்கீடா?
இட ஒதுக்கீடுக்குச் சாவு மணி அடிக்கும் கொடுமை. உயர்ஜாதியினருக்கே தாரை வார்ப்பா?மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வில் இட ஒதுக்கீடுக்குச் சாவு மணி அடிக்கும் கொடுமை.

மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வில் இட ஒதுக்கீடுக்குச் சாவு மணி அடிக்கும் கொடுமையைச் சுட்டிக்காட்டி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இதில் நியாயம் கிடைக்க வழி செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

மருத்துவக் கல்வித் துறையில் பட்ட மேற்படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வில், இட ஒதுக்கீடு அளிப்பதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பெருந்தவறையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி அளிக்கிறதுஆண்டுதோறும் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இதற்கான தேர்வு நடைபெறுவது வழக்கமாகும். அதற்கான விண்ணப்பம் இம்மாதம் (செப்டம்பரில்) வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல் அறிக்கையில் (Prospectus)வெளியிடப்பட்டுள்ள விவரம் அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு எத்தனை விழுக்காடு என்று குறிப்பிடப்படவில்லை என்பது முதலாவது அம்சமாகும்.இரண்டாவதாக அதில் காணப்பட்டிருப்பதாவது:The Counselling shall only be done according to the category Rank (Unreserved, SC, ST, OBC & Other Physically handicapped) and not by the overall Rank.

கலந்தாய்வு என்பது அந்தந்தப் பிரிவினருக்கான தனிப்பட்ட தகுதி அடிப்படையில்தான் நடத்தப்படும் என்றும், ஒட்டுமொத்த மான தகுதி அடிப்படையில் அது இருக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன் பொருள் - தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், அவர்கள் பொதுப் போட்டியில் கொண்டு வரப்படமாட்டார்கள். அவரவர்களுக்குரிய ஒதுக்கீட்டுப் பகுதியில் மட்டுமே கணக்கிடப்படுவார்கள். இதன்மூலம் சட்டப்படி இட ஒதுக்கீடு பெறாத பிரிவினரான உயர்ஜாதியினருக்கு மட்டுமே திறந்த போட்டியில் உள்ள அத்தனை இடங்களும் கிடைக்கும்.


இதுவரையில் கேள்விப்படாத ஒரு தனிப்பிரிவு U.R. (Unreserved) என்பது எங்கிருந்து குதித்தது என்று தெரியவில்லை. இதில் திட்டமிட்ட ஒரு சூழ்ச்சிப் பொறியிருக்கிறது. எந்த ஆணையின்கீழ் இது உள்ளே நுழைந்தது?


இவ்வாண்டு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 9 சதவிகிதம், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் 22.5 சதவிகிதம் போக மீதியுள்ள 68.50 சதவிகித இடங்களும் உயர்ஜாதியினருக்குத் தாரை வார்க்கப்படும்.


(இந்தத் திட்டத்தின்படி மொத்தமுள்ள 3200 இடங்களில் தாழ்த் தப்பட்ட மக்களுக்கு 480 இடங்களும், மலைவாழ் மக்களுக்கு 240 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 9 விழுக்காடு கணக்குப்படி 290 இடங்களும், முன்னேறிய ஜாதியினருக்கு 2190 இடங்களும் கிடைக்கும்).


பிற்படுத்தப்பட்டவர்களைப் புறக்கணிக்கும் போக்குஅகில இந்திய நுழைவுத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக் கப்படும்பொழுது இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு பல கட்டங்களாக (In Phased Manner) என்று குறிப்பிட்டிருப்பது தேவையில்லாத ஒன்றாகும். ஏனெனில், ஏற்கெனவே இருக்கும் இடங்கள் தவிர புதியதாக அதிக இடங்கள் என்ற பிரச்சினைக்கே இதில் இடமில்லை.


ஏற்கெனவே இருக்கும் இடங்களை தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் என்று இடங்கள் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், புதிய வசதிகள், ஏற்பாடுகள் (Infrastructure) என்ற பிரச் சினைக்கே இடமில்லை என்கிறபோது, பிற்படுத்தப்பட்டோர்களுக் கான 27 சதவிகித இடங்களை இவ்வாண்டே கொடுக்க வேண்டியதுதானே!


தீர்ப்பினை தங்கள் வசதிக்கேற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளும் தந்திர உணர்வுதான் இதில் காணப்படுகிறதே தவிர, நேர்மையான அணுகுமுறை இதில் கிஞ்சிற்றும் இல்லை.இதில் இன்னொரு திட்டமிட்ட விடுபடுதல் (Omission) நடந்தி ருக்கிறது. விவரக் குறிப்பு (Prospectus - Appendix-V) பகுதியில் வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில் தேதி வாரியாக தாழ்த்தப் பட்டோர், மலைவாழ் மக்கள், இட ஒதுக்கீடு இல்லாதவர்கள் (Unreserved) என்பவர்களுக்கான கவுன்சிலிங் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது; ஆனால், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான விவரம், தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எந்த வகையிலும் மக்கள் தொகையில் மிகப்பெரும் பகுதியினரான இதர பிற்படுத்தப்பட்டவர்களைப் புறக்கணிக்கும் போக்கு, வஞ்சிக்கும் போக்கு வெளிப்படையாகவே தெரிகிறது.


இது எவ்வளவு பெரிய மோசடி, தில்லு முல்லு என்பது மட்டுமல்ல - முழுமையான சட்ட மீறலேயாகும்.டில்லி எய்ம்சில் நடந்துள்ள மோசடி!
அதேபோல, டில்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப்படும் மருத்துவக் கல்லூரி நிறுவனத்தில் சேருவதிலும் பெரிய மோசடி நடைபெற்றுள்ளது.


ஆண்டுக்கு இரண்டு முறை ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.தகுதி மதிப்பெண்ணிலும் குளறுபடி!இதில் தாழ்த்தப்பட்டவர்களானாலும், பிற்படுத்தப்பட்டவர்க ளானாலும், முன்னேறிய ஜாதியினர் ஆனாலும் தகுதி மதிப்பெண் (நுழைவுத் தேர்வில்) என்பது ஒரே அளவில் அதாவது 50 விழுக்காடு பெற்றிருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், மற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு நடைபெறும் அகில இந்தியத் தேர்வுக்குத் தாழ்த்தப்பட்டோருக்குத் தகுதி மதிப்பெண் 40 சதவிகிதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஏனிந்த வேறுபாடு? எய்ம்ஸ் மட்டும் நெய்யில் பொரிக்கப் பட்டதா? 24.8.2001 உச்சநீதிமன்ற தீர்ப்பு இதற்குச் சாதகமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அதேநேரத்தில், இவ்வாண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி, உச்சநீதி மன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் அமைந்த 5 நீதிபதிகளைக் கொண்ட ஆயம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான நுழைவுத் தேர்வில் மதிப்பெண் 10 சதவிகிதம் குறைக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளதே அது வசதியாக மறைக்கப்பட்டுள்ளது அல்லது மறக்கப்பட்டுள்ளது என்பது மறக்காமல் குறிப்பிடத்தக்க ஏமாற்று வேலையாகும்.


தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் போதிய எண் ணிக்கைக் கிடைக்கவில்லையென்றால், இந்த இரு பிரிவுகளுக் கிடையே பகிர்ந்து கொள்ளலாம். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் உடல் ஊனமுற்றோர் பிரிவுகளுக்கு உரிய எண்ணிக்கையில் விண்ணப்ப தாரர் கிடைக்கவில்லையென்றால், அவை அத்தனை இடங்களும் பொதுத் தொகுதிக்கு (General Category) சென்று விடுமாம்.

இட ஒதுக்கீடு என்று வரும்போது எப்படி எப்படியெல்லாம் தடைக்கற்கள், குறுக்குச் சால்கள் தந்திரமாகச் செய்யப்படு கின்றன என்பதைக் கவனிக்கவேண்டும்.


மத்திய சுகாதாரத் துறையே பொறுப்புஅகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும் இந்த இருவகை மருத்துவக் கல்லூரி சேர்க்கை என்பது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ்தான் வருகிறது.

இந்தத் துறைக்கு அமைச்சராக இருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள். சமூகநீதிபற்றி அவருக்கு நாம் வற்புறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதே என்பதுதான் நமது வேதனை!


எய்ம்ஸ் மருத்துவமனைப் பிரச்சினையில் அவருக்கு ஆதிக்க சக்திகளால் சோதனைகளும், தொல்லைகளும் ஏற்பட்ட நேரத்தில், நாம் அவருக்குத் துணையாக அவர் கரத்தைப் பலப்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளோம்.


இந்த நிலையில், அவர் அமைச்சராக இருக்கும் இந்தத் துறைகளில் சமூகநீதிக்குச் சவக்குழி வெட்டப்படலாமா?

அதிக மதிப்பெண் பெறும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோரை பொதுத் தொகுதியில் சேர்க்காமல், அவரவர்களின் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் கணக்கிடுவதும், பொதுத் தொகுதி என்பது (Open Competition) முழுக்க முழுக்க பார்ப்பனர்களுக்கு - உயர் ஜாதியினர்க்குத் திருப்பப்படுவதும் எவ்வளவு பெரிய மோசடி!


டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்தானே பொறுப்புமத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இதில் போதிய கவனம் செலுத்தாதது ஏன்? இதற்கான பொறுப்பு அவரைச் சார்ந்ததுதானே?


குற்றப் பத்திரிகை படிப்பது நமது நோக்கமன்று; சமூகநீதியில் இவ்வளவு பெரிய சதி நடந்திருக்கிறது - அதனைச் சரி செய்து தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்பதே நமது எதிர்ப்பார்ப்பு - செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கிறோம்.


இதற்குக் காரணமானவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதன்மூலம், குறுக்குவழியில் ஒடுக்கப்பட்டோரின் வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கும் சூழ்ச்சி களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.


http://files.periyar.org.in/viduthalai/20080925/news02.html

தமிழ் ஓவியா said...

ஜாதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் ஏன்? எதற்கு என்பதை புரட்சியாளர் அம்பேத்கர் விளக்குகிறார். படியுங்கள்.அரசமைப்புச் சட்டத்தின் 15வது பிரிவில் புதிய இணைப்பு (திருத்தம்) தேவை என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த விரும்பத்தகாத சூழலுக்கு மூலகாரணம், நீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகள்தான். இந்தத் தீர்ப்பை வழங்கியது, சென்னை உயர்நீதிமன்றம்.

1. சென்னை (எதிர்) திருமதி செண்பகம் துரைராஜன் 2. வெங்கட்ராமன் (எதிர்) சென்னை அரசு. இந்த இருவரின் வழக்குகளால், அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற நிலை உருவாகியுள்ளது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசுப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற கருத்தை மய்யமாகக் கொண்டு நீதி மன்றம் தன்னுடைய தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் விளைவாக, சாதி ரீதியான அரசாணை (Communal G.O.) உருவானது. இந்த அரசாணை செல்லாது என்று சட்ட வல்லுனர்களும், நமது மேதகு நாடாளுமன்ற அங்கத்தினர்களும் கூக்குரலிடுகின்றனர்.

அரசியல் அமைப்புச் சட்டம் 16(4) பிரிவு, மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி அல்லது எழுந்துள்ள தேவைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை முழுவதுமாக வழங்குகிறது. இந்த 16(4) பிரிவு, அரசமைப்புச் சட்டத்தின் 29ம் பிரிவுடன் முரண்படுவதால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு தரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது.

மேலும், ‘சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது கூடாது; அது முற்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களிடையே பாரபட்சத்தைத் தோற்றுவித்துவிடும்' என்று உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

நான், உச்ச நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளையும் கூர்ந்து படித்தேன். இந்த இரண்டு தீர்ப்புகளும் மிகுந்த அதிருப்தியைத் தருகிறது.

இந்தத் தீர்ப்புகள், நமது அரசியல் சாசனத்தின் பிரிவுகளோடு ஒத்துப் போகவில்லை. இது, என்னுடைய வாதம். உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புகளுக்காக நான் வருந்துகிறேன். (நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம். சபாநாயகர் இடைமறித்து, அம்பேத்கர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறார். ஆனால், அம்பேத்கர் அதைப் பொருட்படுத்தவில்லை)

அரசியல் சட்டப் பிரிவு 29(2)இல், ‘மட்டும்' என்ற வார்த்தையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே இவற்றை நான் கருதுகிறேன். மதம், இனம் அல்லது ஆண், பெண் பேதம் ஆகியவற்றை ‘மட்டும்' அடிப்படையாகக் கொள்ளக் கூடாது. இது 29(2)இன் பொருள். இங்கு "மட்டும்' என்ற வார்த்தை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவனிக்கவில்லை என்பது என்னுடைய வாதம்.

‘சாதியற்ற இந்துக்கள்' என்று இந்நாட்டில் எவரும் இல்லை. ஒவ்வொரு இந்துவுக்கும் சாதி உண்டு. பார்ப்பனர், மகராட்டா, குன்பி, கும்பார் அல்லது ஒரு தச்சன் இவர்களில் யாரும் சாதியை விட்டு வாழும் இந்துவாக இல்லை.

இந்த நாட்டில், பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்ட சாதியினராக இந்து மதத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்து மதத்தின் பன்னெடுங்கால கொடுமைக்கு ஓர் இடைக்காலத்தீர்வாக, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம் சில உரிமைகள் வழங்குவது மிகவும் அவசியமாகிறது. இதைக் கருத்தில் கொள்ளும் போது, நமது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓர் அதிருப்தியான தீர்ப்பாகும்.

நான், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டவனாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அந்தத் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை. இது, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள சுயேச்சையான உரிமை. இதை விட்டுவிட நான் தயாராக இல்லை. இதுவே என்னுடைய அழுத்தமான முடிவாகும்.

மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 46வது பிரிவு, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து வகையான நலன்களை உறுதிப்படுத்தவும் மேம்படுத்தவும் மாநில அரசுகளுக்கு போதிய அதிகாரத்தை நிர்ணயித்துள்ளது.

இந்த அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை, நாடாளுமன்றத்திற்கு எழுந்துள்ளது. நாடாளுமன்றம் 16(4) மற்றும் 29 ஆகிய பிரிவுகளை விரிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் பிரிவு 15 போதிய விளக்க இணைப்பு (சட்டத் திருத்தம்) சேர்க்கப்பட வேண்டும். இது, ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான உயர்வை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க உதவும்.


-------------'பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 15 பக்கம் : 331

ஊண்றிப் படியுங்கள் .உண்மையை உணருங்கள்.

தமிழ் ஓவியா said...

ஆம்பேத்கர் அவர்களின் ஆய்வில் கண்டறிந்த ஆழமான கருத்துக்கள். ஜாதி அமைப்பு பற்றியும் பார்ப்பனர் பற்றி நீங்கள் புரிந்து கொள்ள இது உதவும்.
படியுங்கள்.

"சாதி அமைப்பு முறையில் வேறு சில தனித்த தன்மைகள் உள்ளன. இவை ஜனநாயகத்திற்கு எதிராக மோசமான விளைவுகளைக் கொண்டுள்ளன. சாதி அமைப்பின் இத்தகைய தனித்த தன்மைகளில் ஒன்று, அதனுடைய ‘படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை.' சாதிகள் சமமாக இல்லை. அவை ஒன்றுக்கு மேல் ஒன்றாக இருக்கின்றன. அவை ஒன்றோடொன்று பொறாமை கொள்கின்றன. சாதி, தனக்கு மேலிருப்பவர் மீது வெறுப்பையும், தனக்குக் கீழ் இருப்பவர் மீது இழிவையும் சுமத்துகிறது. சாதி அமைப்பின் இந்தத் தன்மைதான் மிக மோசமான பின்விளைவுகளைக் கொண்டதாக உள்ளது. அது, மனமுவந்து உதவும் இணக்கமான சூழலை அழித்து விடுகிறது.

சாதியும் வர்க்கமும் எந்த இடத்தில் வேறுபடுகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். சாதி அமைப்பில் இருப்பது போன்ற முழுமையான தனிமைப்படுத்துதல் வர்க்க அமைப்பில் இல்லை. சாதி அமைப்பில் சமமின்மையுடன் இணைந்த இரண்டாவது தீய விளைவு இது. இதன் மூலம் உள்ளார்ந்த உணர்வும், ஆதரவும் இரு சாதிகளுக்கிடையில் ஒருசார்புடையதாகத்தான் இருக்கிறது என்ற உண்மை விளங்குகிறது. மேலிருக்கும் சாதி, அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழியிலும், கீழிருக்கும் சாதி ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட வழியிலும் செயல்பட்டாக வேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் சமமான வாய்ப்புகள் இல்லாததன் விளைவு சிலர் தலைவர்களாகவும், மற்றவர்கள் அடிமைகளாகவும் இருக்க அது கட்டாயப்படுத்துகிறது. இதன் மூலம் ஒவ்வொருவரும் தமது வாழ்க்கை அனுபவங்களை சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்ளும் வாழ்வியல் முறை தடுக்கப்படுகிறது.

இது, சமூகத்தை வாய்ப்புகள் பெற்ற வர்க்கமாகவும், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட வர்க்கமாகவும் பிரிப்பதில் முடிவடைகிறது. இத்தகைய பிரிவினை, சமூக ஒருங்கிணைப்பைத் தடுக்கிறது. மூன்றாவதாக ஒரு தனித்தன்மை சாதி அமைப்பிற்கு இருக்கிறது. இது, ஜனநாயகத்தின் வேர்களையே நிர்மூலமாக்கும் தீய தன்மைகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சாதியினரும் குறிப்பிட்ட ஒரு தொழிலையே செய்ய வேண்டும் என்றும் அது நிர்பந்திக்கிறது.

சாதி அமைப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? முதல் தடை, சாதி அமைப்பின் உயிர்நிலையான படிநிலைப்படுத்தப்பட்ட சமமின்மையில்தான் இருக்கிறது. மக்கள் இரண்டு வர்க்கங்களாக மேல் என்றும் கீழ் என்றும் மட்டும் பிளவுபட்டிருந்தால், கீழ்த் தளத்தில் உள்ளவர்கள் ஒன்றிணைந்து, மேலே இருப்பவர்களை எதிர்க்க முடியும். ஆனால், இங்கு ஒரேயொரு கீழ் வகுப்பு இல்லை. வர்க்கம் என்பது, கீழ் வர்க்கம் என்றும், அதற்கும் கீழான வர்க்கம் என்றும் படிநிலைப்படுத்தப்பட்டு பிரிக்கப்பட்டுள்ளன. கீழே இருக்கும் வர்க்கம், அதற்குக் கீழ் இருக்கும் வர்க்கத்துடன் இணைவதில்லை. கீழே இருக்கும் வர்க்கம், தனக்குக் கீழே இருக்கும் வர்க்கத்தை உயர்த்தினால், தனக்கு இருக்கும் உயர் நிலையும், தனது சாதிக்கு அளிக்கப்பட்டிருக்கும் உயர் நிலையும் (அவர்களை மேலே உயர்த்துவதன் மூலம்) பறிபோய் விடும் என்றும் நினைக்கிறது...

கல்வி சாதியை ஒழித்து விடுமா? இதற்குரிய பதில் ‘ஆம்'; அதே நேரத்தில் ‘இல்லை'! இன்று வழங்கப்படும் கல்வியால், சாதியை ஒன்றும் செய்து விட முடியாது. அது எப்போதும் போலவே நிலைப் பெற்றிருக்கும். இதற்கு பார்ப்பன சாதியே மிகச் சரியான எடுத்துக்காட்டு. பார்ப்பனர்களில் நூறு சதவிகிதம்பேர் படித்திருக்கிறார்கள்; இல்லை, அவர்களுள் பெரும்பான்மையினர் மெத்தப் படித்திருக்கிறார்கள். இருப்பினும், ஒரேயொரு பார்ப்பனர்கூட, தான் சாதிக்கு எதிராக இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்லை. உண்மையில், மேல் சாதியில் இருக்கும் படித்த நபர், கல்வி கற்காமல் இருப்பதைவிட, அவர் கல்வி கற்ற பிறகு சாதி அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே அதிகம் விரும்புகிறார். ஏனெனில், சாதி அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ள, கல்வி கூடுதல் நலனை அவருக்கு அளிக்கிறது. இதன் மூலம் அவர் பெரிய பதவிகளைப் பெறும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, கல்வி சாதியை ஒழிக்க உதவிகரமாக இல்லை.

கல்வியின் இன்னொரு எதிர்மறையான விளைவு இது. ஆனால், இதே கல்வி இந்திய சமூகத்தில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டால், அது சாதியை ஒழிப்பதில் உதவிகரமாக இருக்கும்; அம்மக்களின் போராட்ட உணர்வை அதிகரிப்பதாகவும் இருக்கும். அறியாமையால், அவர்கள்தான் சாதி அமைப்பின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். ஒரேயொருமுறை அவர்களின் கண்கள் திறக்கப்பட்டுவிட்டால், அவர்கள் சாதி அமைப்புக்கு எதிராகப் போரிடத் தயாராகி விடுவார்கள்.

தற்பொழுதுள்ள கொள்கையின் குறைபாடு என்னவெனில், கல்வி பரவலாக அளிக்கப்படுகிறது; ஆனால், இந்திய சமூகத்தில் எந்தப் பிரிவினருக்கு கல்வி அளிக்கப்பட வேண்டுமோ அவர்களுக்கு கல்வி வழங்கப்படவில்லை. சாதி அமைப்பு முறையை நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்ள விரும்பும் இந்திய சமூகத்தின் சுயநலவாதிகளுக்கு கல்வி அளிக்கப்பட்டால், சாதி அமைப்பு பலப்படுத்தப்படும். இதற்கு மாறாக, இந்திய சமூகத்தின் சாதி அமைப்பு முறையை நிர்மூலமாக்க நினைக்கும் அடித்தட்டு மக்களுக்கு கல்வி அளிக்கப்பட்டால், சாதி அமைப்பு கண்டிப்பாக ஒழிந்துவிடும்".--------‘வாய்ஸ் ஆப் அமெரிக்கா' 20.5.1956 ‘டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 17 பக் : 520

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களின் உண்மை முகத்த அறியவும், அவர்களின் சூழ்ச்சி திறனை அறியவும் அம்பேத்கர் அவர்களின் இக்கட்டுரை உங்களுக்கு துணை புரியும் என்பதால் அதை அப்படியே த்ருகிறேன். நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்

"ஆதாயம் அதிகாரம் அளிக்கக்கூடிய பதவிகள், தமது வகுப்புக்கு ஒதுக்கப்பட்ட பிறகும் பார்ப்பனர்கள் திருப்தியடையவில்லை. வெறும் ஒதுக்கீடு மட்டும் போதாது என்பதை அவர்கள் அறிவர். தன்னைப் போலவே இந்தப் பதவிகளை வகிப்பதற்கு - முற்றிலும் தகுதி படைத்தவர்கள், பார்ப்பனரல்லாத வகுப்பினரிடமிருந்து தோன்றி, இந்த ஒதுக்கீட்டு முறையையே அவர்கள் தகர்த்தெறிந்து விடாதபடி பார்ப்பனர்கள் தடுத்தாக வேண்டும். எல்லா அரசாங்க நிர்வாகப் பதவிகளும் பார்ப்பனர்களுக்கு ஒதுக்கப்பட்டன. அதுமட்டுமல்ல, கல்வி வசதி பெறுவதை பார்ப்பனர்களின் ஏகபோக உரிமையாக்குவதற்கு வகை செய்யும் ஒரு சட்டம் இயற்றப்பட்டது.

நாம் ஏற்கனவே கூறியது போல, இந்த சட்டத்தின் படி, இந்து சமுதாயத்தில் அடிமட்டத்திலுள்ள சூத்திரர்கள் கல்வி கற்பது கடுமையான குற்றமாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தை மீறுபவர்கள் காட்டுமிராண்டித்தனமான, மனிதத் தன்மையற்ற, குரூரமான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்: அவர்களது நாக்குகள் துண்டிக்கப்பட்டன; அவர்களது செவிகளில் காய்ச்சிய ஈயம் ஊற்றப்பட்டது. இத்தகைய சலுகைகள் எல்லாம் இப்போது பார்ப்பனர்களுக்கு இல்லை என்று கூறி, காங்கிரஸ்காரர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த சலுகைகள் இப்போது மறைந்து விட்டாலும், அவற்றின் மூலம் நூற்றாண்டு நூற்றாண்டுகளாக அவர்கள் அனுபவித்து வந்த சலுகைகள், இன்னும் நீடிக்கவே செய்கின்றன என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மிகவும் மோசமான வகுப்புவாத முறைகளைக் கைக்கொண்டுதான் பார்ப்பனர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர் என்பதை முற்றிலும் அறிந்துள்ள காங்கிரஸ்காரர்கள், அடிமை வகுப்பினர் முன்வைக்கும் கோரிக்கையை வகுப்புவாதம் என்று கூறி நிராகரிப்பது நேர்மையாகுமா?

மேலும், அடிமை வகுப்பினர் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று இன்று கோரும் நிர்பந்த நிலைக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்றால், அதற்கு என்ன காரணம்? பார்ப்பனர்கள் தாங்கள் அனுபவித்து வரும் சலுகைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, அடிமை வகுப்பினர் கல்வி கற்பதையும், சொத்துகள் வைத்திருப்பதையும் குற்றமாக்கக் கூடிய சட்டங்களை இயற்றியதால்தானே அடிமை வகுப்பினர் தங்களுக்குப் பாதுகாப்புகள் கோரும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை மறுக்க முடியுமா, மறைக்க முடியுமா? தங்களது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்கு பார்ப்பனர்கள் செய்ததுடன் ஒப்பிடும்போது, அடிமை வகுப்பினரின் கோரிக்கைகள் எவ்விதம் நியாயமற்றவையாக இருக்க முடியும்?

இதுவரை நாம் கூறியவற்றிலிருந்து ஆதிக்க வகுப்பினரின் தலைமையில் நடைபெறும் சுதந்திரப் போராட்டம் அடிமை வகுப்பினரின் கண்ணோட்டத்தில் ஒரு மோசடிப் போராட்டமாக இல்லாவிட்டாலும், அது ஒரு சுயநலப் போராட்டமாகவே அமைந்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாகும். இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பினரின் சுதந்திரப் போராட்டம், அடிமை வகுப்பினரை ஆள்வதற்கான சுதந்திரமேயாகும். அடிமட்டத்திலுள்ள இனத்தை, மேல் மட்டத்திலுள்ள இனம் ஆளும் சுதந்திரத்தையே அது விரும்புகிறது. இது, நலிவுற்றவனை வலிமை மிக்கவன் ஆளும் நாஜி அல்லது நீட்சேயின் சித்தாந்தமே தவிர வேறல்ல.

இந்திய அரசியலையும், அது செல்லும் திசைவழியையும் தெரிந்து கொள்ளவும், அதனால் எழக்கூடிய பிரச்சினைக்குத் தீர்வுகாண உதவ விரும்பும் அயல்நாட்டவர், இந்திய அரசியலுக்குப் பின்னாலுள்ள அடிப்படையான அம்சங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். இவற்றை அவர் முழு அளவுக்கு உள்வாங்கிக் கொள்ளத் தவறினால், கடலில் திக்குத் தெரியாமல் தவிப்பவரைப் போல் ஆகிவிடுவார்; அவரைத் தனது வலைக்குள் வீழ்த்துவோரின் எடுப்பார் கைப்பிள்ளையாகி விடுவார்; ஆட்டுவித்தபடி ஆடும் தலையாட்டி பொம்மையாகி விடுவார்."

--------------"டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 9 பக்கம் : 230

Saavanna Magendran said...

முதலில் நீங்கள் உண்மையை உணருங்கள்...

புருனோ Bruno said...

அப்படியா சாமி

இந்தியாவில் 1900 ஆண்டுகளாக இடப்பங்கீடு இல்லையே

அப்ப ஏன் சாமி சாதி ஒழியவில்லை

--

விளக்க முடியுமா

தமிழ் ஓவியா said...

புருனோ சார்
சரியான கேள்விகேட்டீங்க.

இட ஒதுக்கீடு இல்லாதப்பவும் ஜாதியும் ஜாதிச் சண்டையும் இதைவிட மூர்க்கமா இருந்தது.

இப்பவாவது புரிந்து கொள்ளுங்கள் தோழி

இட ஒதுக்கீட்டினால் ஜாதி உணர்வு வளரவில்லை இதை நான் முன்பு கொடுத்த அம்பேத்கரின் கட்டுரைகள் தெளிவுபடுத்தும்.

நன்றி புருனோ சார்

Anonymous said...

//
இந்தியாவில் 1900 ஆண்டுகளாக இடப்பங்கீடு இல்லையே

அப்ப ஏன் சாமி சாதி ஒழியவில்லை
//

இது எப்பேற்பட்ட சப்பைகட்டு ?

2000 வருசமா சாதியை வெச்சி அடக்கிட்டாங்க, ஒடுக்கிட்டாங்க அதனால சாதி அடிப்படை இட ஒதுக்கீடு வேணும் என்று சொல்லுறது.


அப்புறம் 2000 வருஷமா இட ஒதுக்கீடு இல்லாம சாதி அழியல்லையே என்று நல்ல புள்ள மாதிரி கேள்வி கேக்குறது !

வெழங்கிடும் சாமி.

2000 வருசமா பார்ப்பானர்கள் தான் மேல் இடத்தைத் தங்கள் சாதிக்கு ஒதுக்கிக் கொண்டார்கள் என்பதால் தானே இட ஒதுக்கீடே அமுலுக்கு வந்தது ? இப்புடி செல்ப் கோல் அடிக்கும் விதத்தில் கேள்வி கேட்டால் எப்படி ஐயா பதில் வரும் ?

--கம்யூனிஸ்டுகளைக் காயடிப்போர் சங்கம்

தமிழ் ஓவியா said...

இடஒதுக்கீடு இல்லாத கி.மு 6ஆம் நூற்றாண்டில் ஜாதிக் கட்டமைப்பு எப்படியிருந்தது என்பதை தாங்கள் அறிந்து கொள்ள இக்கட்டுரை உதவும்.

"கி.மு. ஆறாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த சீர்திருத்தவாதிகளாக புத்தர், மகாவீரர் மற்றும் கோசலர் விளங்கினர். அஜிவிக்கா பிரிவை தோற்றுவித்தவர் ஒரு மாட்டுக் கொட்டகையில் பிறந்ததால் கோசலர் என அழைக்கப்பட்டார். வீதி நாடகம் நடத்தி பிழைப்பு நடத்தியவர் ஒருவரின் மகன் கோசலர். தனது தந்தைக்கு உதவியாக ஆரம்பத்தில் வீதி நாடகத்தில் பங்கேற்று வந்த கோசலர் பின்னர் மகாவீரருடன் ஆறு ஆண்டுகள் நடைபயணம் மேற்கொண்டு இறுதியில் அவரிடம் இருந்து பிரிந்து அஜிவிகா பிரிவை தோற்றுவித்தார். மகாவீரரின் நெருங்கிய நண்பராக இருந்த கோசலர் பின்னாளில் அவரது எதிரியாக மாறியதை பல சமணத்திருமுறைகள் சுட்டிக் காட்டுகின்றன தற்கால உத்திரபிரதேச மாநிலத்திற்குட்பட்ட இமயமலை அடிவாரத்தை தனது தலைமை இடமாகக் கொண்டு கோசலர் செயல்பட்டு வந்தார்.

கோசலர் வாழ்க்கை மற்றும் வரலாற்றின் போக்கை மனித முயற்சியால் மாற்ற முடியாது எனக் கருதினார். ''ஊசியின் மீது உட்கார்ந்து தவம் செய்தாலும் எவ்வித பலனையும் மனிதன் பெற முடியாது என்றார் கோசலர். கோசலரின் கருத்துப்படி இவ்வுலகம் உருவாக்கப்படவில்லை, எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. பிரபஞ்சம் எப்போதும் போல்தான் உள்ளது காலச்சக்கரம் சுழலும்போது தான் மாற்றங்கள் ஏற்படுகின்றன,'' என்றார். அஜிவிக்கா அமைப்பில் கடவுள் நம்பிக்கை கிடையாது. மக்களுடைய நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் ஏளனம் செய்து அவர்களது உணர்வுகளை புண்படுத்தியதால் தனது செல்வாக்கை காலப்போக்கில் இழந்தார் கோசலர். இருப்பினும் அஜிவிக்கா பிரிவு 14ம் நூற்றாண்டு வரை நீடித்தது. தமிழகத்தில் இப்பிரிவினர் வைணவ மத இயக்கத்துள் ஒன்றாக கலந்தனர்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் மாபெரும் ஆதிவாசி மண்டலத்தினுள் (Mahajanapadas) பதினாறு முக்கிய அரசுகள் இருந்தன. அவற்றுள் மகதமும், கோசலமும் மிக முக்கியமானவை. கோசலத்தின் தலைநகர் அயோத்யா. 80,000 குடும்பங்களுடன் வாழ்ந்த சாக்கிய இனத்தினரின் கபிலவஸ்துவிற்கு மேற்கில் அது இருந்தது. ''சாக்கியர்கள் வெள்ளை நிறம் கொண்ட அழகான தோற்றமுடையவர்கள், அவர்களது பெண்கள் தாமரைப் பூவை விட அழகு படைத்தவர்கள்'' என புத்தசரிதத்தின் ஆசிரியர் அஸ்வகோசர் வர்ணிக்கிறார். சாக்கியர்களுக்கு பிராமணர்களிடம் எந்த மரியாதையும் கிடையாது. ஏனெனில் அவர்கள் மலைவாசிகள். ஆரிய சமுதாயத்துடன் ஒருங்கிணையாமல் இருந்தனர். இச்சமுதாயத்தில் சுத்தோதனா மாயாதேவி தம்பதியினருக்கு பிறந்தவர்தான் சாக்கியமுனி என அழைக்கப்பட்ட சித்தார்த்தர்.

சித்தார்த்தர் ஆரம்பத்தில் பிராமண கலாச்சாரத்தைக்கண்டு அதிசயித்த போதிலும், பின்னர் அவற்றை அருவருக்கத்தக்கதாகக் கருதத் தொடங்கினார். 30 வயதான சித்தார்த்தர் ஆடம்பர அரச வாழ்க்கையை உதறிவிட்டு கோசல நாட்டின் காடுகளில் அலைந்து திரிந்தார். உபனிடதங்களை வழங்கிய முனிவர்களின் கருத்துக்களை விரும்பிக் கேட்டார். செல்வ வளம் படைத்த மகத நாட்டு மன்னன் பிம்பிசாரரின் ஆதரவைப் பெற்றார். ஒரு நாள் அரசவையில் அரசன் ஆசையோடு வளர்த்த 50 ஆடுகளை பலி கொடுக்குமாறு பிராமணன் ஒருவன் வற்புறுத்தினான். அரசன் பலி கொடுக்கும் எதுவும் மேலுலகிற்கு நேரடியாகச் செல்லும் என்றான். அந்த பிராமணன். அதைக்கேட்ட புத்தர் குறுக்கிட்டு அப்பிராமணனின் தந்தை உயிரோடு இருந்தால் அவரை பலி கொடுத்து அதன்மூலம் சொர்க்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். புத்தரின் வாதத்தால் அரசன் அன்போடு வளர்த்த ஆடுகள் காப்பாற்றப்பட்டது மட்டுமின்றி, பலிகொடுக்கச் சொன்ன பிராமணன் அரசவையிலிருந்தும் வெளியேற்றப்பட்டான். இதன் மூலம் புத்தர் பிம்பிசாரரை தனது கொள்கையின் பக்கம் வென்றெடுத்ததாக பாலி திருமுறை ஒன்று குறிப்பிடுகிறது.

புத்தர் உருவேலாவில் (புத்தகயா) தங்கி 49 நாட்கள் ஓர் மரத்தடியில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். தனது 35 ஆவது வயதில் (கி.மு.528) மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தர் மேலும் ஏழுவாரங்கள் உருவேலாவில் தங்கினார். சாரநாத்தில் இருந்த ஓர் மான் பூங்காவில் தான் புத்தர் தனது முதல் பிரசங்கத்தை வழங்கினார். அப்போது புத்தர் நான்கு மாபெரும் உண்மைகளாகத் தான் கருதியவற்றை விளக்கினார். முதல் உண்மை பிறப்பிலிருந்து இறப்பு வரை நோய் மற்றும் முதுமையில் எங்கும் துயரம், இரண்டாம் உண்மை அறியாமையே துன்பத்திற்கும் துயரத்திற்கும் அடிப்படை. எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் விவேகம் இருந்தால் துன்பத்தைத் தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம், மூன்றாவது உண்மை எந்த ஒரு நோயையும் சரியாக அறிந்தால் அதைக் குணப்படுத்த முடியும், நான்காம் உண்மை சரியான கருத்து, சரியான விழைவுகள் (Aspirations), சரியான பேச்சு, சரியான நடத்தை, சரியான வாழ்க்கை, சரியான முயற்சி, சரியான எண்ணம், சரியான தியானம் போன்ற எட்டு வழிகளைக் கடைப்பிடித்தால் முக்தி அடையலாம்.

புத்தர் சமஸ்கிருத மொழியில் அல்லது மகத நாட்டு மக்கள் பேசிய பிராகிருத மொழியில் பேசினார். புத்தர் தான் கூறிய நான்கு உண்மைகளைப் பரப்புவதற்கு மடாலயத்தை அமைத்தார். அது பின்னர் எண்ணிக்கையில் அதிகரித்தது மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலும் தோற்றுவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆண்கள் மட்டுமே மடாலயங்களில் அனுமதிக்கப்பட்டனர். துறவறம், அஹிம்சை, ஏழ்மை ஆகிய மூன்று அடிப்படைக் கோட்பாடுகளை கடைபிடிப்பதாக புத்த துறவிகள் சத்திய பிரமாணம் எடுத்தனர். புத்தமடலாயக் கலாச்சாரம் பன்னாட்டு சமயத்தலைவர்களைக் கவர்ந்தது. சித்தாந்த மாற்று சக்தியாக புத்தமதம் உருவெடுத்தது. புத்தரது கொள்கைகள் இருநூற்றாண்டுகளுக்குப் பிறகு பிராகிருதங்களில் மிக முக்கியமானதான பாலிமொழியில் எழுதப்பட்டன.

புத்தரது முக்கிய கவலை வாழ்க்கையின் இன்னல்களுக்கான காரணம் மற்றும் அதற்கான பரிகாரம் பற்றியதாகவே இருந்தது. சமயத்தைவிட மனித உள இயல்பு பற்றியதாகவே இருந்தது. சமயத்தைவிட மனித உள இயல்பு பற்றிய புரிதலிலேயே புத்தர் அக்கறை காட்டினார். சமயக் கோட்பாடு, பிராமண ஆலய வழிபாடு, பல கடவுள் நம்பிக்கை ஆகியவற்றின் மீது புத்தர் சிறிதும் அக்கறை காட்டவில்லை. ஆன்மா, கடவுள், இறுதி எதார்த்தம் (Ultimate Reality)பற்றியே புத்தர் பேசி வந்தார்.

ஆசையே பிறப்பிற்கும் மறுபிறப்பிற்கும் இட்டுச் செல்கிறது என்ற புத்தரது கருத்து பிராமண மதக் கருத்தை ஒட்டி இருந்தாலும், வன்முறைக்கு எதிரான அவரது அஹிம்சைக் கோட்பாடு இரக்க குணத்தை மானிடரிடத்தில் வலியுறுத்துவதாக அமைந்தது. ஆத்மன், பிரமன் ஒருமித்த தன்மையை உணர்வதன் மூலம் மோட்சம் அடைய முடியும் என உபனிடதங்கள் கூறின. ஆனால் புத்தருக்கோ ஓர் பரிசுத்தமான மனம் இரக்க உணர்வு கொண்ட இதயம் மனிதனை துன்பத்தில் இருந்து மீட்க உதவும். உலகச் சிற்றின்பங்களிலிருந்து விடுபட்ட பற்றற்ற மனதை வெளிப்படுத்துவதாக ஒருவரது நடத்தை இருக்க வேண்டும் என்றார் புத்தர்.

பரம்பரை அடிப்படையில் சமய குருமார்கள் நியமிக்கப்படுவதை புத்தர் எதிர்த்தார். ''ஒருவன் புனிதமாகப் பிறப்பதில்லை. தனது ஒழுக்க நடவடிக்கைகளின் மூலமே புனிதமாகிறான்'' என்றார் புத்தர். புத்தரது கொள்கை பிராமண சடங்குகள் மட்டுமின்றி சடங்குகளையே எதிர்ப்பதாக இருந்தது. பலியிடுதல் என்பது ஆதிவாசி சமுதாயத்தின் முக்கிய கலாச்சாரக் கூறாகும். ஆதிவாசிகளின் ஒற்றுமையைக் கொண்டாடும் வெளிப்பாடாக அதை சமூகவியல் அறிஞர்கள் கருதுவர். ஆனால் நிரந்தர விவசாயம் மேற்கொள்ளப்பட்டு, புதிய சமூகம் உருவாகி கால்நடைகள் பொதுச் சொத்தாகக் கருதப்பட்ட நிலையிலிருந்து, தனி நபர் சொத்தாக மாறிய போது பலிகொடுப்பது விரயமாகக் கருதப்பட்டது. எனவே யாகங்களுக்கும், தேவையற்ற சடங்குகளுக்கும் எதிர்ப்பு உருவாக ஆரம்பித்தது.

புத்தமதம் குலம், சாதி, மற்றும் குறுகிய மனப்பான்மைக்கு எதிராக மகத சமுதாயத்தின் அன்றைய தேவைகளுக்கு பயன்பட்டது. நகர்ப்புறங்களில் வாழ்ந்த பணம் படைந்த வணிகர்கள் மற்றும் படித்தவர்களை சமய மூட நம்பிக்கைகளிலிருந்து மீட்டது. இச்சூழலைப் பயன்படுத்தி நடுத்தர வர்க்க ஒற்றுமை உருவாகியிருந்தால் நவீன ஐரோப்பாவில் அரச அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியது போல் இந்தியாவில் மன்னரது அதிகாரத்தையும் அப்போதே கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால் வேரூன்றி வந்த சாதிய வேறுபாடுகள் அத்தகையதோர் ஒற்றுமை ஏற்படுவதற்கு தடையாயிருந்தன. கைவினைஞர்கள் கூட வணிகர்களாக மாறமுடியாத அளவிற்கு சாதியக் கட்டுப்பாடு இருந்தது.கா. அ. மணிக்குமார் kamkumar2002@yahoo.com,
பேராசிரியர், வரலாற்றுத்துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி

தமிழ் ஓவியா said...

இப்போது தரும் கட்டுரை உங்களின் பல அய்யங்களுக்கும் விடைகிடைக்கும் வகையில் இருக்கும் என நினைக்கிறேன். ஆழ்ந்து படியுங்கள்.1940களில் கம்யூனிசத் தோழர்களுடன் பொதுவுடமை குறித்து விவாதிக்கையில் பொதுவுடமை என்பது வேறு, சமதர்மம் என்பது வேறு என்றும், பொதுவுடமை என்பது கணக்கு சம்பந்தமுடையது- எல்லோருக்கும் எல்லாமும் சம அளவில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற பொருளில் - ஆனால் சமதர்மம் என்பதோ உரிமை தொடர்பானது என்றும் பெரியார் வாதிட்டார். பிறப்பின் அடிப்படையில் ஒருவரது நடத்தையும், மதிப்பும், உரிமையும் தீர்மானிக்கப்படும் மனுதர்ம சமுதாயத்தை சீர்திருத்த, மாற்றியமைக்க பொது அறமும் பொது உரிமையும் பேசும் சமதர்மம் தேவை என்றும் அவர் விளக்கினார்.

கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்த வகுப்புரிமை வழங்கப்படலுக்கு எதிரான, இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டமானது பொது அறத்துக்கும் பொதுமை உணர்வுக்கும் எதிரானதாகவே அமைந்தது. தகுதி, திறமை ஆகியவற்றை பிறப்பு மட்டுமே தீர்மானிக்கிறது என்ற கருத்தைத் தான் போராட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவர்களும் அவர்களை கிளர்ச்சியாளர்களாக காட்ட விரும்பிய தகவல் தொடர்பு சாதனங்களும் திரும்பத் திரும்பவும் வலியுறுத்தினர். இவர்களைப் பொறுத்தவரை பெரியாரோ அம்பேத்கரோ சாதித்த மாபெரும் அறிவுப் புரட்சியும் சமுதாயப்புரட்சியும் நடைபெறவேயில்லை. கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாக நாடெங்கும் நடைபெற்று வந்துள்ள தலித் எழுச்சி வெறும் மாயை. அம்பேத்கர் கூறியது போல, இந்த சாதி இந்துக்களையும் பார்ப்பனர்களையும் பொறுத்தவரை தத்தம் சாதிகள்தான் மனிதவர்க்கமாக கருதப்படவேண்டியவை. இவர்கள் கோரும் ‘நீதி’யும் ‘சமத்துவமு’ம் சுய சாதிக்காரர்களுக்கு மட்டுமே உகந்த பண்புகள், இலட்சியங்கள். பெரியார் காண விரும்பிய பொதுஉரிமைக்கு இலாயக்கற்ற வர்களாக, சனநாயக வாழ்வுக்கு அருகதையற்றவர்களாகவே இவர்கள் தம்மைக் காட்டிக் கொண்டனர்.

வட மாநிலங்களில் அரங்கேறிய பிற்போக்குத்தனமான அரசியலையும் அதற்கு ஆதாரமாயிருந்த வருணக் கருத்தியலையும் நோக்கு நிலையையும் தென்மாநில அரசியல் பிரமுகர்களும் அறிவாளிகளும், குடிமைச் சமுதாய அமைப்புகளும் மிகச்சரியாகவே கண்டித்துள்ளன. குறிப்பாக வரலாற்று ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்துடனும், திராவிட இயக்கத்துடனும் ஒத்துப்போகக் கூடியவர்களும், தலித் எழுச்சியை வரவேற்பவரும் இத்தகைய கண்டனத்தை மிக ஆணித்தரமாக முன்வைத்துள்ளனர்.

வகுப்புரிமை உத்திரவாதம் செய்யப்படுவதால், இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் எந்த தகுதியும் திறமையும் கெட்டுவிடவில்லை, மாறாக இவை சாதித்த அதிகார விரி வாக்கமும் உயர்க்கல்விப் பரவலாக்கமும் தென்மாநில சமுதாயங்களில் நல்ல, ஆக்கப் பூர்வமான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன என்பதையும் பலர் சுட்டிக்காட்டி யுள்ளனர். திராவிட இயக்கத்தின் பொது உரிமைக் கொள்கை ஏதோவொரு வகையில் இன்றும்கூட உயிர்ப்புடன் உள்ளதை அண்மையில் வெளியிடப்பட்ட கோயில் அர்ச்சகர் தொடர்பான அரசாணை அறிவித்தது. கோயில்களில் அர்ச்சகர்களாக இருக்க பிறப்பு தடையாக இருக்காது, எந்த வகுப்பைச் சார்ந்தவரும் அர்ச்சகராகலாம் என்ற தி.மு.க அரசின் அறிவிப்பும் ஆணையும் வட மாநிலங்களைச் சேர்ந்த சனாதனவாதிகளுக்கும் தென்னிந்திய, குறிப்பாக தமிழ்ப் பார்ப்பனர்களுக்கும், சவாலாகவும் எச்சரிக்கையாகவும் அவர்களது உலகப் பார்வையை மறுக்கும் கொள்கையாகவும் பரிணமித்துள்ளது.

என்றாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே வென்றெடுக்கப்பட்ட சவால்களை நினைத்து பூரித்துப் போவதிலும், வட மாநிலத்தவரை காட்டிலும் முற்போக்கானவர்கள் என்று சொல்லிக் கொள்வதிலும் நிறைவடையாமல் வேறு சில விஷயங்களையொட்டிய விவாதங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது காலத்தின் தேவையாக உள்ளது. முதலாவதாக- தமிழகத்தில் இட ஒதுக்கீடு என்பது ஏறக்குறைய அனைவராலுமே ஏற்கப்படுகிறது. (பார்ப்பனர்களும் வேறு சனாதனசாதிகளும் வேண்டுமானால் இதற்கு விதிவிலக்குகளாக இருக்கலாம்.) ஆனால் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு ஆதாரமான வகுப்புரிமை கொள்கை என்பது பேசப்படுகிறதா, விவாதிக்கப்படுகிறதா? பெரியாருக்கு ஆதர்சமாக விளங்கிய சமதர்மம் என்பதன் கருத்தியல் நுணுக்கங்களை நாம் இன்று முக்கியமானவையாக கருதுகிறோமா?

இரண்டாவதாக - இட ஒதுக்கீடு என்பது அரசு நிறுவனங்களை பொறுத்தவரை வேண்டுமானால் நிறைவேற்றப்பட்ட இலட்சியமாகயிருக்கலாம். ஆனால் குடிமைச் சமுதாயத் தளங்களில், அரசியல் வாழ்க்கையில், தனியார் துறையில் வகுப்புகளைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதிகளும் சமநிலையில் பங்கேற்கின்றனரா?

கடைசியாக-வகுப்புரிமை, இட ஒதுக்கீடு குறித்து ஆக்கப்பூர்வமான வகைகளில் வளர்த்தெடுக்க, அவற்றின் நலன்கள் பலரையும் சென்றடைய தமிழகத்தில் போதுமான கல்விசார் மாற்றங்களும் அறிவு தொடர்பான மாற்றங்களும் நிகழ்ந்துள்ளனவா?

சுயமரியாதை இயக்கம் தமிழ்ச் சமுதாயத்திலொரு புரட்சிகரமான சக்தியாக செயலாற்றிய காலகட்டத்தில் வகுப்புரிமை பெறுதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அடைதல் என்பனவற்றை தமது இயக்கம் சாதிக்க நினைத்த வரலாற்று மாற்றத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளாகவே பெரியார் அடையாளப்படுத்தினார். இவையே சமூக மாற்றத்தை உறுதிப்படுத்தும் என்றோ, இவை மட்டுமே சாதியழிப்பு இலட்சியவாதிகளின் குறிக்கோளாக இருக்க வேண்டுமென்றோ அவரும் அவரது இயக்கத்தாரும் நினைக்கவில்லை. அதேசமயம் ‘வகுப்புரிமை’ என்பதன் தேவையை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். வருணக் கொள்கையாலும் வருண- சாதி அரசியலாலும் கல்வியும் அரசியல் அதிகாரமும் மறுக்கப்பட்ட வகுப்பாருக்கு கல்வியுரிமையும் அரசியலுரிமையும் வழங்கப்பட்டாலொழிய இந்திய மண்ணில் சனநாயக முன்னேற்றமும் தேச ஒற்றுமையும் விடுதலையும் சாத்தியமில்லை என்பதில் அவர்கள் உறுதியாக நின்றனர். சமத்துவம், சமநீதி குறித்து பார்ப்பனர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் வாய் வலிக்கப் பேசினாலும், அச்சொற்களுக்கு சம்பிரதாயமான பொருளைத்தான் அவர்கள் கொண்டிருந்தனர். அதாவது, சமத்துவம் என்பதை பண்புரீதியாக, வரலாற்றுரீதியாக விளங்கிக் கொள்வதற்குப் பதில் வெறும் அருவமான கருத்தியலாக, அவர்கள் தனிமனிதனின் விடுதலை வேட்கையை தணிக்கும் அறமாக மட்டுமே கொண்டனர்.

இந்த அடிப்படையிலேயேதான் 1920கள் தொட்டே இட ஒதுக்கீட்டையும் வகுப்புரிமையையும் எதிர்த்தனர். தனிமனித சுதந்திரமும், சமத்துவமும் பாதிக்கப்படும் என்றனர். திறமைக்கு தகுந்த சன்மானம் கிடைக்காமல் போய்விடும் என்றனர், நீதி கெட்டுவிடும் என்றனர். இந்த மனநிலையை எதிர்கொள்ளும் முகமாக பெரியார் வகுப்புரிமை என்பதை வழங்குவதன் மூலம்தான் சாதிசமுதாயத்தின் மேல்-கீழ் வரிசை நிலையும் சமத்துவமின்மையும் சரிசெய்யப்படும் என்றார். உண்மையான சமத்துவமும் சமநீதியும் நிறுவப்பட வேண்டுமானால் ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் கூட்டு நலன்களும் உரிமைகளும் உத்திரவாதம் செய்யப்பட வேண்டும் என்றும் வாதிட்டார். அதேசமயம் இத்தகைய உரிமைகளுக்கு உகந்தவர்களாக பார்ப்பனரல்லாதவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

சுயமரியாதையை வென்றெடுக்க வேண்டும், பகுத்தறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும், பரஸ்பர தோழமையும், நம்பிக்கையும் பாராட்டப் பழகவேண்டும், தீண்டாமையை வேரறுக்க வேண்டும், பெண்ணடிமைத்தனத்தை நித்தம் நித்தம் வாழச் செய்யும் ஆண்மையையும் கற்பையும் விமர்சிக்க துணிய வேண்டும் என்று பல்வேறு தளங்களில் நிகழ வேண்டிய மாற்றங்களை விளக்கினார், இவை தொடர்பாக செயல்பட்டார். வகுப்புரிமை என்பது சமதர்மத்துக்கு ஒருவரை இட்டுச் செல்லவேண்டும் என்பதே அவரது வாதமாகயிருந்தது. எனவேதான் வகுப்புரிமை என்பதை ‘இட ஒதுக்கீடு’ என்று மட்டுமே விளங்கிக் கொள்ளாமல், சனநாயக வாழ்வுக்குரிய, அதன் முன்நிபந்தனையாக இருக்கவேண்டிய அறமாக பெரியார் பாவித்தார். வகுப்புரிமை தொடர்பான சொல்லாடல்களை அவர் மேலே குறிப்பிட்டுள்ள களங்களில் வளர்த்தெடுத்தும் அச்சொல்லாடல்களுக்கு சமுதாய வெகுமதியை பெற்றுத் தந்ததுமே இதற்கு சான்றுகளாகும்.

ஆனால் தற்கால தமிழகத்திலோ ‘வகுப்புரிமை’ என்பதன் விரிந்தப் பொருள் அருகிப்போய், இட ஒதுக்கீடு என்ற அரசியல் கொள்கையாகவும் திட்டமாகவுமே அது எஞ்சியுள்ளது. இதனால்தான் இட ஒதுக்கீடு கோரும் வகுப்பாரில் சிலர் - குறிப்பாக தென் மாவட்டங்களில் ஆதிக்க நிலையிலுள்ள முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர்களில் சிலர் தலித்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை சலுகைகளாக அடையாளப் படுத்துகின்றனர். அம்மக்களுக்கு கிடைத்துள்ளவற்றில் கால்வாசி கூட தங்களுக்கு வாய்க்கவில்லை என்று எந்த ஆதாரமுமின்றி குற்றஞ் சாற்றுகின்றனர். தலித்களின் உரிமைகளைப் பாதுகாக்க இயற்றப்பட்டுள்ள சட்டங்கள் இவை மட்டுமின்றி சமுதாய, பண்பாட்டுத் தளங்களில் அம்மக்கள் கோரும் சமவுரிமைகளை - கோயில் தேரை இழுக்கும் உரிமை, கோயில் வழிபாட்டில் பங்கேற்கும் உரிமை போன்றவற்றை - வன்மத்துடன் மறுக்கின்றனர். சாதிய வெறுப்பைத் தூண்டும் கட்சிகளென எந்தவித குற்றவுணர்வுமின்றி ஏசுகின்றனர்.

தலித்துகளின் உரிமைகள் மட்டுமல்ல ஏனைய வறிய சாதிகளின் உரிமைகளும் உத்திரவாதம் செய்யப்படாத நிலையிலேயே உள்ளன. குறிப்பாக இட ஒதுக்கீட்டின் காரணமாக கல்வி கற்று சமூக அந்தஸ்து வாய்க்கப் பெற்று, இன்று தாமே கல்வி நிறுவனங்களை நிர்வகித்து நடத்தும் அளவுக்கு பொருளாதார பலமுடைய பலர் தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வந்து விடக் கூடாது என்பதில் வெகு கவனமாக உள்ளனர். இதனால் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினருள் வறியவர்களாக உள்ளவர்களின் கல்வி வாய்ப்புகளை மறுப்பவராகவும் உள்ளனர்.

வறுமையும் சாதி ஒடுக்குமுறையும் சந்திக்கும் புள்ளியை சரி வர அடையாளங் காண்பதற்கு இவர்களில் யாருமே தயாராக இல்லை. போகிறபோக்கில் சிலருக்கு உதவித் தொகைகளை அளித்து தமது ‘கடமை’யை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரில் அனைவரும் இட ஒதுக்கீட்டினால் பயன் பெற்றுள்ளனர் என்றும் சொல்லி விட முடியாது-1970களிலும் 1980களிலும் நடைபெற்ற வன்னியர் சங்க ஆர்ப்பாட்டங்களும் அவை முன்வைத்த கோரிக்கைகளுமே நமக்கு இதை உணர்த்தும். இதுபோக, வகுப்புரிமை என்பதன் விரிவான பொருள் வரம்பிடப்பட்டது போல, ‘வகுப்பு’ என்பதன் பொருளும், அடையாளமும் வரம்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வகுப்பின் உரிமைகளை முன்நிறுத்திப் போராடிப் பயன்பெறுபவர்களில் முக்கால் வாசிக்கும் மேற்பட்டவர்கள் ஆண்களாகவே உள்ளனர். குறிப்பிட்ட வகுப்பிலுள்ள பெண்களின் கல்வித்தகுதி, சுதந்திரம் முதலியவற்றை கருத்தில் கொண்டு வகுப்புநலனோ உரிமையோ வரையறுக்கப்படுவதில்லை.

வகுப்புரிமை என்பதன் முழுப்பொருளையும் சமுதாய பயன்பாட்டுக்குரிய வகையில் புரிந்துணர்ந்து விளக்கி, விவாதித்து, காரியத்திலும் அதை காட்டிய பெரியாரைப் போலும், சுயமரியாதை இயக்கத்தைப் போலும் வெகு மக்கள் இயக்கமும் தலைமையும் தொடர்ந்து வாய்க்கப்பெறாத, கட்டியெழுப்பப்படாத நிலையில் வகுப்புரிமையின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? சமதர்மம் என்ற அறத்தின் அடிப்படையில் அல்லாமல் வெறும் கணக்குரீதியாக மட்டுமே வகுப்புரிமையை அணுகுவதென்பது பெரியார் சாதிக்க நினைத்த முழுப்புரட்சி, அதன் தேவை பற்றிய ஒருவித மறதிக்கு நம்மை இட்டுச் சென்றுவிடுமோ?

அடுத்து- இடஒதுக்கீடு என்பதை அரசு கொள்கைகள், திட்டங்கள், ஆணைகள் தொடர்பான விஷயமாக மட்டுமே காணும் பார்வையும் போக்கும் நம்மிடையே நிலை கொண்டுவிட்டன. தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பது குறித்து பேச, விவாதிக்க போதுமான அக்கறை கொண்டவர்கள் வெகு சிலராகவே உள்ளனர். தனியார் கல்வி நிறுவனங்களில் பல இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதுடன் தமது ‘சிறுபான்மை’ அடையாளத்தை முன்நிறுத்தி வகுப்புரிமை கொள்கையை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

நீதி, நேர்மை, சுதந்திரம் குறித்து விடாது முழங்கி வரும் தகவல் தொடர்பு சாதனங்களில், குறிப்பாக ஆங்கிலமும் இந்தியும் புழங்கும் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்களில் 49% பேர் பார்ப்பனர்கள் என்ற திடுக்கிடும் தகவல், அண்மையில் வெளியிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றில் இடம் பெற்றிருந்தது. தமிழ்ப் பத்திரிகைத்துறை, தொலைக்காட்சி, தனியார் வானொலி, சினிமா ஆகியவற்றில் பணிபுரிவோரின் சமூகப் பின்னணி குறித்த தகவல்களை கண்டறிய முயற்சித்தால் சில முக்கியமான சமூக உண்மைகள் துலங்கும் என்பதில் சந்தேகமில்லை - குறிப்பாக தலித் மக்களும் பெண்களும் எந்தெந்த துறைகளில் எத்தகைய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறித்து சில முக்கியமான தகவல்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

சாதி அடிப்படையில் பண்பாட்டு நடவடிக்கைகளை தரம் பிரிக்கக்கூடாது என்ற வாதம் தொடர்ந்து தமிழ்நாட்டு இலக்கியச் சூழலில் இடம் பெற்றுவருவதையும், ‘தலித் இலக்கியம்’ என்பதை புறக்கணிக்கவும் இயலாமல் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அதனை ‘தனி’யொரு இயலாக தமிழ்ச்சூழல் ஆக்கியுள்ளதையும் தலித் எழுத்தாளர் அழகிய பெரியவன் ‘தலித் முரசி’ல் பதிவாகியிருந்த பேட்டி ஒன்றில்(மலையாள இதழொன்றுக்கு அளிக்கப்பட்ட பேட்டி இது) வேதனையுடன் குறிப்பிட்டிருந்ததை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாகயிருக்கும். தலித் மக்களின் வாழ்வைப் பேசும் இலக்கியத்துக்குரிய மதிப்பை அளிப்பதற்குப் பதில், அவர்களது படைப்புரிமையை அங்கீகரிப்பது போல் பாவனை செய்து அதனை பொது இலக்கிய மரபுக்குள் கொண்டு வராது தனிவெளியில் ஒதுக்கும் சனாதன செயல்பாடுகள் (தலித் எழுத்தாளர்கள் தமது ஆளுமை, படைப்பாற்றல் ஆகியவற்றின் தனித்தன்மை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோருவது வரலாறு புரிந்துள்ள அநியாயங்களை சரி செய்யத்தான். இந்த தனித்தன்மையை அதற்குரிய சமுதாய நியாயத்துடன் அணுகாமல் அதனை போற்றுவதுபோல் போற்றி தனிமைப்படுத்தும் முயற்சிகள் விஷமத்தனமானவை.) இலக்கியம் பண்பாடு முதலான துறைகளில் இதுவரையில் ஒலிக்க அனுமதிக்கப்படாத குரல்கள் பேசவும் எழுதவும் உரிமை வழங்கப்பட வேண்டிய தன் தேவையை நாம் முழுமையாக உணர்ந்ததற்கான சான்றுகள் இல்லாததால்தான் பண்பாட்டுத் தளத்திலும் ஒதுக்கீடு தேவை என்று நாம் வாதிட வேண்டியுள்ளது.

பண்பாட்டுத்தளத்தில் மட்டுமின்றி, குடிமைச் சமுதாயத்திலும்-கல்வி அமைப்புகள், சேவை நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், மகளிர் அமைப்புகள் போன்றவற்றிலும்-எல்லா வகுப்பாரும் சமஅளவில் பங்கேற்கக் கூடிய சூழல் தமிழகத்தில் இல்லை. குறிப்பிட்ட பகுதியின் வரலாறு, அப்பகுதியை சார்ந்த ஆதிக்க, உடைமை சாதிகள் முதலியன தான் ஒருவர் பொதுவாழ்வில், பணியில் பங்கேற்பதையும் செயல்படுவதையும் தீர்மானிக்கின்றன. தலித்துகளோ, ஏனைய வறிய பிரிவினரோ தத்தம் குறைகளை தீர்த்துக் கொள்ள சங்கங்கள் அமைப்பதை அனுமதித்தாலும் அனுமதிக்கும், இந்த ஆதிக்க சக்திகள், பொதுநலன் கருதியும் பொதுக் காரியங்களுக்கும் தலித்துகள் முன்நிற்பதையும் ஆர்வமாக அவற்றில் பங்கேற்பதையும் விரும்புவதில்லை. பொதுநலம், பொதுமை முதலியனவற்றுக்கு தாமே உத்திரவாதம், தாம்தான் பொது வாழ்க்கையில் பங்கேற்கத் தக்கவர், அதற்குரியவர், தமக்கு மட்டுமே அந்த உரிமையும் தகுதியும் உண்டு என்று இவை சிந்திக்கின்றன. 19ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் சில பார்ப்பன அறிவாளிகள் தங்களை இப்படித்தான் பாவித்துக் கொண்டனர். தம்மையே மக்கள் பிரதிநிதிகளாக கருதிக் கொண்டனர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. யாருக்காக யார் பேசுவது என்ற பிரச்னையின் முக்கியத்துவத்தை பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி சம்பவங்கள் நமக்கு உணர்த்தியுள்ளன.

அரசியல் தளத்திலும்கூட, தேர்தல் இடங்களைப் பொறுத்தவரை தலித்துகளுக்கும் அரசியல் தளத்திலும்கூட, தேர்தல் இடங்களைப் பொறுத்த வரை தலித்துகளுக்கும் பெண்களுக்கும் ஒதுக்கீடு ஏற்கப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட கட்சியின் தலைமையிலோ, முடிவெடுக்கும் நிலையிலோ பெண்களும் சரி, தலித்துகளும் சரி மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் இடம் பெற்றுள்ளனர். பெண்களுக்கு ஊராட்சி அமைப்புகளில் 33% இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றதும், தமது குடும்பத்தவரை, தமக்கு விசுவாசமான தொழிலாளிகளை தேர்தலில் நிற்க வைக்க வரிந்து கட்டிக் கொண்டு வந்தவர்கள் வகுப்புரிமையை, இட ஒதுக்கீட்டை பெண்களுடன் ஏன் தத்தம் வகுப்பைச் சேர்ந்த பெண்களுடன் கூட பகிர்ந்து கொள்ள முன்வருவார்களா என்ற கேள்வியை நாம் எழுப்பியாக வேண்டும். பெண்களுக்கு போய்ச்சேர வேண்டிய அதிகாரத்தை தட்டிப் பறிக்க ஆர்வமுள்ளவர்கள், தமக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அப்பெண்களுடன் பகிர்ந்துகொள்ள கண்டிப்பாக முன் வரப்போவதில்லை. ஷரத் யாதவ், முலாயம் சிங் போன்றவர்கள் 33% ஒதுக்கீட்டில் சாதி அடிப்படையிலான உள் ஒதுக்கீடு தேவை என்று முழங்குவார்கள், ஆனால் மண்டல் குழு பரிந்துரைத்த 27% இடஒதுக்கீட்டை பெண்களுக்கு பகிர்ந்தளிக்க மறுப்பார்கள்.

தலித்துகளுக்கும் இந்த கதிதான் வாய்த்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற விடுதலை சிறுத்தைகளின் வேட்பாளர்கள் தலித் மக்கள் அளித்த வாக்குகளினால்தான் வெற்றியடைந்தனரே தவிர அவர்களுடன் கூட்டணியில் இருந்த தலித் அல்லாத கட்சிகளின் பற்றாளர்களுடைய வாக்குகளினால் அல்ல. தலித்துகளைப் பயன்படுத்துவதில் தலித் அல்லாத கட்சியினர் காட்டும் ஆர்வம், தலித்துகளுடன் இணைந்து பணியாற்றும் அக்கறையாகவோ, அவர்களது உரிமைகளை அங்கீகரித்து அவற்றுக்காக போராடும் ஆற்றலாகவோ பரிணமிப்பதில்லை. தலித்துகளைப் பொறுத்தவரை அரசியல்துறையில் இட ஒதுக்கீடு இருந்தாலும், வகுப்புரிமை அவர்களுக்கு இல்லை, தனித்தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் தலித்துகளின் நலம், தேவைகள் ஆகியவற்றை பொதுநலத்துக்குரிய விஷயங்களாக மாற்றியமைக்க இயலாதபடிக்கு அவர்கள் தொடர்ந்து அரசியல் அந்நியர்களாகவே பாவிக்கப்படுகின்றனர்.

முடிவாக-கல்வித்துறையில், அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வாய்த்துள்ள தமிழ்ச் சூழலில் கல்வியின் தன்மை, உள்ளடக்கம் எத்தகையதாக உள்ளது? அரசு நிர்வாகம் மக்களுக்குரியதாக ஏன் இருப்பதில்லை? இட ஒதுக்கீட்டின் நற்பயன்களை நீடிக்கச் செய்யவும் அதன் தாக்கத்தை விரிவுபடுத்தவும் வேண்டுமானால் இக் கேள்விகளை ஆராய வேண்டியிருக்கும்.

ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த சிறுவர்கள் கல்வி கற்க வேண்டுமானால் அவர்களை வரவேற்று, அவர்களது தனிச்சிறப்பான தேவைகள், அவர்களுக்கு ஏற்ற கற்பித்தல் முறை ஆகியவற்றை அவதானித்து செயல்பட வேண்டிய பள்ளிச்சூழலும் ஆசிரியர்களும் நமக்குத் தேவை. ஆனால் தொடக்கக் கல்வியில் பாராதூரமான மாற்றங்கள் நிகழ்ந்தாலொழிய இது சாத்தியப்படப் போவதில்லை. அக்கல்வி வளர்ச்சிக்கான நிதியைப் பொறுத்தவரை உயர்க் கல்விக்கென ஒதுக்கப்படுவதைக் காட்டிலும் குறைவானதாகவே உள்ளது. மேலும் சமூக அறிவும், அக்கறையும், நீதியுணர்வுமுள்ள ஆசிரியர்கள் பெரும் எண்ணிக்கையில் இல்லாமல் இருப்பதும், சாதிக்காழ்ப்பும், மெத்தனமும் போதிய பயிற்சியும் பெறாதவர்கள் தொடக்க கல்விப்பணியில் அமர்த்தப்படுவதும் கல்வியைப் பெரும் பிரச்னையாக்கியுள்ளன. ஆசிரியர்களை ஆயத்தப்படும் பயிற்சி நிறுவனங்களுக்கும் போதிய சமூக அக்கறையும் புரிதலும் இருப்பதாகத் தெரியவில்லை. மாணவர்களின் சமுதாயப் பின்னணியை அறிந்துகொண்டு பக்குவமாகவும் கரிசனத்துடனும் ஆசிரியர் நடந்து கொள்ளத் தேவையான பயிற்சியும் கல்வியும் இந்நிறுவனங்களில் அளிக்கப்படுவதற்கான சான்றுகளில்லை. வியாபார நோக்குடன்தான் இவை நடத்தப்படுகின்றன என்பது கண்கூடு. இதனாலேயே பல மாணவர்கள் தொடர்ந்து படிக்கப் பிடிக்காதவராய் வீட்டிலேயே நின்று விடுகின்றனர், அல்லது வேலைக்குப் போய்விடுகின்றனர்.

அடுத்து, கல்வியின் குறிக்கோளை எடுத்துக் கொள்வோமேயானால், நெட்டுரு செய்வதே பிரதானமான திறமையாக கருதப்படுகிறது. அதாவது தகவல்களை சேமித்து வைத்து, வேண்டிய வேளையில் அவற்றை மாணவர்கள் உமிழ்வதையே கல்விநூல்கள் முக்கியமானதாக கருதுகின்றன. எனவே மாணவர்களின் இன்னபிற திறன்கள் மதிக்கப்படாததுடன், பின்தங்கிய மாணவர்களுக்கும் முதல் தலைமுறை மாணவர்களுக்கும் இத்தகைய கற்றல்முறை ஏற்படுத்தும் நிர்பந்தங்களும் பிரச்னைகளும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. மேலும் இம்மாணவர்களுக்குள்ள செயல்திறன், அனுபவ அறிவு, அல்லது வேறு தனிச்சிறப்பான திறன்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. இத்தகைய சூழலில் படித்து மீண்டு வரும் மாணவர்கள் வெகுசிலர் - இவர்களில் ஒரு சிலர்தான் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்துபவராக வருகிறார். ஏனையோர் வாய்ப்பிழந்து பின்தங்கி விடுகின்றனர்.

கல்விநூல்களும் மாணவர்களின் வாழ்வியல் சூழலையும் தேடல்களையும் பிரதிபலிப்பதில்லை. தமிழ்ப்பாடத்தை எடுத்துக் கொள்வோம். இலக்கிய அறிவும், தமிழ்ப் பெருமையும் பேசும் பாடங்களே பாடநூல்களில் அதிகம் இடம் பெறுவது வழக்கம். பேச்சு மொழியையும், வழக்காறுகளையும், வளமான கற்பனையயும் தொலைத்த உரைநடைப் பாடங்களை மாணவர்கள் விரும்பிப் படிக்காததுடன், அவற்றை சுமையாகவும் எண்ணுகின்றனர். தமிழ்ச் செய்யுள் பகுதி இலக்கியமாக இருப்பதால் அதுவுமே தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு அந்நியமானதாக தோன்றுகிறது. எந்தவகையிலும் தமது வாழ்வனுபவங்களையும், சூழலையும், மொழிப் பயன்பாட்டையும் பிரதிபலிக்காத பாடங்களை குழந்தைகள் தமக்குரியவையாக கொள்வதற்குப் பதில், படிக்கவே பயப்படுகின்றனர். ஏதோவொரு குற்றவுணர்வுடன் தாய்மொழியைப் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.

வகுப்புரிமை கோரும் வகுப்பாரின் வாழ்வியல் விஷயங்களை தவிர்த்து தமிழ்ப் புலமையை மட்டுமே போற்றும் நூல்கள் எந்த விதத்திலும் குழந்தைகளின் அறிவையோ தன்னம்பிக்கையையோ வளர்க்கப் போவதில்லை. சூழலுக்கு பொருந்தாத கல்வி எல்லா நிலைகளிலும் இருப்பதாலும், பட்டறிவுக்கும் செயல் திறனுக்கும் உடலுழைப்புக்கும் இடங்கொடுக்காத ஏட்டுக்கல்வியே ‘கல்வி’ யாக கருதப்படுவதாலும் பின்தங்கிய வகுப்பாரின், தலித்துகளின் திறமைகளும் ஆற்றல்களும் முடக்கப்பட்டு விடுகின்றன.

தமிழகத்தில் பார்ப்பனியம் தொடர்ந்து விமர்சனப் படுத்தப்பட்டாலும் அது சாதித்துள்ள வேலைப் பிரிவினையானது-உடலுழைப்புக்கும் மூளை உழைப்புக்கும் இடையிலான பிரிவினையானது-நவீன கல்வியுலகை தொடர்ந்து ஆட் கொண்டுள்ள நிலையில் வருண தருமத்தை வேரறுக்கும் கல்வித்திட்டம் வகுக்கப்பட வேண்டியதன் தேவையை நாம் அங்கீகரிக்க வேண்டியவராகிறோம். உழைப்பையும் உழைப்பாளியையும் கைவினைஞனையும், நவீன கல்விக்குள் கொண்டுவரத்தக்க கல்வி நமக்கு தேவை. இவர்களுக்கு வாய்த்துள்ள பட்டறிவை மேலும் செழுமைப்படுத்தும் நவீன அறிவியல் கல்வியையும் தத்துவக் கல்வியையும் வளர்த்தெடுப்பதற்கு பதில் பார்ப்பன ‘ஐ.ஐ.டி’களையும் சூத்திர-தலித் ‘ஐ.டி.ஐ’களையும் உருவாக்கி வருணக் கொள்கையை கட்டிக்காத்து வருகிறோம்.

இட ஒதுக்கீடு இருந்தும் மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருக்கும் மற்றொரு துறை, அரசு நிர்வாகத்துறை, அரசதிகாரம் என்ற ஒன்றின் காரணமாக தமது குறிப்பிட்ட வர்க்கநலனை பாதுகாப்பதில் கவனமாக செயல்படும் இத்துறைக்குரிய அதிகாரத்தை மேலும் பரவலாக்குவதன் நோக்கம் சற்றே வேறு பட்டதாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. அதிகாரப் பகிர்தலை சாத்தியப்படுத்த இட ஒதுக்கீடு அவசியம் என்றாலும், அத்தகைய அதிகாரத்தைக் கொண்டு பொது உரிமையை, சமதர்மத்தை சாதிக்க வேண்டுமானால் அரசதிகாரத்தை சனநாயகப் படுத்துவது பற்றியும், அரசியல், குடிமைச் சமுதாயங்களின் கறாரான விமர்சனங்களுக்கு கட்டுப்பட்டு அவ்வதிகாரம் செயல்பட வேண்டியிருப்பது குறித்தும் நாம் ஆலோசிக்கத் தொடங்க வேண்டியிருப்பது குறித்தும் நாம் ஆலோசிக்கத் தொடங்க வேண்டும். கோயில் நுழைவு உரிமை குறித்து பெரியார் கூறியதை இங்கு நினைவு கொள்ளுதல் பொருந்தும். கோயில் பொதுயிடமாதலால் அதில் நுழைய அனைவருக்கும் உரிமையுண்டு என்பதில் தனக்கு மாற்று கருத்து கிடையாது, அதற்காக தான் போராடவும் தயார், ஆனால் கோயிலில் நுழைய உரிமை கிட்டிய பிறகு பக்தியையும் கடவுள் நம்பிக்கையையும் பக்தர்களின் விசுவாசத்தையும் மூடத்தனத்தையும்தான் கடுமையாக விமர்சிக்க வேண்டியிருக்கும், நுழைவுரிமை பெற்றவர்களையே இடித்துரைக்க வேண்டியிருக்கும் என்று பெரியார் பல சமயங்களில் கூறியுள்ளார். அதுபோல, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டப்பின் அரசதிகாரத்தை நோக்கிய விமர்சனப் பணியை மேற்கொள்வதன் மூலமே வகுப்புரிமையையும் சமதர்மத்தையும் நம்மால் உத்திரவாதம் செய்ய முடியும்

----------"ஜூலை - செப்டம்பர் 2006 "புது விசை" இதழில் - வ.கீதா அவர்கள் "சமதர்மமும் வகுப்புரிமையும்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை

தமிழ் ஓவியா said...

இடஒதுக்கீடு தொடர்பாகவும் பொருளாதர அடிப்படை ஏன் கூடாது என்பது பற்றிய உங்களின் அய்யங்கள் அனைத்திற்கும் இக்கட்டுரையில் விடை கிடைக்கும்.

"மக்களாட்சித் தத்துவம் உலகின் பெரும்பாகத்தில் செல்லுபடியாகிவிட்ட நிலையில் தாம் இன்னும் மன்னனின் கீழிருப்பதா என்று நேபாள இளைஞர்களும் மாணவர்களும் ஜனநாயகத்துக்காக போராடினர். வேலைவாய்ப்பையும் பணிப்பாதுகாப்பையும் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளையும் பறிக்கும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து பிரான்ஸ் இளைஞர்களும் மாணவர்களும் போராடினர். இதே காலகட்டத்தில் அவர்களுக்கு இணையாக/அவர்களை விடவும் தீவிரமாக நாட்டுநலனை முன்னிறுத்தி இந்திய இளைஞர்களும் மாணவர்களும் ஒருமித்து போராடுவதை போல ஆங்கில அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் ஒரு நாடகத்தை அரங்கேற்றின.

என்.டி.டி.வி சேனலும் அதிலிருந்து துரத்தப்பட்ட/வெளியேறிய ராஜ்தீப் சர்தேசாயால் விரிக்கப்பட்ட புதிய கடையான சிஎன்என்-ஐபிஎன் சேனலும் ஏழேழு லோகத்திலும் இதை விட்டால் வேறு பிரச்னையே இல்லை என்பது போல இந்த நாடகத்தின் காட்சிகளை திரும்பத் திரும்ப ஒளிபரப்புச் செய்தன. ஆங்கிலம் தெரிந்த நடுத்தர, உயர்வகுப்புப் பார்வையாளர்களை யார் கவர்ந்திழுப்பது/தக்கவைத்துக் கொள்வது என்கிற போட்டி, பரபரப்பான செய்திகளை வெளியிட்டு பிரபலமாகி விளம்பரங்களில் அள்ளிக் குவிக்கிற வியாபார உத்தி, இவற்றோடு இந்திய செய்தி ஊடகத்தின் இயல்பாக ஊறி நொதித்து நாறும் உயர்சாதி மனோபாவமும் சேர்ந்துவிடவே, இச்சேனல்களின் ஒளிபரப்பில் ஆத்மார்த்தமானதொரு சுய ஈடுபாடு வெளிப்பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளிதழ்களும் விஷம் கக்கின. அந்த இளைஞர்களின் தரங்கெட்ட செயல்கள் யாவும் போராட்டங்களென சித்தரிக்கப்பட்டன. (இந்தக் கூத்து இன்றளவும் தொடர்கிறது.)

உண்மையில் உயரிய நோக்கங்களுக்காக - அதிகாரத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக பெரும்பான்மை எளிய மக்களால் நடத்தப்படுவதே போராட்டம். அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு ஆதிக்க கும்பல் தெருவிலிறங்கினால் அதை ரகளை/காலித்தனம் என்று சொல்வதே பொருத்தமாயிருக்கும். எனவே அரசியல் சட்ட அடிப்படையில் பிற்பட்டோருக்கு உயர்கல்வியில் 27 சதம் இடஒதுக்கீடு என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்த இந்த இளைஞர்களின் நடவடிக்கைகளை பன்னாட்டுக் கம்பனிகளின் ஆதரவில் நேரடி ஒளிபரப்புக்காக நடந்த ரகளை என்றே வகைப்படுத்த முடியும். ரகளையில் ஈடுபடும் சமூக விரோதிகள் எப்போதும் ஏந்தி வருகிற கத்தி கபடா சோடா பாட்டில் சுருள் பிச்சுவா சைக்கிள் செயினுக்குப் பதிலாக இம்முறை அவர்கள் கையில் தொலைக்காட்சிக் காமிராக்கள் இருந்தன. ஏனென்றால் இப்போதைக்கு அவர்களுக்கு எவரின் உயிரும் தேவைப்படவில்லை. மக்களின் மனங்கள்தான் அவர்களது இலக்கு. ஒரு நூற்றாண்டு காலமாக கருத்தளவிலும் நடைமுறையிலும் செயலூக்கத்துடனிருக்கும் இடஒதுக்கீடு குறித்து ஒரு சர்ச்சையை கிளப்புவதே அவர்களது உடனடி நோக்கம். இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டி கல்வியிலும் அரசு நிர்வாகத்திலும் மீண்டும் ஒருசாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் அவர்களது அகண்ட கனவிற்கான ஒத்திகையும்கூட இதற்குள் மறைந்திருக்கிறது.

பதினாறாண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றியிருக்க வேண்டிய ஒரு அரசியல் சட்டக்கடமை என்ற அடிப்படையில் உயர்கல்வியில் பிற்பட்டோருக்கு 27 சதம் இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவு வெளியான கணத்திலிருந்தே அவர்கள் இந்த ரகளையைத் தொடங்கிவிட்டனர். சர்வசதா காலமும் பிறசாதிகள் மீதான துவேஷத்துடனேயே வளர்க்கப்படுவதால் யாரையும் யாரும் அணிதிரட்ட வேண்டிய அவசியமில்லாமலேயே தெருவுக்கு வந்தனர். வெளித்தோற்றம் என்னவாயிருந்தாலும் தன்னுணர்வாக மண்டிக்கிடக்கும் உயர்சாதி அகங்காரமும் இடஒதுக்கீட்டு எதிர்ப்புணர்வும் அவர்களை தெருவுக்கு கிளப்பிக் கொண்டு வந்தது.

அடுத்த வீட்டு பொம்மையை எடுத்து விளையாடும் குழந்தைகூட உரியவர்கள் கேட்டதும் திருப்பித் தந்துவிடுமளவுக்கு நியாயவுணர்ச்சி கொண்டிருக்கிறது. ஆனால் இவர்களோ தாம் இத்தனை நாளும் ஆக்ரமித்து வைத்திருந்ததை உரியவர்கள் எப்படி கேட்கலாம் என்று அதட்டுமளவுக்குச் சென்றனர். பாடுபட்டு ஈட்டிய தமது கைப்பொருள் பறிபோவதைப் போன்ற பதற்றத்துடனும் ஆத்திரத்துடனும் ஏசினர். இந்த ரகளையில் புதுடில்லி மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் பிற்பாடு நாடு முழுவதுமிருக்கிற ஐஐடி, ஐஐஎம் மாணவர்களில் ஒருபகுதியினரும் இணைந்து கொண்டனர். இதன் பொருள் மாணவர்கள் மட்டுமே இந்த ரகளையை நடத்தினர் என்பதல்ல. சாதியமைப்பினூடே அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் பொருளாதார நலன்களையும் பாதுகாத்துக் கொள்ளும் வெறியேறிய அனைவருமே நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்கேற்றனர். இந்த தருணத்தைப் பயன்படுத்தி இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட தம்மால் என்னென்ன செய்ய முடியுமோ அதை மிகவும் விருப்பப்பூர்வமாக அனிச்சையாக செய்வதில் ஆர்வம் காட்டினர். அரசு ஊழியர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அயல்நாட்டில் இருப்பவர் என்ற பாகுபாடு இல்லாமல் சாதிநலனைக் காப்பதற்காக எல்லோரும் அணிதிரண்டனர். செய்தி ஊடகங்களில் அவர்களுக்கிருக்கும் சாதிய செல்வாக்கு இதற்குப் பேருதவியாக அமைந்தது.

ஒரு வழக்கின் இருதரப்பையும் கண்டறிந்து நடுநிலையாக செய்தியளிக்கும் தார்மீக நெறிமுறைகள் தமக்கிருப்பதாக வெகுவாக அலட்டிக் கொள்ளும் தகவல் தொடர்புச் சாதனங்கள் இவ்விசயத்தில் எல்லாவற்றையும் உருவியெறிந்துவிட்டு ஒற்றைப் பூணூலோடு அம்மணமாக நின்றன. யூத் பார் ஈக்வாலிட்டி என்று அவர்கள் போர்த்திவந்த பதாகையால்கூட மறைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு அம்மணமாய் நின்றன. கட்சித் தலைவர்களையும் சமூக செயல்பாட்டாளர்களையும் ஸ்டுடியோவுக்கு அழைத்து குறுக்கு விசாரணை போல துருவித் துருவி பேட்டியெடுக்கும் இந்த புலனாய்வுச் செய்தியாளர்கள் அந்த மாணவர்களின் உளறல்களை சிறு குறுக்கீடோ மறுப்போ இல்லாமல் போர்ப்பிரகடனங்களைப் போல ஒளிபரப்பினர். நேரடி விவாதங்களின்போது இடஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்த போதிய கால அவகாசம் தரப்படாமல் மைக்குகள் பறிக்கப்பட்டன. எதிர்ப்பாளர்களுக்கோ விலாவாரியாக அவதூறு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது.

இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற எந்த இயக்கத்தையும் ஒளிபரப்ப முடியாதளவுக்கு அல்லது ‘முன்னாபாய்கள் ஊர்வலம்’ என்று கிண்டலடித்து ஒளிபரப்புமளவுக்கு வெளிப்படையாகவே செயல்பட்டன. யூத் பார் ஈக்வாலிட்டி- சமத்துவம் என்று முழங்கும் இந்த மாணவர்கள் இதுவரை சமூகத்தில் நிலவிய எந்தெந்த ஏற்றத்தாழ்வை எதிர்த்துப் போராடி கிழித்திருக்கின்றனர், எங்கெங்கெல்லாம் சமத்துவத்தை நிலைநாட்டியிருக்கின்றனர் என்பது போன்ற எளிய கேள்விகளைக் கூட எழுப்பவில்லை. தாங்கள் எதிர்பார்க்கும் வகையில் பேசக்கூடிய பத்துப்பேரை இழுத்துவந்து இங்கிலீசில் பொளந்து கட்டினார்கள். புலம்பியும் தீர்த்தார்கள். ஒரு தகவல் தொடர்புச் சாதனம் என்ற நிலையிலிருந்து வெகுவாக இழிந்து பிரச்னையில் தொடர்புடைய இருசாரரில் ஒருதரப்பாக மாறி வாயில் நுரைதள்ள வாதிட்டன.

உழைக்கும் மக்கள் எவ்வளவு நியாயமான காரணங்களுக்காகப் போராடினாலும் பொதுஅமைதிக்குப் பங்கம் நேர்வதாகவும் மக்கள் அவதியுறுவதாகவும் வரிப்பணம் வீணாவதாகவும் அரற்றித் திரியும் ஊடகங்கள் இவ்விசயத்தில் எதுவும் பேசாமல் அமைதி காத்தன. அதாவது ஆதரவாக இருந்தன. பணிக்கலாச்சாரம் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளும் பொதுநல விரும்பிகளும் உண்மை விளம்பிகளும், போண்டாவில் உப்பில்லை புண்ணாக்கில் சத்தில்லை என்று பொதுநல வழக்கு தொடுக்கிறவர்களும்கூட இம்முறை பொத்திக் கொண்டு சும்மாயிருந்தனர். ஒரு பேரணியினால் தன் பயணம் சற்றே தாமதித்து விட்டதற்காக ஊரில் ஒருவனும் பேரணி நடத்தக்கூடாது என்று (யாரும் வழக்கே போடாத நிலையில்) தீர்ப்பளிக்கின்ற நீதிபதிகள் கூட, சில மருத்துவ மாணவர்களும் மருத்துவர்களும் நடத்திய அட்டூழியங்களில் தலையிட முன்வரவில்லை. வேலைநிறுத்தம் செய்கிற நாட்களுக்கு No Work No Pay என்று கடந்த காலங்களில் நியாயம் பேசிய நீதிமன்றங்கள் ரகளை செய்த இந்த மருத்துவர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்ததற்கு அரசையே கடுமையாக எச்சரித்ததுகூட ஏனென்று யாருக்கும் விளங்கவில்லை.

இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தின் பிரிக்கமுடியாத பகுதி. எனவே இடஒதுக்கீட்டை எதிர்ப்பதென்பது அரசியல் சட்டத்தையே எதிர்ப்பதுதான். நேரடியான அர்த்தத்தில் அது ஒரு தேசவிரோதச் செயல். ஆனால் இந்த தேசவிரோதிகள் நாட்டின் அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கும் மிக உயரிய பொறுப்பிலிருக்கும் குடியரசுத் தலைவரைச் சந்திக்கின்றனர். தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோருகின்றனர். தற்கொலை என்கிற மனப்பிறழ்வுக்கு முறையான உளவியல் சிகிச்சைக்கும், இந்த மிரட்டல் போக்கிற்கான தண்டனைக்கும் உத்திரவிடுவதற்கு பதிலாக ‘பரிவோடு கவனிப்பதாக’ குடியரசுத்தலைவரும் ஆறுதல் கூறினாரென செய்திகள் வெளியாயின. உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பொறுப்புணர்வை கைவிட்டு சாதிவெறியேறி தெருவுக்குள் உலும்பித் திரிந்த அந்த மருத்துவர்களை பணிக்குத் திரும்புமாறு நிர்ப்பந்திப்பதற்குப் பதிலாக, இடஒதுக்கீடு அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர் பலமுனைகளிலும். குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து வேண்டியதை கொள்ளையிட்டுப் போகும் கயமைக்கு குறைவற்றது இந்த கனவான்களின் செயல். தங்களது சாதிநலனை காத்துக் கொள்ள எவரது உயிரையும் பலி கொடுக்கத் தயங்காதவர்கள் என்பது மறுமுறையும் உறுதியானது.

II

நடந்த சம்பவங்களின் மீது எதிர்வினை புரிய விரும்பும் சமூகநீதி ஆர்வலர் எவரொருவரும் ‘சமத்துவத்திற்கான இளைஞர் குழு’ என்ற பெயருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலிருந்தே தன் பணியைத் தொடங்க வேண்டியிருக்கும். ஹிட்லனும் முசோலினியும் கோர்ப்பசேவும் எல்ட்சினும் சோசலிசம் என்ற போலி முழக்கத்தோடு செயல்பட்டதற்கு இணையான மோசடிதான் இவர்கள் சமத்துவம் என்று பேசுவதும். வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதபடிக்கு சமத்துவம் என்ற சொல்லும் பொருளும் இழிவுபடுத்தப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவிக்குமாறு உண்மையான சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டு செயல்படும் அமைப்புகளை தூண்டிவிட்டாலும் கூட தவறில்லை. இவர்கள் சொல்லும் சமத்துவத்தின் பின்னே மறைந்திருக்கும் சூதுக்கள் குறித்து மக்களை எச்சரிக்கைப்படுத்துவதும்கூட ஒரு சமூகநீதி ஆர்வலனின் முக்கிய கடமையாகிறது.

சமத்துவத்திற்கான இளைஞர் குழு என்ற பெயரில் மறைந்திருப்பவர்கள் அனைவரும் உயர்சாதியினர் என்று தம்மைத்தாமே சொல்லிக் கொள்கிறவர்கள் தான். அவர்களிலும் பெரும்பாலானோர் பார்ப்பனர்கள். அவர்கள்தான் இந்த இடஒதுக்கீடு எதிர்ப்புக்குத் தேவையான தத்துவார்த்தப் பின்புலத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். சுயசாதி அகங்காரங்களையும் போலிப் பெருமிதங்களையும் உதறிவிட்டு சாதி மறுப்பாளர்களாக செயல்படுகின்றவர்களைத் தவிர அனேகமாக மற்ற பார்ப்பனர்கள் அனைவருமே இடஒதுக்கீடு எதிர்ப்பை தமது வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ளனர். தொழிற்சங்கம், கலை இலக்கியம், பத்திரிகை, அரசியல் கட்சி என்று பல்வேறு சமூக இயக்கங்களில் உற்சாகமாகப் பிறசாதியாரோடு பங்கேற்கும் இவர்கள் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நடைபெறும் எந்த இயக்கத்திலும் தென்படுவதில்லை. அது தனிப்பட்ட முறையில் தனக்குத்தானே சூன்யம் வைத்துக் கொள்வதற்கு ஒப்பாகும் என்கிற மனோபாவம் அவர்களுக்கு இயல்பாகவே இருக்கிறது. ஒவ்வொரு அரசாங்க அலுவலகமும் ஒரு குட்டி அக்ரஹாரமாக திகழ்ந்த அந்தக் கடந்த காலத்தை எண்ணி அவர்கள் விடும் பெருமூச்சு கூட இடஒதுக்கீடு ஒழிக என்றுதான் அடங்குகிறது.

ஒரு பார்ப்பனர் எந்த அமைப்பில் இயங்கினாலும் இடஒதுக்கீடு பிரச்னை என்று வருகிறபோது தனக்கான தலைமையை வெளியே தேடுகிறவராகிறார். அந்த வகையில் 1902ல் பார்ப்பனரல்லாதாருக்கு முதன்முதலில் இடஒதுக்கீடு வழங்கிய கோல்காபூர் மன்னர் சாகு மகராஜ் பார்ப்பனருக்கு எதிரியாகவும் அவ்வொதுக்கீட்டை எதிர்த்த திலகர் தலைவராகவும் ஆகிவிடுகின்றனர். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்திலும் தாழ்த்தப்பட்டோருக்கு பங்கு வேண்டுமென்று 1890களிலேயே முழங்கிய அயோத்திதாசரும் ரெட்டைமலை சீனிவாசனும் அவர்களுக்கு முன்பே கோரிய ஜோதிராவ் பூலேவும், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரிய பெரியாரும், தலித்களுக்கும் பழங்குடியினருக்குமான பிரதிநிதித்துவத்தை அரசியல் சட்டப்பூர்வமாக்கிய அம்பேத்கரும் விரோதிகளாகி விடுகின்றனர். சங்பரிவாரத்தை பல காரணங்களுக்காக எதிர்க்கும் பார்ப்பனரும்கூட இடஒதுக்கீடு பிரச்னையில் ஹெட்கேவாரையும் கோல்வால்கரையும் தலைவர்களாக ஏற்றுக் கொள்கிறவராகிறார். அதாவது அவர் ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்து அரை டவுசரோடு நிற்கவில்லையே தவிர கருத்தளவில் அவ்வமைப்பினராகி விடுகிறார். இடஒதுக்கீடு பற்றிய கருத்தளவிலான இந்த முறிவு அல்லது பிளவு குடும்பம் தொடங்கி இந்திய சமூகத்தின் எல்லா அமைப்புகளிலும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்று தலித் சிந்தனையாளர் வி.டி.ராஜசேகர் கூறியது முற்றிலும் உண்மை.

மனிதகுலம் எப்படி தோன்றி பரிணாமம் பெற்றது என்பது குறித்த விஞ்ஞானப்பூர்வமான பார்வை கொண்டிருந்தாலும்கூட, கடவுளின் நெற்றியிலிருந்து பிறந்தவன் என்கிற பொருள்படும் பிராமணன் என்ற வர்ணாசிரம வார்த்தையால் தான் அழைக்கப்படுவதையே ஒரு பார்ப்பனர் பெரிதும் விரும்புகிறார். கடைசியாக வந்தவன், இளையவன் என்று பொருள்படும் பார்ப்பு என்ற அழகிய தமிழ்ச்சொல்லை அடிப்படையாய்க் கொண்டு பார்ப்பனர் என்று விளிப்பதை அவமதிப்பென குமைகின்றனர். (மற்ற எந்த அன்னியர்களையும் போலவே பிராமணனும் இந்தியப் பொதுமக்களுக்கு அன்னியனே என்று அம்பேத்கர் சொல்வதை இங்கே இணைத்துப் பார்க்க வேண்டும்.) எங்கிருந்தோ வந்து கடைசியாக இச்சமூகத்தில் சேர்ந்தவர்கள் என்று தமது பூர்வீகத்தை நினைவூட்டும் அவ்வார்த்தையின் உண்மைத் தன்மையை விடவும் பிராமணன் என்பதன் புராணத் தன்மையை அவர்கள் விரும்புவதற்கு காரணம், அது சமூகத்தில் தங்களுக்கு மிக உயரிய அந்தஸ்தையும் பெரும் செல்வத்தையும் அதிகாரத்தையும் கொடுத்த வார்த்தை என்பதால்தான். அந்த வார்த்தை உருவான வரலாற்றுப் பின்னணியில்தான் இந்திய சமூக வரலாற்றின் இருளடைந்த பக்கங்கள் வெளிச்சத்திற்கு ஏங்கி மறைந்து கிடக்கின்றன.

எல்லாவற்றையும் காரண காரியத்தோடும் அவை உருவான காலத்தோடும் பொருத்திப் பார்க்கும் தர்க்கப்பூர்வமான அணுகுமுறையையே வலியுறுத்தும் சில பார்ப்பனர்கள்கூட இடஒதுக்கீட்டின் மூலத்தை அறிய வரலாற்றுக்குள் நுழைவதை விரும்புவதில்லை. ஏனென்றால் அங்கே இவர்கள் ரசிக்கத்தக்க எதுவுமேயில்லை. இருப்பதெல்லாம் அவர்கள் இன்று பேசிக் கொண்டிருக்கும் தகுதி திறமை பரம்பரை அறிவுத்திறன்களை எப்படி கைக்கொண்டார்கள் என்பதை அம்பலப்படுத்தும் சான்றுகள் மட்டுமே. எப்போதோ நடந்ததைப் பற்றி இப்போதென்ன பேச்சு என்று சொல்வதன் மூலம் கடந்த காலத்தை நிராகரிக்கின்றனர். அதாவது நிகழ்காலத்தில் இருப்பதைப் போலவே காலகாலமாய் எல்லாமும் இருந்ததான ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

III

இந்திய சமூகத்தில் நடைபெற்ற ஒரேயொரு இடஒதுக்கீடு வர்ணாசிரமக் கோட்பாடு தான். தொழில் அடிப்படையில் பிரிந்திருந்தாலும் உயர்வு தாழ்வு, தீட்டு புனிதம் என்ற பாகுபாடு அற்றிருந்த இந்திய சமூகத்தை இந்த வர்ணாசிரமக் கோட்பாடுதான் இணக்கம் காண முடியாத வர்ணங்களாக பிரித்தது. வர்ணங்களை கிடைமட்டமாக சமதளத்தில் வைக்காமல் ஒன்றின் கீழ் ஒன்றான படிவரிசையில் தாழ்த்தியது. ஆகச்சிறந்த அனைத்தையும் பார்ப்பனர்களுக்கே - அதாவது பார்ப்பன ஆண்களுக்கே - என்று ஒதுக்கீடு செய்தது. எடுத்தயெடுப்பில் அது இங்கேயே எல்லா வர்ணத்துப் பெண்களையும் புனிதமற்றவர்கள் என்று கீழ்மைப்படுத்தி எல்லாவற்றிலிருந்தும் ஒதுக்கி வைத்ததன் மூலம் போட்டியாளர்களில் ஒரு பெரும்பகுதியை ஒழித்துக் கட்டியது. பிறகு அது ஆண் போட்டியாளர் பக்கம் திரும்பியது. பார்ப்பனர்களைத் தவிர்த்த அனைவரையும் பார்ப்பனர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யுமாறு பணித்தது. இந்த நியதி மீறப்படாமல் இருப்பதற்கான சட்டங்களை இயற்றியது. எதிர்ப்புகளையும் மீறல்களையும் ஒடுக்கும் கடும் தண்டனைகள் நடைமுறைக்கு வந்தன.

பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும் முற்றுரிமைகளையும் கேள்விக்குட்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை சமூகத்தில் தகவமைக்கும் நுட்பங்களோடு புராணங்கள் இதிகாசங்கள் காவியங்கள் நாடகங்கள் உள்ளிட்ட கலை இலக்கியப் படைப்புகள் வெளியாகின. இதன் மூலம் இயற்கை வளங்களான நிலம் நீர் காற்று, பொதுச்சொத்துக்களான கல்விச்சாலைகள், பண்டகசாலைகள், வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றில் பார்ப்பனர்களுக்கே முதலுரிமை வழங்கப்பட்டது. அரசனின் பட்டத்து மகிஷியை கன்னி கழிக்கும் உரிமைகூட பார்ப்பனர்களுக்கிருந்தது. ஒரு பார்ப்பனர் யாரைத் தொடுகிறாரோ அல்லது தொட மறுக்கிறாரோ அதைப் பொறுத்து ஒருவர் தீண்டத்தக்கவரா தீண்டத்தகாதவரா என்பது முடிவானது. எண்ணையும் தண்ணியும் யாரிடமிருந்து ஒரு பார்ப்பனர் பெற்றுக் கொள்கிறாரோ அதுவே ஒருவரின் சமூக அந்தஸ்தை தீர்மானிப்பதாயிருந்தது.

வேதங்களை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டு முறைகளான யாகங்கள், பரிகாரங்கள், மந்திரங்கள், சடங்குகள் நடைமுறைக்கு வந்தன. பார்ப்பனரல்லாதாரின் பண்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் இழிவுக்குரியதாய் அறிவிக்கப்பட்டன. அவர்களது உணவு, உடை, இருப்பிடம், நம்பிக்கைகள், தெய்வங்கள், பண்டிகைகள் எல்லாவற்றின் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கும் அதிகாரம் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டது. ஓட்டுவீடு கட்டிக்கொள்வது, குடை எடுத்துச் செல்வது, செருப்பணிவது, சவரம் செய்து கொள்வது, புத்தாடை அணிவது, இடுப்புக்கு மேலும் முழங்காலுக்கு கீழும் உடை அணிவது, நெய் உண்பது, தார்ப்பாய்ச்சி வேட்டி கட்டுவது, பொன்னாலான நகை அணிவது, தேர்/குதிரைசவாரி ஆகிய அனைத்தும் சூத்திரசாதியாருக்கும் பெண்களுக்கும் தடை செய்யப்பட்டது. சொத்து வைத்துக் கொள்ளும் உரிமையும் இவர்களுக்கு முற்றாக மறுக்கப்பட்டது. சூத்திரசாதியார் சமூகரீதியாகவும் பொருளாதாரரீயாகவும் பின்தங்கியதற்கான காரணம் இங்கே தொடங்குகிறது. இவர்களது மொழி இழிசனர் மொழியாக அறிவிக்கப்பட்டதால் இவர்களது கலை இலக்கிய வெளிப்பாடுகளும்கூட இழிசனர் வழக்காக ஒதுக்கப்பட்டன. இந்தத் துவேஷம் இன்றுவரை நீடிப்பதன் சான்றுதான் சிதம்பரம் கோயில் விவகாரம்.

வேதங்களை படிப்பது பயிற்றுவிப்பது என்பதே அன்றைய கல்வியாக இருந்த நிலையில் இந்த வேதகல்வி என்பது எட்டாண்டு காலம் நாளொன்றுக்கு சராசரியாக பன்னிரண்டே வரிகளை படிப்பது தான். ஆனால் இதை படிக்கும் திறமை சமூகத்தின் பெரும்பகுதியினராகிய பெண்களுக்கும் உழைக்கும் மக்களாகிய சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் கிடையாதென்று மறுத்துவிட்டு பார்ப்பன ஆண்கள் மட்டுமே கற்றனர். தேவபாஷையாகிய சம்ஸ்கிருதத்தில் உள்ள வேதஸ்லோகங்களை பெண்களும் பார்ப்பனரல்லாத மற்றவர்களும் ஓதினாலோ ஓதுவித்தாலோ அது தீட்டுக்குரியதாகிவிடும் என்று விளக்கம் தரப்பட்டது. அதை மீறி வேதம் பயில முயன்ற சம்புகனை ராமனே தேரேறிப் போய் கொலை செய்த கதை நாடறிந்த ஒன்றுதான். (இப்பேர்ப்பட்ட ராமனின் ராஜ்ஜியத்தைத்தான் இங்கே நிறுவப்போவதாய் சங்பரிவாரம் கூறுகிறது). வேதமந்திரங்களை உச்சரித்ததற்காக நாக்கை வெட்டிவிடும் தண்டனை மராட்டியத்தில் நமது தாத்தா பாட்டி காலம் வரை இருந்தது. புராணகாலத்தில் மட்டுமல்ல, தீட்டுக்குரியவர்களாகிய பொற்கொல்லர்கள் நமஸ்காரம் என்ற சமஸ்கிருத வார்த்தையை உச்சரித்து தீட்டுப்படுத்துவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று சித்பவன பார்ப்பனர்கள், கிழக்கிந்திய கம்பெனியின் தலைவருக்கு எழுதிய கடிதத்தின்பேரில் அப்படியொரு தடை உத்தரவு 09.08.1779 அன்று வெளியிடப்பட்டது. (அம்பேத்கர் தொகுப்புநூல் 25, பக்கம் 78,79). மகாத்மா ஜோதிராவ் பூலேவும் அவரது துணைவியாரும் நடத்திய பெண்களுக்கான பள்ளி எரிக்கப்பட்டது.

வேதத்தை ஏற்காதவர்களும் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தவர்களும் வர்ணப்பிரிவினைக்கு வெளியே அவர்ணர்களாக பஞ்சமர்களாக ஒதுக்கப்பட்டனர். உயர்வர்ணத்து ஆணும் கீழ்வர்ணத்து பெண்ணும் கலந்து அனுலோம சாதியும் உயர்வர்ணத்து பெண்ணும் கீழ்வர்ணத்து ஆணும் கூடி பிரதிலோம சாதியும் உருவானதாகக் கூறி இதில் பிரதிலோம சாதியை தீண்டத்தகாததாக அறிவித்து ஒதுக்கினர். இவர்கள் அனைவரும் சூத்திரர்களைவிடவும் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். இவர்களைக் கண்டாலும் இவர்கள் பேசுவதைக் கேட்டாலும் தீட்டு என்று அறிவிக்கப்பட்டது. சமூகத்தின் எந்த நடவடிக்கையிலும் இவர்கள் பங்கேற்பு தடை செய்யப்பட்டது. இவர்களுக்கு ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடம் தொடங்குவதை 1850லும் கூட பார்ப்பனர்கள் எதிர்த்ததாக பம்பாய் மாகாண கல்விக்கழக அறிக்கை தெரிவிக்கிறது. சூத்திரர்களும் பெண்களும் பஞ்சமர்களும் கல்வியில் முற்றாக விலக்கி வைக்கப்பட்ட வரலாறு இதுதான்.

ஆட்சி நீடிக்கவும் ராஜ்ஜியம் விரிந்து பரவவும் ஆயுள் நீட்டிப்புக்கும் எதிரிகளை ஒழிக்கவும் இன்னின்ன யாகங்களை செய்தாக வேண்டும் என்று அரசனை நிர்ப்பந்தித்தனர் பார்ப்பனர்கள். அந்த யாகங்களுக்காக பிரம்மதேயம், ஆர்யவர்த்தம், சதுர்வேதி மங்கலம், வேள்விக்குடி, அக்ரஹாரம் போன்ற பெயர்களில் மானியமாக பெருமளவு நிலங்களையும் கால்நடைகளையும், ஹிரண்ய கர்பா, துலாபுருஷதானம் போன்றவை வழியாக பொன்னும் இதர பொருட்களையும் பெற்று சொத்துடைமையுள்ள குழுவாக பார்ப்பனர்கள் மாறினர். உடல் உழைப்பை பாவகரமானதாக ஏற்கனவே அறிவித்துவிட்ட பார்ப்பனர்கள் இப்போது தானமாகப் பெறுகிற நிலங்களில் வேளாண்மை செய்வதை சாஸ்திரம் தடுத்தது. எனவே பார்ப்பனரின் நிலங்களில் பாடுபட்டு விளைவித்துத் தரும் பொறுப்பு சூத்திர சாதிகளுக்குரிய கடமையாக அறிவிக்கப்பட்டது. அதாவது இவர்கள் நிலத்தை விட்டு உடல் உழைப்பை விட்டு வேறுபக்கம் நகர்ந்துவிட முடியாதபடி வலுவாக பிணைக்கப்பட்டனர். பெரும்பாலான சூத்திரசாதிகளின் வாழ்வாதாரமாக விவசாயம் சார்ந்த தொழில்களே இருப்பதற்கு இதுவே காரணம்.

ஆக, சமூக மக்கள் தொகையில் சரிபாதியாய் இருக்கும் பெண்கள், உழைக்கும் மக்களாகிய சூத்திரர்கள், தீண்டத்தகாத சாதியினர், பழங்குடிகள் ஆகியோர் சொத்தில்லாதவர்களாக, கல்வியற்றவர்களாக இப்படித்தான் மாற்றப்பட்டனர். (பின்பு இதையே காரணம் காட்டி வெள்ளையராட்சியின்போது வாக்குரிமையும்கூட மறுக்கப்பட்டது. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்று அம்பேத்கர் முழங்கியது இதன் பொருட்டே) போட்டியாளர்கள் அனைவரையும் ஒழித்துக் கட்டிவிட்டு தன்னந்தனியாய் களத்தில் நின்றனர் இம்மாவீரர்கள். இந்த உயர்ந்த நிலையை அடைய அவர்களுக்கு துணையாக இருந்தவர்கள் சத்திரியர்கள். அரசாள்வதும் போர்புரிவதுமாகிய தொழில்களில் ஈடுபட்டு வந்த இந்த சத்திரியர்களை தமக்கு அடுத்த நிலையிலுள்ள உயர்வர்ணமாக அறிவித்ததன் மூலம் அரசனும்கூட தமது சேவகன்தான் என்ற நிலையை பார்ப்பனர்கள் உருவாக்கினர். சத்திரியர்கள் வேதம் படிக்கலாம் ஆனால் ஓதக்கூடாது. இப்படி பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக வேதம் படித்த இந்த சத்திரிய சாதியினர்தான், இப்போது இடஒதுக்கீடு எதிர்ப்பு ரகளையில் பார்ப்பனர்களோடு இணைந்து நிற்கிற பிற உயர்சாதி மாணவர்கள்.

சில வேத ஸ்லோகங்கள், யாக சடங்குகள், பரிகாரப் பூஜைகள் பற்றி தெரிந்து வைத்திருப்பது மட்டும்தான் வெள்ளையராட்சி வரும் வரை பார்ப்பனர்களிடமிருந்த அறிவு. இந்த அறிவு மனிதகுலத்திற்கு எவ்வகையிலும் பயன்படாத அறிவு. இந்த அறிவைப் பயன்படுத்தி உப்பு, புளி, மிளகாய், ஒருமுழக் கோவணத்துணி, ஒரு சட்டி, ஒரு துளி தண்ணீர், ஒரு விறகுக்குச்சி, ஒரு கவளம் சோறு, ஒரு சவரக் கத்தி, ஒரு கலப்பை என்று எதையும் பெறமுடியாது. கால்நடைகளை வெறுமனே யாகத்தில் பொசுக்கித் தின்னும் இறைச்சியாக பார்த்தது பார்ப்பனரின் அறிவென்றால், கால்நடைகளை செல்வமாகக் கருதி வளர்க்கவும் விருத்தி செய்யவும் பால் பொருட்களைப் பெறவும் பயன்பட்டது பார்ப்பனர் அல்லாத உழைப்பாளி மக்களிடமிருந்த அறிவுதான்.

நிலத்தில் இறங்கி உழுபடை வேலைகள் செய்வதை தீட்டாகக் கருதி பார்ப்பன அறிவு ஒதுங்கி நின்றபோது (ஒருவேளை ஏர் ஓட்டும் ஆசை வந்தால் கலப்பை பொம்மை செய்து விளையாடி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது சாஸ்திரம்) கால்நடைகளைப் பழக்கி விவசாயம் செய்யவும் புதிய தானியங்களையும் காய்கனி கிழங்குகளையும் உணவாகக் கண்டு கொடுத்த பெருமை எளியவர்களின் அறிவுக்குரியது. ஆடியில் நற்காரியங்கள் எதையும் செய்யக்கூடாது என்று பார்ப்பன அறிவு மிரட்டிக் கொண்டிருந்தபோது ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று பயிர்த் தொழில்களுக்கு ஏற்ற பருவங்களை கணிக்கும் அறிவு பார்ப்பனரல்லாதாருக்கு இருந்தது. விலங்குகளின் தோல்களை பதப்படுத்தி ஆடைகளையும் காலணிகளையும் கண்டுபிடித்ததும் இவர்களது அறிவுதான். இவர்கள்தான் இன்றைக்கு பார்ப்பனர்கள் பெரிதும் விரும்பிப் படிக்கும் Genetic Engineering, Tissue culture, Astronomy, Leather Technology போன்ற படிப்புகளுக்கு முன்னோடிகள்.

கடல்தாண்டுவது பாவம் சாஸ்திர விரோதம் என்று தடுத்தது பார்ப்பனர்களின் அறிவென்றால், கடலுள் மூழ்கி முத்தெடுக்கவும், மீன் பிடிக்கவும், கடல் மேல் பயணம்போய் வாணிகம் செய்யவும், கடல்நீரை உப்பாக மாற்றவும் பயன்பட்டது பார்ப்பனரல்லாத உழைப்பாளி மக்களின் அறிவு. இன்றைக்குள்ள Marine Technologyன் மூலவர்கள் பார்ப்பனரல்லாதவர்கள். பருத்தியை பஞ்சாக்கி பஞ்சை நூலாக்கி நூலை துணியாக்கும் தொழில்நுட்பச் சங்கிலியில் பார்ப்பனர்களின் கண்டுபிடிப்பு எது? பட்டுத்துணி உடுத்திக் கொண்டால் எந்தத் தீட்டும் அண்டாது என்று சொல்லத் தெரிந்த பார்ப்பன அறிவுக்கு ஒரு அங்குல நூல் நூற்கத் தெரியாது. சுட்டச் செங்கல்லை அறிந்ததும், சுதையை தயாரித்ததும் எவருடைய அறிவு?

ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டி நிற்கும் கோட்டை கொத்தளங்களையும் கோவில்களையும் அணைகளையும் கட்டிய அறிவு எந்த பார்ப்பனரின் கொடையுமல்ல. பனையை தீட்டுக்குரிய மரமாக பார்ப்பனர்கள் ஒதுக்கிவைத்த போது (இன்றும் கூட அவர்கள் பனங்கிழங்கு சாப்பிடுவதில்லை என்கிறார் முனைவர் தொ.பரமசிவன்) பனையோலையை பதப்படுத்தி எழுத்தோலையாக மாற்றிக்கொடுத்த அறிவு ஒரு பனையேறிக்குரியது. கையெல்லாம் காப்பேற உளிபிடித்துச் செதுக்கி காலத்தின் வரலாற்றைச் சொல்லும் கல்வெட்டுக்களை தந்தவர்கள் இன்றைய ஒட்டர்களுக்கும் போயர்களுக்கும் முன்னோடிகளாக இருக்கக்கூடும். காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் கவினுறு வனப்போடு திகழும் சிலைகள், சிற்பங்கள் எதன்மீதும் ஒரு பார்ப்பனனின் ரேகையுமில்லை.

சகமனிதனைத் தொடுவதே பாவம் என்று பார்ப்பனர்கள் தீட்டு பாராட்டிக் கொண்டிருந்தபோது பிணி முறிக்கும் வைத்திய முறைகளை மூலிகைகளைக் கண்டறிந்தவர்கள் பார்ப்பனரல்லாதவர்கள் தான். பார்ப்பனர்களின் வைதீக மரபுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த சித்தர்கள் கண்டடைந்த வைத்தியமுறை இன்றைய நவீனகால நோய்களுக்கும்கூட சிகிச்சையளிக்கும் வல்லமை கொண்டிருக்கிறது. குடிமைத் தொழிலாளிகளான நாவிதர்கள்தான் இந்திய கிராமங்களின் மருத்துவர்கள். அவர்கள் வீட்டுப் பெண்கள்தான் மகப்பேறு வைத்தியர்கள். AIIMSல் படித்த எந்த மருத்துவரும் கிராமத்திற்குச் செல்லாத நிலையில், அனுபவ வைத்தியர்களின் அறிவுதான் காலகாலமாக இந்திய சமூகத்தின் நோய்களைப் போக்கி வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய மருத்துவக் கல்வியின் முன்னோடிகள் இவர்கள்தான். தம்முடைய அலோபதியே சிறந்தது என்று நிறுவிட மண்சார்ந்த மருத்துவமுறைகளை பின்தள்ளினர் வெள்ளையர். சேவை என்ற நிலையிலிருந்து ஒரு தொழிலாக மருத்துவம் மாறியபோது பார்ப்பனர்கள் மருத்துவத் துறைக்குள் நுழைந்தனர்.

காட்டுவிலங்குகளை வேட்டையாடித் தின்ன அரசர்களுக்கு நேரம் கணித்துக் கொடுப்பதற்கும், வாழ்வின் அந்திமத்தில் வானப்பிரஸ்த கட்டத்திலும், சந்நியாச கட்டத்திலும் மட்டுமே ஒருவன் காட்டுக்குப் போகவேண்டுமென்று ஆசிரம விதிகளை வலியுறுத்திக்கொண்டும் இருந்தது பார்ப்பன அறிவு. ஆனால் காட்டின் மக்களாகிய பழங்குடிகள், அங்கிருக்கும் அரிய மூலிகைகளையும் வாசனைத் திரவியங்களையும் தேனையும் உண்ணத்தக்க கனிகளையும் கிழங்குகளையும் கண்டறிந்து சமவெளியின் மக்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். இயற்கையை வெற்றி கொள்வது என்கிற அழிவுச் சித்தாந்தத்திற்கு எதிராக இயற்கையோடு இயைந்து வாழும் நெறியை மனிதகுலத்துக்கு கற்றுக் கொடுத்தவர்கள் பழங்குடியினர்.

கலை இலக்கியத்திற்கு வந்தாலும் இரண்டு இதிகாசங்களை படைத்தவர்களும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றியவரும் பார்ப்பனரல்லாதவர்கள்தான். செய்யும் தொழில் சார்ந்த கருவிகள், உற்பத்தி, வினியோகம், வாணிபம் சார்ந்த சொற்களை உருவாக்கி மொழியை வளப்படுத்தியவர்களும் இவர்கள்தான். உழைப்பின் வழி பெற்ற அனுபவங்களை, இயற்கையின் மேன்மைகளை, வாழ்தலின் பாடுகளை தலைமுறைகளுக்கு மாற்றிக் கொடுக்கும் வகையிலான பாடல்களையும் கதைகளையும் நாடகங்களையும் பல்வேறு கலை வடிவங்களையும் உருவாக்கியவர்களும் இவர்களே. வேதத்தில் இல்லாதது எதுவுமேயில்லை என்று பார்ப்பன அறிவு தேக்கமுற்றுக் கிடக்கையில் பிறப்பின் தாலாட்டு தொடங்கி இறப்பின் ஒப்பாரிவரை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திற்குமான பாடல்களும் ஆடல்களும் வீரவிளையாட்டுகளும் பார்ப்பனரல்லாதாரின் பெருமைமிக்கக் கொடையாக இன்றும் உள்ளன. தேவபாஷை என்று விதந்தோதப்பட்ட பார்ப்பனர்களின் சமஸ்கிருதம் செத்த மொழியாகவும் பார்ப்பனரல்லாதோரின் மொழிகள் தழைத்து வளர்கின்றவையாகவும் உள்ளன. சமஸ்கிருதம் முதலில் மக்களை ஒதுக்கியது. பின் மக்கள் அதை ஒதுக்கிவிட்டனர். வளர்வதற்கான வீர்யமற்ற அந்த மொழியால் பார்ப்பனர்களின் உண்டியல்களுக்கு தட்சணைகளைத்தான் இன்றும்கூட பெற்றுத்தர முடிகிறதே தவிர இந்திய சமூகத்திற்கு இதுவரை ஆக்கப்பூர்வமாக எதை வழங்கியிருக்கிறது?

மண்ணில் புரண்டு வாழ்கிறவனுக்குத்தான் அந்த மண்ணில் என்னவெல்லாம் இருக்கிறது என்று தெரியும். விண்ணையே வெறித்துக் கிடப்பவனுக்கு தெரிவது நட்சத்திரமாகவோ சூரியனாகவோ நிலவாகவோ இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு சகமனிதனுக்கு என்ன பெற்றுத்தர முடியும்? எனவே பகுத்துப் பகுத்துப் பார்த்தால் பார்ப்பனர்களின் அறிவு சமூகத்திற்கு துளியும் பயன்படாத- இல்லாத கடவுளுக்கு பயன்படும் அறிவாகவும், பார்ப்பனரல்லாதவர்களின் அறிவு மனிதனின் வாழ்க்கைத் தேவைகளை உற்பத்தி செய்யக்கூடிய - வாழ்நிலையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு மேலேற்றிக் கொண்டு செல்லக்கூடிய அறிவாகவும் இருக்கிறது. ஆகவே வெள்ளையராட்சி வரும் வரை பார்ப்பனர்களுக்கிருந்த பரம்பரை அறிவு விஞ்ஞானப்பூர்வமானதோ மருத்துவம் சார்ந்ததோ உற்பத்தி சார்ந்ததோ அல்ல. அது வெறுமனே கோவிலில் மணியாட்டவும் மந்திரம் ஓதவுமான அறிவாக மட்டுமே முடங்கியிருந்தது. பார்ப்பனர்களுக்கு அடுத்திருந்த சத்திரிய சாதியினரின் அறிவும் ராஜ்ஜியங்களை காப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் தேவையான போர்த்தொழில் அறிவாக- அழிவுக்கான அறிவாக- மனிதகுலத்திற்கு எதிரான அறிவாகத்தான் இருந்தது.

IV

சாம்ராஜ்யங்கள் வெள்ளையரால் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அரசர்கள் இல்லாத பகுதிகளை விட்டு பார்ப்பனர் வெளியேறினர். நகரங்களை மையமிட்டு வளர்ந்த பிரிட்டிஷ் அதிகாரத்தில் ஒட்டிக் கொள்வதற்காக கிராமங்களை விட்டும் வெளியேறினர். கிராமங்களில் தமக்கிருந்த மானிய நிலங்களை பராமரிக்கும் பொறுப்பு அவர்களுக்கு அடுத்தடுத்த கீழ்நிலையிலிருந்த சாதியினரிடம் ஒப்படைத்தனர். தாங்கள் இதுவரை காத்துவந்த சாதி ஒழுங்குமுறை என்கிற ஒடுக்குமுறையும்கூட கைமாற்றித் தரப்பட்டது. பார்ப்பனர்களுக்குப் பதிலாக சாதியைக் காப்பாற்றும் பொறுப்புக்கு புதிய தலைமைகள் வந்தன. பார்ப்பனர்கள் இல்லாத நிலையிலும் இன்றளவும் கிராமப்புறங்களில் நிலவும் சாதி ஒடுக்குமுறைகளுக்கான உளவியல் பலம் பார்ப்பனர்களிடமிருந்தே பெறப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதே காலகட்டத்தில் உபரி உற்பத்தியை விற்பனை செய்வதில் ஈடுபட்ட வைசிய சாதிகள் பலம் பெறத் தொடங்கின. சத்திரியர்கள் செல்வாக்கிழந்த நிலையில் சமூகத்தின் அடுத்த சக்தியான வைசியர்களை தமக்கு அணுக்கமான சாதியாக பார்க்கத் தொடங்கினர் பார்ப்பனர். வைசிய சாதிகள் சிலவற்றுக்குப் பூணூல் அணிந்துகொள்ள அனுமதிக்குமளவுக்கு இந்த நெருக்கம் வளர்ந்தது. சமூகத்தின் மேல்நிலையிலுள்ள பார்ப்பன சாதி தம்மை அங்கீகரித்ததற்கு பிரதியுபகாரமாக அவர்களுக்கு விசுவாசம் கொண்ட புதிய தொண்டர்களாக மாறிய வைசிய சாதியினர் தமக்கு அடுத்தநிலையிலிருந்த சூத்திரர்களை ஒடுக்குவதில் விருப்பம் கொண்டிருந்தனர். பார்ப்பனர்களும் சத்திரிய சாதியினரும் நடத்தும் இடஒதுக்கீடு எதிர்ப்பு ரகளையில் இந்த பனியாக்கள் சிலர் சேர்ந்திருப்பதற்கான பின்னணி இதுதான்.

வேத மந்திரங்களை மனனம் செய்வதில் நூற்றாண்டு கால பயிற்சி பெற்றிருந்த பார்ப்பனர்கள் வெள்ளையராட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மனப்பாட கல்விக்குள் தங்களை எளிதாக பொருத்திக் கொண்டனர். (மனப்பாடம் செய்து மார்க் பெறுவதையே தகுதியாகவும் திறமையாகவும் இவர்கள் போற்றுவதற்கான வரலாற்றுக் காரணம் இதுதான்.) மாட்டிறைச்சி உண்பதால் இங்கே சிலசாதியினரை தீண்டத்தகாதவர்களென ஒதுக்கிவைத்த பார்ப்பனர்கள் அதே மாட்டிறைச்சியை மூவேளையும் தின்கிற வெள்ளையர்களுக்கு விசுவாசமான ஊழியர்களாகத் துடித்தனர். மன்னர்களுக்கு ராஜகுருக்களாயிருந்து மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான வழிமுறைகளை சொல்வதில் நீண்ட அனுபவம் பெற்றிருந்த பார்ப்பனர்கள் வெள்ளையருக்கும் கூட தேவைப்பட்டனர். இரண்டு ஒடுக்குமுறையாளர்கள் இணைவது ஒரு இயல்பான கூட்டணிதானே?

தவிர்க்கவியலாமல் கல்வி ஜனநாயகப்படுத்தப்பட்டது. கல்விக்கூடங்கள் பொதுவாக்கப்பட்டன. அவற்றில் யாரும் சேர்ந்து படிக்கலாம். ஆனால் தாழ்த்தப்பட்ட, சூத்திர சாதியார் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்ட கோவிலிலோ ஆதிக்கசாதியினரின் தெருக்களிலோ கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டன. எனவே கல்விக்கூடத்திற்குள் நுழையும் உரிமை, ஆதிக்கசாதி தெருவில் நுழையக்கூடாதென்கிற சாதித்தடையின் மூலமாக மறுக்கப்பட்டது. இன்றைக்கும் கிராமப்புறங்களில் ஆதிக்கசாதியினர் தெருக்களில் அமைந்துள்ள கல்விக்கூடங்களுக்கு வந்துபோவது ஒரு தலித் மாணவனுக்கு அச்சுறுத்தலான காரியம்தான். மீறி வருகிறவர்கள் சைக்கிளில் வரக்கூடாது, செருப்பணியக் கூடாது என்பது போன்ற தடைகள் இதன் நீட்சியாகவே நீடிக்கின்றன. இப்போதும் பெண்களுக்கு வெளியுலகத் தொடர்புகள் முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்ததால் வீட்டைவிட்டு வெளியேறி கல்விக்கூடங்களுக்கு செல்லும் வாய்ப்பு தடைபட்டது. ஆகவே பிரிட்டிஷ் ஆட்சியிலும் சாதிய பாலின ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டப்படவில்லை. மாறாக ஏற்கனவே இருந்த நிலை நீடிப்பதற்கும் வலுவடைவதற்கும் இந்திய உயர்சாதியினருக்கு பிரிட்டிஷ் ஆட்சி உதவிகரமாய் இருந்தது.

பிரிட்டிஷாரின் மருத்துவக் கல்வியை படிப்பதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற முன்னிபந்தனை வைக்கப்பட்டிருந்ததை இதற்கு உதாரணமாகக் கூறமுடியும். உண்மையில் சமஸ்கிருதம் பார்ப்பன ஆண்களுக்கு மட்டுமே தெரிந்த மொழி. அதை ஒரு முன்னிபந்தனையாக பிரிட்டிஷார் மாற்றியதன் மூலம் பிறசாதியாரும் பார்ப்பன பெண்களும்கூட மருத்துவப் படிப்புக்கு செல்லமுடியாத ஒரு தடையை நுட்பமாக ஏற்படுத்தினர். இப்படி போட்டியாளர்களை வெளியே நிறுத்திவிட்டு பாதுகாப்பாய் பதுங்கிப் பெற்ற அறிவைத்தான் இன்று தங்களது பரம்பரை அறிவாக பார்ப்பனர்கள் பீற்றுகின்றனர்.

இந்திய மக்களைக் கொண்ட ஒரு ராணுவத்தை பிரிட்டிஷார் உருவாக்கியபோது அதில் முதலில் இணைந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்தான். பிறகு மற்ற சாதியினரும் வந்து சேர்ந்த நிலையில் அவர்கள், தாழ்த்தப்பட்டவர்களோடு ஒரே முகாமுக்குள் தங்கமுடியாது என்று மறுப்பு தெரிவித்தனர். ஊருக்குள் நிலவும் ஒதுக்குதலை ராணுவத்திற்குள்ளும் கொண்டுவரத் துடித்த ஆதிக்கசாதியினரின் விருப்பத்திற்குப் பணிந்து தாழ்த்தப்பட்டோரை ராணுவத்தில் சேர்க்க தடை விதித்தது அரசு. இதையெல்லாம் கண்டு வெகுண்ட அம்பேத்கர், ‘புதுத்துணியைக் கொடுத்து இதேமாதிரி ஒரு சட்டை தைத்துத் தா என்றவனுக்கு, புதுச்சட்டை தைத்து அதையும் பழைய சட்டை மாதிரியே கிழித்துக் கொடுத்த சீனா டைலர் கதையைப் போல’ ஏற்கனவே இருக்கும் கிழிசலை பிரிட்டிஷ் அரசும் அப்படியே பாதுகாப்பதாக குற்றம் சாட்டினார். அதாவது சமூகத்தை நிர்வகிக்கும் பொறுப்புகளில் கடந்த காலத்தைப் போலவே இப்போதும் பார்ப்பனர்களின் மேலாதிக்கம் நீடிப்பதாக குற்றம் சாட்டினார். அம்பேத்கரின் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக மேலும் சில விவரங்களை வரலாறு நமக்குத் தருகிறது.

1770ல் நியமிக்கப்பட்ட பதினைந்து இந்திய ஐசிஎஸ் அதிகாரிகளும் பார்ப்பனர்களாகவே இருந்தனர். 1840ல் இந்திய நிர்வாகத்துறையை ஆய்வு செய்த பிரிட்டீஷ் அதிகாரி ஒருவர், ஒரு நாட்டின் நிர்வாகத்துறை முழுவதும் ஒரு சாதியின் கட்டுப்பாட்டில் இருப்பது ஆபத்தானது என்று அரசாங்கத்தை எச்சரித்தார். ஆனாலும் நிலைமையில் மாற்றமேதுமில்லை. 1885ல் காங்கிரஸ் உருவானபோது இந்தியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வேண்டுமென்ற கோரிக்கையும்கூட பார்ப்பனர்களுக்கு சாதகமாகவே அமைந்தது. படித்த இந்தியர்கள் அனைவருமே பார்ப்பனர்களாக இருக்கும் நிலையில் இது இயல்பானதுதான். இந்தியர் என்ற போர்வைக்குள் பதுங்கி பார்ப்பனர்கள் ஆதாயமடைவதைத் தடுக்கும் வழியேதும் இல்லை.

தடைகளை மீறி படித்த சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் நிர்வாகத்திலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை 1870 தொடங்கி பூலேவும் அயோத்திதாசரும் ரெட்டைமலை சீனிவாசனும் எழுப்பி பார்ப்பன ஏகபோகத்திற்கு முடிவுகட்டும் முதல் மணியை ஒலிக்கச் செய்தனர். பார்ப்பனரல்லாதவர்களுக்கு பங்கு வேண்டுமென்ற கோரிக்கை நாடெங்கும் கிளம்பியது. 1902ல் கோல்காபூர் சமஸ்தானத்தில் நிர்வாகப் பதவிகள் அனைத்திலும் ஐம்பது சதவிகிதத்தை பார்ப்பனரல்லாதவர்களுக்கு ஒதுக்கி மன்னர் சாகுமகராஜ் உத்தரவிட்டார். இதுதான் பார்ப்பனர்களிடமிருந்த 100 சதவீத இடத்தை மறுபங்கீடு செய்து மற்றவர்களுக்கு வழங்கிய முதல் உத்தரவு. அன்று தொடங்கி படிப்படியாக நாட்டின் பல பாகங்களிலும் சாதி பலத்திற்கேற்ப பிரதிநிதித்துவம் வழங்கும் ஏற்பாடு நடைமுறைக்கு வந்தது. இதற்கு 1927ல் சென்னை மாகாணத்தில் நடைமுறைக்கு வந்த கம்யூனல் G.O. ஒரு முன்னோடியாக அமைந்தது. 1932ல் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே ஏற்பட்ட பூனா ஒப்பந்த அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு அதிகாரப் பகிர்வுகள் கிடைத்தன. 1950ல் இயற்றப்பட்ட அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் கம்யூனல் G.O. அரசியல் சட்டத்திற்கு முரணாக இருப்பதாகக் கூறி ஒரு பார்ப்பனர் தொடுத்த வழக்கினடிப்படையில் அவ்வுத்தரவை செல்லாததென்று அறிவித்தன சென்னை உயர்நீதி மன்றமும் பின் உச்சநீதி மன்றமும். பெரியாரின் போராட்டத்திற்குப் பிறகு அரசியல் சட்டம் முதல்முறையாக திருத்தப்பட்டு தமிழகத்தின் வகுப்புவாரி உத்தரவு காப்பாற்றப்பட்டது. 1953ல் காகா கலேல்கர் தலைமையில் அமைக்கப்பட்ட பிற்பட்டோர் கமிஷனின் பரிந்துரைகள் அரசால் ஏற்கப்படவில்லை. 1979ல் பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்பட்டோர் கமிஷன் ஓராண்டுகாலம் ஆய்வுசெய்து 11 காரணிகளின் அடிப்படையில் சமூகப் பொருளாதார, கல்வி அடிப்படையில் பிற்பட்டவர்களாக 3743 சாதிகளை அடையாளம் கண்டது. மக்கள் தொகையில் 52 சதவீதம் உள்ள இவர்களுக்கு கல்வி, வேலை ஆகியவற்றில் 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இடஒதுக்கீட்டுக்கு எதிராக 1963 ல் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் மொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக மக்கள் தொகையில் 52 சதவீதம் பேராக உள்ள பிற்பட்டோருக்கு 27 சதம் என்று பரிந்துரைக்க வேண்டியதாயிற்று.

பத்தாண்டுகளுக்குப் பிறகு இடதுசாரி, வலதுசாரிகளின் ஆதரவில் அமைந்த தேசிய முன்னணி அரசு 1990ல் மண்டல் கமிஷன் அறிக்கையை ஏற்றுக்கொண்டு முதல் கட்டமாக வேலை வாய்ப்புகளில் 27 சதவீதம் பிற்பட்டோருக்கானதென்று அறிவித்தது. உயர்சாதியினர் ரகளை செய்தனர். ரதயாத்திரை நடத்தினர். ராஜீவ் கோஸ்வாமியை எரித்தனர். அரசையே கவிழ்த்தனர். அத்வானியும் ராஜீவ்காந்தியும் ஒருகுரலில் எதிர்த்தார்கள். அப்போது ‘கல்வியில் வேண்டுமானால் இடஒதுக்கீடு கொடுத்து தகுதியூட்டம் செய்யுங்கள், வேலைவாய்ப்பில் ஏற்கமாட்டோம்’ என்று எதிர்த்தனர். ஆகவே இப்போது உயர்கல்வியில் இடஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவை நியாயவுணர்ச்சியோடு அவர்கள் வரவேற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படியொரு பண்பு அவர்களிடம் வெளிப்பட்டதாக வரலாற்றில் எந்தப் பதிவுமில்லை. இப்போது உயர்கல்வியில் ஒதுக்கீடு கூடாது, ஆரம்பக்கல்வியில் வேண்டுமானால் சிறப்பு கவனம் செலுத்துங்கள் என்று எதிர்க்கின்றனர். நாளை ஆரம்பக் கல்வியில் தாழ்த்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் பிற்பட்டோருக்கும் சிறப்பு கவனம் செலுத்தும் திட்டம் ஏதேனும் அறிவிக்கப்படுமானால் அதை எதிர்க்க, பிறப்பதற்கு முன்பே வயிற்றிலிருக்கும்போதே ஏதாவது செய்யுங்கள் என்பது மாதிரியான வாதங்களைக்கூட அவர்கள் இப்போதே யோசித்திருக்கக்கூடும்.

இப்படி தங்களிடமிருக்கும் மொத்த இடங்களில் ஒரு பகுதியை பறித்தெடுத்து மற்றவர்களுக்குப் பங்கீட்டுக் கொடுக்கும் ஏற்பாடுகள் வரும்போதெல்லாம் எதிர்ப்பதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் எவையும் புதியவை அல்ல. கோயிலுக்குள் நுழையவும் குளத்தில் மூழ்கவும் கல்வி கற்கவும் சொத்து வைத்துக் கொள்ளவும் என்னென்ன காரணங்களை காட்டி மறுத்தார்களோ அதையேதான் இப்போதும் சொல்கிறார்கள். இட ஒதுக்கீட்டின் காரணமாக இந்திய சமூகம் சாதி ரீதியாக பிளவுண்டு போகுமென்று சமத்துவத்திற்கான இளைஞர் குழு தேசபக்த முழக்கமிடுகின்றது. ஆதிதிராவிடரும் அருந்ததியரும் அக்ரஹாரத்துக்குள் குடியேறி அர்ச்சகராகி விட்டதைப் போலவும், பார்ப்பனர்கள் அனைவரும் பறைச்சேரியில் மேளமடித்துக் கொண்டும் பொதுக் கழிப்பறையில் மலமள்ளிக் கொண்டும் இருக்குமளவுக்குச் சாதிப்பிரிவினைகள் மறைந்துவிட்டதைப் போலவும் கதையளக்கின்றனர். ஏற்கனவே சாதிரீதியாகப் பிரிக்கப்பட்டு சமத்துவமின்மையின் மீது சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளதால்தான் இப்போது இடஒதுக்கீடு தேவைப்படுகிறது என்கிற அடிப்படையான உண்மையை ஒத்துக்கொள்ள மனமின்றி நிலையை தலைகீழாக விவரிக்கின்றனர்.

இப்போது இந்திய சமூகத்தில் சாதி ஒரு பிரச்சினையே இல்லை என்பதைப்போல பாவனை காட்டுகின்றனர். ஆனால் ஒரு செத்த மாட்டிற்காக ஐந்து தலித்துகளை கொல்வதும், கோயில் கருவறைக்குள் பிறசாதியாரை நுழையவிடாமல் தடுப்பதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை தடுப்பதும், சமஸ்கிருதம் தவிர வேறொரு மொழியில் அர்ச்சனைகள் ஓதப்படாமல் இருப்பதற்கும் சாதிதானே காரணம்? ஆசி வாங்க வந்த தலித்கள் தொட்டுவிட்டால் தீட்டாகிவிடும் என்று தன் கால்களை பட்டுத்துணியால் காஞ்சி சங்கரன் மறைத்துக் கொண்டதற்கும், சங்கரமடத்தின் கல்லூரி விடுதிகளில் சாதியடிப்படையில் உணவுக்கூடம் பிரிக்கப்பட்டிருப்பதற்கும் சாதியல்லாமல் வேறென்ன காரணத்தை சொல்ல முடியும்? ஒரு வேலையைச் செய்வதற்கு தெரிந்திருப்பது ஒன்றே அதற்கு தேவையான தகுதியும் திறமையும். அப்படியானால் மணி ஆட்டத் தெரிந்த அனைவரையும் கோவிலில் அர்ச்சகராக்க வேண்டியதுதானே? ஆகவே தகுதி திறமை என்பதல்ல இவர்களது பிரச்சினை. மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளக் கூடாது என்கிற சாதிவெறியே தடுக்கிறது.

தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடவும் குழந்தை பெற்றுக் கொள்ளவும் தேவையான உடல் மன ஆரோக்யம்தானே ஒரு திருமணத்திற்கு தேவையான தகுதியும் திறமையும்... பிறகெதற்கு இன்ன சாதியில் இன்ன கோத்திரத்தில் மணமகன்/ள் வேண்டும் என்று இங்கிலிஷ் பேப்பரிலும் இன்டர்நெட்டிலும் விளம்பரம் வருகிறது? ரத்தக்கலப்பு நடக்காமல் சாதியம் ஒழியாது என்று அம்பேத்கர் சொன்னதை ஏற்றுக் கொண்டு செயல்படுத்திய பார்ப்பனர்கள் எத்தனை பேர்? சொந்த வாழ்க்கையில் எந்தக் கட்டத்திலும் சாதியைக் கைவிடாமலே சாதி ஒழிந்து விட்டதைப் போன்று பிதற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது? அம்பேத்கர் சொன்னதைப்போல ஒவ்வொரு தனிமனிதனையும் பிறப்பிலிருந்து இறப்புவரை சாதியை அடிப்படையாகக் கொண்ட இந்துமத கோட்பாடுகள்தானே வழிநடத்தும் நெறியாக இருக்கிறது? ஒவ்வொரு கிராமமும் நகரமும் ஊர் என்றும் சேரி என்றும் கிழிந்து கிடக்கிற யதார்த்தத்தை மறைத்து சாதியே இல்லை என்று ஓலமிடுவது மிகப்பெரும் மோசடி. இன்றுவரையிலும் சுடுகாட்டில்கூட சமத்துவத்தை கொண்டுவர முடியவில்லை என்பதுதான் உண்மை. ஆகவே, இடஒதுக்கீட்டால் சமூகம் பிளவுறவில்லை, சமூகம் பிளவுண்டிருப்பதால்தான் இடஒதுக்கீடு என்பதே சரியானது.

உயர் கல்வியில் இடஒதுக்கீடு அமலானால் தகுதியும் திறமையும் வேலைத்திறமும் குறைந்துவிடும் என்பதும் இவர்களது முக்கியமான குற்றச்சாட்டு. இதன் பொருள் பரம்பரை பரம்பரையாக உடலுழைப்புத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பிற்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மூளையுழைப்பு சார்ந்த ஒரு மருத்துவராகவோ, பொறிஞராகவோ, மேலாண்மை வல்லுனராகவோ இருக்கும் தகுதி கிடையாது என்பதே. உடலுழைப்பு என்பதே மிகுந்த அறிவுப்பூர்வமான செயல்பாடுதான். குறிப்பிட்ட கருவியைப் பயன்படுத்தி குறைந்த சக்தியை செலவிட்டு கூடுதல் பலனை பெறுவதற்குத் தேவையான முழு அறிவோடும்தான் ஒரு உழைப்புச் செயல்பாடு நிகழ்கிறது. உடலுழைப்பை அறிவிலிருந்து துண்டித்துப் பார்ப்பது அறிவீனம். அல்லது உழைப்பில் ஈடுபடாததால் உணர்ந்து கொள்ள முடியாத அனுபவக் குறைவாகவும் இருக்கக்கூடும். எனவே உழைக்கும் சாதியினர் வீட்டுப் பிள்ளைகளை அறிவற்றவர்களாக சித்தரிப்பதில் உண்மையேதுமில்லை.

பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்து தேர்வெழுதி பெறுகிற மதிப்பெண்ணைத்தான் இவர்கள் தகுதி திறமை என்கின்றனர். இன்றைக்கு பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு, +1 பாடங்கள் நடத்தப்படுவதேயில்லை. ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்புப் பாடமும் +1 வகுப்பிலேயே +2 பாடமும் நடத்தப்படுகிறது. ஓராண்டில் படித்து முடித்து பரிட்சையைச் சந்திக்க திராணியற்ற இம்மாணவர்கள் ஒரே பாடத்தை இரண்டு வருடங்கள் மனப்பாடம் செய்கின்றனர். இவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று தகுதியும் திறமையும் மிக்கவர்களாக கொண்டாடப்படுகின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகளில் இருக்கும் அரைகுறை வாய்ப்புகளை பயன்படுத்தி அந்த வகுப்புக்கான பாடத்தை அந்த ஒரு வருடத்தில் மட்டுமே படித்து பரிட்சை எழுதுகிற மாணவன் அறுபதோ எழுபதோ மதிப்பெண்கள் பெற்று தகுதி குறைந்தவனாக புறந்தள்ளப்படுகிறான்.

இப்போது நாம் எழுப்ப வேண்டிய கேள்வி, ஒரேபாடத்தை இரண்டு வருடம் படித்தவன் திறமைசாலியா அல்லது ஒரே வருடத்தில் படித்தவனா? இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் பார்வையில் என்ன தகிடுதத்தம் செய்தேனும் அதிக மதிப்பெண் எடுத்தவன்தான் திறமைசாலி, அவன்தான் மருத்துவராகவோ பொறியாளராகவோ விஞ்ஞானியாகவோ வருவதற்கு தகுதியானவன். இப்படி இட்டுக்கட்டிய தகுதியும் திறமையும் நமக்குத் தேவையில்லை. அந்த அரசாங்கப் பள்ளி மாணவனின் திறமைதான் இந்த நாட்டின் உண்மையான சராசரித் திறமை. இந்த நாட்டு மக்களின் சராசரி அறிவுக்கும் திறமைக்கும் மீறிய தகுதியோ திறமையோ ஒருவனுக்கு இருக்குமானால் அது இந்த சமூகத்திற்கு பயன்படக்கூடியதாக இருக்கமுடியாது என்பதற்கு இந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கக்கூடியவர்களே உதாரணம். அவர்கள் இந்த நாட்டுக்கு பெரும்பாலும் பயன்படுவதில்லை. டாலர் பிச்சைகளாக ஓடிவிடுகின்றனர். (இந்த உயர் கல்வி நிறுவனங்களில் படித்து முடிக்கிறவர்கள் பத்தாண்டு காலம் வெளிநாடு செல்லக்கூடாது, உள்நாட்டிலேயே பணியாற்ற வேண்டும் என்று சட்டம் வருமானால் தேசம் பற்றி பேசும் இவர்களின் வாய் எந்தத் திசையில் கோணிக்கொள்ளும் என்பது அப்போது தெரியும்)

நகர்ப்புற/ வசதியான மாணவனுக்கு கிடைக்கும் வாய்ப்புகளுக்கும் கிராமப்புறத்திலிருந்து வருகிற பிற்பட்ட/தாழ்த்தப்பட்ட/பழங்குடி மாணவனுக்கு கிடைக்கும் வாய்ப்புகளுக்கும் இடையேயுள்ள இடைவெளியை குறைப்பதற்கான ஏற்பாடுதான் இடஒதுக்கீடு. இந்த இடைவெளி ஒருவரது சாதி, சாதிக்கேற்ற பொருளாதார மற்றும் கல்வி பின்புலத்தால் தீர்மானிக்கப்படுகிறது. எனவே இடஒதுக்கீட்டை வெறும் பொருளாதாரப் பிரச்னையாகவோ அல்லது வெறும் சாதிப் பிரச்னையாகவோ மட்டும் குறுக்கிப் பார்க்கக்கூடாது. சாதி அடிப்படைக்குப் பதிலாக பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வந்தால் ஏற்றுக் கொள்வதாக குறுக்குசால் ஓட்டுகிறவர்களும் உண்டு. ஓரிரு மதிப்பெண் குறைவாகப் பெற்றவர் சாதி அடிப்படையில் உள்ளே வந்தால் தகுதி குறைந்துவிடும் என்றும் அவரே பொருளாதார அடிப்படையில் வந்தால் தகுதி குறையாது என்றும் விந்தையான வாதத்தை முன்வைக்கின்றனர். சாதி அடிப்படை ஒதுக்கீட்டை எதிர்க்கும் இவர்கள், என்.ஆர்.ஐ கோட்டாவையோ தனியார் கல்லூரிகளில் நடக்கும் ஏலத்தில் படித்து வந்தவர்களையோ பற்றி வாய் திறப்பதில்லை. கோட்டா முறையே கூடாது என்று கொக்கரிக்கும் ஏஐஐஎம்எஸ்-சில் இளநிலை மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு முதுநிலை படிப்பில் 25 சதமாக இருக்கும் கோட்டா குறித்தும் மௌனம் காக்கின்றனர்.

இடஒதுக்கீட்டின் மூலம் வருகிறவர்களால் பணியின் தரம் குறைந்துவிடும் என்று தம் பங்குக்கு இந்திய முதலாளிகளும் குதிக்கின்றனர். தாராளமயத்தின் விளைவால் இந்திய சந்தைக்குள் நுழையும் பன்னாட்டுக் கம்பனிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தங்களுக்கு அனுசரனையான ஆடுகளம் (Level playing field) வேண்டும் என்று கோரினர் இந்திய பெருமுதலாளிகள். அதாவது உலகம் முழுவதும் சுரண்டி கொழுத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களோடு போட்டியிட்டு வெற்றிபெற (கொள்ளையடிக்க) முடியாத நிலையில் இருக்கும் இந்திய தொழில்துறையைக் காப்பாற்ற ஒரு இடஒதுக்கீடு தேவை என்பதே இதன் உட்பொருள். முன்னூறாண்டு காலம் காலனிய ஆட்சியின்கீழ் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் தன் ஆளுமைகளை முழுமையாக வளர்த்துக் கொள்ளும் முன்பே தன்னை ஒடுக்கியவர்களோடு போட்டியிட வேண்டும் என்பது நெறியற்ற போட்டியாகும். எனவே இவர்களைப் பாதுகாக்க சில சிறப்பு ஏற்பாடுகளும் வலுத்தவர்கள் மீது சில கட்டுப்பாடுகளும் தேவைப்பட்டன. உள்நாட்டுத் தொழில்பாதுகாப்பு என்கிற கண்ணோட்டத்தில் இந்திய முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச்சலுகை, கடனுதவிகள், மானியங்கள் அனைத்தும் ஒருவகையான இடஒதுக்கீடுதான்.

‘எங்களுக்குத் தகுதியும் திறமையும் இருக்கிறது. போட்டியில் வென்றால் களத்தில் இருப்போம், தோற்றால் வெளியேறி விடுகிறோம்’ என்று வெத்துச்சவடால் விடவில்லை இந்திய முதலாளிகள். சமமான வாய்ப்புள்ளவர்களுக்கிடையே தான் போட்டி நடைபெறவேண்டும், வலுத்தவனுக்கும் இளைத்தவனுக்கும் இடையே நடந்தால் தாம் அழிக்கப்பட்டுவிடுவோம் என்ற நியாயமான அச்சத்தில் கோட்டா கேட்டனர். பெற்றனர். முதலாளிகளை தமது ஓட்டு வங்கியாக ஆக்கிக்கொள்வதற்காக இப்படியான ஒதுக்கீடுகள் செய்யப்படுவதாக ஒருவரும் பேசுவதில்லை. சலுகை கொடுத்தால் உற்பத்தியின் தரம் குறைந்துவிடும் என்று யாரும் ஓலமிடவில்லை. ஆனால் உயர்கல்வியில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டால், எல்லோரும் சமம், திறமையிருக்கிறவன் ஜெயிக்கட்டும் என்று இந்திய முதலாளிகள் புதுநீதி பேசுகின்றனர்.

சர்வதேசச் சந்தையில் போட்டியிட வேண்டிய நெருக்கடியை உலகமயமாக்கம் ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்போட்டியை எதிர்கொள்ளத் தேவையான தகுதியும் திறமையும் ஆற்றலும் இடஒதுக்கீட்டினால் பாதிக்கும் என்பதாலேயே எதிர்ப்பதாக முதலாளிகள் விளக்கமளிக்கின்றனர். அப்படியானால் இடஒதுக்கீடு என்பதே அமலாகாத இந்த தனியார் தொழில்துறையில் ஏன் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன? இந்த ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் தகுதியும் திறமையும் என்ன? முறையான கல்வியும் பயிற்சியும் பெற்ற நிரந்தர ஊழியர்களை சொற்பமாகவும், போதிய கல்வித் தகுதி பெறாத ஒப்பந்த ஊழியர்களை பெரும்பான்மையாகவும் வைத்துக்கொண்டுதானே உற்பத்தி செய்கின்றனர்? சர்வதேச தரச்சான்றிதழுடன் சந்தைக்குள் புழங்கும் பல நூற்பாலைகளில் எத்தனை பேர் டெக்ஸ்டைல் டெக்னாலஜி படித்தவர்கள்?

வறுமைக்காளான பகுதிகளிலிருந்து கொத்தடிமைகளாக பிடிக்கப்பட்ட பெண்களை ‘சுமங்கலித் திட்டம்’ என்ற பெயரால் ஆலை வளாகத்திற்குள்ளேயே அடைத்துவைத்து வேலைவாங்குகிற அயோக்கியத்தனத்தில் என்ன தகுதியும் திறமையும் வழிகிறது? உதிரி பாகங்கள் முழுவதையும் அவுட்சோர்சிங் வழியாக பெறுகின்ற முதலாளிகள் அங்கே தகுதிக்கும் திறமைக்கும் என்ன அளவுகோல் வைத்திருக்கின்றனர்? சந்தையில் விற்கிற சர்வதேச தரச்சான்றிதழ்களை வாங்கி மாட்டி வைத்துக்கொண்டு அதில் சொல்லப்பட்டிருக்கும் எல்லா நியதிகளுக்கும் எதிராக இயங்கும் இந்திய முதலாளிகள் தகுதி திறமை பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள்.

இடஒதுக்கீடு அமலாகும் அரசுத்துறைகள் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், அங்கே காலியிடத்தின் எண்ணிக்கை பூஜ்ஜியமே. அந்த பூஜ்ஜியத்தில் எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினாலும் என்ன பலன்? எனவேதான் சமூகத்தின் பொதுவளங்களை உறிஞ்சி வளரும் தனியார் துறையில் இடஒதுக்கீடு என்ற கோரிக்கை வலுப்பட்டு வருகிறது. ஒருவேளை இடஒதுக்கீடு இங்கு வருமானால், வேலைக்கு அமர்த்துவதும் துரத்துவதும் தனது முற்றுரிமையாக இருந்துவரும் நிலை நீடிக்காது என்று அஞ்சுகின்றனர் முதலாளிகள். முதலாளியின் தயவினால் அல்லாமல் அரசியல் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீடு உரிமையின் அடிப்படையில் வேலையில் சேர்வதாய் நினைக்கின்ற ஒரு தொழிலாளி, தங்களது சட்டமீறல்களை சகித்துக்கொள்வானா... தமக்கு அடங்கி நடப்பானா என்பதே இந்த அச்சத்தின் உட்பொருள். தமது சுரண்டலுக்குத் தடையாய் இருந்த தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்தையும் அனேகமாக ஒழித்துக் கட்டிவிட்ட நிலையில் புதிதாக வரும் எந்த கட்டுப்பாட்டிற்குள்ளும் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதும்கூட அவர்களது எதிர்ப்பிற்கு காரணமாய் உள்ளது. எனவே தான் உயர்கல்வியில் இடஒதுக்கீடு எதிர்ப்பு/ரகளைக்கு இந்திய முதலாளிகள் ஆதரவளிக்கின்றனர்.

V

முதலில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்றவர்கள் நடப்பிலிருக்கும் அனைத்து இடஒதுக்கீடு ஏற்பாடுகளையும் மறுபரிசீலனை செய்து நீக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 60 ஆண்டுகாலமாக நடப்பில் இருக்கும் இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யும் காலம் வந்துவிட்டது, இனியும் தாமதிக்கக்கூடாது என்று அத்வானி சொன்னதை இங்கு இணைத்துப் பார்க்கவேண்டும். மூவாயிரம் ஆண்டுகளாக நாட்டின் வளங்களையும் அதிகாரத்தையும் ஏகபோகமாக அனுபவித்து வந்தவர்கள் அதில் ஒரு சிறு பங்கை இழந்ததற்கே இத்தனை கூப்பாடு. பௌத்த மன்னர்களின் கீழ் இழந்த தனித்துவத்தை மீட்பதற்கு கொலைவாளேந்திய புஷ்யமித்ர சுங்கன் என்னும் பார்ப்பனன் கண்ணில் தெறித்த வெறி இன்னும் அடங்கவில்லை.

இவ்வளவு முட்டியும் இடஒதுக்கீட்டைத் தடுக்க முடியாத நிலையில் இப்போது கிரீமி லேயர் பற்றி பேசத் தொடங்கியுள்ளனர். இடஒதுக்கீட்டின் பலன்களை வசதியானவர்களே வளைத்துக் கொள்வார்கள் என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். இடஒதுக்கீட்டில் யாருக்கு முன்னுரிமை என்று முடிவெடுப்பது இடஒதுக்கீட்டின் பயனாளிகள் உரிமை. அதிலும் தலையிடுவதும், தாங்கள் சொல்கிறவர்களுக்கே தரவேண்டும் என்பதும் அப்பட்டமான ஆதிக்கசாதி கொழுப்பு.

உண்மையில் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் இருப்பதே பெரும்பாலான பார்ப்பனரல்லாத சாதியினருக்குத் தெரியாது. (அதை Iyer iyenkar technology என்று புரிந்துகொண்டு ஒதுங்கியவர்களும் உண்டு.) எனவே அவர்களும் விண்ணப்பிக்கப் போவதில்லை. இந்த சாதியினரிலேயே ஓரளவேனும் படித்து வேலையிலிருக்கிற ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவருக்குத்தான் இந்த விவரத்தையெல்லாம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. தவிரவும் இப்படியான உயர்படிப்புகளுக்கு தன் பிள்ளையை தயார்படுத்தத் தேவையான தொகையை (குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம்) செலவழிக்கவும்கூட அவர்களால்தான் முடியும். ஆனால் அவர் கிரீமி லேயராகி வெளியே நிறுத்தப்பட்டுவிடுவார். சாதிய ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் ஆட்பட்டிருக்கும் சவரத்தொழிலாளர் அல்லது சலவைத்தொழிலாளர் குடும்பத்திலிருந்து தக்கிமுக்கி ஒருவர் படித்து ஒரு இடைநிலை ஆசிரியராகி, அதே வேலையிலிருப்பவரை திருமணம் செய்து கொள்வாரெனில் அவர்களிவரும் அன்றிலிருந்தே கிரீமிலேயராகிவிடுவார்கள். எனில் ஒதுக்கீடு வந்தாலும் தகுதியான மாணவர் இல்லை என்று அவர்களுக்கான இடங்கள் நிரப்பப்படாத நிலை ஏற்படும். இந்த தந்திரத்தின் தொடர்ச்சியாகத்தான், பூர்த்தியாகாத கோட்டா இடங்களை பொதுஇடமாக அறிவித்து நிரப்பவேண்டும் என்று அசமத்துவத்திற்கான இளைஞர் குழு கோரியது. உச்ச நீதிமன்றமும் இதையே தீர்ப்பாக கூறியுள்ளது.

நடப்பிலுள்ள அனைத்து கோட்டா முறைகளையும் மறுபரிசீலனை செய்து ஆண்டுக்கு 2 சதவீதம் குறைத்துக் கொள்ளவேண்டுமென்றும், தகுதியானவர்கள் இல்லாமல் ஏற்படும் காலி இடங்களை பொதுஇடமாக அறிவிக்க வேண்டுமென்பதும் யூத் பார் (அன்)ஈக்வாலிட்டியின் அடுத்த கோரிக்கை. உச்சநீதி மன்றம் மிகுந்த பெருந்தன்மையோடு ஐந்தாண்டுக்கு ஒருமுறை பரிசீலிக்குமாறு பணித்துள்ளது.

இடஒதுக்கீடு பற்றிய உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு சமூகநீதிக் கோட்பாட்டையும் அதன் சாதனைகளையும் ஒரு நூற்றாண்டு காலம் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. சமூகநீதிக்கு எதிரான கடைசி அஸ்திரத்தை நீதிமன்றங்களுக்குள் ஒளிந்துகொண்டும் எய்கிறார்கள். வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஓ.சின்னப்பரெட்டி என்று விதிவிலக்காய் ஓரிருவர் இருந்த காலங்கள் தவிர்த்து அனேகமாக மற்றெல்லா நேரங்களிலும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனோபாவத்தை வெளிப்படுத்துவதை வழக்கமாய் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். யூத் பார் (அன்)ஈக்வாலிட்டி உறுப்பினர்கள் கோருவதெல்லாம் தீர்ப்பாக வருமெனில், பூணூலால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகளாக நாட்டின் எல்லா அமைப்புகளும் தன்னுணர்விலேயே மாறிக் கிடக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. பெரியார் மொழியில் கேட்பதெனில் அது உச்ச நீதிமன்றமா உச்சிக்குடுமி மன்றமா? யூத் பார் (அன்) ஈக்வாலிட்டியின் வழக்கறிஞர் பிரிவைப்போல நீதிமன்றங்கள் கீழிறங்கி வரக்கூடாது என்ற நமது பேராசையில் வண்டிவண்டியாய் மண்விழுகிறது.

பார்ப்பனிய ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டுவந்து மக்கள் தொகைக்கு ஏற்ப மறுபங்கீடு செய்வதற்கான தொடக்க முயற்சியே இடஒதுக்கீடு. இது விரிவடைந்து செல்லவேண்டிய தளங்கள் அனேகம் உண்டு. இடம் என்பதை வெறுமனே கல்வி வேலைவாய்ப்பு என்று சுருக்கிப் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. நாட்டின் இயற்கைவளங்களான நிலம்- நீர் நிலைகள், பொது சொத்துக்களான கல்வி நிலையங்கள்- சாலைகள்- போக்குவரத்து வாகனங்கள்- மின்சாரம்- தகவல் தொடர்பு சாதனங்கள்- மருத்துவமனைகள், நிதிநிறுவனங்களான வங்கிகள்- காப்பீடுகள், ஒப்பந்தங்கள், பண்பாட்டுக் கூறுகளான கலை இலக்கியம், பண்டிகைகள், நம்பிக்கைகள் ஆகிய அனைத்தும் இடமாக வரையறுக்கப்பட்டு அவை ஒரு நீதியானமுறையில் மறுபங்கீடு செய்யப்பட வேண்டும். சமூகத்தின் பின்தங்கிய நிலையில் ஒரு உடைப்பை ஏற்படுத்த நிலச்சீர்திருத்தம் தேவை என்னும் இடதுசாரிகள் கருத்தையே மண்டல் குழுவும் பரிந்துரைத்திருப்பது குறித்து சமூகநீதி ஆர்வலர்கள் கவனங்கொள்ள வேண்டும்.

இடஒதுக்கீடு என்றாலே அது தலித்களுக்கானது என்றெண்ணி அவர்களை கோட்டா பிள்ளைகள், கவர்மெண்ட் மாப்பிள்ளைகள் என்று ஏளனம் பேசிய பிற்படுத்தப்பட்டோர் இப்போதாவது தெளிவடைய வேண்டும். தமிழ்நாட்டில் 50 சதவீத இடஒதுக்கீட்டை அனுபவித்து வருகிற தாங்களும் கோட்டா பிள்ளைகளே என்பதையும் அது இழிவானதல்ல என்பதையும் உணரவேண்டும். தாழ்த்தப்பட்டவர்களை சமமாக கருதுவதற்கு எதிராக பிற்படுத்தப்பட்டவர்கள் என்னென்ன காரணங்களை முன்வைத்தார்களோ அதே காரணங்களைச் சொல்லித்தான் பார்ப்பனர்கள் இன்று பிற்பட்டோரை இழிவுபடுத்துகின்றனர். பிற்பட்டோர், மிகப்பிற்பட்டோர், குற்றப்பரம்பரையினர் என்ற வகைப்பாட்டிற்குள் நின்று இடஒதுக்கீட்டின் பயன்களை அனுபவித்துக் கொண்டே தலித்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையையும் கடைபிடிக்கும் மனவியாதியிலிருந்து பிற்பட்ட சாதியினர் விடுபடவேண்டும். இந்த ரட்டைக்குதிரைச் சவாரி ஆசை நிச்சயமாக இலக்கையடைய உதவாது.

தமக்கான பிரதிநிதித்துவம் அரசியல் சட்டத்திலேயே உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற மிதப்பில் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு குறித்து அக்கறை கொள்ளாத சில தலித் அறிவுஜீவிகளையும் அமைப்புகளையும்கூட இப்போது தெருவுக்கு இழுத்துவிட்டுள்ளது உச்சநீதி மன்றம். சமூகநீதியை தக்கவைக்கவும் பரந்த தளத்திற்கு முன்னெடுக்கவும் தலித்களும் பழங்குடியினரும் பிற்பட்டோரும் ஒன்றிணைந்து போராடும் நெருக்கடியை ஆதிக்கசாதியினர் உருவாக்கிவிட்டனர். நாம் எப்படி யாருடன் இணைந்து போராடவேண்டும் என்பதை நமது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.

சாதி என்கிற வெற்றுக் கற்பிதத்தை முன்வைத்து ஒவ்வொரு சாதியும் மற்றவர்களை ஒடுக்கும் மனநிலைக்கு இந்திய சமூகத்தை ஆட்படுத்தியது மனுநீதி என்றால், அதன் கேடுகள் யாவற்றிலிருந்தும் விடுபடுவதற்கான முன்னிபந்தனையாக இடஒதுக்கீட்டை வலியுறுத்துவது சமூகநீதியாகும். மனுநீதிக்கும் சமூகநீதிக்கும் இடையேயான போராட்டத்தில் நீ எந்தப்பக்கம் என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் யாரும் தப்பித்துவிட முடியாது. இருதரப்பிலும் சில நியாயங்கள் இருப்பதாகப் பேசுகிறவர்கள், இருதரப்புக்கும் பாதகமில்லாமல் தீர்வு சொல்வதாய் பல்லிளிப்பவர்கள், ‘ஆனால்...’ என்று இழுக்கிறவர்கள் எல்லோரும் முன்வைக்கும் வாதங்கள் தவிர்க்க முடியாமல் இடஒதுக்கீட்டை மறுப்பதாகவே இருக்கின்றன. இருக்கும் இடங்களில் ஒதுக்கீடு என்பதை ஒப்புக்கொள்ளத் தயாரில்லாத சாதிவெறியர்களை சமாதானப்படுத்தும் கேடுகெட்ட முயற்சியாக உயர் கல்வி நிறுவனங்களில் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் யோசனைகளும் வெளிவருகின்றன.

இடஒதுக்கீட்டிலுள்ள சமூகநீதியை ஒப்புக்கொள்ளும் நெருக்கடியை- புத்தித் தெளிவை அவர்களுக்கு உருவாக்காமலே நடைபெறும் எந்த விரிவாக்கமும் பயனற்றவையே என்பதை உணர்த்தும் இயக்கமாக, உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினராகிய பார்ப்பனரல்லாத தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டோரும், சாதி மறுப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தடையாக உள்ள சிறு கருத்தும் செயலும் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களுக்கே சாதகமாக அமையும். பார்ப்பனரல்லாதவர்களின் ஒற்றுமையில் நீடிக்கும் ஊனங்களால்தான் பார்ப்பனீயம் இன்னும் நீடிக்கிறது என்பதை யாவரும் உணரவேண்டியுள்ளது.

இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் வைக்கும் வாதங்களுக்குள் மறைந்திருக்கும் ஆதிக்க சாதி வெறியை அம்பலப்படுத்தவும், சமூகநீதிக் கோட்பாட்டை சமரசமின்றி செயல்படுத்துமாறு அரசை நிர்ப்பந்திக்கவும் தேவையான கருத்தியல் போராட்டம் எல்லா முனைகளிலும் வீறுடன் நடத்தப்பட வேண்டும். ஒத்தக் கருத்துள்ளவர்களை திரட்டவும் உடன்படாதவர்களோடு விவாதிக்கவும் இணக்கம் கொள்ளவைக்கவும் நடத்தவேண்டிய இப்போராட்டத்திற்கான தத்துவ பலம் மார்க்சிய அம்பேத்கரிய பெரியாரிய சிந்தனைகளில் பொதிந்திருக்கிறது.

---------ஆதவன் தீட்சண்யா அவர்கள் "அக்டோபர் - டிசம்பர் 2006 "புதுவிசை" இதழில்
பூனைக்கு மணி கட்டும் காலம் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை

தமிழ் ஓவியா said...

http://kuzhali.blogspot.com/2007/03/blog-post_30.html

மேற்கண்ட வலைப்பதிவுக்குச் செல்லுங்கள். அங்கு இட ஒதுக்கீடு தொடர்பான கட்டுரைகள் கிடைக்கும்.
படியுங்கள். தெளிவடையுங்கள்.
நன்றி.

தமிழ் ஓவியா said...

தங்களின் அய்யங்கள் அத்தனைக்கும் இப்பதிலடி பதில் அளிக்கும்.
படியுங்கள். யதார்த்தத்தை அறியுங்கள்.

"தாத்தா தாழ்ந்த ஜாதி என்றால் பொருளாதாரத்தில் கொடி கட்டிப் பறக்கும் கொள்ளுப் பேரர்களுக்கு இடஒதுக்கீடு அவசியமா? பாட்டி சிறுபான்மை இனம் என்றாலும் பாராளும் பேரப் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு தேவையா?" - இந்த வினாவை எழுப்பியிருப்பவர் (நெல்லை சு. முத்து) எழுதியிருப் பவர் சாதாரணமானவர் அல்லர் - மெத்த படித்த மேதாவி - விஞ்ஞானி - ஸ்ரீஹரிகோட்டாவில் பணியாற்றிக் கொண்டு இருப்பவர். தலைப்பே `இடர்தரும் இடஒதுக்கீடுகள் என்பதாகும்.

இப்படி வினாக்கணை தொடுப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தால் `இந்திரன் சந்திரன் என்று ஏற்றிப் போற்றப்படுவார்கள்.

வெகு தூரம் போக வேண்டாம். இவர் எழுதிய கட்டுரை `தினமணி யில் (7.5.2008) வெளிவந்ததே - இதற்கொரு ஆதாரமாகும்.

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரான திருவாளர் வைத்தியநாதய்யர் `தின மணியின் ஆசிரியராகப் பொறுப் பேற்றுக் கொண்டது முதல் இத் தகையவர்களைத் தேடிப் பிடித்து எழுத வைக்கிறார்.
`ஒரு விஞ்ஞானியே இப்படி எழுதுகிறார் பாருங்கள் என்கிற மலைப்பை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம்.

என்னால் முடிந்ததை நான் செய்திருக்கிறேன் - அதற்கு மேல் பகவான் செயல் என்று தன்னம் பிக்கை இல்லாத சில மருத்துவர்கள் கூறுவதை வைத்துக் கொண்டு `ஒரு மருத்துவரே கடவுள்மீது நம்பிக்கை வைக்கிறார் - அது எப்படி பொய்யாகும்? என்று பாமரத்தன மாக சிலர் வாதிடுவது இல்லையா - அதுபோன்ற யுக்தியே இதுவும்.

தாத்தா தாழ்ந்த ஜாதி - பேரன் பணக்காரன் - அதனால் பேரன் கல்விச்சூழலில் முன்னேறி விட்டான் என்பதற்கு என்ன ஆதாரம்?

இதையே ஒரு பார்ப்பனர் வீட்டை வைத்துப் பார்ப்போம். தாத்தாவும் பட்டதாரி பேரனோ முதுகலைப் பட்டதாரி - இந்தச் சூழல் தாழ்த்தப் பட்ட பிற்படுத்தப்பட்டவர் வீட்டில் கிடையாது என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டுச் சுற்றுச் சார்பு - கல்விச் செருக்குடையதாக இல்லையே. அவன் பிறந்த ஜாதி அவனைப் பிறப்பின் அடிப்படையில் கீழ்மைப் படுத்துகிறதே - இந்தச் சூழ்நிலையில் தலைமுறை தலைமுறையாகப் படிக்கும் வாய்ப்பை மத ரீதி யாகவும் சாஸ்திரங்கள் ரீதியாகவும், மன்னர்களின் சட்டங்கள் ரீதியாகவும் பெற்றுக் கொண்டிருந்த உயர் ஜாதியினருடன் சம தட்டில் வைத்து நிறுத்திப் பார்ப்பது வஞ்சனையல்லவா - ஏமாற்றும் நாடகம் அல்லவா?

பிற்படுத்தப்பட்டவர்களிலோ, தாழ்த்தப்பட்டவர்களிலோ ஏழைகளாகயிருப்பவர்களுக்கு பொருளாதார உதவிகள் அளித்து அவர்களை நிமிர்ப்பதுதான் ஒரு அரசின் வேலை - அதை விட்டு விட்டு சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னால் தள்ளப்பட்ட மக்கள் தொகுதியில் பொருளாதாரம் என்ற அளவுகோலைப் புகுத்தி பிளவுபடுத்துவது பெரும் மோசடியே!

பார்ப்பனர்களில் ஏழையாக இருப்பவர்கள் கல்வியில் பின் தங்கியிருக்கிறார்கள்; பணக் காரர்களாக இருப்பவர்கள் முன்னேறியிருக்கிறார்கள் என்று ஏன் சொல்லவில்லை?

பொருளாதாரத்தின் காரணமாக கல்வி வாய்ப்பு என்ற நிலையில்லாத நிலையில் அதனை அளவுகோலாக ஆக்குவது எப்படி? இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமில்லை என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்ட நிலையில், அதில் பொருளாதார நட்டகம் நுழைய இடம் அளிப்பது அறிவு நாணயமா?

மண்டல் குழு அறிக்கையில் வெளியிடப் பட்டுள்ள ஒரு புள்ளி விவரம் இந்தப் படித்த மேதைகளின் கண்களைத் திறக்குமா என்று தெரியவில்லை.
மத்திய அரசுத் துறைகளில் முதல் நிலை (group-1) பதவிகளில் இருப்பவர்கள் பற்றிய புள்ளி விவரம் அது.
தாழ்த்தப்பட்டோர் 7.18 ரூ (SC & ST)
பிற்படுத்தப்பட்டோர் 2.59 ரூ (BC)
பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதியினர் (F.C) 90.23ரூ

50 ஆண்டு காலமாக இடஒதுக்கீடு இருந்தும் தாழ்த்தப்பட்டோர் பெற்றுள்ள இடங்கள் 7.18 விழுக்காடு தானே! அந்தவாய்ப்புப் பிற்படுத்தப் பட்டோருக்கு இல்லாத காரணத்தால் மக்கள் தொகையில் 52 விழுக்காடாக இருந்தாலும் பிற்படுத்தப்பட்டோர் நிலை - தாழ்த்தப்பட் டோருக்கும் கீழாகத்தானே இருக்கிறது. விண்வெளிகூட விஞ்ஞானயாகிய திருவாளர் நெல்லை முத்து அவர்களுக்கு இந்தச் சின்னஞ்சிறு உண்மைகூடப் புரியவில்லையென்றால் அதற் காகப் பரிதாப்படுவதைத் தவிர வேறு நாம் என்ன செய்ய முடியும்!

கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு தேவை என்பது அவர்கள் சமூக நிலையை, மேலே கொண்டு வருவதற்குத்தான் என்பதை முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகவும், பின்னாளில் துணைப் பிரதமராகவும் இருந்த பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் தெரிவித்த கருத்து - இந்த விஞ்ஞானிகளின் கண்களை ஒருக்கால் திறந்தாலும் திறக்கலாம்.

``பீகாரில் 10 மாடு வைத்துள்ள ஒரு யாதவருக்கு 10,000 ரூபாய் மாத வருமானம் வரும். வசதியுடன் வாழ்வார். வெறும் 1000 ரூபாய்க்குள் மாத வருமானம் சம்பாதிக்கும் ஒரு போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் நினைத்தால், அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்து அவர்முன் மண்டியிடச் செய்துவிட முடியுமே! அதிகாரம் இதில் யாரை எப்படி உயர்த்துகிறது என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கூறினார் பாபுஜி.
சமுதாயத்தின் அடித்தட்டில் கிடந்தவருக்குத்தான் `அந்த வலி என்னவென்று தெரியும்.
இதில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். எதையும் அரை குறையாகத் தெரிந்து கொண்டு பேனா பிடிப்பது மெத்த படித்த வர்களுக்கு அழகன்று.

பிற்படுத்தப்பட்டோர்களுக்கு மத்திய அரசின் கல்வி நிறுவ னங்களும், வேலை வாய்ப்பிலும் இதுவரை இட ஒதுக்கீடே அளிக்கப்பட வில்லை. முதன் முதலாக இப்பொழுதுதான் கணக்கே திறக்கப்படுகிறது. இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டோரில் ஒரு பிரிவினர் வளர்ந்து விட்டனர் என்று அடம் பிடிப்பது அறிவு நாணயமானதுதானா?

மண்டல் அறிக்கையில் கூட 20 வருடங்களுக்குப் பிறகு இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தொடக்க நிலையிலேயே இப்படி தொல்லை கொடுப்பதும், முட்டுக்கட்டை போடுவதும் முற்போக்கான சிந்தனையா? முரட்டுத்தனமான அடாவடி எழுத்துகளா?

இந்த அதிகம் படித்த மேதாவிகள் பூமியில் காலைப் பதிக்காமல் (விண்வெளி ஆய்வு விஞ்ஞானியல்லவா!) கற்பனை வானில் பறந்து திரிகிறார்கள் போலும்.

விண்ணப்பங்களில் இன்னும் ஜாதி கேட் கிறார்களே என்று அங்க லாய்க்கிறார். இதனால்தான் ஜாதி இன்னும் இருப்பது போன்ற வளமான கற்பனை இவர்களுக்கு. இப்படி தோள் முறுக்கிக் கொண்டு எழுது கோல் பிடிப்பவர்கள் அரச மைப்புச் சட்டத்தின் வாயிலாக ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று எழுதும் துணிவு வரவில்லையே - ஏன்? இந்திய அரசமைப்புச் சட் டத்தில் (17-ஆவது பிரிவு) தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று தானே கூறப்பட்டுள்ளது. ஜாதி ஒழிப்புக்கு இடம் உண்டா? ஜாதி இருக்கும் வரை தீண்டாமை ஒழிந்து விடுமா? ஜாதியின் தீய குணம்தானே தீண்டாமை? இதைப்பற்றி எல்லாம் ஆழ்ந்த சிந்தனைப் போக்கு இல்லா மல் இடஒதுக்கீட்டினால் தான் ஜாதி இருக்கிறது என்று பேசுவது எதார்த்தமானதா?

பார்ப்பனர்கள் பொதுவாக இப்படி பேசுவது - எழுவது வாடிக்கை. அப்படி சொல்லுகிற - எழுதுகிற பார்ப் பனர்கள் ஆண்டுதோறும் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வதற்கென்றே ஆவணி அவிட்டம் என்ற மத நிகழ்ச் சியையே வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது நெல்லை முத்துக்களுக்குத் தெரியுமா?

படித்த மேதைகளுக்குப் புள்ளி விவரங்கள் என்றால் மெத்த பிடிக்கும்.
தேசிய மாதிரிக் கணக் கெடுப்பு நிறுவனம் (NSSO) 1999-2000 ஆண்டுக்கான ஒரு புள்ளி விவரத்தைத் தந்துள் ளது. 2.24 லட்சம் பேர்களிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு இது (பார்ப்பனர்கள் பற்றிய விவரம் இது) தொழில் நுட்பம் சாராத பட்டப் படிப்பில் பார்ப்பனர் 66ரூ; மருத்துவப் பட்டதாரிகள் - 65ரூ; பொறி யியல் மற்றும் தொழில் நுட்ப பட்டதாரிகள் - 67ரூ; விவ சாயப் பட்டதாரிகள் - 62ரூ; மத்திய அரசில் தாழ்த் தப்பட்டோருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு இருந்தும்கூட பார்ப் பனர்கள், உயர்ஜாதிகாரர்கள் இத்தனை தூரம் ஆதிக்கத்தில் கொடி கட்டிப் பறந்து கொண்டு இருக்கின்றனர் என்றால் இடஒதுக்கீடு என்கிற இந்த அணுகுமுறை ஏற்பாடு இல்லாவிட்டால் ஒடுக்கப் பட்ட மக்கள் எத்தகைய இருட்டறையில் அடைக்கப் பட்டு இருப்பார்கள் என்பதை சற்றே மன சாட்சியின் கதவினைத் திறந்தும், ஈரமான இதயத்துடனும், மனித உரிமை, மனித நேயம், சமத்துவம் என்ற மனிதப் பண்புடனும் சீர்தூக்கிப் பார்க்கட்டும்!

இதுபோன்ற சிந்தனையில் இருக்கும் நெல்லை முத்து போன்ற விஞ்ஞானிகள் - படித்தவர்கள் இதற்குப் பிறகாவது உண்மைகளைத் தெரிந்து கொள்வதிலும் புரிந்து கொள்வதிலும் சிந்தையைச் செலுத்துவார்களாக!


------------------ மின்சாரம் அவர்கள் 10-5-2008 "விடுதலை" ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

நன்றி

ஊர் சுற்றி said...

//எல்லோரும் வட்டமாக அமர்ந்து கூட்டாஞ்சோறு உண்ணும் சொர்க்கம் எங்களுக்கு அன்றோடு முடிந்து போனது. ஈடு செய்ய முடியாத அந்த இன்பத்தை கெடுத்தது இந்த சாதி சான்றிதழும் சாதி இட ஓதுக்கீடும். உண்மையில் இன்று வரை ஏங்குகிறேன் அந்த கூட்டாஞ்சோறுக்காக. பள்ளியில் மாணவ மாணவிகள் அத்தனைபேரும் வட்டமாக அமர்ந்து ஓவ்வொரு வீட்டு உணவையும் ஓவ்வொரு கை பறிமாறி உண்ட அனுபவம் உள்ள யாருக்கும் அந்த கூட்டாஞ்சோறின் அருமை தெரியும்.//

உங்களுக்கும் எனக்கும் இப்படி ஒன்றாய் அமர்ந்து உண்ண வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் என் அம்மா தாத்தாவிற்கு இல்லை. ஏன் இல்லை என்பதற்கான விளக்கம் இங்கேயே பக்கம் பக்கமாக இருக்கிறது.

இப்படி இருக்க - கல்லூரிப்படிப்பிலும் மேல்படிப்பிலும் எந்த அடிப்படையில் முன்னுரிமை வழங்க முடியும்? எந்த அடிப்படையில் இந்த விஷயங்கள் மறுக்கப்பட்டனவோ அதே அடிப்படையில்தானே இருக்க முடியும்.

1000 வருடங்களுக்கு மேல் இருந்த ஏற்றத்தாழ்வுகளை குறைந்தபடசம் 3, 4 தலைமுறையிலாவது களைய முயற்சி செய்ய வேண்டாமா?

இட ஒதுக்கீட்டின் அவசியம் தெரியவேண்டுமானால் என் போன்ற முதல் தலைமுறை பட்டதாரிகளை கேளுங்கள்.

செந்தழல் ரவி said...

///நான் இடஓதுக்கீடு வேண்டாம் என்று சொல்லவில்லை. கண்டீப்பா இட ஓதுக்கீடு வேண்டும். ஆனால் அந்த இட ஓதுக்கீடு சாதிய அடையாளத்தில் வேண்டாம் என்று தான் சொல்கிறேன்.
///

உளரல்...!!!!

சாதியை ஓவர் நைட்டில் ஒழித்துவிட்டால் ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் 100 சதவீதம் கல்வியறிவு அடைந்துவிடுவார்களா அல்லது அவர்கள் குடிசைகளில் பாலாறும் தேனாறும் ஓடுமா ?

அறிவகத்தில் மருந்துக்கு கூட அறிவில்லை...

Thekkikattan|தெகா said...

உங்க கட்டுரையை வாசிக்கும் பொழுது, ச்சே இப்படியே இருந்திருக்கக் கூடாதான்னு அந்த யுடோபியா நினைவு வரத்தான் செய்யுது. என்னங்க பண்றது, நம்ம அந்த (சிறு பிள்ளை) நிலையைத் தாண்டியும் வெளியில உலகம் பரந்து விரிந்து கெடக்கே!

அங்கே என்னன்னமோ விளையாண்டு வைத்து விட்டுவிட்டுப் போய் இருக்கிறார்களே! உங்களைப் போன்ற நிலையில் இருப்பவர்களின் சதவிகிதத்தை (உயர் ஜாதி - கிராம வசிப்பு - பொருளாதார நலிவு நிலை) ஒட்டு மொத்த இந்தியாவில் இன்னமும் ஒடுக்கப் பட்ட நிலையில் (சாதீய அடிப்படையில்) இருப்பவர்களின் விகிதாச் சாரத்தோட ஒப்பிடுகையில், கடலில் கரைத்த ஒட்டுப் பெருங்காயமாகத்தான் இருக்கும்.

சாதி கண்டிப்பாக ஒழியும் என்னைக்குன்னு கேட்டா, சுய மரியாதையோட மற்ற மனிதர்களும் வாழ்வதற்கான ஒரு வழிமுறையை உருவாக்கி கொடுத்து தானும் வாழ முற்படும் பொழுது, அதுவாகவே நிகழும்.

Anonymous said...

//ஜாதி ஒழியும் வரை ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீடு தேவை//
ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீடு இருக்கும் வரை ஜாதி ஒழியாது என்பது அடியேனது தாழ்வான கருத்துங்க

குடுகுடுப்பை said...

சாதி இன்றே ஒழிந்தது உடனே ஒரு சேரியில் குடியேறவும். சேரி என்றால் என்னவென்று தெரியுமா சார்.

குடுகுடுப்பை said...

சாதியே வேண்டாம் என்பவர்களுக்கு சாதிய இட ஓதுக்கீடு மட்டும் ஏன் வேண்டும்? பொருளாதார அடிப்படையில் இட ஓதுக்கீடு கொடுத்தாலும் அதே பிற்படுத்தபட்ட சாதியினர் தானே பயனடைவார்கள்.//

நகர்புறத்தில் உள்ள உயர்சாதி ஏழைகளைத்தாண்டி இது செல்லாது.அதுதான் உண்மை

செந்தழல் ரவி said...

///சாதி இன்றே ஒழிந்தது உடனே ஒரு சேரியில் குடியேறவும். சேரி என்றால் என்னவென்று தெரியுமா சார்.//

குடுகுடுப்பை...இவர் ஒரு ஹை க்ளாஸ் மாதவன்...இவருக்கு எப்படி சேரி என்றால் என்ன என்று தெரியும் ? சேரி என்பது தூத்துகுடிப்பக்கம் ராமநாதபுரம் பக்கம் ஏதோ ஒரு கிராமம் அப்படீன்னு சொல்லிடப்போறார்...

செந்தழல் ரவி said...

///அறிவகம்,
சரியான கருத்து.
இட ஒதுக்கீடு முழுமையும் பொருளாதார அடிப்படையில் வரும் போது சாதி தேவையிருக்காது.

சாதி இல்லையெனில் பல அக்கிரமங்களுக்கு முடிவு கட்டலாம் !///

அறிவன்...

வேண்டுமென்றால் ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியாக பொருளாதார அடிப்படையில் கொடுக்கலாம்...

நீங்கள் செய்த பாவத்தை நீங்கள் தானே துடைக்கவேண்டும் ???

செந்தழல் ரவி said...

///ரொம்ப ரொம்ப நல்ல பதிவு! பாராட்ட வார்த்தைகள் இல்லை///

சம்பந்தி வாட் ஆர் யூ டூயிங் ஹியர் ?

திஸ் ஈஸ் ரத்த பூமி...

டோண்ட் கம் ஹியர்...

செந்தழல் ரவி said...

///ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீடு இருக்கும் வரை ஜாதி ஒழியாது என்பது அடியேனது தாழ்வான கருத்துங்க///

கவின்...

தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த எல்லா பள்ளிப்பிள்ளைகளும் காலில் செருப்போடு பள்ளிக்கு செல்லும்போது ஜாதியை ஒழிப்பது பற்றி பேசலாம்...

செந்தழல் ரவி said...

///அப்படியா சாமி

இந்தியாவில் 1900 ஆண்டுகளாக இடப்பங்கீடு இல்லையே

அப்ப ஏன் சாமி சாதி ஒழியவில்லை

--

விளக்க முடியுமா//

ஒரே அடியில சாச்சுப்புட்டீங்களே டாக்டர் ? இது நியாயமா ?

PoornimaSaran said...

//பள்ளியில் மாணவ மாணவிகள் அத்தனைபேரும் வட்டமாக அமர்ந்து ஓவ்வொரு வீட்டு உணவையும் ஓவ்வொரு கை பறிமாறி உண்ட அனுபவம் உள்ள யாருக்கும் அந்த கூட்டாஞ்சோறின் அருமை தெரியும்//

நிதர்சனமான உண்மை

Anonymous said...

குழலி,
Your thoughts resonate with mine. Good post.

"இந்தியாவில் 1900 ஆண்டுகளாக இடப்பங்கீடு இல்லையே
அப்ப ஏன் சாமி சாதி ஒழியவில்லை"

is the most depressing stmt i read this week. It is so lame in so many ways. The attitude is "Since he has raped the girl, he should marry her."

Quota should be based on income and location(city/town/village) of the family.
Quota based on caste is like trying to put out fire by throwing in more fire.

Sen. Ravi,
" சேரி என்பது தூத்துகுடிப்பக்கம் ராமநாதபுரம் பக்கம் ஏதோ ஒரு கிராமம் அப்படீன்னு சொல்லிடப்போறார்..."
Don't get personal. Solve the problem, dont attack the problem maker. had been reading your stuff for quite some time and it is a pattern with u. In fact, i ended up here from you blog only. Good linker, you are.

Anonymous said...

இட ஓதுகீட்டை அப்படி ஓவர் நைட்-ல் விட்டு விட முடியாது. இருந்தாலும் உங்கல் உள்ள குமுறலை நாகரீகமாக வெளிப்படுத்தியதற்க்கு பாராட்டுகள். பின்னூட்டம் என்பது ஒரிரு வரிகளில் நறுக்கென்று இருப்பது நன்று. திரு. புருனோ மற்ரும் திரு.ரவி மாதிரின்னா படிக்கத் தோனுது. அதை விட்டுட்டு வன்டி வன்டியாய எதையாவது காப்பி பன்னி பேஸ்ட் பன்னினா, சாரி படிக்கத் தோனுவதே இல்லை. அவர்களுடன் நேரில் பழகுபவர்களுக்கு அவர்களைப் புரிந்திருக்குமோ.

மயில்சாமி.

புருனோ Bruno said...

//இந்தியாவில் 1900 ஆண்டுகளாக இடப்பங்கீடு இல்லையே
அப்ப ஏன் சாமி சாதி ஒழியவில்லை"

is the most depressing stmt i read this week.//

Really. Nice :)


// It is so lame in so many ways. //

Can you tell at least one reason why it is lame.

Or at least answer this question.


//The attitude is "Since he has raped the girl, he should marry her."//

No. This is not the attitude. You are wrong and has given a dumb logic.

Most anti reservation people give only dumb logic as they do not have justice on their side

//Quota should be based on income and location(city/town/village) of the family.//

So you have nothing against quota.

So you mean to say that the son of the rick shaw wallah in tondiarpet should compete under open competition while you give quota for son of a general manager is BHEL (that is located in a village, you know)

//Quota based on caste is like trying to put out fire by throwing in more fire.//

No Quota based on Caste only can eliminate caste

For economy, you need scholarship and not quota

புருனோ Bruno said...

Kuselan was able to study inspite of being poor

Why could not Ekalavyan study

Can you please answer kk --> Was it money or caste that refused education for Ekalavyan

What was the criteria by which education was refused in India for 2000 years

Pradeep C said...

சாதிசான்றிதழுக்காக எங்களுக்கு தெரியாத சாதியை எல்லாம் எங்கள் மீது திணித்தார்கள். எந்த வித கபடமும் இல்லாமல் ஓடி அடி பாடி, மதியம் ஒன்றாய் கூட்டாச்சோறு உண்ட மாணவர்கள் நாங்கள். ஆனால் சாதிசான்றிதலுக்காக எங்களுக்கள் சாதிய அடையாளத்தை பூசினார்கள்.
-----------------------------

ஒற்றுமையா ஒரே தட்டுல சாப்பிடவுங்க சாதீனு பேரு கேட்டவுடனே நஞ்சு
நெஞ்சுல பாஞ்சு பிரிஞ்சிடங்கலாமா.... கொஞ்சம் ஓவரா இல்ல?

gay uncle sex stories said...

I caught myself from falling at his doorway, which he hadnt closed. McCULLAGH Hi there.
adult baby diaper stories
interracial sex stories
free zoo stories and pictures porn
pregnant boobes sex stories post
sexual bondage stories
I caught myself from falling at his doorway, which he hadnt closed. McCULLAGH Hi there.

Anonymous said...

முதலில் சாதிய இட ஓதுக்கீட்டை ஓழியுங்கள். சாதியும் ஓழியும்.///


யாரால் ஜாதி இன்னமும் இருக்கிறது? அதனை பயன்படுத்தி கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் ஆதாயம் பெறுபவர்கள் (MLA , MP , கவுன்சிலர்) தான் இன்னமும் ஜாதியை பற்றி பேசி ஊரை ஏமாற்றுகின்றனர்.

கல்வி வேலைவாய்ப்பில் சலுகைகள் இருப்பதால், அந்த பயன்களை அனுபவிக்க மட்டுமே இன்னமும் ஜாதியும் மதமும் இருக்கிறது!

//இட ஒதுக்கீட்டு எதிராக இருப்பவர்கள் அனைவரும் ஏழைகளா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள், யாரு ஒரு பார்பன இல்லத்தில் ஒரே ஒரு தாய் இட்லி சுட்டு மகனை படிக்க வைப்பார், ஆனால் மற்ற பார்பனர்கள் அனைவரும் ஏழைகளா ? அந்த தாயின் மகன் பாதிக்கப்படக் கூடாது என்றால் உதவ முன்வர வேண்டியது பணக்கார பார்பனர்கள் தானே, எல்லா சாதிகளுக்குமே சங்கம் இருக்கிறது. ஆனால் அவர்கள் யாருமே தங்கள் சாதிகளில் இருக்கும் ஏழைகளை முன்னேற்றுவதற்கு ஒரு பைசா கூட செலவு செய்யமாட்டார்//

by Sai Gokulakrishna
இட ஒதுக்கீடு கோட்டாவில் வந்து வேலையை ஒழுங்காக செய்யாமல், செய்ய தெரியாமல் இழுத்தடித்து, முடிவெடுக்க முடியாமல் கோப்புகள் தேங்கி, அதை சீக்கிரம் முடிக்க வேண்டியவர்கள் லஞ்சம் கொடுத்து அதை முடிக்க சொல்லி, இப்படி இட ஒதுக்கீட்டின் மூலமாய் சமூக அவலங்கள் லஞ்சம், 2G , Spectrum ஊழல் முறைகேடுகள் நாளுக்கு நாள் பெருகியதே ஒழிய, பயனடைந்தவர் தன் சமூகம் முன்னேற வழி செய்ததுண்டா?.
இன்றைக்கு வாய் கிழிய கூச்சலிடும் இந்த ஜாதிசங்க தலைவர்கள் தங்கள் சமூக மக்களுக்காக நடத்தும் வேலைவாய்ப்பு பயிற்சி முகமைகள் எத்தனை? ஏன் ஊருக்கு ஒரு கட்சியின் கிளைக்கழகம் ஆரம்பித்து தங்கள் ஜாதி இளைஞர்களை சேர்க்க துடிக்கும் இவர்கள், அவர்களின் கல்வி கடன், வேலைவாய்ப்பு குறித்து கவலை பட்டதுண்டா? அட்லீஸ்ட் ஒரு பத்து பேருக்காவது தங்கள் முயற்சியால் கல்வி கடன் , வேலை வாய்ப்பில் உதவியதுண்டா?.

வெட்கமாயில்லை? இன்னும் 21 ஆம் நூற்றாண்டில் ஜாதி பேரை சொல்லி யாசகம் பெறுவதற்கு? பெரியார், அம்பேத்கார்& ஜாதி பேரை சொல்லி இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவீர்?

Anonymous said...

முதலில் சாதிய இட ஓதுக்கீட்டை ஓழியுங்கள். சாதியும் ஓழியும்.///


யாரால் ஜாதி இன்னமும் இருக்கிறது? அதனை பயன்படுத்தி கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் ஆதாயம் பெறுபவர்கள் (MLA , MP , கவுன்சிலர்) தான் இன்னமும் ஜாதியை பற்றி பேசி ஊரை ஏமாற்றுகின்றனர்.

கல்வி வேலைவாய்ப்பில் சலுகைகள் இருப்பதால், அந்த பயன்களை அனுபவிக்க மட்டுமே இன்னமும் ஜாதியும் மதமும் இருக்கிறது!

//இட ஒதுக்கீட்டு எதிராக இருப்பவர்கள் அனைவரும் ஏழைகளா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள், யாரு ஒரு பார்பன இல்லத்தில் ஒரே ஒரு தாய் இட்லி சுட்டு மகனை படிக்க வைப்பார், ஆனால் மற்ற பார்பனர்கள் அனைவரும் ஏழைகளா ? அந்த தாயின் மகன் பாதிக்கப்படக் கூடாது என்றால் உதவ முன்வர வேண்டியது பணக்கார பார்பனர்கள் தானே, எல்லா சாதிகளுக்குமே சங்கம் இருக்கிறது. ஆனால் அவர்கள் யாருமே தங்கள் சாதிகளில் இருக்கும் ஏழைகளை முன்னேற்றுவதற்கு ஒரு பைசா கூட செலவு செய்யமாட்டார்//

by Sai Gokulakrishna
இட ஒதுக்கீடு கோட்டாவில் வந்து வேலையை ஒழுங்காக செய்யாமல், செய்ய தெரியாமல் இழுத்தடித்து, முடிவெடுக்க முடியாமல் கோப்புகள் தேங்கி, அதை சீக்கிரம் முடிக்க வேண்டியவர்கள் லஞ்சம் கொடுத்து அதை முடிக்க சொல்லி, இப்படி இட ஒதுக்கீட்டின் மூலமாய் சமூக அவலங்கள் லஞ்சம், 2G , Spectrum ஊழல் முறைகேடுகள் நாளுக்கு நாள் பெருகியதே ஒழிய, பயனடைந்தவர் தன் சமூகம் முன்னேற வழி செய்ததுண்டா?.
இன்றைக்கு வாய் கிழிய கூச்சலிடும் இந்த ஜாதிசங்க தலைவர்கள் தங்கள் சமூக மக்களுக்காக நடத்தும் வேலைவாய்ப்பு பயிற்சி முகமைகள் எத்தனை? ஏன் ஊருக்கு ஒரு கட்சியின் கிளைக்கழகம் ஆரம்பித்து தங்கள் ஜாதி இளைஞர்களை சேர்க்க துடிக்கும் இவர்கள், அவர்களின் கல்வி கடன், வேலைவாய்ப்பு குறித்து கவலை பட்டதுண்டா? அட்லீஸ்ட் ஒரு பத்து பேருக்காவது தங்கள் முயற்சியால் கல்வி கடன் , வேலை வாய்ப்பில் உதவியதுண்டா?.

வெட்கமாயில்லை? இன்னும் 21 ஆம் நூற்றாண்டில் ஜாதி பேரை சொல்லி யாசகம் பெறுவதற்கு? பெரியார், அம்பேத்கார்& ஜாதி பேரை சொல்லி இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவீர்?

Anonymous said...

முதலில் சாதிய இட ஓதுக்கீட்டை ஓழியுங்கள். சாதியும் ஓழியும்.///


யாரால் ஜாதி இன்னமும் இருக்கிறது? அதனை பயன்படுத்தி கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் ஆதாயம் பெறுபவர்கள் (MLA , MP , கவுன்சிலர்) தான் இன்னமும் ஜாதியை பற்றி பேசி ஊரை ஏமாற்றுகின்றனர்.

கல்வி வேலைவாய்ப்பில் சலுகைகள் இருப்பதால், அந்த பயன்களை அனுபவிக்க மட்டுமே இன்னமும் ஜாதியும் மதமும் இருக்கிறது!

//இட ஒதுக்கீட்டு எதிராக இருப்பவர்கள் அனைவரும் ஏழைகளா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள், யாரு ஒரு பார்பன இல்லத்தில் ஒரே ஒரு தாய் இட்லி சுட்டு மகனை படிக்க வைப்பார், ஆனால் மற்ற பார்பனர்கள் அனைவரும் ஏழைகளா ? அந்த தாயின் மகன் பாதிக்கப்படக் கூடாது என்றால் உதவ முன்வர வேண்டியது பணக்கார பார்பனர்கள் தானே, எல்லா சாதிகளுக்குமே சங்கம் இருக்கிறது. ஆனால் அவர்கள் யாருமே தங்கள் சாதிகளில் இருக்கும் ஏழைகளை முன்னேற்றுவதற்கு ஒரு பைசா கூட செலவு செய்யமாட்டார்//

by Sai Gokulakrishna
இட ஒதுக்கீடு கோட்டாவில் வந்து வேலையை ஒழுங்காக செய்யாமல், செய்ய தெரியாமல் இழுத்தடித்து, முடிவெடுக்க முடியாமல் கோப்புகள் தேங்கி, அதை சீக்கிரம் முடிக்க வேண்டியவர்கள் லஞ்சம் கொடுத்து அதை முடிக்க சொல்லி, இப்படி இட ஒதுக்கீட்டின் மூலமாய் சமூக அவலங்கள் லஞ்சம், 2G , Spectrum ஊழல் முறைகேடுகள் நாளுக்கு நாள் பெருகியதே ஒழிய, பயனடைந்தவர் தன் சமூகம் முன்னேற வழி செய்ததுண்டா?.
இன்றைக்கு வாய் கிழிய கூச்சலிடும் இந்த ஜாதிசங்க தலைவர்கள் தங்கள் சமூக மக்களுக்காக நடத்தும் வேலைவாய்ப்பு பயிற்சி முகமைகள் எத்தனை? ஏன் ஊருக்கு ஒரு கட்சியின் கிளைக்கழகம் ஆரம்பித்து தங்கள் ஜாதி இளைஞர்களை சேர்க்க துடிக்கும் இவர்கள், அவர்களின் கல்வி கடன், வேலைவாய்ப்பு குறித்து கவலை பட்டதுண்டா? அட்லீஸ்ட் ஒரு பத்து பேருக்காவது தங்கள் முயற்சியால் கல்வி கடன் , வேலை வாய்ப்பில் உதவியதுண்டா?.

வெட்கமாயில்லை? இன்னும் 21 ஆம் நூற்றாண்டில் ஜாதி பேரை சொல்லி யாசகம் பெறுவதற்கு? பெரியார், அம்பேத்கார்& ஜாதி பேரை சொல்லி இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவீர்?

  © Blogger template Newspaper II by Ourblogtemplates.com 2008

Back to TOP